PDA

View Full Version : ரசனை



அமரன்
23-01-2011, 09:27 PM
தேன் வடியும்
நிலாக் கிண்ணம் இல்லை..

முகிலாடை
காற்றில் அலையவில்லை.

விண்மினிகளின் பறப்பில்லை..

கனவுகளின் பிறப்பில்லை..

ஆனாலும்
வானத்தைப் பார்க்கத் தூண்டுகிறது..
நீ
இல்லாத அருகாமை..

ஜனகன்
23-01-2011, 10:26 PM
அமரன்,"ரசனை" கருத்தாழம் மிக்கதாய் இருக்கின்றது.பாராட்டுக்கள்.

கீதம்
23-01-2011, 11:09 PM
அண்ணாந்து நோக்குகிறேன்,
மனம் கொண்ட வெறுமையை
பிரதிபலிக்கிறது வானம்!

அர்த்தமுள்ள ரசனை! பாராட்டுகள் அமரன்.

பாரதி
26-01-2011, 08:02 AM
கவிதை நன்றாக இருக்கிறது அமரன்.

ஒரு சிறிய ஐயம்: வழக்கத்தில் அருகில் என்ற பொருளில் பயன்படுத்தினாலும் அருகாமை என்பது அருகில் இல்லாதது என குறிப்பதாகும் என கருதுகிறேன். சரியா..?

கலாசுரன்
07-02-2011, 04:10 AM
நீ
இல்லாத அருகாமை.

நல்ல சொல்லாடல் ..!!

நாஞ்சில் த.க.ஜெய்
07-02-2011, 04:46 AM
வானத்தைப் பார்க்கத் தூண்டுகிறது..
நீ
இல்லாத அருகாமை..
மனதின் வெறுமையை கூறிய விதம் மிக அருமை நண்பரே !

sakthim
07-02-2011, 10:10 AM
வெறுமயை வார்தைகள் ஆக்கி உள்ளீர்கள் அமரன்.

உமாமீனா
10-02-2011, 06:22 AM
நல்ல கவிதை - எது ஒன்றுமே இல்லாத போது தான் அதன் அருமை புரியும்

ஜானகி
10-02-2011, 06:41 AM
ரசனையைத் தூண்டும் பட்சத்தில், தனிமையும், இழப்பும் வரவேற்க வேண்டியவைதான் !

lenram80
10-02-2011, 12:19 PM
பகல் நேரத்துலெ வானத்தை பாருங்க... எல்லாம் தெரியும். சும்மா பிரமையிலெ இருக்குறீங்க. அவ்ளோதான். Hi... Hi....

இரவு பகல்
சூரியனைச் சுற்றுவதால் - பூமிக்கு!
உன்னைச் சுற்றுவதால் - எனக்கு!

சீக்கிரம் பகல் வர வாழ்த்துகள் அமரன்!