PDA

View Full Version : ..பொங்கல் மச்சி பொங்கல்..



பிரேம்
14-01-2011, 11:50 AM
பொங்கல் வந்துடுச்சி..
புதுசா வந்துடுச்சி...
புது நெல்..கரும்பு வச்சி..
புதுசா கொண்டாடு மச்சி..

தை பொறந்தா வழி பொறக்கும்..
தாங்கி தீர்ந்த வலி மறக்கும்..
அஞ்சு, பத்து பஞ்சமும் வேணாம்..
அரசு கொடுக்கும் இலவசமும் வேணாம்..

பூவோட சேர்ந்தா மணக்கும் நாறு..
புதுசா நிக்கிற தாவணிய பாரு..
அடுத்த தை கண்டிப்பா கண்ணாலம்..
அவங்கப்பா ஒத்துகிட்டா சூப்பரா பண்ணலாம்..

அநியாயத்தோட மல்லுகட்டு..
அடக்க வாடா ஜல்லிக்கட்டு..
திமிரும்னு சொல்றவன் வெளியே நிக்கட்டும்.
தில் இருக்கிறவன் உள்ள வரட்டும்..

சோகத்தை எல்லாம் தூர ஓட்டு..
சொர்க்கம் இங்கேன்னு இப்ப காட்டு..
எட்டாச் சூரியனை குறியா வச்சி..
ஏறி நின்னு அட்ரா மச்சி..!!

எல்லாருக்கும் என் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..

கீதம்
14-01-2011, 11:07 PM
வாலிபப்பிள்ளைகளின் உள்ளம் துள்ள வந்ததே பொங்கல்!
கலக்கலாய் எழுந்ததே கவியெனுமொரு கானாப்பொங்கல்!
துள்ளும் இளமையும் இன்பமும் துவளாது இனிக்கவேண்டும்
இவர்கள் வாழ்வில் எந்நாளும் இதுபோலவே உற்சாகப் பொங்கல்!

பொங்கல் வாழ்த்துகள் பிரேம்.

கௌதமன்
15-01-2011, 02:26 AM
பிரேம் மங்காத்தா படத்துக்கு இந்தப் பாடலை வைக்க வெங்கட் பிரபு உங்களை கேட்க சொல்றாரு! உங்க விருப்பம் எப்படி?;)

உமாமீனா
15-01-2011, 03:40 AM
அழகான வரிகள் பொங்கலின் படைப்பு - நம் திருநாள் வாழ்த்துக்கள்

முரளிராஜா
15-01-2011, 03:40 AM
ஓகோ இதுதான் கவிதை பொங்கலா.

ஆளுங்க
15-01-2011, 04:26 AM
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!

உதயசூரியன்
15-01-2011, 06:40 AM
தமிழர் திருனாள்
பொங்கல் திருனாள் தமிழ் புத்தாண்டு 2042
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

govindh
15-01-2011, 09:25 AM
வாழ்த்துக்கள் பிரேம்...

றெனிநிமல்
15-01-2011, 09:39 AM
பொங்கலோ பொங்கல் அனைவருக்கும்.

Mano.G.
15-01-2011, 09:50 AM
அருமை பா,
வாலிப வயது பொங்கல் கவிதை அருமை,
இங்க கரும்பை பார்க்கலாம்,
பொங்கல் பாணையையும் பார்க்கலாம்,
இனிப்பு பொங்கலையும் சுவைக்கலாம்,
ஆனா வீரம் காட்ட ஜல்லி கட்டு காளையும்
தாவணி போட்ட இளைஞிகளையும்
பார்ப்பது கஷ்டமே

சொல்லுப்பா


மனோ.ஜி

Hega
15-01-2011, 01:45 PM
இளமை துள்ளும் இனிப்பான் கவிதை.

தாவணிபெண் உங்க ஊரில் உண்டோ... பிரேம்.


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

சூறாவளி
15-01-2011, 02:57 PM
மச்சி நல்ல துடிப்பான பொங்கள் கவிதை.. நல்லாருக்கு மச்சி ..:icon_b:



தாவணிபெண் உங்க ஊரில் உண்டோ...


ஒஹோ.. இப்பவும் தாவணி இருக்கா...:icon_rollout: எங்க ஊர்ல எப்பயோ காணாமபோயிடுச்சி...:)

பாலகன்
15-01-2011, 03:24 PM
மச்சி நல்ல துடிப்பான பொங்கள் கவிதை.. நல்லாருக்கு மச்சி ..:icon_b:

ஒஹோ.. இப்பவும் தாவணி இருக்கா...:icon_rollout: எங்க ஊர்ல எப்பயோ காணாமபோயிடுச்சி...:)

என்னாது உங்க ஊருல தாவணி கானாம போயிடுச்சா :D
ஓய் பனித்துளி இதே வேலையா இருக்கீரா :)

பிரேம்
17-01-2011, 10:26 AM
நன்றி..கீதம் மேடம்..உமாமீனா..aalunga (என்ன பேர் இது..:sprachlos020:) உதயசூரியன்(ஆளுங்கட்சியா..?:cool:)..கோவிந்த்..(ஆந்த்ராவா..?:rolleyes:) Hega சார்...மனோ.ஜி சார்..
--------------------------------------------------------------
"பிரேம் மங்காத்தா படத்துக்கு இந்தப் பாடலை வைக்க வெங்கட் பிரபு உங்களை கேட்க சொல்றாரு! உங்க விருப்பம் எப்படி?" - கௌதமன்

"நல்லா இல்லைனா சொல்லலாம்ல..அதுக்குன்னு இப்டியா..?":D
-----------------------------------------------------------------
"மச்சி நல்ல துடிப்பான பொங்கள் கவிதை.. நல்லாருக்கு மச்சி -சூறாவளி"

ரொம்ப நன்றி மச்சி..:icon_b:
-----------------------------------------------------------------

பிரேம்
17-01-2011, 10:47 AM
என்னாது உங்க ஊருல தாவணி கானாம போயிடுச்சா :D
ஓய் பனித்துளி இதே வேலையா இருக்கீரா :)

அட..எல்லாரும் பாத்துகங்கப்பா உத்தமரு..தாவணிய பார்த்த உடனே..கண்ண மூடிக்கிவாரு...:D
------------------------------------------------------------------

உதயசூரியன்
15-01-2014, 02:55 PM
தமிழர் திருனாள்
பொங்கல் திருனாள் தமிழ் புத்தாண்டு 2045
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்