PDA

View Full Version : எச்சரிக்கை: அப்டேட் பைலில் மோசமான வைரஸ்



Hega
24-01-2011, 02:46 AM
எச்சரிக்கை:
அப்டேட் பைலில் மோசமான வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனமானது ஒவ்வொரு மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது.

இவை அப்டேட் பைல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இந்த செயல் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் "ஸ்டீவ் லிப்னர்" (Steve Lipner) பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது. அதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ்.


இந்த வைரஸானது, விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது. இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும். பின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடுகின்றது.

பின்னர் இந்த தகவல்கள் அனைத்தும் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என எளிதாக அறிந்து கொள்ளலாம்.

1.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமை மட்டும் தான் வெளியிடப்படும்.

2.மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும்.

3.மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும்.

எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.

http://www.lankasritechnology.com/view.php?22AOld0bcZ90Qd4e3AMM202cBnB2ddeZBn5202eCAA2e4A09racb3lOU42

எந்திரன்
27-01-2011, 01:35 PM
2.மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும்.

3.மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும்.

எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.


நீங்க குறிப்பிடும் இந்த 2 & 3 பாய்ண்ட்கள், அந்த வைரஸ் பரப்பும் ஈ மெயிலை பற்றித்தானே குறிப்பிடுகிறீர்கள்.

அல்லது இது மைக்ரோசாப்டின் மெயிலிலேயே இப்படித்தான் கொச்சை ஆங்கிலத்துடனும், எழுத்துப் பிழையுடனும் இருக்குமா ?

எனக்கு சரியா புரியலையே....?

நாஞ்சில் த.க.ஜெய்
27-01-2011, 02:33 PM
நன்றி ஹேஹா இதுபோன்று தகவல்கள் நமக்கு அவசியம் தேவை .ஆனால் இந்த வைரஸ்களை பரப்புபவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினை தான் அதிகம் தாக்குகிறார்கள் இந்த அளவிற்கு மற்ற நிறுவனங்கள் இது போன்று அதிகம் பாதிக்க பட்டதாக தகவல் வெளிவருவதில்லை.இதன் மூலம் தெரியும் ஒரு உண்மை என்னவென்றால் அந்த நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அதிகம் என்பது தான் .....