PDA

View Full Version : அலுவலகம்



CEN Mark
14-01-2011, 11:50 AM
தெளிந்த நீரோடைபோல்
மேசைமீது கண்ணாடி
யுத்தகளமாய் அதன்மேல்
புத்தகங்கள்
மல்லாந்து இளைப்பாறும்
மூக்குக்கண்ணாடி
கண்ணாடியின் கட்டுக்குள்
நிர்வாணமாய் பேனா
போதையாய் முனகும் தொலைபேசியழைப்பு
இதனோடு முற்றிலும் தொடர்பில்லாமல்
அதிரும் குளிரூட்டும் இயந்திரம் - அது
மட்டும்தான் அலுவலகத்தை
நினைவுட்டின !!!!
.

கௌதமன்
14-01-2011, 01:16 PM
தலைவா ஒரே ஒரு சந்தேகம். தூங்கிட்டிருந்தீங்களா? முழிச்சிட்டிருந்தீங்களா?

CEN Mark
14-01-2011, 01:21 PM
தலைவா ஒரே ஒரு சந்தேகம். தூங்கிட்டிருந்தீங்களா? முழிச்சிட்டிருந்தீங்களா?

சுய உணர்விற்கு திரும்பிட்டிருந்தேன்.