PDA

View Full Version : வேண்டாம் அரசியல்



முரளிராஜா
18-01-2011, 02:02 AM
நம் மன்றத்தில் அரசியல் என்ற தலைப்பில் வரும் பெரும்பாலான திரிகள் காரசாரமாக இருக்கின்றது. தமிழ்ராய் இணையும் நாம் மகிழ்ச்சியாய் இணையவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் எனவே ஒரு தலைப்பை வைத்துவிட்டு அதில் கடுமையாக விவாதிக்க வேண்டாம் என்று சொல்வதை விட அந்த அரசியல் என்ற தலைப்பையே நீக்கி விடலாம் என்பது என் கருத்து. அரகியல் என்ற சாக்கடை நம் மன்றத்திர்க்கு எதற்க்கு? இது தொடருமாயின் கடந்த கசப்பான நிகழ்வுகளும் தொடரும் என்பது என் தனிபட்ட கருத்து.

அன்புரசிகன்
18-01-2011, 02:31 AM
என்னங்க நீங்க.. தெற்காசியாவில் பிறந்துவிட்டு காரசாரமாக எதுவும் வேண்டாம் என்றால் எப்படி? தொடர்ந்து இனிப்பு சாப்பிட்டாலும் அருவருப்பாகிவிடும். இடையிடை மட்டன் சிக்கன் என்று சாப்பிடனும். மட்டன் கறியில் சீனி போட்டு சாப்பிடலாமா?? :D (தமாசுக்கு)
---------------

அரசியலை அரசியலாக விவாதிக்க வேண்டும். விடுத்து தம் வாதத்திறமையையும் தான்பிடித்த முயலுக்கு 15 கால் (எத்தனை நாளுக்குத்தான் 3 என்பது) என்பதையும் சொல்லிக்கொண்டிருந்தால் அது அரசியலுமல்ல. சிறந்த விவாதங்களுக்கு வழிசமைகாது. அரசியல் எங்கு தான் இல்லை. வீட்டில் இல்லையா? சாக்கடையை சுத்தம் செய்யாவிட்டாலும் அதிலிருந்து மீள்வது பற்றியாவது அறிய அதுபற்றி பேசணுமே...
:)

நாஞ்சில் த.க.ஜெய்
19-01-2011, 01:00 PM
இந்தியாவின் முக்கிய சாரம்சமே அரசியல் தான் .இது விவாதமாக இருந்தால் சரி .ஆனால் இன்று மன்றத்தின் அரசியல் பக்கம் செல்லும் போது ஒவ்வொருவர் கூறும் கருத்துகள் அவரவர் வாதத்திலிருந்து சிறிதும் மாறாது சில நண்பர்கள் கூறும் உண்மை நிகழ்வினை ஏற்று கொள்ளாமல் வீண் வாதங்கள் தான் இடுகிறார்கள் ...மேலும் நண்பர்கள் விரோதிகளாக மாறுவதற்கு இதும் ஒரு காரணம் ..இதனால் தான் அரசியல் வேண்டாம் என்று கூறுகிறோம் ..

M.Jagadeesan
19-01-2011, 02:03 PM
உப்பில்லாத உணவு, உயிரில்லாத உடல், தெய்வமில்லாத கோயில்.
மனைவி இல்லாத வீடு,ஆசிரியர் இல்லாத பள்ளி எப்படி இருக்குமோ
அப்படித்தான் இருக்கும் அரசியல் இல்லாத மன்றமும்.

அமரன்
03-02-2011, 09:35 PM
சமீபகாலமாக மன்றத்தின் அமைதியைக் குலைக்கும் அரசியல் இந்தக் கேள்வியை உங்களிடம் தந்திருக்கு என்று நினைக்கிறேன். சமுகம் சார்ந்த அரசியல் அலசலுக்காக உருவாக்கப்பட்ட பிரிவு அரசியல். அதைக் கட்சிக் கூட்ட மேடையாகப் பயன்படுத்தாமல் சமூகம் சார்ந்து பயன்படுத்த அனைவரும் முயல்வோம் முரளி.

பாலகன்
04-02-2011, 12:57 PM
அரசியல் பதிவுகள் எல்லாமே அவரவர் புரிதலையும் அவரவர் கட்சியை சார்ந்தே அமையும், யாரும் மற்றவர்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த கட்சியை பற்றி ஒரு குறை சொன்னால் அந்த கட்சியும் அதே தவற்றை முன்பே செய்திருக்கும். அந்த கட்சியை சொன்னால் இந்த கட்சி தான் ஊழலின் ஊற்றுக்கண் என சொல்லி நியாயம் கற்பிக்கும். இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதனால் வேண்டாம் இந்த அரசியல் இங்கே :D

வெற்றி
14-02-2011, 03:32 AM
எகிப்தின் மக்கள் புரட்சிக்கு பின்னுமா இப்படி ஒரு அப்பாவிதனமான கோரிக்கை. (டீச்சர் அடிப்பாங்க ,நான் ஸ்குலுக்கு போகமாட்டேன் அன அழும் குழந்தை போல் :) ) நம்மால் இங்கு தான் சுகந்திரமாக விவாதிக முடியும் . இங்கும் வேணாம் எனில் எப்படி ?

அரசியல் இல்லாமல், தெரியாமல் இருப்பது நம்மை மீண்டும் கற்காலத்துக்கு கொண்டு சென்று விட்டுவிடும். பேதமையே ஊழலின் முதல் படி. அனுசரித்து அடங்கி போவது தான் சர்வாதிகார ஆட்சியின் முதல் படி...