PDA

View Full Version : உனக்காக..!!



பூமகள்
27-01-2011, 10:43 AM
http://4.bp.blogspot.com/_ATCRNmCxu-E/TUFOuC-Id7I/AAAAAAAAChc/OBbdDCmxMlI/s400/girlangel.jpg (http://4.bp.blogspot.com/_ATCRNmCxu-E/TUFOuC-Id7I/AAAAAAAAChc/OBbdDCmxMlI/s1600/girlangel.jpg)



உனை எழுத நினைத்து
தோற்றுப் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
நான்..!!

வார்த்தைகளுக்குள் வராமல்
வழி மாறிப் போகிறாய்
நீ..!!

உனைத் தொடரவே
நான் பயணிக்க..

என் பயணங்களின் தூரம்
சொல்லாமல் செல்கிறது
காலம்..!!

வளைந்து, மறைந்து,
வேகம் கூட்டி
கண்ணாமூச்சி ஆடுகிறாய்
நீ..!!

குழந்தைகள் விளையாட்டாய்
உனையடைய துரத்துகிறேன்
நான்..!!

இலக்கின்றி ஓடி
ஓர் இடத்தில்
நிற்கிறாய்..!!

மூச்சிரைக்கும் இதயங்கள்
பேசிக் கொள்கின்றன..!
நாம் மௌனம் உடைக்க
முயல்கிறோம்..!

வழக்கம் போலவே
தென்றல் நமைப் பற்றி
மென்னிறகால்
கவிதை தூவிச் செல்கிறது
நம்மிருவருக்குமிடையே..!!

CEN Mark
27-01-2011, 12:35 PM
[QUOTE=பூமகள்;510678]
http://4.bp.blogspot.com/_ATCRNmCxu-E/TUFOuC-Id7I/AAAAAAAAChc/OBbdDCmxMlI/s400/girlangel.jpg (http://4.bp.blogspot.com/_ATCRNmCxu-E/TUFOuC-Id7I/AAAAAAAAChc/OBbdDCmxMlI/s1600/girlangel.jpg)



வர வர தமிழ் மன்றத்தில் காதல் பெருகுகிறது. அதனால் கவிதையும் அதிகம் புழங்குகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வு. காதல் மனிதனை எப்படியெல்லாம் படுத்துகிறது பாருங்கள். சுகமான பாரங்கள், ஈரங்கள். தொடருங்கள். நன்று கவிதை.

பூமகள்
27-01-2011, 01:18 PM
ஹா ஹா.. கவிதையுடனான காதல் என்று சொல்லுங்கள் சகோதரரே. இக்கவிதை காதல் கவிதையாகவும் கொள்ளலாம்.. வேறு பொருள் காண வருவார்கள் மன்றத்து தமிழ் ஆர்வலர்கள்.

பின்னூட்டத்துக்கு நன்றி. :)

அமரன்
27-01-2011, 06:34 PM
உணர்வுகளை வார்த்தைகளில்
வார்த்தெடுத்துக் கொடுத்தேன்.
உதடுகள் நனைத்துக்
கவிஞன் பட்டம் கொடுத்தார்கள்..

கவிஞன் எனும் போர்வைக்குள்
கற்பனையுடன் கலவி யுத்தம் செய்தேன்.
கவிதைகளின் கன்னம் சிவக்கையில்
கனவுகளின் உச்சம் தொட்டேன்..

வெற்றி... வெற்றி.. வெற்றி...

நிர்வாண உண்மைதானே அடுத்த கட்டம்..

ரசித்தாலும் ருசித்தாலு்ம்
முகம் சுழிப்பதுதானே மனித மனம்.

வேறு இடம் தேடிக் கொண்டது
வெற்றி..!!!
...........................

இந்தக் கவிதை வெற்றியைப் பற்றிப் பா்டுதோ இல்லையோ வெற்றியின் நிறங்களைக் கொண்டுள்ளது.

ஒரு கருத்தில் தங்கி இருக்கும் கவிதை மறுகணம் கருமாறிச் சிரிக்கிறது.

பின்னாலே துரத்திச் சென்று பிடிக்க முயன்றால் மூச்சிரைப்புடன் ஆசுவாசப்படுத்துகிறது தன்னை, பிறிதொரு இடத்திலிருந்து..

அந்த நேரத்தில் மென் தென்றலாய் உண்மை பேசிச் செல்கிறது காலம். பழயபடி ஓட்டம், இலக்கின்றி.

கீதம்
28-01-2011, 06:53 AM
படிக்கும் ஒவ்வொருமுறையும்
பிடிபடாமல் கண்ணாமூச்சி காட்டும்
மறைமுகங்கள்!

இதுதான் நீஎன்று
இறுதியாகப் பற்றியவேளை,
இங்கேயிருக்கிறேன் நானென்று
எங்கோ ஓர் குரல்
எதிரொலித்துக் கடக்கிறது.

எத்தனை முயன்றும்
இன்னதென வரையறுக்கப்படாமல்
வளர்ந்து தேய்கிறது கருநிலா.

எட்டிப்பிடிக்கும் முயற்சிகளைக் கைவிட்டு
இயலாமை நொந்து நிற்கிறேன்.
எட்டிப்பார்த்துச் சிரிக்கின்றன,
இதுவரை தேடிய அத்தனையும்
ஒருசேர முகம் காட்டி!

என்னவெல்லாமோ எண்ணவைத்த கவிதை.

அமரன் சொல்வதுபோல் காலாவதிக் கணக்கற்று வட்டப்பாதையில் வரையறுக்கப்பட்ட கவிதையோட்டம்.

பாராட்டுகள் பூமகள்.

கௌதமன்
28-01-2011, 07:05 AM
போய் வா நதியலையே
புலவன் சொன்னதுதான்
நானும் சொன்னேன்
போனதுபோல் போய்
திரும்பி வர மறுக்கிறாய்
எத்தனை முறை அழைத்தும்
நாணல்களை அசைத்து விடைசொல்லி
நிற்காமலேயே போகிறாய்
நின்றி பேசி பலனில்லையென்று
உன்னைத் தொடர்ந்து வந்தேன்
செல்லுமிடமெல்லாம் செழிப்பைக்
கொடுத்துவிட்டு நீ அழுக்கை
சீதனமாய் சுமந்து செல்கிறாய்
ஓரிடத்தில் நிற்கிறாய் என்று
ஓடிவந்து பார்த்தால்
அருவியாய் ஆர்ப்பரிக்கிறாய்
ஆர்ப்பரித்தவள் நீயாவென
ஆச்சர்யமூட்டும் வகையில் அமைதியாகி
சமுத்திரத்தில் சங்கமிக்கிறாய்!

என் சிற்றறவுக்கு எட்டவில்லை!
ஆனாலும் ஒரு முயற்சி.
பாராட்டுகள் பூமகள்!

அமரன்
07-02-2011, 08:33 PM
மனசுக்கும் உனக்குமான கண்ணாமூச்சி இன்னும் தொடர்கிறதா பூ!:)

உமாமீனா
08-02-2011, 08:31 AM
இந்த திரியில் உள்ள ஒவ்வொரு கவிதையும் கலக்கல் - ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர் இல்லை

Nivas.T
08-02-2011, 09:09 AM
நினைவுகளோடு சிலகாலம்
கனவுகளோடு சிலகாலம்
சிந்தனை சிதறிவிட
நீ மட்டும் நிற்கிறாய்
கவிதை வடிவில்...

பூமகளின் வழக்கமான அழகான கவிதை