PDA

View Full Version : என்னைக் கொன்று விடு.....



rambal
06-04-2003, 05:50 PM
அதிகாலையில்,
ஏதொ ஒரு திசையில் இருந்து
ஒலிக்கும் பாட்டு போல
உன் நினைவுகள்
அவ்வப் பொழுது
மனசின் ஏதோ ஒரு மூலையிலிருந்து....

குப்பைக்காரனின் கோணிப்பையாய்
இதயம்...
குப்பைகளாய் உன்
நினைவுகள்...
பைக்குள் அடங்க மறுத்து
அவ்வப்பொழுது....

காலில் அடிபட்ட நாயாய் மனசு...
உன் நினைவுகளைத்
தூக்கிக் கொண்டு அல்லாடுகிறேன்....

தொண்டையில் சிக்கிய முள்ளாய்
உன் நினைவுகள்...
மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
தினம்
அல்லாடுகிறேன்....

இந்த சித்திரவதை போதும்...

பேசாமல்
என்னைக் கொன்று விடு.....

இளசு
06-04-2003, 05:53 PM
காதல் வேதனையின் கொடுமை
காலதேவனின் அணைப்பைவிட அதிக வலிதான்.
நீண்ட, நித்திய வலி.
கருணைக்கொலை வேண்டும் காதலனின் மனு!
காதல் தேவதையின் தீர்ப்பென்னவோ....

காலம் சொல்லுமா பதில்...?

அருமை ராம்!

மீனலோஷனி
06-04-2003, 09:20 PM
பத்துமாதம் தவம்கிடந்து
பெத்தெடுத்த புத்திரனே
கொல்லுவதற்கா உன் தாய்
படாத பாடுபட்டாள்
வேண்டாம் அப்பனே
வேண்டாத சிந்தனைகள்
நினைவுகளை கழற்றிவிடு
நிம்மதியாய் வாழ்ந்துவிடு
உன் அருமை அறியாத
அவளுக்கு
முடியுரை இட்டுவிடு





அட்டகாசமாய் எழுதியுள்ளீர்
வாழ்த்துக்கள் கவிஞர் ராம்

gans5001
07-04-2003, 04:30 AM
காதல் வலிக்கு மட்டும் காலம் முழுதும் ஏனோ மருந்து கிடைப்பதில்லை

Narathar
07-04-2003, 05:57 AM
காதல் உன்னைகொல்லுமுன்
காதலியை கொலைகாரியாக்கப்பார்க்கும்
காதலா..........உன் கவி கண்டு மெச்சுகிறேன்
(அட நாமும் கிறுக்குகிறோம்.....நாராயனா!!!)

Tamil_Selvi
21-07-2003, 10:46 PM
கல்லால் அடித்தால் காயம் காயம் தான், அதுவே நினைவால் அடித்தால் ஆறாதது தான்....

இனிமையான கவி!

- தமிழ்ச்செல்வி