PDA

View Full Version : தனித்துவிடப்பட்ட நட்பொன்று...கீதம்
26-01-2011, 07:45 AM
காரணம் சொல்லப்படாமல்
கழற்றிவிடப்படும் நட்புபற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு அகோரவிபத்துக்கொப்பான
அதிரடிப் பின்விளைவுகளைத்தாங்கி.
அகாலமரணமடைந்தவர்களின்
ஆவியைப் போன்றே
அலையத்தொடங்கிவிடுகிறது அது.

ஆரம்ப நாட்களில்…..
திருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தைபோல
அழுதுத் திரிந்துகொண்டிருந்த அதற்கு,
அப்படி அந்நியப்படுத்தப்பட்டதற்கான காரணம்
எதுவும் அறிவிக்கப்படவில்லை,
அந்தர்தியானமான நட்பின் தரப்பிலிருந்து
யாதொரு கருணையும் காட்டப்படவில்லை.

அதன் பழைய நண்பர்கள் என அறியப்பட்டவர்கள்
தற்போது புதிய நண்பர்களாய் அறிமுகப்படுத்திக்கொண்டு
இன்னொரு வட்டத்துக்குள் இணைந்திருக்கலாம்.

பதமவியூகத்தைப் போன்றே நட்பின் வியூகங்களும்
நுழைதற்கு வெகு எளிது.
அவ்வியூகத்தை உடைத்து வெளியேறுவதென்பது
அசாதாரண நிகழ்வென்று அறிந்தபோதும்
அவ்வித்தை அவர்களுக்கு கைவரப்பெற்றிருப்பதால்
இதுபோல் இன்னும்பலவற்றில்
இணைந்துவெளியேறக்கூடும்.

பழகிய நட்புகளையிழந்து
பாழ்வெளியில் தனித்துவிடப்பட்ட நிலையில்
தன்னைத்தானே நொந்துகொண்ட நட்பு,
கொஞ்சங்கொஞ்சமாய் சுயமுணர்ந்துகொண்டது.

தற்போதெல்லாம்…….
நேர்ந்துவிடப்பட்ட கிடாவினைப்போன்று
இலேசான மமதையுடன்
இலக்கின்றி இருப்பின்றி அலைவதிலேயே
இன்புறத் தொடங்கிவிட்டது அது!

CEN Mark
26-01-2011, 07:59 AM
[QUOTE=கீதம்;510520]காரணம் சொல்லப்படாமல்
கழற்றிவிடப்படும் நட்புபற்றி
என்ன நினைக்கிறீர்கள்?

இதுதாங்க. இதத்தாங்க எதிர்பார்த்தேன்.இப்படி கவிதை சரளமாய் வார்த்தைகளை கோர்த்து வரணும். சிலருக்கு பத்மவியுகதிலிருந்து வெளியேறும் வித்தை கைவரபெற்றிருப்பதுபோல் உங்களுக்கு கவிதை வரன் வாய்த்திருக்கிறது. சிறப்பான உவமைகள். கவியின் கோணம் நன்று. அனுபவமாயில்லாதவரை..

கீதம்
26-01-2011, 09:49 AM

அனுபவங்களை உரசிச்செல்லாத எக்கவிதையும் ரசிகனின் மனம் உரசும் வாய்ப்பு பெறாது என்றே நம்புகிறேன். பாராட்டுக்கு நன்றி சென்மார்க் அவர்களே.

dellas
26-01-2011, 10:28 AM
நட்பு கொண்டபின்
கூடா நட்பெனக்கண்டேன்.
நட்பு எனை பழிக்குமுன்,
நான் நண்பனைத் துறந்தேன்.
நட்பு இல்லையே அவன் எப்படி நண்பன்
என்ற விளி கொண்டான்.
பகை இல்லாதவரைக்கும் நண்பன் என்ற விளி
பகையில்லையே.

அருமை கீதம் அவர்களே. பாராட்டுகள்.

மதி
26-01-2011, 02:50 PM
நட்புக்கு உரு கொடுத்து உணர்வு கொடுத்து... நீங்க சொல்றதும் சரி தான். முன்பெல்லாம் அது இருவருக்குள் அல்லது அந்த வட்டாரத்துக்குள் நீண்ட காலம் இருக்குமாம். இப்போதெல்லாம் வேகவேகமான உலகில் அதுவும் வேகவேகமாக கழட்டிவிடப்படுகிறது...தேவைக்கேற்ப..!

