PDA

View Full Version : மூன்று நண்பர்கள்



கௌதமன்
24-01-2011, 04:08 PM
மூன்று நண்பர்கள்

ஜான், மைக்கெல், பீட்டர் மூவரும் நண்பர்கள். எல்லாக் கெட்டப்பழக்கமும் கைவசம் உண்டு. இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில்தான் ஊரில் வலம் வருவார்கள். தினமும் யாரையாவது வம்பிக்கிழுப்பார்கள். ஊரில் வேறு யாரும் இவர்களோடு சகவாசம் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஒருநாள் இவர்கள் ஒரு உணவு விடுதிக்குச் சென்றார்கள். வெளியே நின்றிருந்த ஒரு டிரக்கின் அருகே அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தார்கள். அங்கே ஒரு வயதானவர் அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்தார். அவரைத் தவிர அந்த உணவகத்தில் யாரும் இல்லை. வம்பு வளர்த்தலைத் தொழிலாகக்கொண்ட அந்த மூவருக்கும் அந்த வயதானவர் தான் அகப்பட்டார். மூவரும் அவர் அருகே இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். அவர் வெளியூரைச் சார்ந்தவரானதால் இவர்களைப் பற்றித் தெரியாமல் பார்த்து நட்புடன் புன்னகைத்தார்.

’யோவ் பெருசு ஏன்யா பல்லைக் காட்டுறே, ஒழுங்கு மரியாதையா சாப்பிட்டுட்டு ஊரு போய் சேரு’.- என்றான் ஒருவன்.

பெரியவர் சூழ்நிலையை உணர்ந்து அமைதிக் காத்தார்.

ஜான் அவர் சாப்பிட்டிக்கொண்டிருந்த ரொட்டியில் சிகரெட்டை அணைத்தான். மைக்கெல் வாயில் போட்டிருந்த சூயிங் கம்மை அவரின் காப்பியில் துப்பினான். கடைசியாக பீட்டர் அவர் சாப்பிடும் தட்டையே தூக்கி விசிறினான். பெரியவர் அமைதியாக சாப்பிட்டத்துக்கும், கீழே விழுந்ததுக்கும் சேர்த்து பணம் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

மூவரும் பெரியவரை விரட்டி விட்ட மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து கொண்டே விருப்பமானவற்றை சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். வெளியேயிருந்த மூன்று மோட்டார் வண்டிகளும், பெரியவர் வந்த டிரக்கும் காணவில்லை.

கீதம்
25-01-2011, 12:01 AM
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது இதுதான் போலும். ரசிக்கவைத்த கதை. பாராட்டுகள் கெளதமன்.

ஜானகி
25-01-2011, 01:39 AM
கெட்டவர்கள் நாசூக்காகத் தண்டிக்கப்படும்போது, மனம் நம்மை அறியாமல் திருப்தி அடைகிறது !

dellas
25-01-2011, 04:44 AM
நல்ல கதை. ஆமா இதில் கெட்டவன் யார்..?

அன்புரசிகன்
25-01-2011, 04:47 AM
நல்ல கதை. ஆமா இதில் கெட்டவன் யார்..?

நல்லவன் அல்லாதவன் :D:lachen001:

M.Jagadeesan
25-01-2011, 09:43 AM
பெருசு பெருசுதான்
சிறுசு சிறுசுதான்.