PDA

View Full Version : தலைப்பற்றக் கவிதை



ஆதி
28-01-2011, 11:30 AM
கவிதையையொன்றை எழுதுகிறாய்

அது உன்னுடையதாவென்று அறிந்திருக்காமல்
எனினும்
எழுதுகிறாய்
எழுதுகிறாய்
எழுதுகிறாய்
உன் போக்கில்
அதன் போக்கில்
பிறர் போக்கில்

ஆதிப்புள்ளியொன்றில்
அக்க*விதை முடிவ*டைந்த* க*ண*த்தில்
அதை வாசித்த*ப் பின்

இது என் க*விதையல்ல என்கிறாய் நீ

த*ன்னுடைய*த*ல்ல* என்கிற*து க*விதை

அவ்வாறே சொல்கிறார்க*ள் பிற*ரும்..

என்றாலும்
எழுத*ப்ப*ட்டிருக்கிற*து ஒரு க*விதை
யாருடைய*தென* தேட*வே..

கீதம்
29-01-2011, 10:12 PM
வெற்றுத்தாளெனத் திரிந்திருந்தேனே!
விருப்பமில்லாமல் ஒரு கவிதையைச் சுமக்கவைத்து
மாபாவிகள் என்னுடையதல்ல, தன்னுடையதல்ல என்று
ஏலம்விட்டு ஏமாற்றுகிறார்களே!
உரிமை கோர ஒருவருமுன்வராக்காரணத்தால்
உடற்சுமந்த கவிதையோடு
உயிர்மாய்த்தலொன்றே வழியாமோ?

பிதற்றித்திரிகிறாள் பித்தாய் ஒரு தாய்(ள்).