PDA

View Full Version : எந்த சாப்ட்வேர் கோர்ஸ் மிகவும் பயனுள்ளது ?



எந்திரன்
27-01-2011, 05:42 AM
எனது சகோதரன் பி.எஸ்.சி கம்பியூட்டர் சைன்ஸ் முடித்திருக்கிறான். மேற்கொண்டு எந்த சாப்ட்வேர் கோர்ஸ் படிப்பது என்று குழப்பமாக உள்ளது.

எந்த சாப்ட்வேர் கோர்ஸ் மிகவும் பயனுள்ளது மற்றும் அதிக வருவாய் தருவது ?

நண்பர்களே உதவுங்கள்.

aathma
27-01-2011, 08:31 AM
Hardware and networking ;
web designing and animation courses ( 3D softwares like MAYA ; 3D STUDIO MAX ; 2D softwares like PHOTOSHOP ; PAGE MAKER ; FLASH )

போன்ற கணினி கல்விகள் மிக அதிக வருவாயை ஈட்டி தரும் நண்பரே

வியாசன்
27-01-2011, 08:31 AM
கிராபிக்ஸ் கற்றுக்கொண்டால் நல்லதென நம்புகின்றேன்

நாஞ்சில் த.க.ஜெய்
27-01-2011, 02:25 PM
சுயதொழில் புரிவதற்கா ? இன்றேல் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதற்க்கா ? சுயதொழில் புரிவதற்கு என்றால் மேலே நண்பர்கள் கூறிய படிப்பினை மேற்கொள்ளலாம் .மற்றபடி என்றால் IBM மெயின் பிரேம் அல்லது .நெட் எனும் படிப்பினை மேற்கொள்ளலாம் ..

எந்திரன்
28-01-2011, 03:56 AM
நண்பர்கள் ஆத்மா, வியாசன் மற்றும் டி.ஜெய் ஆகியோருக்கு நன்றி.

தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேரவே கேட்கிறேன். தம்பியும் கூட லாங்வேஜ்கள் படித்து சாப்ட்வேர் ப்ரோக்ராமராகவோ அல்லது சாப்ட்வேர் டெஸ்டிங் துறைக்கோ செல்கிறேன் என்கிறான். சாப்ட்வேர் டெஸ்டிங்கில் பயிற்சி எடுத்து அந்த துறையில் முயற்சிக்கலாமா என்று யோசனையில் உள்ளோம்.

அது தொடர்பான ஆலாசனைகள் ஏதும் இருந்தாலும் கூறுங்கள்.

aathma
29-01-2011, 02:56 PM
நண்பரே , சாப்ட்வேர் ப்ரோக்ராம் கல்வியைக் காட்டிலும் சாப்ட்வேர் டெஸ்டிங் கல்வி சிறந்தது . இதற்கு நல்ல மதிப்பு இருக்கிறது .
சாப்ட்வேர் ப்ரோக்ராம் கல்வியும் சிறந்ததுதான் ஆனால் கொஞ்சம் அறுவையாக இருக்கும்