PDA

View Full Version : பிரிவினில் புரிந்தது



நாஞ்சில் த.க.ஜெய்
19-01-2011, 12:11 PM
பிரிவினில் புரிந்தது

இணைவினில் கசந்த வாழ்க்கை
பிரிவினில் இனித்தது
இனித்த வாழ்க்கை
பிரிவினில் புரிந்தது ......

நாஞ்சில் த.க.ஜெய்
30-08-2012, 06:05 PM
பிரிவினில் புரிந்தது -2


அமுதூட்டும் அம்மா கையிலெட்டா நிலவு
எட்டுமென தவழ்ந்தேன் மகிழ்ந்தாள் அம்மா
குறையாத அன்பு வயதான பின்னும்,
மாறியது என் நெஞ்சம் கலைந்தது சிந்தை
சென்றாள் விலகி மறந்தேன் தாயன்பை
கேட்டான் மகன் நீ எப்பொ செல்வாய்
தெளிந்தது சித்தம் உணர்ந்தேன் உண்மை...

அனுராகவன்
30-08-2012, 06:10 PM
பிரிவினில் புரிந்தது அருமை ஐயா.. பிரிவு ஒரு வாய்ப்பு..

கீதம்
30-08-2012, 11:27 PM
அப்பனிடமிருந்து பாடம் கற்ற பிள்ளை, அப்பனுக்கே பாடம் கற்பிக்கிறது.

காலம் கடந்து உணரப்பட்ட உண்மை... காலத்துக்கும் நிற்கும்.

மனம் தொட்ட வரிகளுக்குப் பாராட்டுகள் ஜெய்.

M.Jagadeesan
31-08-2012, 02:44 AM
கசப்பு உடலுக்கு நல்லது
பிரிவு வாழ்க்கைக்கு நல்லது.
வாழ்த்துக்கள் ஜெய் !

கலைவேந்தன்
31-08-2012, 03:34 AM
தனக்கென துயரந்தான் வாய்த்ததன் பின்னே
மனக்கணக்குகளும் பொய்த்ததன் பின்னே
வினைக்கணக்குகள் தான் விளைந்ததும் என்னே..?
............................................................................................


பாராட்டுகள் ஜெய்..!

நாஞ்சில் த.க.ஜெய்
02-09-2012, 01:38 PM
ஒவ்வொரு முறையும் எழுதும் போது என்னுள் தோன்றும் சந்தேகம் இது கவிதைதானா என்பது தான் இது போன்ற சந்தேகத்திற்கு உங்களுடைய பதிவுகளுடான விமர்சனம் ஒரு ஊக்கம் என்றால் மிகையாகாது ..அதேநேரம் எழுதும் கவிதைகளுள் ஏதேனும் விமர்சனங்கள் தோன்றினால் தோழர்கள் இங்கே கூறலாம் அப்போதுதான் என்னுள் தோன்றும் தவறுகளை திருத்தி கொள்ள முடியும் ...

பிரிவினில் புரிந்தது அருமை ஐயா.. பிரிவு ஒரு வாய்ப்பு..

நட்புடனான விமர்சனத்திற்கு மிக்க நன்றி அச்சலா அவர்களே ..நமது வயதென்னென்பதை அறியும் வரை வேண்டாம் ஐயா எனும் மரியாதை..


அப்பனிடமிருந்து பாடம் கற்ற பிள்ளை, அப்பனுக்கே பாடம் கற்பிக்கிறது.

காலம் கடந்து உணரப்பட்ட உண்மை... காலத்துக்கும் நிற்கும்.

மனம் தொட்ட வரிகளுக்குப் பாராட்டுகள் ஜெய்.

மிக்க நன்றி கீதம் அக்கா ...உங்கள் பதிவுகள் பதிவர்களுக்கு இன்னுமோர் ஊக்கம் தரும் மருந்து..


கசப்பு உடலுக்கு நல்லது
பிரிவு வாழ்க்கைக்கு நல்லது.
வாழ்த்துக்கள் ஜெய் !

உண்மைதான் ஐயா அதேநேரம் சில பின்விளைவுகள் ஏற்படுத்தும் கசப்பு மருந்துகள் தேவையா என்பதுதான் என் கேள்வி ...பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா ..


