PDA

View Full Version : மழைஅமரன்
23-01-2011, 09:19 PM
உள்ளே இருந்து
வெளியில் வெறித்தாள்
அவள்.

அவளைத்
தொட முடியாத சோகத்தில்
யன்னல் கண்ணாடியில் தலை மோதி
தற்கொலையானது
வெளியில் பெய்த மழை..

ஜனகன்
23-01-2011, 10:19 PM
கவிதை அழகு. நல்ல எழுத்து நடை.
வாழ்த்துக்கள் அமரன்.

கீதம்
26-01-2011, 11:04 PM
உள்ளே இருந்து
வெளியில் வெறித்தாள்
அவள்.

அவளைத்
தொட முடியாத சோகத்தில்
யன்னல் கண்ணாடியில் தலை மோதி
தற்கொலையானது
வெளியில் பெய்த மழை..

மழைத்துளிகளின்
மரண ஊர்வலம் கண்டு மனம்வாடி
தாங்களும் உச்சியினின்று குதித்துத்
தற்கொலை செய்துகொண்டன,
அவள் கண்ணீர்த்துளிகள்!

அழகான ரசனைக்குப் பதிலாய் இப்படியொரு அபத்த ரசனையா என்று நோகமாட்டீர்கள்தானே அமரன்?

பிரேம்
26-01-2011, 11:50 PM
மழையை படிக்கும் போதே மனசில ஒரு சாரல்..:)

முரளிராஜா
27-01-2011, 01:42 AM
நல்ல கற்பனை வாழ்த்துக்கள்

இளசு
17-04-2011, 10:12 PM
அமரா

அபாரக் கற்பனை.. அசந்தேன்..

----------------------

நீ நலந்தானே அமரா?

உன் மனம் உன்னிடம்தானே?

இவ்வகைக் கவிதை மனப்பரிமாற்ற நோயின் அறிகுறி என என் மனம் சொல்கிறது.....:)

அமரன்
18-04-2011, 07:17 PM
ஹஹ்ஹ்ஹா.. அண்ணா..

நான் நலமாகவே உள்ளேன், பத்திரமான இடத்தில:)

மழைத்துளியை ரசித்த அனைவருக்கும் நன்றி.

சசிதரன்
19-04-2011, 01:08 PM
சாரலாய் தொடுகையில்
சிணுங்கலுடன் அனுமதிப்பவள்
மழையென வருகையில்
எப்பொழுதும் இப்படிதான்...:P


என்ன அமரன்... கோடையிலும் உங்களுக்கு மட்டும் மழை அதிகமா பெய்யுதோ... :D

(நாரதர் வேலைய நாம செய்கிறோமோ...:p:p)

ஓவியன்
19-04-2011, 01:19 PM
வெளியே வந்து
என்னில் கலந்து
`சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ`
என ஆடிப் பாட அழைக்காமல்
இப்படி தற்கொலை பண்ணுகிறதே
இந்த மட மழை....????? :)

தீபா
19-04-2011, 02:40 PM
தற்கொலை செய்து கொண்ட மழையின் உயிர் ஜன்னலை ஊடுறுவி அவளை அடையட்டும்!
சின்னதா சிக்குனு அழகா அம்சமா (போதும்! போதும்!!:D) இருக்குங்க.

ஷீ-நிசி
19-04-2011, 02:56 PM
ஹஹ்ஹ்ஹா.. அண்ணா..

நான் நலமாகவே உள்ளேன், பத்திரமான இடத்தில:)

மழைத்துளியை ரசித்த அனைவருக்கும் நன்றி.

புரிஞ்சிடுத்து... :)

அத்தனை மழைச்சாரல் துளிகளும் கோபமாய் பார்த்தன
அவள் நெற்றியிலிருந்து வழியும் ஒற்றைத் துளி வியர்வையை கண்டு....

பூமகள்
19-04-2011, 03:27 PM
பெரியண்ணாவின் கண்ணுக்கு புலப்பட்டு விட்டால் அது நிச்சயம் உறுதி செய்தது போலத் தான்..

மழைத் துளி கண்டு விட்டாவது மண்ணை அடைந்திருக்கும்.. நாங்கள் இன்னும் காணவே இல்லையே மழைத் துளியில் அவள் முகம்.... :cool:

Nivas.T
19-04-2011, 03:53 PM
சில்லென்று சிலிர்க்கச் செய்யும் கவிதை

அழகு கவிதை அமரன்

அமரன்
19-04-2011, 03:57 PM
சாரலாய் தொடுகையில்
சிணுங்கலுடன் அனுமதிப்பவள்
மழையென வருகையில்
எப்பொழுதும் இப்படிதான்...:P


என்ன அமரன்... கோடையிலும் உங்களுக்கு மட்டும் மழை அதிகமா பெய்யுதோ... :D

(நாரதர் வேலைய நாம செய்கிறோமோ...:p:p)

உங்களுக்கு மட்டும் எந்த நேரமும் குடைக்குள் மழை பெய்யலாம். நமக்குக் கோடையில் மமை பெய்தால் என்னவாம்..:)

மதியும் நானும் ஒரு நாள் முழுக்க ஒன்னாச் சுத்தினோம்கிறதையும், கோடை காலத்தைப் பற்றி மடையாகப் பேசினோம் என்பதும் நிசம்தான். அதை எப்படியோ தெரிஞ்சிட்டு மதியைக் கடுப்பாக்க நீங்க இப்படிப் பேசக் கூடாது..

இப்ப யாரு செய்றா நாரத வேலை.:D

அமரன்
19-04-2011, 04:00 PM
வெளியே வந்து
என்னில் கலந்து
`சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ`
என ஆடிப் பாட அழைக்காமல்
இப்படி தற்கொலை பண்ணுகிறதே
இந்த மட மழை....????? :)

ஒரு வேளை அவுங்களுக்கு வெளிய போட்டுக்க கறுப்புக் கலர் சட்டை கிடைக்கலையோ என்னமோ

கலாசுரன்
26-04-2011, 03:44 AM
:):):):)