PDA

View Full Version : ஒரு சமயத்தில்



ஆதி
28-01-2011, 11:28 AM
ஒரு சமயத்தில்
உனக்கு நீ இருந்தாய்

ஒரு சமயத்தில்
உனக்கு அது இருந்தது

ஒரு சமயத்தில்
உனக்கு அவன் இருந்தான்

ஒரு சமயத்தில்
உனக்கு இவள் இருந்தாள்

ஒரு சமயத்தில்
உனக்கு உனக்கு என்று
யாவும் இருந்தது

ஒரு சமயத்தில்
உனக்கு உனக்கு என்று...
...................................
....................................
....................................
உனக்கு உனக்கு என்று
இல்லை ஒன்றும்
இல்லை இல்லையும்..

கீதம்
28-01-2011, 11:49 PM
முன்னொரு சமயத்தில்
இருப்பின் ஆதிக்கம்
இருப்பில் இருக்க....
இல்லாமையின் ஆதிக்கம்
இல்லாமல் இருந்தது.

பின்னொரு சமயத்தில்
இல்லாமையின் ஆதிக்கம் மெல்லக்கிளர்ந்து
இருப்பின் இருப்பை ஆக்கிரமித்தழுத்த....
அவகாசமற்றுப் பிரசவிக்கப்படுகின்றன,
சில சிரமற்ற சிசுக்கள்!

அரைகுறையாய்ப் பிறந்தாலும்
அவசரகதியிற் பிறந்தாலும்
அநாயாசமாய் உணர்த்திநிற்கின்றன,
தங்கள் இருப்பின் இருப்பை!


அடிக்கடி உணர்த்தப்படட்டும் இருப்புகள். பாராட்டுகள் ஆதன்.

ஜானகி
29-01-2011, 01:13 AM
இருப்பின் புரிதல்தான்... வாழ்க்கை

இழப்பின் அனுபவம் தான்.... சோகம்

இரண்டுமே ' எனக்கு ' இல்லை

எனும் உண்மை புரிந்தால்...

இருப்பும் இல்லை..இழப்பும் இல்லை..

எப்போது புரியும்...?

பிரேம்
29-01-2011, 02:14 AM
கவிதை அருமை..ஆனா எனக்குத்தான் எதுமே புரியல..:smilie_abcfra:

CEN Mark
29-01-2011, 07:35 AM
இருப்பின் புரிதல்தான்... வாழ்க்கை

இழப்பின் அனுபவம் தான்.... சோகம்

இரண்டுமே ' எனக்கு ' இல்லை

எனும் உண்மை புரிந்தால்...

இருப்பும் இல்லை..இழப்பும் இல்லை..

எப்போது புரியும்...?

நீங்க கவிதைக்கு பதில் சொல்றீர்களா அல்லது உங்கள் நிலையை கூறுகிறீர்களா (அது என்ன எனக்கு என்ற வார்த்தைக்கு தனி அடையாளம் ) என்று தெரியவில்லை. எப்போது புரியும் என்ற கேள்வியையும் கேட்கிறீர்கள். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

M.Jagadeesan
29-01-2011, 02:03 PM
இருப்பதெல்லாம் இருப்பவையல்ல!
இல்லாததெல்லாம் இல்லாதவையல்ல!
இருப்பது இல்லாமல் போவதும்
இல்லாதது இருப்பில் வருவதும்
நிலையில்லா உலகில் நித்தம் நடப்பவையே!
ஆகவே இவ்வுலகில் நாம்
இல்லாதபோதும் இருக்குமாறு
இருக்கின்றபோதே அறம் செய்யவேண்டும்.

dhilipramki
29-01-2011, 02:12 PM
எது இல்லையோ கவலை இல்லை! ஆனால் அனைவருதும் கவிதையும் நன்றாக இருக்கு!!:lachen001:

ஜானகி
30-01-2011, 05:50 AM
தாமரை அவர்கள் புரியும்படியாக விளக்கம் கொடுத்திருப்பார்..

".நான் மனதும் அல்ல, உடலும் அல்ல...நான் யார் " என்பது புரிந்தால்....இருப்பு, இழப்பு... எதுவுமே நம்மை பாதிக்காது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்...அனுபவத்தில் வருவது சிரமமாக இருக்கிறது...அவ்வளவே !

ஆமாம்... தாமரை அவர்கள் எங்கே...?

Nivas.T
20-02-2011, 03:15 PM
ஒரு சமயத்தில்
உனக்கு நீ இருந்தாய்

ஒரு சமயத்தில்
உனக்கு அது இருந்தது

ஒரு சமயத்தில்
உனக்கு அவன் இருந்தான்

ஒரு சமயத்தில்
உனக்கு இவள் இருந்தாள்

ஒரு சமயத்தில்
உனக்கு உனக்கு என்று
யாவும் இருந்தது

ஒரு சமயத்தில்
உனக்கு உனக்கு என்று...
...................................
....................................
....................................
உனக்கு உனக்கு என்று
இல்லை ஒன்றும்
இல்லை இல்லையும்..



முன்னொரு சமயத்தில்
இருப்பின் ஆதிக்கம்
இருப்பில் இருக்க....
இல்லாமையின் ஆதிக்கம்
இல்லாமல் இருந்தது.

பின்னொரு சமயத்தில்
இல்லாமையின் ஆதிக்கம் மெல்லக்கிளர்ந்து
இருப்பின் இருப்பை ஆக்கிரமித்தழுத்த....
அவகாசமற்றுப் பிரசவிக்கப்படுகின்றன,
சில சிரமற்ற சிசுக்கள்!

அரைகுறையாய்ப் பிறந்தாலும்
அவசரகதியிற் பிறந்தாலும்
அநாயாசமாய் உணர்த்திநிற்கின்றன,
தங்கள் இருப்பின் இருப்பை!


அடிக்கடி உணர்த்தப்படட்டும் இருப்புகள். பாராட்டுகள் ஆதன்.


இருப்பின் புரிதல்தான்... வாழ்க்கை

இழப்பின் அனுபவம் தான்.... சோகம்

இரண்டுமே ' எனக்கு ' இல்லை

எனும் உண்மை புரிந்தால்...

இருப்பும் இல்லை..இழப்பும் இல்லை..

எப்போது புரியும்...?


இருப்பதெல்லாம் இருப்பவையல்ல!
இல்லாததெல்லாம் இல்லாதவையல்ல!
இருப்பது இல்லாமல் போவதும்
இல்லாதது இருப்பில் வருவதும்
நிலையில்லா உலகில் நித்தம் நடப்பவையே!
ஆகவே இவ்வுலகில் நாம்
இல்லாதபோதும் இருக்குமாறு
இருக்கின்றபோதே அறம் செய்யவேண்டும்.

வாழ்க்கையின் தொடக்கம்
இல்லை என்பது மட்டுமே
காலம் நகர நகர
அவன் வருவான்,
அவள் வருவாள்,
அவர்கள் வருவார்கள்,
அது வரும், அவை வரும்
மீண்டும்
காலத்தால்
அவள் இல்லை
அவன் இல்லை
அவர்கள் இல்லை
அது இல்லை
அவை இல்லை
நீயும் இல்லை

இல்லை இல்லை என்பது மட்டுமே
இருப்பாய் இருக்கும்.....



அனைத்துக் கவிதைகளும்
அழகு