PDA

View Full Version : தலைகீழ் விகிதம்



CEN Mark
17-01-2011, 03:55 PM
என் நிர்வாணத்தை
இரவு விழுங்கியதால்
ஆடைகள் அம்மணமாயின

என் பேனாவின்
நிர்வாணம்
சுற்றங்களை தூர் எடுத்தன.

பாலகன்
17-01-2011, 04:33 PM
சின்னதாயினும் சிறப்பு
பேனாவின் வலிமையே அப்படித்தானே

பாராட்டுக்கள்

CEN Mark
18-01-2011, 04:34 PM
சின்னதாயினும் சிறப்பு
பேனாவின் வலிமையே அப்படித்தானே

பாராட்டுக்கள்

வழக்கம்போல் முதல் போனி. நன்றிங்க........

கௌதமன்
18-01-2011, 05:13 PM
விடிந்ததும் வெளிச்ச ஆடையில்
நிர்வாணம் மறையுமா?

பேனாவில் ஆடைக் கட்டினால்
எழுத்தெல்லாம் பொய்

பாராட்டுகள் நாவரன்

CEN Mark
19-01-2011, 02:58 AM
விடிந்ததும் வெளிச்ச ஆடையில்
நிர்வாணம் மறையுமா?

பேனாவில் ஆடைக் கட்டினால்
எழுத்தெல்லாம் பொய்

பாராட்டுகள் நாவரன்

பேனாவின் மூடி கழற்றுவது - பேனாவின் நிர்வாணம்
பேனா நிர்வாணம் கொண்டால்தான் படைப்புகள் சாத்தியம். நன்றி.

கௌதமன்
19-01-2011, 02:33 PM
பேனாவின் மூடி கழற்றுவது - பேனாவின் நிர்வாணம்
பேனா நிர்வாணம் கொண்டால்தான் படைப்புகள் சாத்தியம். நன்றி.

ஆடைக் கட்டிய பேனா (உள்ளதை மறைத்து எழுதும் பேனா)
அலங்கார எழுத்தைத் தரும்; ஆனால்
அவை உண்மையை மறைத்த
முகஸ்துதி எழுத்துகள்
அந்தப் பொய்யாடையைக் கழற்றினால்
உண்மை ஒளிரும்; அதனால்
சிலசமயம் சுற்றமும் பகையாகும்

CEN Mark
19-01-2011, 02:39 PM
ஆடைக் கட்டிய பேனா (உள்ளதை மறைத்து எழுதும் பேனா)
அலங்கார எழுத்தைத் தரும்; ஆனால்
அவை உண்மையை மறைத்த
முகஸ்துதி எழுத்துகள்
அந்தப் பொய்யாடையைக் கழற்றினால்
உண்மை ஒளிரும்; அதனால்
சிலசமயம் சுற்றமும் பகையாகும்

தூர்யெடுப்பதே அழுக்கை அகற்ற / ஆழத்தை உயர்த்ததானே?

ஓவியன்
23-01-2011, 01:55 PM
என் நிர்வாணத்தை
இரவு விழுங்கியதால்
ஆடைகள் அம்மணமாயின.

இரவை விழுங்க ஆதவன் வருகையில்
உங்கள் நிலை...??? :confused:


என் பேனாவின்
நிர்வாணம்
சுற்றங்களை தூர் எடுத்தன.

உங்கள் பேனாவிலிருந்து,
இன்னும் பல நல்ல ஆக்கங்கள் பெருகட்டும், சுற்றங்களின் நலனுக்காகவும்...!! :)

M.Jagadeesan
23-01-2011, 02:10 PM
என் நிர்வாணத்தை
இரவு விழுங்கியதால்
ஆடைகள் அம்மணமாயின

என் பேனாவின்
நிர்வாணம்
சுற்றங்களை தூர் எடுத்தன.

கவிதை நன்று! உங்கள் பேனாவிலிருந்து புதிய நிர்வாணங்கள் உருவாகட்டும்!

CEN Mark
23-01-2011, 03:36 PM
இரவை விழுங்க ஆதவன் வருகையில்
உங்கள் நிலை...??? :confused:
ஒளியின் நிர்வாணம் இந்த மெய்யில்தானே?


உங்கள் பேனாவிலிருந்து,
இன்னும் பல நல்ல ஆக்கங்கள் பெருகட்டும், சுற்றங்களின் நலனுக்காகவும்...!! :)

உங்கள் ஊக்கங்களால் என் ஆக்கமும் சிறப்புறட்டும்

CEN Mark
23-01-2011, 03:42 PM
கவிதை நன்று! உங்கள் பேனாவிலிருந்து புதிய நிர்வாணங்கள் உருவாகட்டும்!

நன்றி ஜெகத்தின் ஈசன் அவர்களே!