PDA

View Full Version : சம்பிரதாயம்



கௌதமன்
24-01-2011, 01:23 PM
சம்பிரதாயம்

ஆன்மீக நறுமணம் பரப்பும் மடம் அது. கிராமத்தைவிட்டு சற்று ஒதுங்கியே இருந்தது. இமயமலையில் தவமிருந்து ஞானம் பெற்று வந்த மகாகுரு அந்த மடத்தை ஆரம்பித்து ஞான போதனைகளையும், நல்வழியையும் போதித்து வந்தார். அந்த மடத்தில் அவரைப் பின்பற்றும் ஏராளமான சீடர்களும் இருந்தனர். அமைதியானச் சூழலில் இருந்த அந்த மடத்தைத் தேடி தினமும் ஏராள மக்கள் வந்து மகாகுருவின் உபதேசங்களைக் கேட்டுச் செல்வார்கள். தினமும் காலைவேளை அவர் அதற்கெனக் கட்டப்பட்டிருக்கும் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுவார்.

மகாகுரு ஒரு வெண்ணிற பூனையை வளர்த்து வந்தார். அது எந்நேரமும் அவருடனேயே இருக்கும். அதை கவனிப்பதற்கே தனியாக அந்த மடத்தில் ஆட்கள் இருந்தார்கள். அவர் வெளியூர் சென்றாலும் பூனை அவருடனேதான் செல்லும்.

ஒருநாள் அவர் வழக்கம்போல் அருளுரை மண்டபத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும், அருளாசி பெற வந்த மக்களும் அமைதியாக சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தனர். மகாகுருவின் சன்னமான குரலும் தெளிவாகக் கேட்கும் விதத்தில் மண்டபம் அமைதியாக இருந்தது. அவருடைய பூனை எப்போதும் போலில்லாமல் அன்று சற்று அமைதியற்று காண்ப்பட்டது. ’மியாவ்’ என்று சத்தமிட்டபடி மண்டபத்தில் மகாகுருவின் முன்னே அங்குமிங்கும் ஓடியது.

மகாகுரு தன் சீடர்களை அழைத்தார். ‘இந்தப் பூனை சொற்பொழிவுக்கு இடைஞ்சலாக உள்ளது. இதை சற்றுத் தொலைவில் கட்டிப்போடுங்கள்‘. என்றார். சீடர்களும் அப்படியே செய்தனர். அருளுரை முடிந்ததும் மீண்டும் பூனையை அவிழ்த்து விட்டனர். அடுத்த நாளும் பூனை தொந்தரவு செய்யவே மகாகுரு பூனையைக் கட்டிப்போட சொன்னார். சீடர்களும் அவ்வாறே செய்தனர். அடுத்தடுத்த நாட்களில் மகாகுரு சொல்லாமலேயே சீடர்கள் பூனையைக் கட்டிப் போட ஆரம்பித்தனர். கூட்டம் தொடங்கும் முன் பூனையைக் கட்டியாகிவிட்டதா எனச் சரிபார்க்கும் அளவுக்கு பூனையைக் கட்டிப்போடுவது வழக்கமான நிகழ்வாகி விட்டது.

கொஞ்ச நாட்களில் மகாகுரு சமாதியானார். அவரைத் தொடர்ந்து பிரதான சீடர்களில் ஒருவர் குருவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு பூனையைக் கட்டிப் போடும் வழக்கம் தெரியுமாதலால் கூட்டத்தில் உரையாற்றும் முன்பு பூனையைக் கட்டிப் போடும் வழக்கத்தைத் தொடரச்செய்தார். அவ்வாறேத் தொடர்ந்து நடைபெற்றது.

ஒருநாள் மாலை பூனை இறந்து விட்டது. அதை நல்லடக்கம் செயதனர். அடுத்த நாள் காலை ஒரே பரபரப்பு. காலையில் குரு அருளுரையை ஆரம்பிக்கும் முன்பு வழக்கப்படி பூனையைக் கட்டிப் போடவேண்டும். ஆனால் பூனை இறந்துவிட்டது. வழிவழி வந்த பழக்கம் மாறிவிடக்கூடாதே என்பதற்காக மடத்து சீடர்கள் ஊரெங்கும் அலைந்து இறந்தப் பூனையைப் போன்றே ஒரு வெண்ணிற பூனையைக் கொண்டு வந்தனர். அதைக் கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே கட்டியும் போட்டனர்.

சிறிது காலத்துக்குப் பிறகு வேறு வேறு இடங்களில் மடத்தின் கிளையை நிறுவ வேண்டி வந்ததால் பொறுப்பை மற்றச் சீடர்களிடத்து விட்டுவிட்டு குரு சென்று விட்டார். இப்படியாக குருக்கள் இரண்டு பேர் மாறி விட்டனர். பழைய சீடர்களும் அந்தந்தக் குருக்களுடன் பல இடங்களில் மடங்களை நிறுவி, மகாகுருவின் ஆன்மீகச் சிந்தனையை வளர்க்கின்றனர். எல்லா மடங்களிலும் பூனைகளை வளர்த்து அருளைரைக் கூட்டத்துக்கு முன் பூனையைக் கட்டிப்போடும் சம்பிரதாயத்தை முடங்காது செய்கின்றனர்.


பெரியவர்கள் கூறிய சம்பிரதாயங்கள் மீறப்படக்கூடாது அல்லவா!

dellas
24-01-2011, 02:48 PM
நல்ல சம்பிரதாயம்..வாழ்க குருக்கள் ..

ஜனகன்
24-01-2011, 03:17 PM
இப்படிதான் இந்த திருமண சம்பிரதாயம், பூப்புனித நீராட்டுவிழா சம்பிரதாயம் எல்லாம் வந்திருக்கும் என நினைக்கின்றேன் கௌதமன்.

ஆளுங்க
24-01-2011, 06:09 PM
இது வேறையா!!:sprachlos020:

கீதம்
25-01-2011, 01:13 AM
பொருள் விளங்காமலே நாம் பின்பற்றும் மூடச் சம்பிரதாயங்களை அலகிடும் ஒரு அழகான கதை. பகிர்வுக்குப் பாராட்டுகள்.