PDA

View Full Version : புலன்



CEN Mark
14-01-2011, 01:11 PM
பூவினில் அமரும் நோக்கில்
வண்டுகள் அலையும் பாங்கு
பறப்பதில் சிதறும் சத்தம்
நிலைப்பதில் அடங்கிப்போகும்
கண்கள்.

தீவண்ண வாயிற் கதவும்
வெண்பனியாய் சுற்றுச்சுவரும்
எண்ணைக்கடல் அகழியதில்
விநோதமாய் சலம்பும்
நாக்கு....

மலைக்குகை வாயில் இரண்டு
உள்வெளி சலனம் உண்டு
இழுப்பினுள் நுரைப்பை கண்டு
வெளிச்சலனம் காக்கும்
மூக்கு...

கேள்வியின் நாயகனாய்
அதிர்வுக்கெல்லாம் அடைக்கலமாய்
நேர் நடை துடுப்புகளாய்
சமரசம் காக்கும்
காது.....

பதிவேற்றம் விறக்கம் கண்டு
படிமக் காப்பகமாய் இருந்து
சலனம் கண்டறியும் தொண்டு
தர்க்க ஞான ஊற்றாய்
மூளை...

கௌதமன்
14-01-2011, 01:26 PM
புலனடக்கம் எதற்குவென்று
புகலும் முனிவன், உங்கள்
புலன்களிலும் பெறுவான்
புது ஞானம்!

பாராட்டுகள் நாவரன்! (இந்த பேர் எப்படி?)

CEN Mark
14-01-2011, 01:52 PM
புலனடக்கம் எதற்குவென்று
புகலும் முனிவன்; உங்கள்
புலன்களிலும் பெறுவான்
புது ஞானம்!

பாராட்டுகள் நாவரன்! (இந்த பேர் எப்படி?)

ஆஹா!தமிழில் இப்போது நாவரன் ( N waran ) அருமை

ஜானகி
14-01-2011, 01:59 PM
இத்தனை அழகாகப் புலன்களை வர்ணித்துவிட்டு, அவைகளை அடக்கச்சொன்னால் எப்படி... ?

CEN Mark
14-01-2011, 02:03 PM
இத்தனை அழகாகப் புலன்களை வர்ணித்துவிட்டு, அவைகளை அடக்கச்சொன்னால் எப்படி... ?

அதானே?.......

கௌதமன்
14-01-2011, 02:14 PM
இத்தனை அழகாகப் புலன்களை வர்ணித்துவிட்டு, அவைகளை அடக்கச்சொன்னால் எப்படி... ?

புலனடக்கம் செய்யும் முனிவனும்; அது தேவையின்றி
புலன் கவிதையை படித்தால் ஞானம் பெறுவான்!
என்பதே நான் சொல்ல விழைந்த கருத்து!

ஜானகி
14-01-2011, 02:24 PM
அப்படியா...? மன்னிக்கவும். பூவிலும், வண்டிலும் நிலைத்துப் போன என் கண்களும், மூளையின் படிமக் காப்பும் கொஞ்சம் தவறிவிட்டது..