PDA

View Full Version : செங்கோடா செருப்போடு நில் !!!



mania
01-12-2003, 05:22 AM
ஒரு புகழ் பெற்ர ஓவியன் ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்காக ஒரு அழகான இளம் பெண்ணின் படத்தை உருவாக்கிக்கொண்டிருந்தான். அதை தத்ரூபமாக இருக்கவேண்டும் என்று நிறைய வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்து அந்த படத்தை வரைந்துகொண்டிருந்தான் . அவள் காலில் அணிந்திருக்கும் செருப்பு மட்டும் அவனுக்கு திருப்தி அளிக்க வில்லை. அவன் கொஞ்சமும் தயங்காமல் ஒரு நல்ல செருப்பு தைப்பவனை கூப்பிட்டு ஆலோசனை கேட்டான் . செங்கோடனும் (செருப்பு தைப்பவனின் பெயர் ) அவன் வரைந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் வரைந்த அளவுக்கு அழகாக உள்ள இந்த பெண் இந்த மாதிரி செருப்பு அணிந்தால்தான் எடுப்பாக இருக்கும் என்று ஒரு மாதிரியை காண்பித்தான் . ஓவியனும் அந்த மாதிரி மாற்றினான் . இப்போது பார்த்தால் அந்த பெண்ணின் அழகு இன்னும் கூடியது போல் இருந்தது . ஓவியன் செங்கோடனை மிகவும் பாராட்டி நன்றியும் கூறினான் . செங்கோடனுக்கோ ஒரே பெருமை . அவன் மீண்டும் ஒரு முறை படத்தை பார்த்துவிட்டு இந்த பெண்ணின் பார்வை கொஞ்சம் தரையை பார்ப்பது போல் இருக்கிறது . அதையும் கொஞ்சம் நேராக பார்ப்பது போல் வரைந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றான். உடனே அந்த ஓவியன் சொன்னான்," நி செருப்பு தைப்பதில் வல்லவன் என்று தான் உன்னிடம் அதைப்பற்றி கேட்டேன் . மேற்கொண்டு நீ எதுவும் படத்தை பற்றி சொல்ல வேண்டாம் . நான் பார்த்துக்கொள்கிறேன் . செங்கோடா செருப்போடு நில் " என்றானாம்.. அவனும் தான் பண்ணிய தவறை உணர்ந்து சென்று விட்டானாம் .
அன்புடன்
மணியா

சேரன்கயல்
01-12-2003, 05:27 AM
எல்லைகளை உணர்ந்து கொள்ளுதலின் அவசியம் இந்த கதையின் மூலம் தெரிகிறது...ஒரு சிறந்த படைப்பாளி தனது படைப்புக்கு உயிரோட்டம் தர ஆலோசனைகள் ஏற்கும் அதேவேளை எல்லை மீறும்போது சீறவும் செய்வான் என்பதை சொன்ன, எங்கள் தலைக்கு நன்றிகள் பலப்பல...பாராட்டுக்களும் தான்...

இக்பால்
01-12-2003, 05:43 AM
உண்மைதான்.

இளசு
01-12-2003, 06:03 AM
சென்னை தீவுத்திடலின் எதிரே உள்ள மன்றோ சிலை வடித்த சிற்பியின் வாழ்வில் நடந்த சம்பவம் என்று இதைக் கேட்டிருக்கிறேன்.

எகனை -மொகனையோடு சிறப்பாய்ச் சொன்ன சிரிப்பு மன்னன் :D மணியாவுக்குப்
பாராட்டுகள்.

karikaalan
01-12-2003, 10:42 AM
கண்பார்வையைப் பற்றி அந்த வல்லுநரிடம் கேட்டிருப்பான் அல்லவா, அதுதான் செங்கோடனை செருப்புடன் நிற்கச் சொல்லிவிட்டான் போலும்!

poo
01-12-2003, 03:40 PM
எம் தலையின்.. நச் பதிவு..

உனக்கு விதிக்கப்பட்டதைவிட எள்ளளவும் அதிகமாய் எதையும் செய்யாதே.. என கேள்விப்பட்டிருக்கிறேன்..

நிறைய தரவேண்டும் தலையே...