நல்ல சிந்தனை...க்கா..!

ஜானகி
26-01-2011, 03:40 PM
யாரும் சொல்லுமுன், உங்கள் உணர்ச்சியைக் கவிதையாகக் கொட்டியதில் திருப்திதானே....? "

வித்தியாசமானசிந்தனை ".என்னோடு டூ விட்டுவிட்டான் " என்பதை இவ்வளவு அழகாகச் சொல்லமுடியுமா...!

உண்மையான நட்பாக இருந்தால் மீண்டும் வந்து சேர்ந்துகொள்ளும்...கவலை வேண்டாம்....

கௌதமன்
26-01-2011, 04:05 PM
கவிதையல்ல இது!
தொடுக்கப்பட்ட கணைகள்!
சரியாக குறிவைத்து
அதுவும் என் மனச்சாட்சி மீது

சேமிக்க வேண்டியதை,
சேமிக்கும் நேரத்தில் செலவளித்துவிட்டு
இப்போது சம்பாதிக்கத் துடிக்கிறேன்.

தொலைத்த நட்புகளை
புதுப்பிக்க வழியில்லாமல் புதிய நட்புகளை
இணையத்தில் தேடுகிறேன்.

உயிரும், ரத்தமுமான உறவுகளை
திருட்டுக் கொடுத்துவிட்டு
தெரிந்த முகங்களை
ஆர்குட்டிலும், ஃபேஸ்புக்கிலும் தேடுகிறேன்.

எதிர்பாராமல் எப்போதாவது
சந்திக்கும்வேளையில்
என் கிராமத்து நண்பன்
சார் என அழைக்கும்போது
உள்ளுக்குள் உடைந்து அழுகிறேன்.

எழுதும் இவ்வேளையிலும்
என் கண்கள் தளும்புவதை
என் பிள்ளைகள் அறியாமல் துடைக்கிறேன்.

நன்றி கீதம்!
எனக்கு வேறு என்ன சொல்வதென்று உண்மையிலேயே தெரியவில்லை!!
உங்களின் மற்றக் கவிதைகளில் நான் கற்பனையாக உள்ளே புகுந்து பார்ப்பேன்.
இந்தக் கவிதையோ என் நெஞ்சைக் கிழித்து அது உள்ளே புகுந்து விட்டது.

ரசிகன்
27-01-2011, 12:21 PM
காரணம் சொல்லப்படாமல்
கழற்றிவிடப்படும் நட்புபற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு அகோரவிபத்துக்கொப்பான
அதிரடிப் பின்விளைவுகளைத்தாங்கி.
அகாலமரணமடைந்தவர்களின்
ஆவியைப் போன்றே
அலையத்தொடங்கிவிடுகிறது அது.

ஆரம்ப நாட்களில்…..
திருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தைபோல
அழுதுத் திரிந்துகொண்டிருந்த அதற்கு,
அப்படி அந்நியப்படுத்தப்பட்டதற்கான காரணம்
எதுவும் அறிவிக்கப்படவில்லை,
அந்தர்தியானமான நட்பின் தரப்பிலிருந்து
யாதொரு கருணையும் காட்டப்படவில்லை.

அதன் பழைய நண்பர்கள் என அறியப்பட்டவர்கள்
தற்போது புதிய நண்பர்களாய் அறிமுகப்படுத்திக்கொண்டு
இன்னொரு வட்டத்துக்குள் இணைந்திருக்கலாம்.

பதமவியூகத்தைப் போன்றே நட்பின் வியூகங்களும்
நுழைதற்கு வெகு எளிது.
அவ்வியூகத்தை உடைத்து வெளியேறுவதென்பது
அசாதாரண நிகழ்வென்று அறிந்தபோதும்
அவ்வித்தை அவர்களுக்கு கைவரப்பெற்றிருப்பதால்
இதுபோல் இன்னும்பலவற்றில்
இணைந்துவெளியேறக்கூடும்.

பழகிய நட்புகளையிழந்து
பாழ்வெளியில் தனித்துவிடப்பட்ட நிலையில்
தன்னைத்தானே நொந்துகொண்ட நட்பு,
கொஞ்சங்கொஞ்சமாய் சுயமுணர்ந்துகொண்டது.

