PDA

View Full Version : காய்கறியும் காதலியும்

M.Jagadeesan
28-01-2011, 08:39 AM
காய்கறிகள் வாங்கிடவே
கடைவீதி சென்றிட்டேன்

காய்கறிகள் அனைத்துமே
காதலியை நினைவூட்ட

வாங்கும் வகையறியாது
ஏங்கியே நின்றிட்டேன்

வெண்டைக்காய் அரிந்திட்டால் காதலியின் பிஞ்சுவிரல்
வேதனையில் நோகுமென்று வாங்காது ஒதுக்கிட்டேன்

புடலங்காய் அரிந்திட்டால் காதலியின் கறுப்புநிற
சடைக்கேதும் வந்திடுமோ என்றஞ்சித் தள்ளிட்டேன்

மாம்பழம் அரிந்திட்டால் காதலியின் கன்னத்தில்
தீங்கேதும் வந்திடுமோ என்றஞ்சித் திடுக்கிட்டேன்

கோவைப்பழம் அரிந்திட்டால் காதலியின் உதடுகளில்
கோடேதும் விழுந்திடுமோ என்றஞ்சி விடுத்திட்டேன்

நாவற்பழம் தின்றிட்டால் காதலியின் கருவிழியில்
நோவேதும் வந்திடுமோ என்றஞ்சி நொந்திட்டேன்

வாழைத்தண்டு அரிந்திட்டால் காதலியின் கால்களிலே
வலுவேதும் குறைந்திடுமோ என்றஞ்சி வந்திட்டேன்

காய்ஏதும் வாங்காமல் வந்திட்ட எனைக்கண்டு
"பேய்ஏதும் பிடித்துளதா?" எனஅன்னைக் கேட்டிட்டாள்.

றெனிநிமல்
28-01-2011, 11:19 AM
இனிமே தான் பிடிக்கப் போகின்றது என்று கூறுங்கள் அம்மாவிடம்!

ஹி ஹி ஹி......

ம்.....அழகாகத்தான் கற்பனை செய்கின்றீர்கள்.
அந்தக் காதலிக்கும் வாழ்த்துக்கள்.

அமரன்
28-01-2011, 11:24 AM
அம்மா இப்பவே சண்டைக்கு தயாராகிட்டா போல. இதுக்குப் பிறகுமா கல்யாண ஆசை இருக்கும் அவனுக்கு. றெனி மாதிரி அனுபவசாலிகள் சொல்லைக் கேளுங்கப்பா

M.Jagadeesan
28-01-2011, 12:12 PM
அமரன்,றெனிநிமல் இருவருக்கும் நன்றி!

CEN Mark
28-01-2011, 03:11 PM
[QUOTE=M.Jagadeesan;510785

காதலியும், காய்கறியும் ஒப்பீடு நன்றாய் இருந்தது. ஆனாலும், கவிஞர்கள் பெண்களை சொத்தாகவும், பொருளாகவும் ஒப்பிட்டே, அவர்களுக்கு எலும்பும் சதையும், ரத்தமும், உணர்வும், உள்ளமும் இருப்பதாக ஆண் கவிகள் எழுதுவதில்லையே.

ஆண் கவிஞர்களின் இந்த பிற்போக்கு சிந்தனையை உடைத்து, பெண்ணை சக மனுஷியாக கவிபடைக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அமரன்
28-01-2011, 03:20 PM
அன்பரே! இப்பெல்லாம் உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்பில்லை. சொத்துக்கும் சத்துக்கும்தான் மதிப்பு. பெண்களை மதிப்புடன் ஒப்பிடுவதை நினைத்து மகிழ்வோம்

CEN Mark
28-01-2011, 03:23 PM
அன்பரே! இப்பெல்லாம் உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்பில்லை. சொத்துக்கும் சத்துக்கும்தான் மதிப்பு. பெண்களை மதிப்புடன் ஒப்பிடுவதை நினைத்து மகிழ்வோம்

சரிங்கண்ணா!

கௌதமன்
28-01-2011, 04:41 PM
விலை ஏறிவிட்ட காய்கறிகளை
வாங்காமல் இருக்க காரணம்
கற்பித்த கவிஞருக்கு வாழ்த்துகள்.

M.Jagadeesan
28-01-2011, 08:44 PM
[QUOTE=M.Jagadeesan;510785

காதலியும், காய்கறியும் ஒப்பீடு நன்றாய் இருந்தது. ஆனாலும், கவிஞர்கள் பெண்களை சொத்தாகவும், பொருளாகவும் ஒப்பிட்டே, அவர்களுக்கு எலும்பும் சதையும், ரத்தமும், உணர்வும், உள்ளமும் இருப்பதாக ஆண் கவிகள் எழுதுவதில்லையே.

ஆண் கவிஞர்களின் இந்த பிற்போக்கு சிந்தனையை உடைத்து, பெண்ணை சக மனுஷியாக கவிபடைக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அறிவுரையை கவனத்தில் கொள்கிறேன்!

கீதம்
28-01-2011, 09:37 PM
சூரியகிரகணம் வரும்போது அந்த நேரத்தில் கர்ப்பவதிப் பெண்கள் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கவேண்டுமென்று வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் அப்படி என்று கேட்டால் அவர்கள் இப்படிதான் பல காரணம் சொல்வார்கள். அங்கொருத்தி சூரிய கிரகணத்தின்போது காய் அரிந்தாள், அவளுக்குப் பிறந்த பிள்ளை, உதடு பிளவுபட்டுப் பிறந்தது. இன்னொருத்தி மாவு பிசைந்தாள், அவள் குழந்தைக்கு மூக்கு சப்பையாகப் போய்விட்டது என்று.

அந்தநாள் நினைவுகள் வந்துவிட்டன உங்கள் கவிதை படித்து. நகைச்சுவையெனக் கொண்டால் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.

M.Jagadeesan
28-01-2011, 10:15 PM

பாராட்டுகளுக்கு நன்றி கீதம்!

dellas
30-01-2011, 05:43 AM
உண்மையில் கவிதை ஒப்புமை நன்று. ஆனால் அரிசிப் பொங்கலை காதலியின் பற்களுக்கு ஒப்பிட்டு சாப்பிடாமல் இருந்து விடாதீர்கள்.

உமாமீனா
02-02-2011, 02:22 AM
இது கொஞ்சம் அதிகமா தெரியலை - ஒப்பிட்டுகும் அளவுகோள் இல்லையா?

அக்னி
09-02-2011, 12:07 PM
மகனுக்கு மாமிசத்தில் காதல்
என்பது தாய்க்குப் புரிந்திருக்குமோ...

காய் கறிக் காதல் சுவைக்கின்றது...

பாராட்டு...

ஆண் கவிஞர்களின் இந்த பிற்போக்கு சிந்தனையை உடைத்து, பெண்ணை சக மனுஷியாக கவிபடைக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு காதலியை அஃறிணைக்கு ஒப்பிடவில்லையே...
அஃறிணைகள் கூட அவளை நினைவூட்டுவதைத்தானே கவி சொல்கின்றது...

இதுபோன்ற ஒப்பீடுகள் பிற்போக்கு என்றானால்,
எம் இலக்கியங்கள் கூடப் பிற்போக்கானவை ஆகிடுமே...

M.Jagadeesan
09-02-2011, 12:22 PM
அக்னியின் பாராட்டுக்கு நன்றி!