PDA

View Full Version : தமிழர் புத்தாண்டுடன்



நாஞ்சில் த.க.ஜெய்
14-01-2011, 06:12 AM
செங்கதிரோன் ஒளிவீச
மஞ்சளிட்ட மங்கல பானையில்
அன்பெனும் புத்தரிசியிட்டு
பண்பென்னும் சர்கரையிட்டு
இன்சொல்லுடன் இனிக்கும் கரும்பாக
பொங்கலோ பொங்கல் என கூவலிட்டு
மனநிறைவுடன் இறைவனுக்கு படைத்து
உழைக்கும் உழவர்க்கு நன்றி கூறி
என்றும் நலமுடன் வாழ்க என
த.க.ஜெய் யின் வாழ்த்துகளுடன்
இனிதாக தமிழர் திருநாளாம்
தமிழர் புத்தாண்டுடன் பொங்கலையும்
சேர்த்து கொண்டாடுக ....
இனிதாக