PDA

View Full Version : சோறு போடுமா தமிழ்?கௌதமன்
14-01-2011, 04:38 PM
நன்றி: திருத்தமிழ் வலைத்தளம்

தமிழ் சோறு போடுமா? இப்போதெல்லாம் இப்படி வினவுவது தமிழரில் பலருக்குப் புது மரபாகி விட்டது.

தங்களை முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற சிலர், தங்களின் 'முன்போக்கை' வெளிப்படுத்தும் முயற்சியில், வாயினிக்க எழுப்பும் வழக்கமான வினா இது. இவர்கள் சோறு உண்பது மட்டுமே வாழ்க்கை என்றும், எது சோறு போடுமென்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வதுதான் வெற்றிக்கு வழி என்றும் கருதுபவர்கள்.

இன்னும் கொஞ்சம் நாளில் இவர்கள், சமயம் சோறு போடுமா? பண்பாடு சோறு போடுமா? உண்மை சோறு போடுமா? ஒழுக்கம் சோறு போடுமா? என்று வரிசையாக வினாக்களை எழுப்பி இவற்றுள் எதுவுமே சோறு போடாது என்றும், எனவே இவையெல்லாம் தேவையில்லை என்றும் கூறத் தொடங்கினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இந்தச் சோற்றுப் பட்டாளத்தை நோக்கி நாமும் சில வினாக்களை எழுப்பலாம்.

1.தமிழ் என்பது மொழி. மொழியின் முதற்பயன் நம் கருத்தைப் புரிந்து கொள்ளுமாறு வெளிப்படுத்தவும் பிறர் கருத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவும் கருவியாக இருப்பது. இந்தப் பணியைச் சரியாகவும் திறம்படவும் செய்வதில் வேறு எந்த மொழியையும் விடத் தமிழ் தாழ்ந்ததன்று.

2.இன்று அனைத்துலக மொழியாக முதனிலை பெற்றுள்ள ஆங்கிலத்தையும் மிஞ்சிய கருத்துக் தெளிவு கொண்டது தமிழ். எடுத்துக் காட்டுகள் எத்தனையோ உள. ஆங்கில வாக்கியத்தில் "யூ" (You) என்னும் சொல் ஒருவரைக் குறிக்கிறதா பலரைக் குறிக்கிறதா என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஆங்கிலத்தில் ஒருவருக்கும் பலருக்கும் அந்த ஒரே சொல்தான் பயனீட்டில் உண்டு. தமிழில் நீ என்றும் நீங்கள் என்றும் தனித்தனி சொல் உண்டு. அ•றிணையான 'அவை'க்கும் உயர்திணையான 'அவர்'களுக்கும் ஆங்கிலத்தில் 'தேய்' (They) என்னும் ஒரே சொல்தான். மாமாவும் 'அங்கிள்'தான் சிற்றப்பாவும் 'அங்கிள்'தான். அத்தையும் 'ஆண்டி'தான். சிற்றன்னையும் 'ஆண்டி'தான்.

3.மலேசியாவில் நடந்த முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மறைந்த பேராசிரியர் தனிநாயக அடிகள் ஒரு வினா எழுப்பினார். "நீ உன் தந்தைக்கு எத்தனையாவது பிள்ளை?" என்றும் வினாவை ஆங்கிலத்தில் ஒரே வாக்கியத்தில் கூற இயலுமா என்றார். இன்று வரை முடியும் என்று யாரும் முன்வந்து விளக்கக் காணோம்.

4.இன்றைய அறிவியலுக்குத் தேவையான பல சொற்கள் தமிழில் இல்லையே என அலுத்துக் கொள்கிறார்கள் சிலர். அன்றைய அறிவியல் ஆக்கங்களுக்கான சொற்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டும் முன்னரே இருந்தனவா என்ன? ஆய்வுகளும் கண்டு பிடிப்புகளும் ஆங்கிலத்திலேயே செய்யப்படுவதால் அவற்றுக்கான புதிய சொற்களும் அதிலேயே உருவாக்கப்படுகின்றன.

5.பாதிக்குமேல் பிறமொழிச் சொற்களை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலத்தில் புதிய சொற்களை உருவாக்க முடியும்போது தன்காலிலேயே நிற்கவல்ல தமிழில் அதைச் செய்ய முடியும். அப்படிச் செய்யாமலிருப்பது தமிழரின் குறையே அன்றித் தமிழின் குறையன்று.

கௌதமன்
14-01-2011, 04:41 PM
தமிழ் சோறு போடுமா? என நாக்கில் நரம்பில்லாமல் பேசுபவர்கள், தமிழுக்கு உள்ள தனித்தன்மைகளை அறிவார்களா?


1.மொழியின் மற்றொரு பயன் அம்மொழியில் உள்ள நூல்களிலிருந்து கிடைப்பது. தமிழ் நூல்களில் இல்லாத படிப்பறிவுச் செல்வமும் பண்பாட்டு வளமும் வேறெம் மொழியில் உள்ளன? உயர்ந்த வாழ்க்கைக்கு உரிய நெறியும் அதன்படி ஒழுகும் முறைகளும் தமிழ் இலக்கியங்களிலும் அறிவு நூல்களிலும் கிடைக்குமளவுக்கு வேறெங்குக் கிடைக்கும்?