"சிரிப்பு மன்னன்" - பட்டம் கெடைச்சிருக்கு..அதைக் கொண்டாட ஏதும் "சிறப்பு அபிஷேகம்" நடந்ததா?!!.. (எனக்கு தெரியாமல்..)

pgk53
01-12-2003, 04:08 PM
மிக நல்ல பதிவு
வாழ்த்துக்கள் நண்பரே

விகடன்
11-08-2007, 08:38 AM
ஆமாம். அவரவர் அவரவர் வரம்போடிருந்துவிட்டால் பிரச்சினைகளே வராது.

நல்ல கருத்து.

மன்மதன்
11-08-2007, 02:35 PM
அமரனுக்கு நன்றி...
தலை இதுமாதிரி இப்பவும் அவிழ்த்து விடவேண்டியதுதானே.. :D

ஓவியா
11-08-2007, 03:12 PM
'நச்' பதிவு. நன்றி தல.


அப்ப நான் இனி விவாத களம் செல்ல மாட்டேன், நகைச்சுவை கலகத்தில் மட்டும் உறுப்பினர் சந்தவை மறவாமல் வருடமொருமுறை கட்டிக்கொள்கிறேன்.

அமரன்
11-08-2007, 06:27 PM
நல்ல பாடம் 'தல'மை ஆசிரியரே...! தொடர்ந்து தாருங்களேன்.

மனோஜ்
11-08-2007, 06:59 PM
லேட்டா படிச்சாலும் லேட்டஸ்ட்டு கருத்து அருமை மணியா அண்ணா

aren
12-08-2007, 02:46 AM
செருப்பு தைப்பவனுக்கு அந்த அளவுக்குத்தான் ஞானம் இருக்கும் என்று நினைப்பது தவறு. செங்கோடன் சொல்வதைக் கேட்டுவிட்டு பரவாயில்லை இப்படியே இருக்கட்டும் என்று சொல்லியிருந்தால் அந்த பெருமை ஓவியனுக்கு போயிருக்கும். இதில் ஓவியனின் (நம்ம மன்ற ஓவியனைச் சொல்லலீங்க) அகங்காரமே வெளிப்படுகிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

வெண்தாமரை
12-08-2007, 05:27 AM
செருப்பு தைப்பவருக்கு ஏன் கலைஞானம் இருக்க கூடாதா? செருப்பு தைப்பவர் குறை சொன்னாலும் பரவாயில்லை.. என்று ஒரு வார்த்தை சொன்னால் அந்த செருப்பு தைப்பவர் சிரித்துக்கொண்டே போயிருப்பார்.. அவர் ஓவியம் என்று .. ஆனால் அவர் சொன்ன வார்த்தையால் ரொம்ப தலைக்கனம் பிடித்தவர்.. என மனதுக்குள் திட்டிக்கொண்டே போவார்.. என்ன இருந்தாலும் அந்த ஓவியருக்கு ரொம்பதான் வாய் அதிகம்.. இதே இது நல்ல இருக்கு நல்ல இருக்கு என்று சொன்னார்.. வாய் நிறைய பல்லாக இருந்திருக்கும்..

விகடன்
12-08-2007, 06:02 AM
செருப்பு தைப்பவருக்கு ஏன் கலைஞானம் இருக்க கூடாதா? செருப்பு தைப்பவர் குறை சொன்னாலும் பரவாயில்லை.. என்று ஒரு வார்த்தை சொன்னால் அந்த செருப்பு தைப்பவர் சிரித்துக்கொண்டே போயிருப்பார்.. அவர் ஓவியம் என்று .. ஆனால் அவர் சொன்ன வார்த்தையால் ரொம்ப தலைக்கனம் பிடித்தவர்.. என மனதுக்குள் திட்டிக்கொண்டே போவார்.. என்ன இருந்தாலும் அந்த ஓவியருக்கு ரொம்பதான் வாய் அதிகம்.. இதே இது நல்ல இருக்கு நல்ல இருக்கு என்று சொன்னார்.. வாய் நிறைய பல்லாக இருந்திருக்கும்..

கலைஞர்களிற்கு திமிரும் அதிகமாம். ஆகையால் திமிர் மிக்கவனை சிறந்த கலைஞன் என்று சொல்வோம்? :icon_shades: