PDA

View Full Version : கனவு



CEN Mark
14-01-2011, 12:56 PM
கருப்பு வெள்ளைக் காலத்தில்
என் கதைப்பயணம்
கலைந்த தலைமயிராய்
உருக்குலைந்த காட்சிப்பிழைகள்

எதுமுதல் எதுமுடிவு
என்றறியா விசித்திரப்படைப்பு
இறந்துபோன என்னருகில்
விசும்பலுடன் நான்.
இரண்டு மாறுபட்ட குணச்சித்திரமாய்...
அதள பாதாளத்தில் என் பயணம்
மூச்சித்திணரலொடு இடைவேளை.

தண்ணீர் குடித்து
திரைமூடி காட்சி தொடர்ந்தேன்
துரத்தும் மனிதரோடு
சிட்டாய் பறக்கிறேன்
கால்களைப் பின்னிக்கொண்டு...

விடியலில்தான் விளங்கியது
கற்றதும் பெற்றதும்
காட்சிகளாய்....

ஜானகி
14-01-2011, 02:11 PM
காட்சிப் பிழைகளில் கண்ட எழுத்துப் பிழைகள்... கனவா... நனவா... ?

தலைமயிறாய்.... தலைமயிராய்

குனச்சித்திரமாய்.....குணச்சித்திரமாய்

மூச்சித்திநரலொடு....மூச்சுத்திணறலோடு

கனவு என்பதால் வேண்டுமென்றே பிழைகளோ.... ?

அல்லது நான் விழித்திருப்பதால், பிழையாகத் தெரிகிறதோ... ?

CEN Mark
14-01-2011, 03:20 PM
காட்சிப் பிழைகளில் கண்ட எழுத்துப் பிழைகள்... கனவா... நனவா... ?

தலைமயிறாய்.... தலைமயிராய்

குனச்சித்திரமாய்.....குணச்சித்திரமாய்

மூச்சித்திநரலொடு....மூச்சுத்திணறலோடு

கனவு என்பதால் வேண்டுமென்றே பிழைகளோ.... ?

அல்லது நான் விழித்திருப்பதால், பிழையாகத் தெரிகிறதோ... ?

கிடைக்கின்ற இடைவெளியில்
நுழைகின்ற கவிதையிலே
சிற்சில சறுக்கல்கள்
வேகத்தில் விழைந்த
தட்டச்சு தடுமாற்றங்கள்.
ஜானகியின் விழிப்புணர்வு
எம்தமிழுக்கு கிடைத்த
நல்வரவு.
வாழ்க நின் தொண்டு!!!!!!!!