PDA

View Full Version : தப்புதான்..



dellas
15-01-2011, 01:05 PM
அது நள்ளிரவு .காவல் நிலையத்தில் தொலைபேசியில் திடீரென்று ஒரு அழைப்பு.

" ஐயா நாங்கள் இரண்டுபேர் மின் தூக்கியில் சிக்கயுள்ளோம். உடனே வந்து காப்பாற்றுங்கள்."

அவர்கள் சொன்ன முகவரியைத் தேடி தீயணைப்பு மற்றும் காவலர்கள் விரைந்தனர்.

அந்த முகவரி ஒரு மிகப்பெரிய வங்கி.

சிக்கிக்கொண்ட இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அடுத்த நாள் நீதிபதி அவர்களிடம் " நீங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா?

" ஆமாம் ஐயா "

" உங்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும், 15 ஆயிரம் ருபாய் அபராதமும் விதிக்கிறேன்."

காவலர்கள் அவர்களை அழைத்துச் சென்றனர்.

அப்போது ஒருவன் மற்றவனிடம்

"எல்லாம் உன்னால் வந்தது " என்றான்.

அடுத்தவன் கவலையோடு,

" மின்தூக்கியில் அவசரத்திற்கு என்று எழுதப்பட்ட எண்கள் காவல் நிலைய எண் என்று எனக்கு மட்டும் தெரியுமா என்ன? இந்த பக்கத்தில் இதுதான் பெரிய கட்டிடம் என்று திருட வந்த்தது தப்பா போயிட்டதே "

Hega
15-01-2011, 01:25 PM
கெட்டிக்கார திருடர்கள்.

dellas
15-01-2011, 01:37 PM
என்னைப்போலவே

Hega
15-01-2011, 01:49 PM
அட தெரியாமல் போச்சே...

நீங்க அதில் ஒருவரா...

dellas
15-01-2011, 02:02 PM
அட நீங்க வேற .. நான் கெட்டிக்காரன் என்று சொல்ல வந்தேன்..அவ்வளவு தான்..

Hega
15-01-2011, 02:05 PM
அட நீங்க வேற .. நான் கெட்டிக்காரன் என்று சொல்ல வந்தேன்..அவ்வளவு தான்..


ஆஹா ஆஹா

நான் கெட்டிகாரன்னு சொன்னது அந்த திருடர்களின் திருட்டு யுக்தியை.
இப்படி பட்ட கெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டிகாரரோடு கூட்டு சேர்ந்தால் சேருபவன் நம்ம காவல்காரங்க கொட்டகைக்குள் அடைக்கபடுவது உறுதி.:lachen001:

நீங்க அவனைப்போலகெட்டிகாரன் என்றால்............:icon_rollout:


கூட்டு சேர நான் வரல்ல சாமி:aetsch013:

பாலகன்
15-01-2011, 03:42 PM
யார் கெட்டிக்காரன் திருடனா?
கெட்டிக்கார திருடன் எப்படி போலீசு எண்களை பயன்படுத்தி சிக்கிக்கொன்டான் :)

dellas
16-01-2011, 04:40 AM
உண்மையாக நான் ரொம்ம்ம்ப நல்லவன் . நம்புங்க ..

உமாமீனா
01-02-2011, 11:02 AM
எதையுமே பிளான் பண்ணி செய்யணும்..........