PDA

View Full Version : புத்தக சந்தை இந்த வருடமும்…



umakarthick
19-01-2011, 05:12 PM
இந்த வருடமும் ஏகப்பட்ட ரிமைண்டர் வைத்து ஒரு வழியாக இரண்டு பள்ளி நண்பர்களுடன் போயே விட்டேன்..ஒரு மாற்றத்திற்காக பீச்சுக்கு போவதை விடுத்து நிறைய காதலர்கள் , பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள்..வழக்கம் போல் மூத்திர பிறை கொடுமையாய் இருந்தது


கிழக்கு பதிப்பகம் மற்றும் உயிர்மையில் கூட்டம் அதிகம்..சுயமுன்னேற்ற சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் மணிமேகலை மாதிரியான பதிப்பகங்களில் வேறுவிதமான கூட்டமதிகம்.


சாகித அகாடமி புத்த்கம் அதிக சேல்ஸ்..கோபிநாத் அடுத்த புத்தகம் எழுத ஆரம்பித்து விட்டாரம்..சிவகுமார்..சூர்யா..அடுத்து கார்த்தி கூட எழுதலாம்


விகடனில் ஆன்மீக கூட்டம் அதிகம்..எஸ்.ராவின் 3 புத்தகம்ஸ் ஒரு சாரு அப்புறம் வாத்தியார் என் சிக்கனமாய் முடித்துக்கொண்டு கிளம்பினேன்


சில பிளாகர்களையும் பார்க்க முடிந்தது..மனுஷ்ய புத்திரன் அந்த கூட்டத்திலும் தனிமையாயிருந்தார்..கிழக்கில் சுஜாதா புத்த்கங்களை மக்கள் அள்ளிக்கொண்டிருந்தனர்..


‘சுஜாதாவும் ஸீரோ டிகிரி எழுதினார் தானே?’


‘சாரு பகிரங்கரமாய் எழுதுவார்‘


‘காபி இல்லையா டீ நல்லாவே இல்லை‘


‘இதுக்கு பீச்சுக்கு போயிருக்கலாம்‘


‘சார் வீட்டுக்கு திரும்பி போக மட்டும் தான் காசு வச்சிருக்கேன் எல்லாத்துக்கும் புத்தகம் வாங்கிட்டேன்‘


‘குழந்தை சுகன்யாவின் அம்மா எங்கே சமையல் குறிப்பு வாங்கிக் கொண்டிருந்தாலும் அலவலகத்திற்கு வரவும்‘


இந்த மாதிரி சம்பாஷனைகளை தாண்டி ஒரு குல்பி ஐஸோடு சுபம் போட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்

கௌதமன்
19-01-2011, 05:23 PM
என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று சொல்லவில்லையே!

பயப்படாம சொல்லுங்க? சாருவின் சீரோ டிகிரி படித்திருக்கிறீர்களா....?

ஆதி
20-01-2011, 06:06 AM
என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று சொல்லவில்லையே!

பயப்படாம சொல்லுங்க? சாருவின் சீரோ டிகிரி படித்திருக்கிறீர்களா....?

நான் படிச்சிருக்கேன்..

சமீபத்தில் வெளியிட்ட தேகம், மதுமிதா சொன்னப்பாம்புக்கதைகள் என சாருவின் புத்தகங்கள் படிச்சிருக்கேன்... தேகம் பற்றி ஒரு விமர்சனம் எழுதனும் மன்றத்திலும் போடனும்...

பயப்பட ஒன்னுமில்லை கௌத்தம், தேகம் பற்றிய விமர்சனம் எழுதலாம் என்றிருந்தேன், கார்த்திக் நீங்க என்றைக்கு வந்தீங்க நு தெரியலை, நான் இரண்டுமுறை போனேன், தக்ஸ் வர்ரதா சொல்லிட்டு கடைசி நிமிடத்தில் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வர அலுவலகம் போய்விட்டான்..

பொங்கல் அன்றும் போனேன், அன்று மனுஷ்யபுத்திரன் இருந்தார், புத்தகம் வாங்கிவிட்டு போய் பேசலாம் என்றிருந்தேன் ஆனால் அவர் கிளம்பிவிட்டார்...

இம்முறை பெரும்படைப்பாளிகளின் புத்தகங்களைவிட புதிய படைப்பாளிகளின் புத்தகங்களையே அதிகம் வாங்கினேன்..

காலச்சுவடுப்பக்கம் போகவே முட்டியலை, புத்தகமெல்லாம் அவ்வளவு விலை..

மௌனியின் கதைகள் முழுத்தொகுப்பும் வாங்கினேன், கவிஞர் சுகுமாரனால் தொகுக்கப்ப்பட்டது, சுகுமாரன் வருவார் என்று நினைத்தேன் வரவில்லை போலும்..

கமலா தாஸுடைய கதை தொகுப்பு ஒன்று வாங்கினேன்..

கௌதமன்
20-01-2011, 02:37 PM
நான் படிச்சிருக்கேன்..


நானும் அதை படிச்சதனாலதான் அப்படிக் கேட்டேன்...

ஆதி
20-01-2011, 03:02 PM
நானும் அதை படிச்சதனாலதான் அப்படிக் கேட்டேன்...

இதுக்கே பயந்தா எப்படி ?

தேகம் படிச்சா அதிர்ந்து போய்டுவீங்க...

கௌதமன்
02-02-2011, 04:19 PM
இதுக்கே பயந்தா எப்படி ?

தேகம் படிச்சா அதிர்ந்து போய்டுவீங்க...

அதிலுள்ள கண்டெண்டுக்கு பயப்படல. (நாம யாரு...)

நான் லீனியர்னு சொல்றாங்களே அதை நினைச்சுத்தான் கேட்டேன்.

நீங்க வேணா விளக்குங்களேன். (ஒரு வேளை நாம எழுதறத எந்த பக்கத்தையும் மாத்தி வச்சு ஒரு புத்தகமா தொகுத்தா அதுதான் நான் லீனியரா..? வேணும்னா நாலு கவிதையை கடைசில வச்சிருவோம்)