PDA

View Full Version : எதைப்பற்றி நான் கவிதை சொல்ல.?



dellas
26-01-2011, 04:19 PM
கையில் எழுதுகோல்
முன்னால் காகிதம்.
கவிதை எழுத உத்தேசம்
எதைப்பற்றி?

நிலா -
அது நல்கவிஞர்களின் சொத்து.

மலர் -
வண்டுகளின் சொந்தம்

இசை-
ரசிகனின் ரசனை.

காதல்-
வீரர்களின் மறுபுறம்

அன்பு-
தாய்மையின் பிரதிபலிப்பு

அழகு-
உள்ளன்பின் வெளிப்பாடு.

விவேகம்-
புத்திசாலிகளின் நண்பன்.

பின் எதைப்பற்றி நான் கவிதை சொல்ல.???

"என் காதலி"-

ஆம் இவை எல்லாம் அந்த
ஒற்றை சொல்லில் அடக்கம்.

கௌதமன்
26-01-2011, 04:24 PM
எதைப் பற்றி எழுதினாலும்
தமிழின் கைப் பற்றி எழுதினால்
காதலை கைப்பற்றி விடலாம்.

dellas
26-01-2011, 04:26 PM
நன்றி கெளதம்

கீதம்
26-01-2011, 10:23 PM
காதலி இருக்கும்போது வேறு எதைப்பற்றிதான் கவிதை வரும்? நெஞ்சமெங்கும் அவள் நினைவு மட்டும்தானே நிறைந்திருக்கும்? பின் எப்படி இத்தனை மனப்போராட்டம் சாத்தியம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தாலும் களமிறக்கிய கவி நன்று. பாராட்டுகள் டெல்லாஸ் அவர்களே.

பிரேம்
26-01-2011, 11:57 PM
கவிதை அருமை..
காதலியின் தங்கையைப் பற்றி எழுதுங்களேன்..புதுசா இருக்கும்ல..:cool:

சுடர்விழி
27-01-2011, 12:06 AM
மனதில் காதல் நிறைந்திருக்கும்போது எதைப் பார்த்தாலும் கவிதை எழுதத் தோன்றுமே !! கவிதை அருமை நண்பரே !!

dellas
27-01-2011, 07:20 AM
என் கவிதையை விட தங்கள் ரசனை அருமை கீதம் அவர்களே. நன்றிகள்.

என் காதலிக்கு (மனைவிதான்) தங்கைகள் இல்லை பிரேம் .

நன்றி சுடர்.

அமரன்
27-01-2011, 06:51 PM
நீ
எழுதிய கவிதைகளை விட
நீ
வாசித்த நான் அழகான கவிதை..

பாராட்டுகள் டெல்லாஸ்.

dellas
29-01-2011, 03:42 PM
அழகு அமரன்.. நன்றி..

ஜனகன்
29-01-2011, 06:09 PM
கவிதை அருமை,

ஒவ்வொரு கோணத்தில் கருத்தாழம் மிக்கதாய் இருக்கின்றன.பாராட்டுக்கள்

dellas
30-01-2011, 05:26 AM
நன்றி ஜனகன்

உமாமீனா
02-02-2011, 07:52 AM
எதை எழுதினாலும் கவிதையாகும் என் மொழியில் மட்டுமே

dellas
09-02-2011, 02:47 PM
ஒரு வரிக்கவிதை . நன்றி.