PDA

View Full Version : பின்னூட்டம் ஒரு கலைகௌதமன்
21-01-2011, 05:35 PM
ஏற்கனவே பதிவு செய்ததுதான். தவறான இடத்தில் பதிவு செய்துவிட்டோமோவென்று எண்ணம் தோன்றியது. எனவே பொருத்தமான இடத்தில் மீண்டும் ஒரு பதிவு..ஒரு சில மாற்றங்களுடன்


தரமான படைப்புகளை வழங்குபவர்களின் எண்ணிக்கையையும், பின்னூட்டமிடுபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க..

1) படைப்புகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறை [ ஏற்கனவே மன்றத்தில் உள்ள வழிமுறைதான். இதில் பதிவின் தரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். வெறுமனே எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாது, பதிவின் கருத்து, எழுத்து நடை, பிழை தவிர்ப்பு ,... ஆகியனவற்றிற்கேற்ப புள்ளிகள் வழங்கலாம். அந்தப் புள்ளிகளின் அடிப்படையில் இணைய காசுகளும், பட்டங்களும் வழங்கலாம். இந்த பொறுப்பை பொறுப்பாளர்கள் / தொகுப்பாளர்கள் ஏற்க வேண்டும். இதன் மூலம் பதிவுகளின் தரம் உயரக்கூடும்(?)].

2) பின்னூட்டம் என்பது வெறுமனே ‘நன்றி’ , ’பாராட்டுகள்’ போன்ற சம்பிரதாய வார்த்தைகளாக இல்லாமல் படைப்புகளை நன்கு அலசும் விதத்தில் இருந்தால் சிலசமயம் படைப்பைக் காட்டிலும் பின்னூட்டம் சிறப்பாக அமையும். எடுத்துக்காட்டாக ஒரு படைப்பு கவிதையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான பாராட்டையோ, விமர்சனத்தையோ எதிர்கவிதையாகவே பின்னூட்டமிடலாம். அத்தகையவற்றுள் சிறந்த பின்னூட்டங்களை திரியைப் பதித்தவர்கள் சிபாரிசு செய்யலாம். பொறுப்பாளர்களும், தொகுப்பாளர்களும் அதனை இனங்கண்டு பின்னூட்டமிட்டவர்களுக்கு புள்ளிகள் வழங்கலாம்.

3) பின்னூட்டங்களில் எதிர்க்கருத்துகள் அதிகம் வரவேற்கப்படவேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ளும் திறமையும் அதற்கு தக்கவாறு பதில் அளிக்கும் திறமையும் அதிகரிக்கும். ஆனால் எதிர்ப்பு கண்மூடித்தனமானதாக இருக்கக் கூடாது. நியாயமானக் கருத்தாகவிருந்தால் தகுந்த எடுத்துக்காட்டுகளுடனும், சிறந்த வாதங்களுடனும் கருத்துகள் பதிக்கப்படவேண்டும். அதே சமயத்தில் மனம் புண்படும்படியானக் கருத்துகளோ, தனிமனித விமர்சனமோ, சம்பந்தமில்லாமல் பொத்தாம்பொதுவான கருத்துகளோ பதித்தால் புள்ளிகளை குறைக்கலாம். பண்பட்டவர் பட்டத்தை திரும்பப் பெறலாம். பின்னூட்டங்களில் எதிர்கருத்துகளில் ரசிக்கத்தக்க அளவுக்கு நயத்தகு நாகரிகம் இருந்தால் அதிகப் புள்ளிகள் வழங்கலாம்.

4) தனி மடல் அனுப்புவது முற்றிலும் தவறானதல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து. பதிவைப் பற்றிய ஒரு கருத்தை வெளிப்படையாக கேட்காமல் தனிப்பட்ட முறையில் கேட்பது நாகரிகமான பழக்கமே. பொதுவாக எல்லாரும் பார்க்குமாறு பதித்துப் பிறகு மாற்றுவதை விட சிறந்தது இது. அதே சமயம் தனி மடல்களை விரும்பாதவர்கள் அதை நாகரிகமாகத் தெரியப்படுத்தலாம். அங்ஙனம் தெரிவித்தப் பிறகும் தனிமடல்களை விரும்பாதவர்களுக்கு அனுப்புதல் மிகத்தவறு. கண்டிக்கத்தக்கது

இதனால் படைப்புகளின் எண்ணிக்கையும், பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமா?

