PDA

View Full Version : மேல் படிப்புக்கு விளக்கம் தேவை..பிரேம்
24-01-2011, 01:52 AM
வணக்கம்..
நான் SSLC (10 ம் வகுப்பு) முடித்துள்ளேன்.
384 / 500 மதிப்பெண் பெற்ற்றுள்ளேன். சூழ்நிலை காரணமாக மேல் படிக்க முடியவில்லை..தற்போது மலேசியாவில் வேலை பார்த்து வருகிறேன். தொலைதூர கல்வி திட்டத்தில் மேல் படிக்க விரும்புகிறேன். டிகிரி படிக்க முடியுமா..? எந்த படிப்பு சிறந்தது..?
தயவு செய்து நல்வழி கூறுங்கள்..
(என் வயது 21 )

அன்புரசிகன்
24-01-2011, 02:15 AM
நீங்கள் எந்த இடத்தை வதிவிடமாக்கவுள்ளீர்கள் என்று பார்த்து அங்கு எது சிறந்துவிளங்குகிறதோ அதை தெரிதல் நன்று. (மலேசியா என்றால் அங்கு எது சிறந்த வாழ்க்கை தரத்தை தரும் என்று மனோ அண்ணா மற்றும் ஆரன் அண்ணா உதவுவார்கள்) பொதுவாக வர்த்தகம் கணக்கியல் துறைக்கு என்று ஒரு மவுசு உண்டு.

பட்டப்படிப்பு நிச்சயம் இயலும். வாழ்த்துக்கள். இந்த முடிவு மாறும் முன் ஆரம்பியுங்கள். பலர் ஆரம்பித்து கும்பலில் கோவிந்தா போட்டு மறந்திடுவார்கள்.

வாழ்த்துக்கள்.

Hega
24-01-2011, 07:06 AM
தபால் மூலமும் படிக்கலாம் .. ஆனால் பரிட்சைக்கு நேரில் சமுகமளிக்க வேண்டி வரும்.

தொலைபேசி வாயிலாக கல்வி வழிகாட்டி சேவை

செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம், ஈரோடு மேலும் ஓர் முயற்சியாக தொலைபேசி வாயிலாக கல்வி வழிகாட்டி சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களுடைய உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை அனைத்து வேலை நாட்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை 0424 2500073 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேராசிரியரின் நேரடி விளக்கங்களை பெற்று பயனடையலாம்.

Hega
24-01-2011, 07:10 AM
தமிழக அரசும், மத்திய அரசும் இரண்டு திறந்த நிலை பல்கலைக்கழங்களை நடத்தி வருகின்றன.இங்கு பட்டம் படிப்பதற்கு முறையான கல்வி தகுதி தேவையில்லை, 18 வயது பூர்த்தி ஆகி இருந்தால் போதும். கல்வி கட்டணமும் மிகவும் குறைவு.


தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் இங்கு B.Ed. BA, MBA, BBA, B.Com, B.Sc, MSc, MCA, MA மற்றும் பட்டயபடிப்பு சான்றிதழ் படிப்புகள் என 57க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. இதில் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு உள்ளது. இது மிகவும் எளிதானதே. அனைவரும் எழுதி தேர்ச்சி பெற்று பட்டம் படிக்கலாம்.

மற்றும் பட்டயபடிப்பு சான்றிதழ் படிப்புகள் என 57க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. இதில் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு உள்ளது. இது மிகவும் எளிதானதே. அனைவரும் எழுதி தேர்ச்சி பெற்று பட்டம் படிக்கலாம்.
கட்டண விபரம்

B.A., B.Com
1 yr=Rs.1900 2yr=Rs.1200 3yr=Rs.1200

BBA
1 yr=Rs.3200 2yr=Rs.2500 3yr=Rs.2500

BSC
1 yr=Rs.1400 2yr=Rs.1700 3yr=Rs.1700


மேலும் இந்த பல்கலைக்கழத்தில் வழங்கப்படும் படிப்புகளின் முழு விபரம், கட்டண விபரம், எவ்வாறு சேர்வது என்பது பற்றிய விபரங்களை பல்கலைக்கழத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


முகவரி:
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம்,
Directorate of Technical Education campus
கிண்டி, சென்னை- 600 025
044 -22300704, 044 -22200506, 044 -22352323


http://www.tnou.ac.in/

Hega
24-01-2011, 07:13 AM
இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றது. முறையான கல்வி தேவையில்லை, 18 வயது பூர்தி ஆகி இருந்தால் போதுமானது. இதில் படிக்க Bachelors Proparatory Programme (BPP) என்ற நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு மிகவும் எளிதானது எளிதில் தேர்ச்சி பெற்று விடலாம்.
இங்கு BA, BCA, BBA, B.Com, B.Sc, MSc, MCA, MBA, M.Com, MA மற்றும் பட்டயபடிப்பு, சான்றிதழ் படிப்பு என 100க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன.


கட்டண விபரம்

B.A., B.Com
1 yr=Rs.1400 2yr=Rs.1400 3yr=Rs.1400

BCA
1 yr=Rs.7200 2yr=Rs.7200 3yr=Rs.7200

BSC
1 yr=Rs.2300 2yr=Rs.2300 3yr=Rs.2300


மேலும் இந்த பல்கலைக்கழத்தில் வழங்கப்படும் படிப்புகளின் முழு விபரம், கட்டண விபரம், எவ்வாறு சேர்வது என்பது பற்றிய விபரங்களை பல்கலைக்கழத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


முகவரி:
Indira Gandhi National OpenUniversity,
Maidan Garhi,
New Delhi - 110 068

011-29532321, 011-29536588, 011-29535714


http://www.ignou.ac.in/

நாஞ்சில் த.க.ஜெய்
24-01-2011, 05:51 PM
சிறந்த படிப்பு ஏதுஎன்று கண்டு அதனை படிப்பதை விட தங்களுக்கு விருப்பமான ஒரு படிப்பினை தொடர்வது அல்லது தற்போது செய்யும் தொழிலை சார்ந்து படிப்பினை தேர்ந்தெடுப்பது நன்று .அதுபோல் தற்போது இருக்கும் இடத்திற்கருகே உள்ள ஏதேனும் ஒரு தொலை தொடர்பு கல்வி நிலையம் மூலம் தொடர்வது மிகவும் நன்று ..

பிரேம்
26-01-2011, 12:56 PM
மிக்க நன்றிகள் அண்ணா..கண்டிப்பாக முயற்சிப்பேன்.