தனக்கென துயரந்தான் வாய்த்ததன் பின்னே
மனக்கணக்குகளும் பொய்த்ததன் பின்னே
வினைக்கணக்குகள் தான் விளைந்ததும் என்னே..?
............................................................................................


பாராட்டுகள் ஜெய்..!
அவனவன் செய்த பிழைகளின் தொகுப்பு இங்கே வினை கணக்குகளாக ..
கவிதைகளுடான உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கலைவேந்தன் அவர்களே...

பிடித்திருக்கிறது என்று கவிதைகளை தேர்வு செய்த தோழர் மதி அவர்களுக்கு என் நன்றி...

அமரன்
02-09-2012, 03:51 PM
ஒட்டியே இருந்தால் அழுக்குப் படியும்..

விலகிச் சேர்ந்தால் துய்மை பிறக்கும்..

உணர்த்தும் கவிதைகள்.

பாராட்டுகள் ஜெய்.

நாஞ்சில் த.க.ஜெய்
08-09-2012, 05:57 AM
ஒட்டியே இருந்தால் அழுக்குப் படியும்..

விலகிச் சேர்ந்தால் துய்மை பிறக்கும்..

உணர்த்தும் கவிதைகள்.

பாராட்டுகள் ஜெய்.

பாராட்டுக்கு மிக்க நன்றி தோழரே ..

நாஞ்சில் த.க.ஜெய்
08-09-2012, 05:58 AM
பிரிவினில் புரிந்தது - 3

மிரண்டேன் நான் சிரித்தாய் நீ
புதியவனோ என்றாய் ஆமாம் என்றேன்
துணையாய் வந்தாய் தெளிந்தேன் பயம்
திகைத்தேன் நான் என்ன்வென்றாய் நீ
புரியவில்லை என்றேன் புரியவைத்தாய் நீ
பிரியும் வேளை பிரியமனமில்லை எனக்கு
இருமன நட்பில் கலைந்தது மனது ...

jayanth
14-09-2012, 12:22 PM
பிரிவினில் புரிந்தது

மிரண்டேன் நான் சிரித்தாய் நீ
புதியவனோ என்றாய் ஆமாம் என்றேன்
துணையாய் வந்தாய் தெளிந்தேன் பயம்
திகைத்தேன் நான் என்ன்வென்றாய் நீ
புரியவில்லை என்றேன் புரியவைத்தாய் நீ
பிரியும் வேளை பிரியமனமில்லை எனக்கு
இருமன நட்பில் கலைந்தது மனது ...



பிரிவினில் புரிந்தது மனது...

மனதை புரிந்துகொள்ள பிரிய வேண்டுமா...

நாஞ்சில் த.க.ஜெய்
14-09-2012, 06:19 PM
பிரிவினில் புரிந்தது மனது...

மனதை புரிந்துகொள்ள பிரிய வேண்டுமா...

பிரிவினில் உணரும் உண்மையான அன்பு சேர்ந்திருக்கும் போது தெரியாது.. போலித்துவமான அன்பிற்கும் உண்மையான அன்பிற்கும் இடைபட்ட தூரம் இந்த பிரிவு என் அனுபவத்தில் கண்டது..விமர்சனத்திற்கு நன்றி சித்தப்பு...

jayanth
15-09-2012, 09:40 AM
பிரிவினில் உணரும் உண்மையான அன்பு சேர்ந்திருக்கும் போது தெரியாது.. போலித்துவமான அன்பிற்கும் உண்மையான அன்பிற்கும் இடைபட்ட தூரம் இந்த பிரிவு என் அனுபவத்தில் கண்டது..விமர்சனத்திற்கு நன்றி சித்தப்பு...

மறுபடியும் பூதம் கிளம்பிடிச்சே...

அமரன்
15-09-2012, 09:49 AM
பிரிவினில் புரிந்தது

மிரண்டேன் நான் சிரித்தாய் நீ
புதியவனோ என்றாய் ஆமாம் என்றேன்
துணையாய் வந்தாய் தெளிந்தேன் பயம்
திகைத்தேன் நான் என்ன்வென்றாய் நீ
புரியவில்லை என்றேன் புரியவைத்தாய் நீ
பிரியும் வேளை பிரியமனமில்லை எனக்கு
இருமன நட்பில் கலைந்தது மனது ...


