PDA

View Full Version : பொங்கல் வந்தது.



M.Jagadeesan
12-01-2011, 10:29 AM
பொங்கல் வந்தது தைப்பொங்கல் வந்தது.
பொங்கலோடு புத்தாண்டும் சேர்ந்து வந்தது.

தமிழர்களின் பெருநாளாம் பொங்கல் வந்தது.
உழவர்களின் திருநாளாம் பொங்கல் வந்தது.

மார்கழியின் உச்சியிலே மலர்ந்தது பொங்கல்.
மகரமெனும் திருநாளாம் மங்கல பொங்கல்.

பொங்கலுக்கு முன்னாலே போகிப் பண்டிகை
புத்தர்பிரான் மறைந்ததுவும் போகிப் பண்டிகை.

மங்கலத்தின் சின்னமான பொங்கல் வந்தது.
மஞ்சளோடு செங்கரும்பும் சேர்ந்து வந்தது.

செஞ்சுடரோன் மகரம்புகும் பொங்கல் வந்தது.
செய்தொழிலின் பயனரும்பும் பொங்கல் வந்தது.

பாட்டாளி மனம்களிக்கப் பொங்கல் வந்தது.
பட்டதுயர் நீங்கிடவே பொங்கல் வந்தது.

இல்லங்கள் தூய்மைபெறும் பொங்கல் வந்தது.
இதயங்கள் இணைகின்ற பொங்கல் வந்தது.

வட்டமிட்டுப் பெண்கள் வளையல்கள் தாமொலிக்க
கொட்டி இசைத்திடவே பொங்கல் வந்தது.

சீறிவரும் காளைகளின் சினமடக்க வீரர்களின்
தினவெடுத்த தோள்களுக்கு வேளை வந்தது.

வான்புகழ் திருக்குறளை உலகிற்கு வழங்கிய
வள்ளுவனார் பிறந்ததினம் மாட்டுப் பொங்கலாகும்.

ஆயிரம்தான் பண்டிகைகள் அடுத்தடுத்து வந்தாலும்
தமிழ்நாட்டில் பொங்கலே தலைசிறந்த பண்டிகை.

nambi
12-01-2011, 11:08 AM
பொங்கல் கவிதை நன்று! பகிர்ந்த ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி!

அனைத்து உறவுகளுக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திங்கள் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழத்துக்கள்.

M.Jagadeesan
12-01-2011, 11:47 AM
பொங்கல் கவிதை நன்று! பகிர்ந்த ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி!

அனைத்து உறவுகளுக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திங்கள் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழத்துக்கள்.

நன்றி! நம்பிக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

கௌதமன்
12-01-2011, 01:43 PM
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcR-KQuUCtxX6PaPTPCRbnpAh_wIQqlFxghebUWIpbF1NSHMWDi6

M.Jagadeesan
12-01-2011, 01:52 PM
நண்பர் கவுதமனுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

சிவா.ஜி
12-01-2011, 02:01 PM
பொங்கும் பொங்கலுக்கு அழகான கவிதையளித்த ஜகதீசனுக்கு வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
12-01-2011, 02:06 PM
நன்றி! சிவா.ஜி அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Hega
12-01-2011, 02:41 PM
பொங்கல் கவிதை பொங்கலை மட்டுமல்ல பல நினைவுகளை்யும் மீட்டுகிறது.

மண்பானையில் விறகு அடுப்பில் பொங்கி அடியில் தீஞ்சி போன பொங்கல் சாப்பிட ஆசை வருது.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

M.Jagadeesan
12-01-2011, 02:46 PM
நன்றி! ஹேகாவுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ஜனகன்
12-01-2011, 06:54 PM
அருமையான பொங்கல் கவிதை வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

அனைத்து மன்ற தோழர்கள் தோழிகளுக்கும் இனிய தை திருநாள், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்...

M.Jagadeesan
13-01-2011, 12:51 AM
ஜனகன் அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

கீதம்
13-01-2011, 10:18 PM
பொங்கல் பற்றிப் பொங்கிய எண்ணங்களால்
எங்களுக்குக் கவிப்பொங்கல் படைத்து ருசிக்கச் செய்த
உங்களுக்குப் பாராட்டுகளும், பொங்கல் நல்வாழ்த்துகளும்.

M.Jagadeesan
13-01-2011, 10:49 PM
கீதத்திற்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!