நமக்கு தேவை எண்ணிக்கையல்ல. தரம்! தரம் நன்றாக அமைந்தால் சிறந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்!

இது குறுகிய காலத் திட்டம் அல்ல. ஒரு நீண்டகால திட்டம்.

இந்தக் கருத்துப் பற்றி தோழர்கள் விமர்சிக்கலாம்!

நன்றி!!

ஆதி
21-01-2011, 06:09 PM
உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கு நன்றி கௌதம்..

படைப்புக்குறித்த அலசல், விவாதம், படைப்பை பிரித்து மேய்தல், எதிர்கவிதை அசத்திக் கொண்டிருந்தவர்கள் தான் நாம், நிறைய உறுப்பினர்களின் வருகை குறைந்துவிட்டப்படியால் இந்த தொய்வு, இந்த நிலையை நிச்சயம் சரி செய்ய வேண்டும்..

உங்க*ளின் யோச*னையும் அத*ற்கு துணை நிற்கும்.. ந*ன்றி..

க.கமலக்கண்ணன்
22-01-2011, 12:21 PM
நல்ல ஒரு திரி கௌதமன் பாராட்டுக்கள்...

எங்கள் நிறுவத்தின் நிர்வாக இயக்குனருக்கு ஒரு பழக்கம்...

அது...

வாடிக்கையாளரின் Feedback என்று சொல்லக்கூடிய அஞ்சல் அட்டையில் பாராட்டி எழுதப்படுகிறன்ற அனைத்தையும் அவர் திரும்பி கூட பார்க்க மாட்டார்.

அதே நேரத்தில் சரியில்லை, தவறு, தரம் குறைவு, ஆலோசணை என்று வருகின்ற அட்டையை மட்டும் ஒவ்வொன்றாக எடுத்து பொறுமையாக படிப்பார். சம்பந்தப்பட்ட பிரிவின் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு அனுப்புவார்.

அதை சரி செய்ய கருத்து கேட்பார். அவருடைய ஆலோசனையையும் சொல்லுவார். அடுத்த முறை அந்த குறைகள் களையப்பட்டு அனைத்து கிளைகளிலும் அமுலாக்கப்படும். அதை போன்ற அட்டையை மீண்டும் வரவே வராது.

அதை போல கௌதமன் நல்ல ஒரு ஆலோசனையை முன் வைத்திருக்கிறார்...

அனைவரும் பின்பற்றுவோமாக...

முரளிராஜா
22-01-2011, 12:32 PM
இது ஏற்கனவே பல தளங்களில் உள்ள முறைதான் என்றாலும் நம் தமிழ்மன்றத்தில் இருந்தால் நமக்கெல்லாம் கருத்து பின்னுட்டம் இட பெரும் உந்துதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அமரன்
23-01-2011, 08:59 PM
நல்ல யோசனை கௌதமன்.

பொறுப்பாளர்கள் பொற்கிழி வழங்கும் வசதி மன்றத்தில் உண்டு. அதே போல இ.காசை குற்றப்பணமாக அறவிடும் வசதியும் உண்டு. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. ஒரு சில பிரச்சினைகளைத் தவிர்ப்பதக்காகவே இந்த முடிவு. தொடர்ந்து வரும் கருட்த்துரைகள் அந்த முடிவை மாற்றக் கூடும்.

முப்பரிமான விமர்சனம் மீண்டும் மன்றில் மலரும்.

rasan
14-12-2011, 08:54 AM
பின்னூட்டம் என்பது நம் மனதில் உள்ளதை வெளிக்காட்டுவதுதான். சும்மா ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக நல்லாயிருக்கு, இன்னும் இதை போல் எழுதுங்கள் என்றால் குறிப்பிட்ட கட்டுரை தந்தவர் நொந்து நூலாகி போவார். அதனால் ஒரு கட்டுரையை படித்தால் அதைப்பற்றிய நமக்கு தோன்றும் விமர்சனங்களை மனம் திறந்து சொன்னால் கட்டுரை எழுதியவருக்கும் உற்சாகம் ஏற்படும். அவரது கட்டுரையில் தவறு இருந்தாலும் அதை காரமாக சொல்லாமல் கண்ணியமாக சொன்னால் அவரும் அதனை புரிந்து கொள்வார். இன்னும் அவர் எழுத போகும் அடுத்த கட்டுரைக்கும் பின்னூட்டம் நிச்சயம் ஓர் ஊக்கமாய் இருக்கும்.