தற்போதெல்லாம்…….
நேர்ந்துவிடப்பட்ட கிடாவினைப்போன்று
இலேசான மமதையுடன்
இலக்கின்றி இருப்பின்றி அலைவதிலேயே
இன்புறத் தொடங்கிவிட்டது அது!
எப்போதுமே.... நாம் சொல்ல நினைப்பதை/ எழுத முடியாமல் தவிப்பதை... வேறு ஒருவர் அவ்வளவு எளிதாய் எழுதி வைத்து விடுவார்கள்.. அதை படிக்கும்போது... நினைவுகள் ஒரு முழு உருவம் பெற்று.... நம்மோடு இருக்கையை பகிர்ந்து உணர்வுகளை பரிமாறிக்கொள்ளும்! அப்படியான தருணமிது எனக்கு!

நன்றி!

அமரன்
27-01-2011, 07:11 PM
உணர்வின் தத்ரூபமான வெளிப்பாடு..

தனிமை தரும் பயம் எல்லாருக்கும் உண்டென்றாலும் பெண்களுக்கு அது அதீதம்.. கவிதாயினி என்பதால் அந்தப் பயம் கவிதையில் வியாபித்துள்ளது.

என்னைப் பொறுத்தமட்டில் நட்புடன் கட்டுண்டவன் தனிமைப்படுவதி்ல்லை. காலைப்பனித்துளியை கபளீகரம் செய்யும் ஆதவனைப் போல துளிப் புன்னகையையே தின்று பசியாறும் பக்குவம் நட்புடன் கலந்தவனுக்கு நிச்சயம் உருவாகும்.

கவனம் சிதறிய கணத்தில் ஆறிய காயத்தை சடுியாய்க் கீறும் சம்பவம் தரும் வலியை அனுபவிக்க நெர்ந்தாலும் அரும்பு முறுவலால் அடுத்த நொடி மாறும் வல்லமை கொடுக்க வல்லதும் நட்பு!

தாக்கம் அதிகம்தான்.. ஆனாலும் தர்க்கத்தைத் தவிர்க்க இயலவில்லை.

வடிகட்டாத சொற்களால் கட்டப்பட்ட கவிதையில் குடியிருப்பது சுகந்தான்.

பாராட்டுகள்கா.

கீதம்
03-02-2011, 11:07 PM
நட்பு கொண்டபின்
கூடா நட்பெனக்கண்டேன்.
நட்பு எனை பழிக்குமுன்,
நான் நண்பனைத் துறந்தேன்.
நட்பு இல்லையே அவன் எப்படி நண்பன்
என்ற விளி கொண்டான்.
பகை இல்லாதவரைக்கும் நண்பன் என்ற விளி
பகையில்லையே.

அருமை கீதம் அவர்களே. பாராட்டுகள்.

நன்றி டெல்லாஸ் அவர்களே!

கூடா நட்பது.
ஆம், நெஞ்சங்கூடா நட்பது!
கூடாநட்பையும் கூடச்செய்வதுதானே நல்நட்பின் இலக்கு?

கீதம்
03-02-2011, 11:11 PM
நட்புக்கு உரு கொடுத்து உணர்வு கொடுத்து... நீங்க சொல்றதும் சரி தான். முன்பெல்லாம் அது இருவருக்குள் அல்லது அந்த வட்டாரத்துக்குள் நீண்ட காலம் இருக்குமாம். இப்போதெல்லாம் வேகவேகமான உலகில் அதுவும் வேகவேகமாக கழட்டிவிடப்படுகிறது...தேவைக்கேற்ப..!

நல்ல சிந்தனை...க்கா..!

தேவைகளை முன்னிறுத்தித்
தேடிக்கொள்வதும்
பின் சாடிச்செல்வதுமே
நட்பெனும் புதிய பாடம்
கற்றுக்கொள்கிறேன்,
இக்கணினி உலகில்,
காலந்தாழ்த்தியேனும்!

நன்றி மதி.

கீதம்
03-02-2011, 11:13 PM
யாரும் சொல்லுமுன், உங்கள் உணர்ச்சியைக் கவிதையாகக் கொட்டியதில் திருப்திதானே....? "

வித்தியாசமானசிந்தனை ".என்னோடு டூ விட்டுவிட்டான் " என்பதை இவ்வளவு அழகாகச் சொல்லமுடியுமா...!

உண்மையான நட்பாக இருந்தால் மீண்டும் வந்து சேர்ந்துகொள்ளும்...கவலை வேண்டாம்....

ஆற்றுப்படுத்தும் அழகுப் பின்னூட்டம். நன்றி ஜானகி அவர்களே.

