PDA

View Full Version : நட்ட நடு இரவு!



ரசிகன்
23-01-2011, 07:33 PM
[I]தெரு நாய்களின்
குரைச்சலுக்கு
நடுக்கம் காணும் ஜன்னல் கதவுகள்!

வியர்த்தலுக்கு
ஈடுகொடுக்க முடியாத
மின் விசிறி மலட்டுத் தன்மையில்...

உச்சி நுகர்ந்திருக்கும் போர்வை
சடாரென விலக்க...
பேயாட்டம் போடும்
பதிண்வயது உணர்வுகளின்
மொத்த உணர்ச்சிகள்!

மற்றபடி.,
பழுப்பு நிற
ஜீரோ வாட் குண்டு பல்பும்
லேப் டாப்பில் ஒலிக்கும் பழைய பாடலும்
எழுந்து உட்கார வைத்து விடும்!

கொழுந்து விடும்
இந்நட்ட நடு இரவுகளின்
தாகங்கள்...

தலைமாட்டிலிருக்கும்
ஒரு டம்ளர் தண்ணீரில்
தணியப்போவதில்லை!

கீதம்
26-01-2011, 10:51 PM
கொள்ளிவாய்ப்பேய்களென
நள்ளிரவுத் தா(க்)கங்கள்
பருவம் அரும்பும் இருபதிலே
பாழும்தொல்லை தருவதுண்டு!

நாற்பதிலும் நள்ளிரவுகள்
நாளையக் கவலை தருவதுண்டு,
அளவிலா உபாதைகள் அணிவகுத்து
அர்த்தசாம விழிப்புணர்த்தி
ஆசுவாசம்தேடிடும் அறுபதுகளில்!!

நள்ளிரவுத் தொல்லைகள்
நிகழாமல் தவிர்த்தவர்
நடைமுறையில் யாருளர்,
நிதர்சனமுணர்ந்தே
நித்திரைகொள் மனமே!

காலத்தின் கட்டாய விழிப்புகள் ,
பகலுறக்கம் கொள்ளவைக்காதிருக்க
வாழ்த்துகள், ரசிகன்.

பிரேம்
26-01-2011, 11:54 PM
தல..ரொம்ப கஷ்டப்படுறீங்கன்னு நினைக்கிறேன்...(குப்புற படுத்துக்கோங்க..ஹி..ஹி..):cool:

ரசிகன்
04-02-2011, 10:38 AM
:):):)

கலாசுரன்
10-02-2011, 11:49 AM
அருமை..:)

lenram80
10-02-2011, 12:10 PM
வாவ். அருமையான கவிதை. சுகாதாரமான கை ஆளுதல். மின் விசிறி மலட்டுத் தன்மை, தலைமாட்டிலிருக்கும்
ஒரு டம்ளர் - கலக்கிடீங்க..!

ரசிகன்
10-02-2011, 12:53 PM
நன்றி
கலாசுரன்:) / லெனின் :)

ரசிகன்
10-02-2011, 12:54 PM
கொள்ளிவாய்ப்பேய்களென
நள்ளிரவுத் தா(க்)கங்கள்
பருவம் அரும்பும் இருபதிலே
பாழும்தொல்லை தருவதுண்டு!

நாற்பதிலும் நள்ளிரவுகள்
நாளையக் கவலை தருவதுண்டு,
அளவிலா உபாதைகள் அணிவகுத்து
அர்த்தசாம விழிப்புணர்த்தி
ஆசுவாசம்தேடிடும் அறுபதுகளில்!!

நள்ளிரவுத் தொல்லைகள்
நிகழாமல் தவிர்த்தவர்
நடைமுறையில் யாருளர்,
நிதர்சனமுணர்ந்தே
நித்திரைகொள் மனமே!

காலத்தின் கட்டாய விழிப்புகள் ,
பகலுறக்கம் கொள்ளவைக்காதிருக்க
வாழ்த்துகள், ரசிகன்.
நன்றி
கீதம் :)