PDA

View Full Version : அந்த ஒரு நிமிடம்



கௌதமன்
25-01-2011, 01:39 PM
கதையைப் படிச்சுட்டு தலைப்பு அபாரமுன்னு சொல்லப் போறீங்க


’வாங்கி நீ ரெண்டு நாள் கூட யூஸ் பண்ண மாட்டே. அப்படியே கிடக்கும். இதே மாதிரிதான் வாக்யூம் கிளீனர் வாங்கி ரெண்டு நாள் சோபாவில அழுக்கெடுத்தே இப்ப அப்பிடியே கிடக்குது.’

’வாக்யூம் கிளீனரை நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணத்தானே வாங்கச்சொன்னேன். நீங்க ஒண்ணும் செய்யாம இருந்துட்டு என் மேல பழி போடுறீங்களா? மாலாவும், ரெமியும் வாங்கியாச்சு. நம்ம வாங்காட்டி என்ன நினைப்பாங்க?’

’ நீ செய்யுற புளிசாதத்துக்கும், தயிர்சாததுக்கும் எதுக்குடி மைக்ரோவேவ் அவன்? எலக்ட்ரிக் குக்கரே அதிகம்’

’நீங்க எதுதான் கேட்டவுடன் வாங்கித் தந்திருக்கீங்க. நான் ஒரு வேலைக்குப் போயிருந்தா ஒவ்வொண்ணுக்கும் உங்ககிட்டக் கேட்டுகிட்டே இருக்க வேண்டாம். வேலைக்கும் போக வேண்டாமுன்னுட்டீங்க’

’சரி சரி பழசையெல்லாம் கிண்டாதே. சாயங்காலம் போய் வாங்கிகிட்டு வருவோம்’

--------------------------------------------------------------------------

’என்னடி, அவன் வந்ததிலிருந்து ஒரே பாப்கார்ன்தான் வறுத்து தந்துட்டு இருக்க. வேற ஒண்ணும் செய்ய முடியாதா?’

‘இல்லீங்க, ஒவ்வொண்ணும் செய்றதுக்கு டைமரில டைம் செட் செய்யணும். அந்த மானுவலை எங்கேயோ வச்சேன். காணல.’

‘சாயங்காலம் உன் பிரண்ட்ஸையெல்லாம் கூப்பிட்டு சிக்கன் சமைக்கப் போறேன்னு சொல்லிட்டு மானுவலைக் காணோமுன்னு சொல்றியே’

‘அதெல்லாம் செஞ்சிடுவேன். கிடைக்காட்டி அதுக்கு வேற வழி வச்சிருக்கேன்’

--------------------------------------------------------------------------
‘என்ன அலமேலு, புது அவனில சிக்கன் பண்ணப் போறியா?’

‘ஆமா ராஜி. இரு இப்ப ஒரு நிமிஷத்தில வந்திடறேன்’


’ஹலோ! அவன் டீலரா? சார் நீங்க தந்த மானுவல் தொலைஞ்சுப் போச்சு. வேற கிடைக்குமா? நாளைக்குத் தானா? சரிங்க இப்ப ஒண்ணே ஒண்ணு சொல்லுங்களேன்?’

‘சொல்லுங்கம்மா’

‘ஒரு கிலோ சிக்கன் சமைக்க எவ்வளவு நேரங்க டைம் செட் செய்யணும்’

‘ஒரு நிமிடம் மேடம்’ என்று சொல்லி கடைக்காரர் புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பதுக்குள்,

‘தாங்ஸுங்க’ என்று சொல்லி டெலிபோனைக் கட் செய்தாள்.

பூமகள்
25-01-2011, 02:25 PM
நிஜமாகவே நல்ல தலைப்புங்க.. ஆனாலும் வீட்டம்மாக்கள் இப்படி இருக்கக் கூடாது.. நல்ல எழுத்து நடை.. தொடருங்கள். :)

ஆளுங்க
26-01-2011, 04:42 AM
சப்பா...
இப்பவே கண்ணைக் கட்டுதே!!

aren
26-01-2011, 06:37 AM
இப்படி அப்பாவியாகவா உங்கள் வீட்டில் இருக்கிறார்கள். கொடுத்து வைத்தவர் நீங்கள். ஹூம்!!!!

ஜனகன்
26-01-2011, 06:48 AM
கெளதமன்,
நல்லா கதை விடுறீங்க....

அடுத்ததா உங்களிடம் இருந்து ஒரு காமெடி கதையை எதிர்பார்க்கிறேன்.

கௌதமன்
26-01-2011, 06:54 AM
கெளதமன்,
நல்லா கதை விடுறீங்க....

அடுத்ததா உங்களிடம் இருந்து ஒரு காமெடி கதையை எதிர்பார்க்கிறேன்.

தலைவா! நான் கதை எழுதறதே காமெடியான விஷயம் தானே!

கீதம்
26-01-2011, 07:51 AM
அவங்கதான் அவனின் மானுவலை எங்கயோ தவறுதலா வச்சிட்டுத் தவிக்கிறாங்களே, கொஞ்சநேரம் ஒதுக்கித் தேடிக்கொடுத்தாதான் என்ன? அதை விட்டுட்டு கதை எழுத வந்திட்டீங்களே?

எல்லாம் சரி, அந்த ஒருநிமிடச் சமையல் எப்படியிருந்தது? அதைச் சொல்லலையே?

கௌதமன்
26-01-2011, 08:03 AM
அவங்கதான் அவனின் மானுவலை எங்கயோ தவறுதலா வச்சிட்டுத் தவிக்கிறாங்களே, கொஞ்சநேரம் ஒதுக்கித் தேடிக்கொடுத்தாதான் என்ன? அதை விட்டுட்டு கதை எழுத வந்திட்டீங்களே?

எல்லாம் சரி, அந்த ஒருநிமிடச் சமையல் எப்படியிருந்தது? அதைச் சொல்லலையே?

உரையாடலே இல்லாமல் முதலிரண்டுக் கதைகள் எழுதினேன். வெறும் உரையாடலையே கதையாய் எழுதினால் எப்படி இருக்கும் என்று எழுதிய அரைவேக்காடுக்கதைதான் இது.

இதையே என் தலைவர் சுஜாதா எழுதியிருந்தார்னா, கதையில் வேறு நிறத்தில் பதித்திருக்கும் வார்த்தைகள் எழுதாமல் விட்டிருப்பார். நமக்கு இரண்டு மூணு தரம் வாசிச்சதுக்கப்பறம்தான் புரியும். ஒரு ஜோக்கை கையில் எடுத்துகிட்டு நான் கொஞ்சம் அவர் ஸ்டைலைக் காப்பியடிச்சிப் பார்த்தேன்.

மற்றபடி அவன் வாங்குற ஐடியா இல்லீங்க. வேறொருத் திரியில் ஹேகா நல்லா பயமூட்டி வைச்சிருக்காங்க!

அப்புறம் என்ன கேட்டீங்க...ஆங் சமையல் எப்படின்னு..தெரியலீங்க. ஒருவேளை என் கதைப் போல அரை வேக்காடா இருக்குமோ?

பாரதி
26-01-2011, 08:04 AM
கதை நன்றாக இருந்தது கெளதமன்.
தொடர வாழ்த்துகிறேன்.

Kalai_21
26-01-2011, 01:11 PM
நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்....

விகடன்
30-01-2011, 01:05 PM
இப்படியே சமைத்து சாப்பிட்டுவந்தால் ஒருகாலத்தில காட்டுவாசி போல பச்சையாகவே உண்ணும் பழக்கம் வந்துவிடும். அதுக்கு பின்னர் இந்த அவனும் தேவையில்லை!

தலைப்பு நல்லா இருந்திச்சு :aetsch013:.

M.Jagadeesan
30-01-2011, 01:22 PM
நல்ல நகைச்சுவை!உணவுப் பொருளை சூடாக்குவதற்கு மட்டும் எனக்கு
"அவன்" தேவைப்படுகிறான்.மற்றபடி எல்லாவற்றிற்கும் "அவள்" தான்!

அமரன்
31-01-2011, 08:44 PM
உதடுகளை நீள வைத்த கதை.

இன்னும் எழுதுங்கள் கௌதம்.

sarcharan
10-02-2011, 11:29 AM
‘ஒரு கிலோ சிக்கன் சமைக்க எவ்வளவு நேரங்க டைம் செட் செய்யணும்’

‘ஒரு நிமிடம் மேடம்’ என்று சொல்லி கடைக்காரர் புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பதுக்குள்,

‘தாங்ஸுங்க’ என்று சொல்லி டெலிபோனைக் கட் செய்தாள்.

புத்திசாலி பெண் :smilie_abcfra::aetsch013::mini023::lachen001::lachen001::lachen001:

உமாமீனா
13-02-2011, 08:26 AM
செம காமடி - நல்லாத்தான் கொளுத்தி போடுகிறிர்கள் - பெண்கள் அவசரக்காரர்கள் என்று மட்டமா? மட்டம் தட்டி நகைசுவை பதிவு - வாழ்த்துக்கள்