PDA

View Full Version : உயிர்



M.Jagadeesan
21-01-2011, 12:22 PM
கண்ணுக்குத் தெரியாத உயிரே!
நீ பிரிந்தால்
விண்ணுக்குச் செல்கிறாயா? அல்லது
வேறெங்கும் செல்கிறாயா?

பேதைகளை இயக்குவதும் நீதான்
மேதைகளை இயக்குவதும் நீதான்
பேதையும் மேதையும் நீ
பிரிந்த பின்னால்
"பிணம்" என்ற சொல்லால்
பெயர் மாற்றம் பெறுகின்றார்.

தற்கொலை செய்து கொள்பவர்கள்
"போ" என்று சொன்னால்
உடனே போகின்றாய்!
ஆனால்
இறந்து போனவர் உடலில்
"வா" என்று சொன்னால்
வர மறுப்பது சரிதானா?

உன்னோடு விளையாடுவது
மருத்துவர்கள் சிலருக்குப்
பொழுதுபோக்கு! அவர்கள்தாம்
எமனின் வேலையை எளிதாக்கி
அவனுக்கு
ஏவல் செய்யும் வேலைக்காரர்கள்!

உடலைப் பிரிந்து
ஊர்சுற்றும் உயிரே!
இனியாவது
நல்லவர்கள் உடலில் புகுந்து
எமக்கு ஒரு
வள்ளுவனையும், கம்பனையும்
தெள்ளுதமிழ் இளங்கோவையும்
மீண்டும் தருவாயா?

கௌதமன்
21-01-2011, 01:10 PM
கம்பனைப் போல்,
வள்ளுவனைப் போல்,
இளங்கோவைப் போல்,
கூர்மதியால், கவித்திறனால்
இன்னும் வாழுகின்ற
தமிழறிஞர் நிலை கண்டபின்னும்
கம்பனும், வள்ளுவனும், இளங்கோவும்
மீண்டும் இம்மண்ணில் வந்துதிப்பார்
என்று நம்புகின்ற நண்பர் வாழ்க!

உயிர்க்கவிதைக்கு பாராட்டுகள் நண்பரே!

M.Jagadeesan
21-01-2011, 02:23 PM
தமிழ் மொழியும்,தமிழ் இனமும் இருக்கின்ற வரையில்
வள்ளுவனும்,கம்பனும்,இளங்கோவும், ஏன் இவர்களை
விடவும் புலமை வாய்ந்த புலவர்கள் தோன்ற வாய்ப்பு
உண்டு.அதைப் பார்ப்பதற்கு நாம்தான் இருக்க மாட்டோம்.

ஓவியன்
23-01-2011, 01:57 PM
இதனால் தானே உயிரினும் மேலானது என ஒப்பீடு செய்ய உயிரைப் பயன்படுத்துகிறோம்...

நல்ல கவிதைக்கு வாழ்த்துகள் ஜெகதீசன்..!! :)

M.Jagadeesan
23-01-2011, 02:02 PM
இதனால் தானே உயிரினும் மேலானது என ஒப்பீடு செய்ய உயிரைப் பயன்படுத்துகிறோம்...

நல்ல கவிதைக்கு வாழ்த்துகள் ஜெகதீசன்..!! :)

நன்றி ஓவியன் அவர்களே!

கீதம்
23-01-2011, 11:14 PM
ஊர் சுற்றும் உயிருக்கு அழைப்பனுப்பி
வரவேண்டிய வாயில்களின் வரைபடமும் தந்துதவி
தமிழ்ப் பேணும் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

M.Jagadeesan
24-01-2011, 12:16 AM
ஊர் சுற்றும் உயிருக்கு அழைப்பனுப்பி
வரவேண்டிய வாயில்களின் வரைபடமும் தந்துதவி
தமிழ்ப் பேணும் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி!