PDA

View Full Version : மரண மயக்கம்

ஆளுங்க
26-01-2011, 05:09 AM
வேலன் அந்த சாலையைக் கடக்க முயற்சித்த போது ......

அவன் செல்போன் ஒலித்தது ..
சாலையைக் கடந்து கொண்டே எடுத்து "ஹலோ " என்றான்.

அப்போது .....

அவன் எதிரே புயல் வேகத்தில் ஒரு ஆட்டோ !
கிட்டத்தட்ட அவனை உரசிக் கொண்டு சென்றது ...

"மவனே வீட்ல சொல்லிட்டு வந்தியா?" ஆட்டோ காரன் கத்திக்கொண்டே சென்றான்

எதிரில் காவல் துறை வாசகம் :
"சாலையைக் கடக்கும் போது செல்போனில் பேசாதே ..கூப்பிடுவது 'எமன்' ஆக இருக்கலாம் "

செல்போன் எதிர் முனையில் இருந்து வந்த குரல் :
"ச்ச ... ஜஸ்ட்ல மிஸ் ஆயிட்டான் "

வேலன் உறைந்து நின்றான்!!

M.Jagadeesan
26-01-2011, 05:14 AM
வேலனுக்கு வேளை சரியில்லை.
காலனுக்கு நன்றி சொல்லட்டும்!

பாலகன்
26-01-2011, 05:33 AM
அப்போ கூப்பிட்டது எமன் தானா! சரியாப்போச்சி

பாரதி
26-01-2011, 08:17 AM
முயற்சி நன்று நண்பரே. வாழ்த்துகிறேன்.

இருப்பினும் இது சிறுகதையா.. அல்லது துணுக்கா.. என்ற ஐயமும் எழுகிறது.

ஆளுங்க
26-01-2011, 11:55 AM
இது சிறுகதையும் அல்ல.. துணுக்கும் அல்ல!!
குறுங்கதை

CEN Mark
26-01-2011, 02:15 PM
வேலன் அந்த சாலையைக் கடக்க முயற்சித்த போது ......

அவன் செல்போன் ஒலித்தது ..
சாலையைக் கடந்து கொண்டே எடுத்து "ஹலோ " என்றான்.

அப்போது .....

அவன் எதிரே புயல் வேகத்தில் ஒரு ஆட்டோ !
கிட்டத்தட்ட அவனை உரசிக் கொண்டு சென்றது ...

"மவனே வீட்ல சொல்லிட்டு வந்தியா?" ஆட்டோ காரன் கத்திக்கொண்டே சென்றான்

எதிரில் காவல் துறை வாசகம் :
"சாலையைக் கடக்கும் போது செல்போனில் பேசாதே ..கூப்பிடுவது 'எமன்' ஆக இருக்கலாம் "

செல்போன் எதிர் முனையில் இருந்து வந்த குரல் :
"ச்ச ... ஜஸ்ட்ல மிஸ் ஆயிட்டான் "

வேலன் உறைந்து நின்றான்!!

குறுங்கதை நன்று.

கீதம்
27-01-2011, 09:13 PM
காலனுக்கு காலர் ஐடி இல்லையா? இருந்திருந்தால் கவனமாகத் தவிர்த்திருக்கலாமே! :)

நகைச்சுவை போல் தெரிந்தாலும் உள்ளிருக்கும் உண்மை விழிப்பூட்டுகிறது. பகிர்வுக்கு நன்றி aalunga அவர்களே.