PDA

View Full Version : என் உலகம்



திவ்யா
18-01-2011, 01:58 AM
உன் நினைவுகளால்
என்னை மறந்த
தருணங்கள் பல
ஆனால்,
உன்னை மறக்கும்
தருணம் மட்டும்
அமைவதே இல்லை
உன் நினைவுகளுக்குள்ளே
என் உலகம்
முடங்கிப் போய்விடுவதால் :)

சூறாவளி
23-01-2011, 05:07 PM
ரொம்ப ஆழமான காதல் பிரதிபலிப்பு...

சபாஷ்..:)

திவ்யா
24-01-2011, 11:58 AM
ரொம்ப ஆழமான காதல் பிரதிபலிப்பு...

சபாஷ்..:)

நன்றி :)

ஜனகன்
24-01-2011, 02:43 PM
என் உலகம்,என்னும் போது இப்படி தோன்றுகின்றது.

நீ....
என் உலகை
உன்னைச் சுற்றி
சுழல வைத்தாய்.
உன் உயிரை
என்னைச் சுற்றி
படர விட்டாய்.


காதல் கவிதை அருமை.

dellas
26-01-2011, 02:39 PM
உன்னையும் ஒருநாள்
நான் மறந்து விடுவேன்.
அன்று என் நினைவுகளும்- எனக்கு
மறுக்கப்படும்.
அது-என் மரணம்.

இனிய கவிதை பாராட்டுக்கள்.

உமாமீனா
09-02-2011, 09:35 AM
இனிய கவிதை