PDA

View Full Version : மின்னல்



M.Jagadeesan
28-01-2011, 02:44 PM
வானம் நடத்தும் வாண வேடிக்கை
புதுமை விழாவின் பூமத் தாப்பு
முத்துநூல் உதறல்;முகில்துகில் கிழிசல்
கார் அரக்கனின் கோணற் சிரிப்பு
நீலச் சகதியில் நெளியும் வெண்புழு
மேகச் சாம்பலில் மின்னும் வெண்தனல்
உரைகலில் மின்னும் வெள்ளி ரேகை
வினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு
விண்தோட் டத்தின் வெள்ளிக் கொடிகள்
மழைச்செய்தி கூறும் சைகை விளக்கு
கருமுகில் இமைகளின் கண் சிமிட்டல்
நீரில் பிறக்கும் நெருப்புநம் இயற்கை
கிறுக்கு கின்ற சுருக்கெழுத் திதுவே!

=கவிக்கோ அப்துல் ரகுமான்.

CEN Mark
28-01-2011, 02:56 PM
வானம் நடத்தும் வாண வேடிக்கை
புதுமை விழாவின் பூமத் தாப்பு
முத்துநூல் உதறல்;முகில்துகில் கிழிசல்
கார் அரக்கனின் கோணற் சிரிப்பு
நீலச் சகதியில் நெளியும் வெண்புழு
மேகச் சாம்பலில் மின்னும் வெண்தனல்
உரைகலில் மின்னும் வெள்ளி ரேகை
வினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு
விண்தோட் டத்தின் வெள்ளிக் கொடிகள்
மழைச்செய்தி கூறும் சைகை விளக்கு
கருமுகில் இமைகளின் கண் சிமிட்டல்
நீரில் பிறக்கும் நெருப்புநம் இயற்கை
கிறுக்கு கின்ற சுருக்கெழுத் திதுவே!

=கவிக்கோ அப்துல் ரகுமான்.

கவிக்கோ - வின் மின்னலை தமிழ் மன்ற முற்றத்தில்
வெண்தனலாய் பிரகாசிக்க வைத்த ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி