PDA

View Full Version : மணல் மூட்டை



ஆளுங்க
24-01-2011, 05:45 PM
இது என் சொந்த கற்பனை அல்ல.. எங்கோ எப்போதோ படித்தது!!அதற்கு வேறு உருவம் கொடுத்து சொல்கிறேன்

அந்த சர்தார்ஜி பைக்கில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார்..
அண்டை நாட்டு அதிகாரி வந்தார்...

"என்னப்பா இருக்கு மூட்டையில?"
"வெறும் மணல் தான் சார்"
"நான் நம்ப மாட்டேன்"
" மெய்யாலுமே மணல் தான் சார்"

அதிகாரி நம்ப வில்லை.. மூட்டையை அங்கேயே பிரித்தார். மணல் தான் இருந்தது!!

பார்த்தும் நம்பிக்கை வரவில்லை. மணல் வடிவில் வேறு எதையும் கடத்தினால்?
மணல் ஆய்வகம் சென்றது!!
முடிவு அது "வெறும் மணல் தான்" எண்று கூறியது!!

சர்தார்ஜி அண்டை நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். பாவம், ஆய்வு அது இது என்று அவர் கொண்டு வந்த மூட்டையில் பாதி மணலைக் காணோம்!!

சில நாட்கள் கழித்து மீண்டும் சர்தார்ஜி பைக்கில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார். அதிகாரி வந்து சோதனை செய்தார்.. மணல் மூட்டை ஆய்வகம் சென்று "வெறும் மணல் தான்" எண்று திரும்பியது!!
சர்தார்ஜி எல்லையைக் கடந்தார், பாதி மணல் மூட்டையுடன்!!

நாட்கள் சென்றன.. சர்தார்ஜி அடிக்கடி பயணம் செய்ய ஆரம்பித்தார். அதிகாரியின் சோதனையும் நிற்கவில்லை.. பாதி மணல் மூட்டையுடன் எல்லையைக் கடப்பார்.

நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடந்தன..
அதிகாரி ஓய்வு பெறும் நாள் வந்தது!!

சர்தார்ஜி பைக்கில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார். எல்லையில் நின்றார். அதிகாரி தன் கடமையைச் செய்து அவரை அனுமதித்தார்!!

இன்னும் சில வருடங்கள் கடந்தன..

ஒரு நாள் தற்செயலாக சர்தார்ஜியும் அண்டை நாட்டு அதிகாரியும் சந்தித்தனர்..

நீண்ட நாள் பழக்கம் அல்லவா? இருவரும் ஒரு உணவகம் சென்று அமர்ந்தனர்..

வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு அதிகாரி கேட்டார்:
"எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் உண்டு.. மணலில் பாதியை நாங்களே ஆய்வு என்கிற பெயரில் திருடி விடுகிறோம். மீதி மணலை வைத்து எப்படி பிழைப்பு நடத்துகிறீர்கள்?"

சர்தார்ஜி சொன்ன படிலைக் கேட்டு அதிகாரி திகைத்தார்:
"நான் என்ன மணலையா வித்தேன்.. பைக்கைத் தானே"

ஜனகன்
24-01-2011, 09:44 PM
வேலியே பயிரை மேந்த கதைதான்.
என்றாலும் உங்கள் கதையின் நாயகன் கில்லாடிதான்.

சோகமான கதையாய் இருந்தாலும் உங்க நகைசுவை உணர்வோடு கலந்து எழுதி சிரிக்க வச்சிட்டிங்க :lachen001:வாழ்த்துக்கள் நண்பரே

கீதம்
24-01-2011, 11:43 PM
கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியில் கதைநாயகருக்கு வெற்றிதான். எத்தனை நாட்கள்தாம் சர்தார்ஜிகளை முட்டாளாகவே காட்டிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருப்பது?

சிந்திக்கவைத்த கதை. பாராட்டுகள்.

அன்புரசிகன்
25-01-2011, 12:15 AM
நல்ல நகைச்சுவை கதை. கடைசியில அதிகாரியின் முகம் இப்படி இருந்திருக்குமோ??? :eek::eek::eek:

:D
வாழ்த்துக்கள்.

கௌதமன்
25-01-2011, 01:43 PM
முல்லா கதையில கழுதை காலத்துக்கேற்ப பைக் ஆயிடுச்சி.

இதையும் சினிமாவுல சுட்டுட்டாங்க அருண்.

பகிர்தலுக்கு நன்றி!