மடித்து வைக்கப்பட்டிருந்தது
அந்த ஆடை..
அணிவதற்கு
பிரியமில்லாமல் இல்லை..

அழுக்குப் படிந்து அது
பிரிந்திடக் கூடுமெனும் அச்சம்.
கண்டவர்களிடம் காட்டி
பெருமைப் பட்டுக்கொண்டேடிருந்ததுதான் மிச்சம்..

வந்தது திருவிழா.
கண்டது ஆடைதேர்விழா..

கலைந்தாலும் கசங்கினாலும்
கழற்ற இயலவில்லை..
காத்தொக்கொண்டிருந்தால் அன்னை.
தூங்காமல்
பார்த்துக்கொண்டிருந்தள் பிள்ளை..

தொடரட்டும் கவிதை.

நாஞ்சில் த.க.ஜெய்
16-09-2012, 02:08 PM
மறுபடியும் பூதம் கிளம்பிடிச்சே...

இது அன்பெனும் ஈர்ப்பால் பிடித்துவிட்ட பூதம்..


மடித்து வைக்கப்பட்டிருந்தது
அந்த ஆடை..
அணிவதற்கு
பிரியமில்லாமல் இல்லை..

அழுக்குப் படிந்து அது
பிரிந்திடக் கூடுமெனும் அச்சம்.
கண்டவர்களிடம் காட்டி
பெருமைப் பட்டுக்கொண்டேடிருந்ததுதான் மிச்சம்..

வந்தது திருவிழா.
கண்டது ஆடைதேர்விழா..

கலைந்தாலும் கசங்கினாலும்
கழற்ற இயலவில்லை..
காத்தொக்கொண்டிருந்தால் அன்னை.
தூங்காமல்
பார்த்துக்கொண்டிருந்தள் பிள்ளை..

தொடரட்டும் கவிதை.

திரும்ப திரும்ப வாசிக்க தூண்டும் அருமையான கவிதை நன்றி அமரன் ..

kulakkottan
16-09-2012, 02:25 PM
இணைவினில் கசந்த வாழ்க்கை
பிரிவினில் இனித்தது
இனித்த வாழ்க்கை
பிரிவினில் புரிந்தது ......
இந்தக்கவிதையை மிக அதிக நேரம் வாசித்துவிட்டேன்!

சொற்களை மிகவும் சரியாய் தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள் !
செறிவான கவிதைதான்!வாழ்த்துக்கள் !

kulakkottan
16-09-2012, 02:29 PM
பிரிவினில் புரிந்தது


அமுதூட்டும் அம்மா கையிலெட்டா நிலவு
எட்டுமென தவழ்ந்தேன் மகிழ்ந்தாள் அம்மா
குறையாத அன்பு வயதான பின்னும்,
மாறியது என் நெஞ்சம் கலைந்தது சிந்தை
சென்றாள் விலகி மறந்தேன் தாயன்பை
கேட்டான் மகன் நீ எப்பொ செல்வாய்
தெளிந்தது சித்தம் உணர்ந்தேன் உண்மை...

எல்லாம் சுழலும் ,
பேரனும் கேட்பான் ,
கதை ஒன்றை கவியில் ஏற்றி முயன்று இருகிறீங்க!

kulakkottan
16-09-2012, 02:43 PM
பிரிவினில் புரிந்தது

மிரண்டேன் நான் சிரித்தாய் நீ
புதியவனோ என்றாய் ஆமாம் என்றேன்
துணையாய் வந்தாய் தெளிந்தேன் பயம்
திகைத்தேன் நான் என்ன்வென்றாய் நீ
புரியவில்லை என்றேன் புரியவைத்தாய் நீ
பிரியும் வேளை பிரியமனமில்லை எனக்கு
இருமன நட்பில் கலைந்தது மனது ...



வசன நடையாய் தெரிகிறதே தோழரே !
பிரிவில் தான் உறவின் நிஜம் ,ஆழத்தை புரிந்து கொள்கிறோம் .
ஆனால் புரிந்து கொள்ள பிரிய வேண்டும் என்பது கட்டாயமோ?

நாஞ்சில் த.க.ஜெய்
17-09-2012, 03:45 AM
இந்தக்கவிதையை மிக அதிக நேரம் வாசித்துவிட்டேன்!