கீதம்
03-02-2011, 11:16 PM
கவிதையல்ல இது!
தொடுக்கப்பட்ட கணைகள்!
சரியாக குறிவைத்து
அதுவும் என் மனச்சாட்சி மீது

சேமிக்க வேண்டியதை,
சேமிக்கும் நேரத்தில் செலவளித்துவிட்டு
இப்போது சம்பாதிக்கத் துடிக்கிறேன்.

தொலைத்த நட்புகளை
புதுப்பிக்க வழியில்லாமல் புதிய நட்புகளை
இணையத்தில் தேடுகிறேன்.

உயிரும், ரத்தமுமான உறவுகளை
திருட்டுக் கொடுத்துவிட்டு
தெரிந்த முகங்களை
ஆர்குட்டிலும், ஃபேஸ்புக்கிலும் தேடுகிறேன்.

எதிர்பாராமல் எப்போதாவது
சந்திக்கும்வேளையில்
என் கிராமத்து நண்பன்
சார் என அழைக்கும்போது
உள்ளுக்குள் உடைந்து அழுகிறேன்.

எழுதும் இவ்வேளையிலும்
என் கண்கள் தளும்புவதை
என் பிள்ளைகள் அறியாமல் துடைக்கிறேன்.

நன்றி கீதம்!
எனக்கு வேறு என்ன சொல்வதென்று உண்மையிலேயே தெரியவில்லை!!
உங்களின் மற்றக் கவிதைகளில் நான் கற்பனையாக உள்ளே புகுந்து பார்ப்பேன்.
இந்தக் கவிதையோ என் நெஞ்சைக் கிழித்து அது உள்ளே புகுந்து விட்டது.

உணர்வு பூர்வ கவிதைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி கெளதமன்.

உங்கள் நண்பர்கள் பாக்கியசாலிகள். வேறென்ன சொல்ல?

கீதம்
03-02-2011, 11:19 PM
எப்போதுமே.... நாம் சொல்ல நினைப்பதை/ எழுத முடியாமல் தவிப்பதை... வேறு ஒருவர் அவ்வளவு எளிதாய் எழுதி வைத்து விடுவார்கள்.. அதை படிக்கும்போது... நினைவுகள் ஒரு முழு உருவம் பெற்று.... நம்மோடு இருக்கையை பகிர்ந்து உணர்வுகளை பரிமாறிக்கொள்ளும்! அப்படியான தருணமிது எனக்கு!

நன்றி!

நட்பின் பரிமாற்றங்கள் என்றுமே வரவேற்கப்படக்கூடியவை. ஆனாலும் அவை சம்பிரதாய வரவேற்புகளை விரும்புவதில்லை என்பதுதான் உண்மை.

நன்றி ரசிகன்.

கீதம்
03-02-2011, 11:26 PM
உணர்வின் தத்ரூபமான வெளிப்பாடு..

தனிமை தரும் பயம் எல்லாருக்கும் உண்டென்றாலும் பெண்களுக்கு அது அதீதம்.. கவிதாயினி என்பதால் அந்தப் பயம் கவிதையில் வியாபித்துள்ளது.

என்னைப் பொறுத்தமட்டில் நட்புடன் கட்டுண்டவன் தனிமைப்படுவதி்ல்லை. காலைப்பனித்துளியை கபளீகரம் செய்யும் ஆதவனைப் போல துளிப் புன்னகையையே தின்று பசியாறும் பக்குவம் நட்புடன் கலந்தவனுக்கு நிச்சயம் உருவாகும்.

கவனம் சிதறிய கணத்தில் ஆறிய காயத்தை சடுியாய்க் கீறும் சம்பவம் தரும் வலியை அனுபவிக்க நெர்ந்தாலும் அரும்பு முறுவலால் அடுத்த நொடி மாறும் வல்லமை கொடுக்க வல்லதும் நட்பு!

தாக்கம் அதிகம்தான்.. ஆனாலும் தர்க்கத்தைத் தவிர்க்க இயலவில்லை.

வடிகட்டாத சொற்களால் கட்டப்பட்ட கவிதையில் குடியிருப்பது சுகந்தான்.

பாராட்டுகள்கா.

கவிதை சொல்லும் அனுபவம் கண்டிராத கணங்களுண்டோ நட்பே பிரதானமென எண்ணி வாழும் ஒரு சாமான்யனின் வாழ்வில்?

விமர்சனப்பின்னூட்டத்துக்கு நன்றி அமரன்.