2.திருக்குறள் போன்ற அறிவு நூல் மனித வாழ்க்கையில் எத்துணைப் பெரும்பயனை உருவாக்கவல்லது! 99 மலர்களைப் பெயர்கூறி அடையாளம் காட்டும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டுப் போலொரு பழம் பாடல் தமிழிலன்றி வேறெம் மொழியில் உள்ளது? விவேக சிந்தாமணியின் விவேகம் கண்டால் வியக்காதவர் யார்?

3.தமிழின் சொல்வளம் என்பது வெறும் சொற்களின் எண்ணிக்கையா? அ•து ஓர் பழம் பெரும் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுப் பட்டறிவுப் பெட்டகம் அன்றோ!

4.பூ என்னும் ஒரு பொருளுக்கு அரும்பு, வீ, போது, முறுக்கு, மொட்டு, அலர், மலர் என அதன் ஒவ்வொரு பெயர் கொண்ட மொழி உலகில் எத்தனை உண்டு? கல்வியை முறையாகத் தமிழில் தொடங்கும் குழந்தை, பூ என்னும் ஒரு பொருளைத் தெரிந்து கொள்ளும்போதே அதன் பல நிலைகளையும் அவற்றுக்கான சொற்களையும் சேர்த்தே தெரிந்து கொள்கிறது! இப்படி ஒன்றை அறியும்போதே அதைப் பலவாகப் பகுத்தும் ஆய்ந்தும் பார்க்கப் பழகும் குழந்தையின் பகுத்தறியும் ஆய்வாற்றலும் எத்தகையதாக இருக்கும் எனச் சொல்லவும் வேண்டுமோ!

5.இதனால் அன்றோ தமிழர்கள் குறிப்பாகத் தமிழ் பயின்றவர்கள், அறிவியலிலும் கணிதத்திலும் அரும்திறம் பெற்றிலங்குகின்றனர்! உலகெங்கும் தலைசிறந்த மருத்துவர்களாகவும் கணினித் துறை வல்லுநர்களாகவும் திகழ்கின்றனர்.

6.ஒரு பழம் 75 காசு. 46 பழங்கள் எவ்வளவு என்றால், மற்றவர்கள் தாளில் எழுதிப் பெருக்கிக் கொண்டிருக்கிற அல்லது கணக்கியைத் (கல்குலேட்டரைத்) தேடிக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரிய அளவில் கல்வி இஆல்லாத, ஆனால் தமிழ் பயின்ற முதியவர்கள் "நாமுக்கா மூணு, அற முக்கா நாலரை ஆக முப்பத்து நாலு வெள்ளி ஐம்பது காசு (34.50)" என்று பட்டென்று கூறி விடுகின்றனரே! இந்தத் திறம் எங்கிருந்து கிடைத்தது. தமிழ் பயின்றதால் வந்த தனித்திறம் அன்றோ இது.

7.மொழியின் இன்னொரு பயன் அதன் இலக்கணத்தாலும் மொழி மரபாலும் உருவாகும் மனப்போக்கு, உறவினரை, மை வைபு (my wife), மை சன் (my son) என்னுடைய மனைவி, என்னுடைய மகன் என்று குறிப்பது ஆங்கிலத்திலும் மற்ற பல மொழிகளிலும் மரபாக இருக்கிறது. தமிழ் இலக்கணமோ, உறவினர்கள் உடைமைப் பொருள்கள் அல்லர்; அவர்களை எனக்கு மனைவி, எனக்கு மகன் என்று முறைப்பொருளில்தான் குறிப்பிட வேண்டும். "உடைய" என்னும் சொல்லைக் கொண்டு உடைமைப் பொருளாகக் குறிக்கக் கூடாது என்கிறது.

8.தமிழ் இலக்கணம் தருக்க முறையிலானது. அறிவியல் அடிப்படையிலானது; எனவே அதைக் கற்பவன் பகுத்தறிவுத் திறம் பெறுகிறான். எதையும் முறையாகச் சிந்திக்கின்ற, செய்கின்ற ஆற்றல் பெறுகிறான். தமிழின் பொருளிலக்கணம் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையைக் கற்பிக்கிறது. யாப்பிலக்கணம் கற்பவன் இசையறிவும் கற்பனை வளமும் பெறுகிறான். தமிழ் இலக்கியங்கள் பல்துறை சார்ந்த அறிவைக் கற்பவனுக்கு வழங்குகின்றன.

9.பொதுவாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப் பயில்பவன், பகுத்தறிவுக் கூர்மை அடைகிறான். பண்பாடு கொண்டவனாகிறான். இசை, கணிதம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான எண்ணற்ற துறைகளில் அடிப்படை அறிவு பெறுகிறான்.

10.தமிழ் இனியது; மெல்லியது. அதுபோலவே தமிழை முறையாகப் பயின்றோர் இனிமையான, மென்மையான, மேன்மையான இயல்புகள் கொண்ட பண்பாளர்களாக விளங்குபவர் என்பது கண்ணெதிரே எண்ணற்ற சான்றுகள் கொண்ட உண்மையன்றோ! இப்படி மொழியால் ஏற்படக்கூடிய பயன்கள் அனைத்தையும் செம்மையாகவும் சிறப்பாகவும் வழங்கி வருவதன்றோ; தமிழ், மொழி, மொழியால் விளையக்கூடிய பயன்களைத்தான் விளைக்கும்.

