PDA

View Full Version : சித்தத்தின் உன்மத்தம்



CEN Mark
14-01-2011, 01:45 PM
மார்கழிப் பனியின்
காலைபொழுது
சில்லரையில்லா சிரிப்போடு
சித்தம் கலங்கி
சிவன் கோவில் தடாகையில்
தவறி விழுந்தேன்.
தண்ணீர் தேசத்தில்
சித்தனின் பிம்பத்தில்
மீன்கள்.

காடு, மலை, கடல்
குளிர், வெயில் என
இயற்கையின் எதிராய் ...

நிலம், காற்று, வானம்,
நீர், நெருப்பு என
ஐம்புலன் ஆண்டவன்
அவனியில் அவதியாய் ...

உடல், நரம்பு, நாடி,
சலனம், சக்தி என
சகல யுக்திகளை தலைமுறை
தரனிக்கெதிறாய் ....

மரபணு, ஸ்டெம்செல்
க்ளோனிங் என
நுண்ணுயிர் அறிவின்
ப்ரம்மஸூத்திரமாய்...

புழு, புல், பூச்சி
மிருகம், மனிதன் என
பரிணாம அடுக்குகள்
சிதிலங்களாய்...

நாள், கோள், நட்சத்திரம்,
கடவுள், மெய்யறிவு என
சிந்தனை படைத்த தமிழன்
மெல்ல மெல்ல
அகதிகளாய்