PDA

View Full Version : யாருக்கு வேலை?



கௌதமன்
25-01-2011, 04:46 PM
ராமும், வேணுகோபாலும் வெளியே காத்திருந்தார்கள். இரண்டு பேரும் நண்பர்கள். இரண்டு பேரும் ஒரே வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார்கள். எழுத்துத்தேர்வும் முடிந்தது. வந்திருந்தவர்களில் இவர்கள் இரண்டு பேரை மட்டும் தான் காத்திருக்க சொன்னார்கள். மற்றவர்களை அனுப்பி விட்டார்கள்.

மேலாளர் இருவரையும் அறையின் உள்ளே அழைத்தார். இரண்டு பேரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் ஒரே ஒரு கேள்விகளுக்குத்தான் தவறாக பதிலளித்துள்ளீர்கள். ஆனால் வேணுகோபால் தான் இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்றார்.

இரண்டு பேரும் ஒரே மதிப்பெண்கள், ஒரே ஒரு கேள்விக்குத்தான் தவறாகப் பதிலளித்திருக்கிறோம் என்றால் எப்படி வேணுகோபால் மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்றான் ராமு.

வேணுகோபால் 3-ஆவது கேள்விக்குப் பதிலாக தெரியவில்லை என்று பதிலளித்து உள்ளார். நீங்களும் அதே 3-ஆவது கேள்விக்குப் பதிலாக எனக்கும் தெரியவில்லை என்று பதிலளித்துள்ளீர்கள் என்றார் மேலாளர்.

பிரேம்
26-01-2011, 01:51 AM
ஹி...ஹி..அருமை ரசித்தேன்..

dellas
26-01-2011, 05:43 AM
அட மறைமுக தாக்குதல் ..சொல்லிகொடுத்தவருக்கும் வேலை கிடைத்திருக்க கூடாது.

கீதம்
27-01-2011, 08:52 PM
டெல்லாஸ் சொல்வதுபோல் சொல்லிக்கொடுத்தவருக்கும் வேலை கிடைத்திருக்கக்கூடாது. ஆனல் அவரல்லாத வேறுவழியில் வினா பெற்றிருப்பாரோ என்று யோசிக்கும் வேளையில் அப்படிப் பெற்றிருந்தால் அதற்கான விடையையும் அவர் கண்டுபிடித்திருந்திருப்பாரே என்றும் தோன்றுகிறது.

நிறைய யோசிக்கவைத்த கதை. பாராட்டுகள் கெளதமன்.

அக்னி
27-01-2011, 09:20 PM
அவர் சொல்லாமல், இவர் பார்த்திருந்தால்...
சரிதானே...

கௌதமன்
28-01-2011, 06:45 AM
அவர் சொல்லாமல், இவர் பார்த்திருந்தால்...
சரிதானே...

இதுதான் சரி!

கீதம்
28-01-2011, 07:08 AM
அவர் சொல்லவில்லையென்றால் அவர் 'எனக்குத் தெரியாது' என்று சொன்ன பதில் மட்டும் எப்படி இவருக்குத் தெரிந்திருக்கும்? :confused:

கௌதமன்
28-01-2011, 07:11 AM
அவர் சொல்லவில்லையென்றால் அவர் 'எனக்கும்(த்) தெரியாது' என்று சொன்ன பதில் மட்டும் எப்படி இவருக்குத் தெரிந்திருக்கும்? :confused:

தெரியாது என்று ஒருவர் பதில் எழுதியிருக்கிறார்.
எனக்கும் தெரியாது என்று இன்னொருவர் பதில் எழுதியிருக்கிறார்.

கீதம்
28-01-2011, 07:18 AM
முந்தையவர் எழுதிய விடைத்தாளை இரண்டாமவர் பார்த்திருப்பதாகக் கொண்டால் இது சாத்தியம்தான். ஏற்றுக்கொள்கிறேன். நான் வெறும் வினாத்தாளைப் பார்த்திருப்பார் என்ற எண்ணத்தில் கேட்டேன். இப்போது விளங்குகிறது. நன்றி கெளதமன்.

அக்னி
28-01-2011, 07:20 AM
எழுத்துத் தேர்விற்தானே நிகழ்ந்தது இது...

govindh
28-01-2011, 07:35 AM
'எனக்கும்...' என்ற ஐந்தெழுத்து
வேலை கிடைக்காமல் செய்து விட்டது.