சொற்களை மிகவும் சரியாய் தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள் !
செறிவான கவிதைதான்!வாழ்த்துக்கள் !

வாழ்த்துக்கு மிக்க நன்றி குளகோட்டன் அவர்களே...

சுகந்தப்ரீதன்
17-09-2012, 05:54 PM
பிரிவினில் புரிந்தது
புரிதலில் இணைந்தது

வசன நடையில் கொஞ்சம் கவிநயத்தை கூட்டலாமே...
உங்களால முடியும் அப்பு.. முயற்சி பண்ணுங்க..!!:)

கோபாலன்
17-09-2012, 06:35 PM
இணை பிரியாத நம்மில் இரண்டிலொன்று இல்லையென்று தேடிப்பார்க்கிறது உலகம்
நீயே உயிரென்று
நான் உன்னில் இணைந்துவிட்டேனென்று பிரிவினில்தான் புரிந்தது!:)

நாஞ்சில் த.க.ஜெய்
17-09-2012, 07:54 PM
வசன நடையாய் தெரிகிறதே தோழரே !
பிரிவில் தான் உறவின் நிஜம் ,ஆழத்தை புரிந்து கொள்கிறோம் .
ஆனால் புரிந்து கொள்ள பிரிய வேண்டும் என்பது கட்டாயமோ?

இது போன்ற உங்கள் விமர்சனம் என்னை மேம்படுத்தும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை...கவிதையென்று படைத்தது வசனநடையில் அமைந்து விட்டது..விமர்சந்திற்கு நன்றி குளகோட்டன் அவர்களே...



பிரிவினில் புரிந்தது
புரிதலில் இணைந்தது

வசன நடையில் கொஞ்சம் கவிநயத்தை கூட்டலாமே...
உங்களால முடியும் அப்பு.. முயற்சி பண்ணுங்க..!!:)

நானும் எதிபார்க்கும் தவறுகளை சுட்டும் இது போன்ற விமர்சனங்கள் என்னில் தோற்றுவிக்கும் மாற்றங்கள் பல இவை தொடரட்டும்... மக்கா உன் நம்பிக்கை பொய்க்குமா இல்லையா என்று தெரியவில்லை..ஆனால் நான் முயற்சிக்கிறேன்..

நாஞ்சில் த.க.ஜெய்
17-09-2012, 07:56 PM
இணை பிரியாத நம்மில் இரண்டிலொன்று இல்லையென்று தேடிப்பார்க்கிறது உலகம்
நீயே உயிரென்று
நான் உன்னில் இணைந்துவிட்டேனென்று பிரிவினில்தான் புரிந்தது!:)

அருமையான வரிகளில் பின்னோட்டமிட்டு ஊக்குவிக்கும் தோழர் கோபாலன் அவர்களுக்கு என் நன்றி...

A Thainis
17-09-2012, 07:59 PM
பிரிவுதான் நாம் ஒன்றாக இருந்தபோது இருந்த அன்பின் ஆழத்தை காட்டும். மீண்டும் இணைந்திட அந்த அன்பே மீண்டும் வழி வகுக்கும். நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-09-2012, 08:03 PM
பிரிவுதான் நாம் ஒன்றாக இருந்தபோது இருந்த அன்பின் ஆழத்தை காட்டும். மீண்டும் இணைந்திட அந்த அன்பே மீண்டும் வழி வகுக்கும். நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்.

பின்னோட்டதிற்கு மிக்க நன்றி தைனிஸ் அவர்களே..

நாஞ்சில் த.க.ஜெய்
24-09-2012, 12:54 PM
பிரிவினில் புரிந்தது - 4

பூவினில் முள் கண்டு மிரளும் என்னில்
நகைக்கும் உன் பூவிதழில் கண்டேன் நட்பு...

அரியின் கண் கண்டு மரையாய் என்னில்
துளிரும் உன் துணிவில் கண்டேன் நட்பு..

கரியின் மதம் கண்டு திகைக்கும் என்னில்
ஒளிரும் உன் அறிவினில் கண்டேன் நட்பு..

பரியொன்று வழி கண்டு பிரிகின்ற வேளையில்
பொழியும் மழையென நம் கண்ணீரில் நட்பு..