அதை விடுத்து, அது சோறுபோடுமா என்று குருட்டு வினாத் தொடுப்பவர்களை என்னவென்று சொல்வது? கண் பார்த்தற்குரியது. செவி கேட்டற்குரியது. கண்ணால் கேட்க முடியுமா என்று வினவுவதும் தமிழ் சோறு போடுமா என்று கேட்பதும் ஒரே தன்மையிலான பேதைமையன்றோ!

கௌதமன்
14-01-2011, 04:42 PM
சோற்றுத் தமிழர்கள் சோற்று மொழியைத் தேடிக்கொள்ளட்டும். சோறு போடும் மொழியை மட்டும் கற்றவன் நன்றாகச் சோறு உண்ணலாம். ஆனால் அவன் யார்? அவன் அடையாளம் என்ன? அவன் பண்பாடு எது? பாரம்பரியம் யாது?

அவன் மொழியால் அடிமை, பண்பாட்டால் அடிமை. ஏனெனில், மொழி இனத்தின் உயிர், மொழி வாழ்ந்தாலே பண்பாடு வாழும், மொழியும் பண்பாடும் சமுதாயத்தின் இரண்டு கண்கள். ஒன்று போனால் அரைக்குருடு. இரண்டும் இழந்தால் முழுக்குருடு. முழுக்குருடனை யாரும் எதுவும் செய்யலாம். இத்தகையவன் உரிமை பெற்ற நாட்டில் வாழ்ந்தால்கூட அடிமைக்குச் சமமானவனே என்பதில் ஐயமேது?

குறுகிய காலத்தில் பல துறைகளில் பெரு முன்னேற்றம் அடைந்திருக்கும் சப்பானியர் தம் மொழி சோறு போடுமா என்று வினவவில்லை. நம் நாட்டில் எல்லா வகையிலும் உயர்ந்து நிற்கும் சீன மக்கள் தம்மொழி சோறு போடுமா என்று கேட்கவில்லை. இவர்கள் தங்கள் மொழிக்குத் தாங்களே சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வலிமையூட்டி வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழரில் பலரோ தம் தனிக்குணச் சிறப்பால், தாயை காக்கக் கூலி கேட்பார்போல, இன்று தமிழிடத்தில் சோறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழால் சோறு உண்பவர்களிலேயே பலருக்குத் தமிழின்பால் அன்பில்லை, மதிப்பில்லை, நன்றி கூட இல்லை; சோற்றுக்காகத் தமிழையே விற்கவும் துணிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் எல்லோருக்கும் சோறு போட்டால் இருக்கும் தமிழாவது இருக்குமா?

தமிழுக்காகவே தமிழ் வேண்டுவோர் தமிழுக்குப் போதும். சோற்றுக்காகவே மொழி வேண்டுவோர் சோறு போடும் மொழியே சொந்தமென்று போகட்டுமே!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Hega
14-01-2011, 04:44 PM
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சோறு போடுமே தமிழ்.
அதன் மேல் சேறு வீசாத வரை போடும்.

வியாசன்
14-01-2011, 05:49 PM
ஆனால், தமிழரில் பலரோ தம் தனிக்குணச் சிறப்பால், தாயை காக்கக் கூலி கேட்பார்போல, இன்று தமிழிடத்தில் சோறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழால் சோறு உண்பவர்களிலேயே பலருக்குத் தமிழின்பால் அன்பில்லை, மதிப்பில்லை, நன்றி கூட இல்லை; சோற்றுக்காகத் தமிழையே விற்கவும் துணிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் எல்லோருக்கும் சோறு போட்டால் இருக்கும் தமிழாவது இருக்குமா?

தமிழுக்காகவே தமிழ் வேண்டுவோர் தமிழுக்குப் போதும். சோற்றுக்காகவே மொழி வேண்டுவோர் சோறு போடும் மொழியே சொந்தமென்று போகட்டுமே!உங்கள் ஆதங்கம் புரிகிறது. கட்டுவதற்கு கோவணத்துணியும் இல்லாமல் தமிழை மட்டும் கையிலெடுத்து, இன்றைக்கு கோடானுகோடிஸ்வரர்கள். ஆனால் தமிழ் மட்டும் இன்றும் நிர்வாணமாகவே உள்ளது.
தமிழ் சோறு போடுமா?
சோறு போடுமா தெரியாது ஆனால் உயிரை பறிக்கும். தமிழ் மீனவன் என்பதால் அநியாயமாய் உயிரையிழந்த அந்த தமிழனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
தொப்பிகள் அளவென்பதற்காக யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளமுடியும்.
தமிழை வாழ வைக்க உங்களை போன்றோர் தேவை. எங்கள் பாதங்களும் உங்கள் பாதச்சுவடுகள் பற்றித் தொடரும்

வேதனையுடன் வியாசன்

M.Jagadeesan
14-01-2011, 09:55 PM
"தமிழ் சோறு போடுமா? என்று கேட்காதே!தமிழுக்கு நீ என்ன சோறு
போட்டாய்?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்கவேண்டும்.

