PDA

View Full Version : எட்டியே நில்



dellas
26-01-2011, 03:49 PM
பூமியில்
நிலா அழகு

தொடுவானத்தில்
சுடும் சூரியனும் அழகு.

உயரத்தில்
எட்டாக் கனியும் அழகு.

எட்டிவிட்டால்
எதுவும் அழகில்லை-

என் அழகைக் காக்க.
எட்டியே நில் என் காதலனே.!!!!

முரளிராஜா
26-01-2011, 04:13 PM
எத்தனைமுறை படித்தாலும் உங்கள் கவிதை அழகு. தொடரட்டும் கவிதை மழை.

கௌதமன்
26-01-2011, 04:17 PM
கட்டளை பொருந்துவது
காதலிக்கு மட்டும்தான்,
கவிதைக்கு அல்ல!

எட்டி வருவது மட்டுமல்லாமல்
தொட்டும் ரசிப்போம்,
சுவைத்தும் பார்ப்போம்,
உங்கள் கவிதைகளை!

நன்றி டெல்லாஸ்!

dellas
26-01-2011, 04:23 PM
நீங்கள் சுவைத்தால்.. நான் மீண்டும் ஊற்றுவேன் தேனை.
ரசனைக்கு நன்றி கெளதம், முரளி ராஜா

M.Jagadeesan
26-01-2011, 11:33 PM
கவிதையும் கருத்தும் அழகு!

பிரேம்
26-01-2011, 11:49 PM
கவிதை நன்று.
எட்டி என்றால் எவ்வளோ தூரம் என சொல்லவே இல்லையே..?:D

dellas
27-01-2011, 07:25 AM
நன்றி ஜெகதீஸ் ,

பிரேம் ..எல்லாம் பாதுகாப்பான தூரத்தில்தான்..(சிரிப்பை வரவழைத்து விட்டீர்கள்)

கீதம்
28-01-2011, 06:26 AM
எட்டி நிற்பதில்
எனக்கொன்றும் ஆட்சேபணையில்லை,
எட்டாக்க(ன்)னியை எண்ணி
கொட்டாவி விடுபவனென்று
ஊர் என்னை ஏசுமே!
ஏளனச்சாமரம் வீசுமே!
அதைப்போக்கவேணும்
அருகில் வர அனுமதிப்பாய்
என் அழகுக் காதலி!

இப்படிக் கெஞ்சினால் மனமிறங்க மாட்டாளா அவள்?

காதல் போதையில் சிக்கிவிடாமல் கவனத்துடன் காதலிக்கும் காதலிக்கு என் பாராட்டுகள். (அட, கவிஞருக்கும்தாங்க!)

dellas
29-01-2011, 03:40 PM
ஊராருக்கு உண்டு
வேலைகள் பல.
மாற்றான் தோட்ட கனியின்
நுண்மை தெரியுமோ...அவருக்கு.
விலை பேசுவர் சந்தைக்கு வந்தால் .
வாய்பேச்சு வீரனில்லையே நீ..
துணிந்து வா மணமாலையோடு..

இப்படி எட்டி நிற்பதுதான் ..அழகு..நன்றி கீதம்..

ஜனகன்
29-01-2011, 06:05 PM
எட்டியே நில் கவிதை சூப்பர்ங்க

மிகவும் ரசித்தேன்.

dellas
30-01-2011, 05:27 AM
நன்றி ஜனகன்