PDA

View Full Version : பிரசவம்



CEN Mark
17-01-2011, 04:17 PM
பூக்கள் ஒன்றும்
விட்டில் பூச்சிகளல்ல
ஒரு நிமிடத்தில் உதிர்வதற்கு
பூப்பெய்வதும்..சூல் கொள்வதும்
கனி சுமப்பதற்கான யுத்தங்கள்.

பிரசவம் என்பது
ஒருநாளில் அரங்கேறும்
வினையெச்சமல்ல.

கலவி முதல் குழவி வரை
ஒவ்வொரு ஷணமும்
உணரப்பட்ட தருணம்.

கவிதைப் பிரசவமும்...
கண்டதும் கலந்ததும்
தவற விட்டதும்
தவறாய் உணரப்பட்டதும்...

கவிதைப் பிரசவம்
சூல் சேரும் உயிரணுவின்
போராட்டம் .
படைப்புகள் பற்றி கவிஞன்
கவலை கொள்வதில்லை
பிரசவம் குறித்த வேள்வியில்....
.

பாலகன்
17-01-2011, 04:32 PM
ஒரு கவிஞனின் பார்வையில் நின்று உரைத்தது அருமை
கவிதை நன்று சென்மார்க்காரே

CEN Mark
18-01-2011, 04:40 PM
ஒரு கவிஞனின் பார்வையில் நின்று உரைத்தது அருமை
கவிதை நன்று சென்மார்க்காரே

தொடரும் பாராட்டு. அதுவும் முதலும் முதலுமாக. ஓட்டளித்துவிட்டேன் நண்பரே! அல்லது அன்பரே!

கௌதமன்
18-01-2011, 05:08 PM
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்கவிதை
நன்றென கேட்ட கவி


தளைப்பிழை பொறுக்க! கவிதைக்கு
தலைப்பிள்ளை அல்லவே நான்
தலைப்பில்லை என் பாராட்டுக்கவிக்கும்! [ஒரு வழியா சமாளிச்சுட்டேன்]

கீதம்
18-01-2011, 09:44 PM
சிவா அண்ணாவின் கவிக்குழந்தைகளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21985) நினைவுபடுத்திய கவிதை.

ஒவ்வொரு படைப்பாளியும் அனுபவிக்கும் வேதனை அது. அவ்வுணர்வின் அழகிய வெளிப்பாட்டுக்குப் பாராட்டுகள்.

ஜானகி
19-01-2011, 12:38 AM
சூழ் கொள்வது..... சூல் கொள்வது

சூழ் சேரும்... சூல் சேரும்...என்று நினைக்கிறேன்.

ஆம், கவிதையின் பிரசவம் ஓர் இன்பமான தருணம் தான் !

CEN Mark
19-01-2011, 02:42 AM
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்கவிதை
நன்றென கேட்ட கவி


தளைப்பிழை பொறுக்க! கவிதைக்கு
தலைப்பிள்ளை அல்லவே நான்
தலைப்பில்லை என் பாராட்டுக்கவிக்கும்! [ஒரு வழியா சமாளிச்சுட்டேன்]

இப்போதைக்கு நன்றி மட்டும்

CEN Mark
19-01-2011, 02:46 AM
சூழ் கொள்வது..... சூல் கொள்வது

சூழ் சேரும்... சூல் சேரும்...என்று நினைக்கிறேன்.

ஆம், கவிதையின் பிரசவம் ஓர் இன்பமான தருணம் தான் !

தொடரும் எழுத்துப்பிழைகள், வழக்கமான மன்னிக்கவும் என்ற வாசகத்தோடு நன்றிகள்.

CEN Mark
19-01-2011, 02:51 AM
[QUOTE=கீதம்;509810]சிவா அண்ணாவின் கவிக்குழந்தைகளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21985) நினைவுபடுத்திய கவிதை.


சிவா அவர்களின் கவிக்குழந்தைகள் வாசிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. அதில் உங்கள் பின்னுட்டக்கவி சிறப்பு. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

ஜானகி
19-01-2011, 03:53 AM
அருமையான கதையை...உணர்ச்சியின் வடிகாலை.... படிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி, கீதம் அவர்களே.