ஆளுங்க
15-01-2011, 04:18 AM
முற்போக்குச் சிந்தனையாளர்களே.....
ஆங்கிலம் மட்டும் சோறு போடுமா?
அப்படி சொல்பவர்கள் ஆங்கில இலக்கியம் மட்டும் படிக்க வேண்டியது தானே!!
ஒரு தமிழ் வார்த்தை கூட இல்லாமல் பேச வேண்டியது தானே?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
கணிதம், அறிவியல், வணிகம்- இவற்றில் எதையும் கற்காமல் வெறும் ஆங்கில அறிவு கொண்டு உயர்ந்தவர்கள் எண்ணிகையை விரல் விட்டு எண்ணி விடலாம்..

தமிழ் சோறு போடுமா?

என் கேள்வி:
ஏன் போட வேண்டும்?

சோறு வேண்டுமானால் என்ன வேண்டும்?
முக்கியமாக அரிசி வேண்டும் .. அதைப் பெற குறைந்தபட்சம் 1 ரூபாய் வேண்டும்...
அத்துடன் அதைப் பெற பங்கீட்டு அட்டை (Ration Card) வைத்து இருக்க வேண்டும்.
அந்த அட்டையைப் பெற அரசுக்கு தக்க ஆவணங்களுடன் விண்ணப்பித்து இருக்க வேண்டும்!!

ஒரு கிலோ அரிசிக்கே இவ்வளவு தேவை என்றால், சோறுக்கு...
தண்ணீர், பானை, அடுப்பு, எரிபொருள்.. இன்னும் பல..

இவற்றைப் பெற உதவுவது எது?
உழைப்பு..

உழைப்பை நம்பாமல் இவற்றைப் பெற முடியுமா?
மொழியை மட்டும் கற்றவர்கள் முன்னேற முடியாது..
மொழியுடன் உழைக்க ஒரு தொழிலையும் கற்க வேண்டும்..

கற்றால் மட்டும் போதுமா? அதைத் திறம்பட பயன்படுத்த வேண்டும்...
அப்போது தன் பலன் கிடைக்கும்!!

இதோ வள்ளுவர் வாக்கு:
"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி"

இதை விடுத்து , "தமிழ் சோறு போடுமா? குழம்பு வைக்குமா?" என்று கேட்பது அறிவீனம்..
அதைக் கேட்பவன் ஒரு முட்டாள்..

மொழியின் நோக்கம்
அனைவரையும் இருத்தி அன்னதானம் வழங்குவது அன்று...
அனைவருக்கும் தன் எண்ணத்தை வெளிப்படுத்துவதே!!

பி.கு:
உழைப்பை மட்டும் கொண்டு சோறு வைக்க முடியாது..
பொருட்களைப் பெற பிறரிடம் என்ன தேவை என்று எடுத்து உரைக்க வேண்டும்..
அதற்குத் தேவை மொழி!!


"உழவனிடம் உலக மொழி பேசினால் வீட்டில் உலை வைக்க முடியாது"

சிவா.ஜி
15-01-2011, 06:10 AM
படித்தப் படிப்பு எதுவுமே சோறு போடுவதில்லை..........................

உழைப்புதான் சோறு போடுகிறது அல்லது சோம்பேறித்தனம் சோறு போடுகிறது(தமிழ்நாட்டில் மட்டும்)

இதில் தமிழை மட்டும் ஏனுங்க குறை சொல்றீங்க?

உதயசூரியன்
15-01-2011, 06:36 AM
சோறு போட்டால் தான் தமிழ் என்றால்.. அப்படி சொல்பவன் தமிழனே அல்ல..

தமிழுக்கு சோறு போடுவது தான் ஒவ்வொரு தமிழனின் கடமை..

மொழியை பெற்றெடுத்தது நாம்

நாம் தான் வளர்க்கனும்


கவுதமினின் பதிவுகள் அருமை

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

கௌதமன்
16-01-2011, 03:19 AM
எதற்காக தமிழ் மொழியைப் படிக்கவேண்டும்? ஆங்கில அறிவு மட்டும் இருந்தால் போதுமே! என்ற எண்ணம் கொண்ட தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞர்கள் எண்ணிப்பார்க்க வேண்டியே, என் கருத்துகளுக்கு உடன்பாடாகவிருந்த பதிவை வேறொரு தளத்திலிருந்து இங்கு பதித்தேன். தனிப்பட்ட அரசியல் மாச்சரியங்களையோ, விமர்சனங்களையோ வெளிப்படுத்த இத்திரி பதியப்படவில்லை என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு சமூகம் அளிக்கும் மரியாதை என்ன? மருத்துவ கல்லூரியில் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்த தமிழ் வழியில் படித்த மாணவன் ஆங்கில வழியில் படித்த மாணவர்களுடனும், ஆங்கில வழியான பாடத்திட்டங்களுடனும் பொருந்த முடியாமல் படிப்பை ஆரம்ப நிலையிலேயே கைவிடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்ற அவலநிலைக்கு என்ன காரணம். நிச்சயம் அரசியல் மட்டும் காரணம் அல்ல. ஆரம்பக்கல்வி தாய்மொழியிலேயே அமைய வேண்டும் என்று ஆணையிடுகின்ற அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவது பெற்றோர்களாகிய பொதுமக்களே. இந்த மனநிலையை எப்படி மாற்றுவது.

leomohan
18-01-2011, 12:57 PM
தமிழ் அவசியம் கற்க வேண்டும். நேற்றைய தலைமுறையும் நாளைய தலைமுறையும் இணைவது மொழியால். தாய் மொழியை மறக்கலாகாது. தொழிலுக்காகவோ பிற லாபத்திற்காகவோ தாய்மொழி கற்பது தவறு.

ஆனால் தொழிலுக்காக தாய்மொழியல்லாமல் பிற மொழியை கற்பதில் தவறில்லை.

கௌதமன்
18-01-2011, 01:07 PM
தொழிலுக்காக தாய்மொழியல்லாமல் பிற மொழியை கற்பதில் தவறில்லை.

தொழிலுக்காக மட்டுமல்ல பிற மொழியின் சுவையை அறியவும், இலக்கியத்தை ரசிக்கவும், பண்பாடு மற்றும் கலாசாரத்தை அறிந்துக் கொள்வத்ற்கும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஒருவர் படிக்கலாம்.

பன்மொழியறிவு என்பது வீட்டின் பலகணி போன்றது. பலகணி எண்ணிக்கை கூடும்தோறும் கூடும்தோறும் வீட்டுக்கு காற்றும் வெளிச்சமும் அதிகம் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை. ஆனால் தாய்மொழி என்பது வீட்டின் தலைவாசல் போன்றது. தலைவாசலை மூடிவிட்டு ஒரு வீடு (சமுதாயம்) பலகணி வழி புழங்க முடியாது.

உங்கள் வீட்டுக்கு வாசல் வேண்டுமா? அல்லது பலகணி போதுமா? சிந்திப்போம்!

சுகந்தப்ரீதன்
19-01-2011, 10:26 AM
தமிழ் சோறு போடுமா?

இந்த கேள்வியினை மேலோட்டமாக நோக்கி உணர்சி வசப்படுவதைவிட உள்ளார்ந்து நோக்கினால் தமிழ்சமூகத்தின் வலியும் வேதனையும் இதில் உள்ளடங்கியிருப்பதை உணரமுடியும்..!!

தமிழ் சமூக வரலாற்றின் எந்த காலக்கட்டத்திலும் இத்தனை விரக்தியான ஒரு வினா எழுந்ததாக எந்த குறிப்பும் இல்லை.. ஆனால் இன்று எழுந்திருக்கிறது..!! காரணம் எல்லோரும் அறிந்ததே..!!

தமிழை முன்னிலைப்படுத்தி தலைவரானவர்கள் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்த தவறியதுதான்..!! ஜப்பானியர்களும் சீனர்களும் தங்கள் தாய்மொழியில் பயின்று தங்கள் தாயகத்திலேயே தங்களது உழைப்பை செலுத்தும் வகையில் அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதாரம் அமைந்து இருக்கிறது..!! இதேமுறையில்தான் நெடுங்காலமாக தமிழ்சமூகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு அமைந்து வந்திருக்கிறது..!!

ஆனால் இன்றைக்கு ”ஈந்து வாழ்ந்த சமூகம் இரந்து வாழும் நிலைக்கு” தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை இங்கே சிவாண்ணா தன் பதிவில் தெளிவாக சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்..!!

கௌதமன் அண்ணா... தமிழ் சோறுப்போடுமா என்ற கேள்வியை தமிழரல்லாத ஒருவர் கேட்பதற்க்கும் தமிழர் ஒருவர் கேட்பதற்க்கும் உள்ள உள்ளார்ந்த வேறுபாட்டை உங்களால் உணர முடியும் என்று நம்புகிறேன்..!!

மாதவர்
19-01-2011, 11:41 AM
தமிழ் படித்தால்தான் இன்று வரை எனக்கு சோறே கிடைக்கின்றது!
இதை எந்த கோவிலிலும் சொல்லுவேன்!

சுகந்தப்ரீதன்
19-01-2011, 02:49 PM
கோவிலுக்கெல்லாம் எதுக்கு மாதவர் அண்ணா.. நீங்க சொன்னா நாங்க நம்பமாட்டமா என்ன?:D

சரி.. தெளிவாகவே விசயத்தை சொல்லிவிடுகிறேன்..!! தமி்ழகம் என்பது ஜப்பானையும் சீனாவையும் போல் ஒரு தனித்த நாடு கிடையாது..!! இந்திய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு தனித்த மாநிலம் அவ்வளவே..!! இங்கே தமிழர்களின் அரசியலும் பொருளாதாரமும் முழுக்க முழுக்க தமிழர்கள் கையில் மட்டுமே இல்லை..!! அது கூட்டமைப்பின் மற்ற உறுப்பினர்களையும் சார்ந்தே இருக்கிறது..!!

தமிழை முன்னிலைப்படுத்திய தலைவர்களால் தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் போனதற்க்கு இதுவும் ஒருக்காரணமாக இருக்கலாம்..!! ஆனால் அது மட்டுமே காரணமல்ல என்பதை அன்றாட அரசியல் நிகழ்வுகளை அவதானித்து வருபவர்களால் அறிய முடியும்..!!

தமிழ் மட்டுமே போதும் என்று உறுதியாக சொல்வதற்க்கு, ஒன்று தமிழ்நாடு தனிநாடாக இருந்திருக்க வேண்டும்.. அல்லது இந்தியக் கூட்டமைப்பிலிருந்து விலகி வர வேண்டும்..!! ஆனால் இதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு என்பதோடு இதனால் ஏற்படும் சாதகங்களைவிட பாதகங்களே அதிகமாக இருக்குமென்று நம்மாநில அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை பார்த்தாலே தெரிந்துக்கொள்ளலாம்..!!

கடைசியாக, ‘தமிழ் சோறுப் போடுமா?’ என்ற கேள்வி தமிழை வெறுப்பதால் தோன்றுவதாக எனக்கு தோணவில்லை.. மாறாக தமிழ்தலைவர்களின் மீதான அவநம்பிக்கையில் பிறப்பதாகவே தோன்றுகிறது..!!

ஒருவேளை கேள்வி, ‘சோறுப்போட தமிழ் மட்டும் போதுமா?’ என்றிருந்தால் சரியாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது..!! அதுமட்டும் இல்லாமல் இங்கே ‘சோறு’ என்பதை பொருளாதர குறியீடு என்றுதான் கொள்ள வேண்டுமே தவிர நாம் உண்ணும் உணவு என்று கொள்ளலாகாது..!! அப்படி கொள்வதற்க்கு தமிழ் ஒன்றும் அன்னக்கரண்டி கிடையாது.:)

CEN Mark
19-01-2011, 03:04 PM
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சோறு போடுமே தமிழ்.
அதன் மேல் சேறு வீசாத வரை போடும்.

சேறு வீசினாலும் தமிழ் சோறு போடும்

கௌதமன்
19-01-2011, 03:06 PM
ஒருவேளை கேள்வி, ‘சோறுப்போட தமிழ் மட்டும் போதுமா?’ என்றிருந்தால் சரியாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது..!! அதுமட்டும் இல்லாமல் இங்கே ‘சோறு’ என்பதை பொருளாதர குறியீடு என்றுதான் கொள்ள வேண்டுமே தவிர நாம் உண்ணும் உணவு என்று கொள்ளலாகாது..!! அப்படி கொள்வதற்க்கு தமிழ் ஒன்றும் அன்னக்கரண்டி கிடையாது.:)

சோறு போடுமா தமிழ்? என்றக் கேள்வியேத் தவறானது என்பதுதான் திரியின் உள்ளடக்கம். தமிழ் என்பதன் இடத்தில் ஒழுக்கம், நேர்மை, ..தொடங்கி எதையும் நிரப்பலாம்.ஆனால் அந்தக் கேள்வியில் பொருள் உள்ளதா? நண்பர் aalunga இந்தத் திரியின் உள்ளர்த்தத்தை புரிந்து பின்னூட்டமிட்டிருக்கிறார்.

CEN Mark
19-01-2011, 03:07 PM
உங்கள் ஆதங்கம் புரிகிறது. கட்டுவதற்கு கோவணத்துணியும் இல்லாமல் தமிழை மட்டும் கையிலெடுத்து, இன்றைக்கு கோடானுகோடிஸ்வரர்கள். ஆனால் தமிழ் மட்டும் இன்றும் நிர்வாணமாகவே உள்ளது.
தமிழ் சோறு போடுமா?
சோறு போடுமா தெரியாது ஆனால் உயிரை பறிக்கும். தமிழ் மீனவன் என்பதால் அநியாயமாய் உயிரையிழந்த அந்த தமிழனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
தொப்பிகள் அளவென்பதற்காக யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளமுடியும்.
தமிழை வாழ வைக்க உங்களை போன்றோர் தேவை. எங்கள் பாதங்களும் உங்கள் பாதச்சுவடுகள் பற்றித் தொடரும்

வேதனையுடன் வியாசன்

நெஞ்சைத் தொட்டுட்டீங்க ஐயா!

CEN Mark
19-01-2011, 03:14 PM
முற்போக்குச் சிந்தனையாளர்களே.....
ஆங்கிலம் மட்டும் சோறு போடுமா?

"உழவனிடம் உலக மொழி பேசினால் வீட்டில் உலை வைக்க முடியாது"[/COLOR]

[SIZE="4"]இவரு நம்ம ஆளுங்க! செருப்பு கொஞ்சம் உட்சபட்ச வார்த்தை. தவிர்த்திருக்கலாம். மற்றபடி உங்கள் கருத்து நூருஸதவிகிதம் ஏற்புடையதுதான்.

CEN Mark
19-01-2011, 03:18 PM
சோறு போடுமா தமிழ்? என்றக் கேள்வியேத் தவறானது என்பதுதான் திரியின் உள்ளடக்கம். தமிழ் என்பதன் இடத்தில் ஒழுக்கம், நேர்மை, ..தொடங்கி எதையும் நிரப்பலாம்.ஆனால் அந்தக் கேள்வியில் பொருள் உள்ளதா? நண்பர் aalunga இந்தத் திரியின் உள்ளர்த்தத்தை புரிந்து பின்னூட்டமிட்டிருக்கிறார்.

கெளதம். வரவர குரங்கு பிடிக்கபோய் பிள்ளையார் ஆனா கதையாய். உங்கள் திரி எல்லாம் கொழுந்துவிட்டு எரிகிறது. கௌதமன் என்றால் என்ன அர்த்தம்?

கௌதமன்
19-01-2011, 03:45 PM
கெளதம். வரவர குரங்கு பிடிக்கபோய் பிள்ளையார் ஆனா கதையாய். உங்கள் திரி எல்லாம் கொழுந்துவிட்டு எரிகிறது. கௌதமன் என்றால் என்ன அர்த்தம்?

சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். இதுவே பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காயிருந்தால்?

கௌதமன் என்றால் என்ன அர்த்தம். தெரியவில்லை.

ஆனால் எதிர்காலத்தில் கௌதமன் என்றால் அன்பானவன், சொலல்வல்லன், சோர்விலன், அஞ்சான் எனப் பொருள் வரும்படி இருக்கவேண்டுமென எண்ணுகிறேன்.

ஆளுங்க
19-01-2011, 04:15 PM
இவரு நம்ம ஆளுங்க! செருப்பு கொஞ்சம் உட்சபட்ச வார்த்தை. தவிர்த்திருக்கலாம். மற்றபடி உங்கள் கருத்து நூருஸதவிகிதம் ஏற்புடையதுதான்.

நான் அந்த வார்த்தையை (செருப்பு) எங்கும் பயன்படுத்தவில்லையே !!

M.Jagadeesan
26-01-2011, 12:33 AM
திருமணப் பத்திரிக்கைகளில்,"எனது மகன்","எனது மகள்"என்று குறிப்பிடு
வது தவறு."என் மகன்","என் மகள்" என்றே குறிப்பிடவேண்டும்."எனது ஆடு","எனது மாடு"என்று குறிப்பிடலாம்.

அன்புரசிகன்
27-01-2011, 03:03 AM
எதையும் மற்றவரில் இருந்து எதிர்பார்ப்பது தான் நம் இயல்பு என்பதற்கு இந்த திரியின் தலைப்பே போதும்.

தமிழ் சோறு போடுமா??? இதென்ன கேள்வி? விட்டா பிட்ஸா பேர்கர் நூடுல்ஸ் எல்லாம் கேட்ப்பீங்க போல... :D

தமிழுக்கு அவனவன் என்ன செய்தீங்க? அப்புறம் தமிழ் தானா சோறென்ன. பெரிய விருந்தே தடல் புடலாக வைக்கும்...

தமிழரிடம் தமிழன் தமிழில் தான் பேசுகிறானா??? தூய தமிழில் பேசினால் எம்மை பைத்தியக்காரன் போலல்லவா பார்க்கிறார்கள்.

உமாமீனா
01-02-2011, 08:40 AM
கௌதமன் நன்றி இப்படி ஒரு பதிவு போட்டு சோறு போடுமா கேட்பவர்களுக்கு சவுக்கு அடி கொடுத்து தமிழுக்கு பெருமை சேர்த்த உம்மை பாராட்டுகிறேன்

M.Jagadeesan
03-02-2011, 11:03 AM
தமிழில்

"அவன்" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது "அவனுக்கு" என்றாகிறது.
"அவள்" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது "அவளுக்கு" என்றாகிறது.
"அவர்கள்" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது "அவர்களுக்கு" என்று
ஆகிறது.ஆனால்
" நான்" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது " நானுக்கு" என்று ஆகாமல்
"எனக்கு" என்று ஆகிறது.
" நீ" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது " நீக்கு" என்று ஆகாமல் "உனக்கு"
என்று ஆகிறது.

ஆனால் தெலுங்கில் " நானு" என்பது " நாக்கு" என்றும் " நுவ்வு" என்பது " நீக்கு"
என்றும் சரியாக உள்ளது.

ஆங்கிலத்தில்
I sing
You sing
We sing
They sing என்று சொல்லுகிறோம்.ஆனால் படர்க்கை ஒருமையில் மட்டும்
He sings
She sings என்று சொல்லும்படி குழந்தைகளை வலியுறுத்துகிறோம். மொழி
செய்யும் தவறுகளுக்கு குழந்தைகளைத் தண்டிப்பதா?

கௌதமன்
03-02-2011, 04:52 PM
" நான்" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது " நானுக்கு" என்று ஆகாமல் "எனக்கு" என்று ஆகிறது.

" நீ" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது " நீக்கு" என்று ஆகாமல் "உனக்கு" என்று ஆகிறது.

ஆனால் தெலுங்கில் " நானு" என்பது " நாக்கு" என்றும் " நுவ்வு" என்பது " நீக்கு" என்றும் சரியாக உள்ளது.

மொழி செய்யும் தவறுகளுக்கு குழந்தைகளைத் தண்டிப்பதா?

ஆமாம் ஏன் இல்லை! அனேகமாக இதற்கு பதில் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

பதிலை நானும் தேடிப்பார்க்கிறேன். ஒரு காலமும் மொழி தவறு செய்ய முடியாது.

தமிழ் மொழியில் இலக்கணத் தவறு என்று நண்பர் ஜெகதீசன் கூறலாமா? நமக்குத் தெரியவில்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்வோம்.

(நண்பர் குணமதியின் உதவி தேவை)

கனிவேல்ப்ரியா
27-08-2012, 03:49 PM
இந்த ஒரு திரியைப் படித்ததுமே வயிறும் மனமும் நிறைந்தாற்போல் ஒரு உணர்வு. கௌதமனின் வலப்பூ அருமை! வாழ்த்துக்கள்!

A Thainis
27-08-2012, 06:47 PM
கெளவுதமனின் தமிழ் சோறு போடுமா என்ற திரி அருமை, அறிவு பசி உடையோரும், சமுகத்தில் சாதிக்க நினைபோருக்கும் தமிழ் மொழி ஒரு பெரும் வரபிரசாதம். ஆங்கிலம் உலக தொடர்பு மொழி ஆனால் தமிழ் மனிதனை சமூகத்தை செம்மை படுத்துகின்ற ஆற்றல் வாய்ந்த அறிவும், ஞானமும், செழுமையும் செறிந்த மொழி என்பது தமிழ் ஆய்ந்தோரின் அனுபவம். பிழைப்புக்காக இருப்போர் தமிழ் சோறு போடுமா என கேட்பதில் ஆச்சரியம் இல்லை. இவர்களால் இவ்வுலகம் இம்மியளவும் பயனடைய போவதில்லை. பசிதிரிந்தாலும் தமிழ் பாடி வறுமை போக்க உதவிய பாரதி எங்கே இந்த தன்னலகாரர்கள் எங்கே.

rajkulan
16-04-2013, 04:46 AM
தமிழ் அவமானமில்லை, அடையாளம்.. தமிழ் சோறு போடுமா எனக்கூவும் தமிங்கிலீஸ் மன்னர்களே! தமிழ் தான் உனக்கு அடையாளம்.. நீ எங்கும் ஓட முடியாது.. கேரளா அது மலையாளிகள் நாடு, ஆந்திரா அது தெலுங்கர்கள் தேசம், கன்னடா அது கன்னடர்கள் பூமி.. நீ எங்கே போவாய்.. தமிழ் நாட்டிலும் தமிழர் அல்லாதோர் இல்லை எனும் நிலை வரும் போது நீங்கள் எங்கே போவீர்கள்... இது விரைவில் அரங்கேறும்.. தமிழ் சோறு போடுமா அல்லது பீட்ஷா போடுமா என்று பார்ப்போம்... தமிழ் அவமானமில்லை, அடையாளம்..

கும்பகோணத்துப்பிள்ளை
17-04-2013, 04:26 AM
எம்மொழி பயின்றாலும் உணர்வதும் உணர்விப்பதும் தாய்மொழி வாயிலாகத்தான். பிறமொழி கற்கும் போது நமது தாய்மொழி கற்றலும் பயிற்ச்சியுமே பிற மொழிகளை ஒப்பிட்டு மேலும் சிறக்க கற்க்கவியலுமேயன்றி தாய்மொழிப்பயிற்ச்சியில்லாதவன் பிறமொழி கற்றாலும் முழுமையடையவியலாது. மேலும் பன்மொழி கற்றவர்க்கு நம் தாய்மொழி தமிழின் அருமை மேலும் விளங்கும். இதனை முழுமையாக உணர்ந்த பாரதி 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்காவதும் கானோம்" என்றார். நம் தமிழ்மொழியின் பான்மை பிறமொழியினரையும் கவரக்கூடியது என்பதற்க்கு ராபர்ட் கால்டுவெல் ஒரு முதன்மையான உதாரணம். அறிவிலார் கேள்விகளுக்கு பதில் தருகிறோம் என்ற நோக்கமில்லாமல் இத்திரியையும் நம்மை நாமே அளவிட்டுக்கொள்வதற்காகவே என கருதலாம்.
அறிவிலிகளை ஏசி என்னப்பயன் நமக்கு.

இராஜிசங்கர்
17-04-2013, 07:00 AM
இந்தச் சுட்டியைப் பார்த்ததும் எங்கள் மாலன் சாரின் 'அன்றைக்கிருந்த அறிவியல்' என்ற கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது. அதில் கடைசியாக இப்படி முடித்திருப்பார்: 'எல்லாம் சரி, இலக்கியம் சோறு போடுமா? எனக் கேட்கிறார்கள் சிலர். இலக்கியம் வயிருக்குச் சோறு போடாது. அறிவுக்கு பசி கொடுக்கும்'

முழுக் கட்டுரையும் படிக்க: http://maalan.co.in/topicdetails.php?topicid=235&catid=10#content_container

Nivas.T
06-05-2013, 09:16 AM
கூறுகெட்ட கேள்வி
கூறு அற்றோர் எண்ணம்
சோறு ஒன்றே திண்ணம்
வயிறு வீங்கி போவர்
வாழ நாதியற்று வீழ்வார்

jpl
06-05-2013, 02:20 PM
போடும்...தமிழை முறையாக கற்று, தற்கால உத்திகளுடன் இணைந்தால் சோறிட்டு,குழம்பு உற்றி,பொரியல் வைத்து,தயிர் போட்டு சாப்பாடே கிடைக்கும்...ஆனால் நம்ககு அதற்கு தகுதி வேண்டாமா?