PDA

View Full Version : ஓப்பன் ஆபிஸ் - உதவி தேவை



முரளிராஜா
27-01-2011, 10:16 AM
எனது நண்பர் லினக்ஸ் os உபயோகித்து கொண்டிருக்கிறார். சமிபத்தில் அவரது கணினி பழுதடந்துவிட்டது. இருப்பினும் அவர் முக்கியமான் கோப்புகளை அவரது பென்டிரைவில் சேமித்து வைத்து இருந்தார்.சில அலுவலக சம்பந்தமான கோப்புகள் அவருக்கு தேவைபடுகிறது என்பதற்காக என் கணினியில் அவரது பென்டிரைவை பொருத்தி பார்த்தால் ms office ல் அவரது கோப்புகளை திறக்க முடியவில்லை. அவரது அனைத்து கோப்புகளும் லினக்ஸ்சில் open office மூலம் எழுதபட்டது.இதை எனது கணினியில் (xp,win 7) திறக்க என்ன வழி?ஓப்பன் ஆபிஸ் மென்பொருள் விண்டோசில் இயங்குமா?

ezhumalai
27-01-2011, 10:21 AM
இதற்கு ஒரே வழி ஓபன் ஆபீஸை கணினியில் நிறுவி, அவரது கோப்புக்களைத் திறந்து அவற்றை ஆபீஸ் கோப்பாக மாற்றிச் சேமிப்பது தான். அல்லது யாரேனும் ஓபன் ஆபீஸ் நிறுவியவர்களிடமும் மாற்றித் தரச் சொல்லலாம்.

ஓபன் ஆபீஸ் விண்டோஸில் அருமையாக இயங்கும்.

ஆனால், ஓபன் ஆபீஸ் என்னும் கனியிருப்ப எம் எஸ் ஆபீஸ் என்னும் காய் கவர்ந்தற்று.

முரளிராஜா
27-01-2011, 10:29 AM
நன்றி நண்பரே அப்படியானால் எக்ஸ்பியில் ஓப்பன் ஆபிஸ் மென்பொருளை நிறுவுவதன் மூலமாக அதில் எழுதப்படும் கோப்பு xp மற்றும் லினக்ஸ் இரண்டு os சிலும் பயன்படுத்தலாம் அல்லவா?

எந்திரன்
27-01-2011, 01:28 PM
ஆமாங்க ஓப்பன் ஆபிஸை விண்டோஸ் எக்ஸ் பியில் நிறுவிக் கொண்டால் அந்த கோப்புகளை லினக்சிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

முரளிராஜா
27-01-2011, 02:06 PM
எந்திரன் சொன்னா சரிதான். நீங்க ஒருதடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி.
சந்தேகத்தை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி நண்பரே

பாரதி
27-01-2011, 03:09 PM
ஒரு சிறிய தகவல்: ஓபன் ஆபிஸிலும் கோப்புகளை சேமிக்கும் போது எந்த வகையில் சேமிக்க வேண்டும் என்ற விருப்பத்தேர்வு இருக்கும். அவசியம் எனில் நீங்கள் ஓபன் ஆபிஸில் தட்டச்சிய கோப்பினை *.doc என்ற மைக்ரோசாஃப்ட் வேர்ட் கோப்பாகவே சேமித்துக்கொள்ளவும் முடியும். அது மைக்ரோசாஃப்ட் மென்பொருளிலும், ஓபன் ஆபிஸ் மென்பொருளிலும் கையாள எளிதாக இருக்கும்.

முரளிராஜா
28-01-2011, 01:49 AM
மிகவும் உபயோகமான தகவல். பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி பாரதி.

Hega
29-01-2011, 10:03 PM
பயன் தரும் தகவலகள் பகிர்வுக்காக நன்றி

priyan24
24-03-2011, 08:34 AM
நண்பர்களே எனக்கு தெரிந்த சில தகவலை இங்கு சொல்ல விரும்புகிறேன் இது காலம் கடந்த ஒரு இடுகை ஆயினும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று உபுண்டு OS நமது கணினியில் நிருவிதான் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை, உபுண்டு CDயை டிரைவரில் பொருத்தி அதன் மூலம் உபுண்டுவை இயக்கி பார்க்கலாம் இதில் ஓபன் ஆபீசும் அடக்கம். இன்னொரு பயனுள்ள தகவலையும் இங்கு கூற விரும்பிகிறேன் சில நேரங்களை நமது விண்டோஸ் os ஆனது கரப்ட் ஆகி நமது டேட்டாகலை எடுக்கமுடியாத சிக்கல் ஏற்படும் அப்போது இந்த முறை பயன்படுத்தி நமது விண்டோஸ் டேட்டாவை வெகு ஈஸியாக எடுத்துவிட முடியும்.

முரளிராஜா
24-03-2011, 08:37 AM
பயனுள்ள தகவல் நண்பரே
நான் முயன்று பார்த்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்களை கேட்கிறேன்
நன்றி

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 10:29 AM
அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ...