PDA

View Full Version : தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள்



Hega
12-01-2011, 09:30 AM
தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள்


நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்:
தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்:
நலம் பெறுங்கள்


கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் நமது இனிய இதயம். மனிதனின் இதயம் நின்று போனால் எல்லோமே நிசப்தமே., இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன் போன்றவற்றால் நமது ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாமே நமக்கு கெடுதலாக இருக்கலாமா போன்றவற்றை அலசி உலக இதய நாளான இன்று இந்த சிறப்பு கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

விழித்திருந்தாலும் தூங்கினாலும் நம் உடலில் ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பு இருதயம். இந்தியர்களுக்கே அதிகம் மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும்.


இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி.விவேக்போஸ் கூறும் சில எளிய வழிமுறைகள்

ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.

எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொறுக்குத் தீனியையும் தவிர்க்க வேண்டும்.

* சுறுசுறுப்பாக இயங்குதல்: தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

* பீடி, சிகரெட் புகைப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலையை சுவைப்பதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும்.


ஆரோக்கிய எடை:

உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது முக்கியம். இதற்கு "உயரம் (செ.மீ.,ல்) - 100 = சரியான எடை (கிலோ கிராமில்). அதாவது ஒருவரது உயரம் 175 செ.மீ., இருந்தால், அவரது சரியான எடை (100ஐ கழித்து) 75 கிலோ இருக்க வேண்டும்.
எண்ணை தெரிந்து கொள்வது: ஒருவரது ரத்த அழுத்தம் 120 / 80 என்ற அளவில் இருக்க வேண்டும்.கொழுப்பு சத்தை பொறுத்தவரை எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும்.சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்குள்ளும், சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 140 மி.கி.,க்குள்ளும் இருப்பது அவசியம்.

மன நிம்மதி:

மனதை நாம் எப்போதும் நிம்மதியாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக யோகா, தியானம் இதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த 2010ம் ஆண்டில், பணியாற்றும் இடம் ஆரோக்கிய சூழலில் இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள். * நீங்கள் பணியாற்றும் இடத்தில் நீங்களும், உடன் பணியாற்றுவோரும் புகைப்பதோ, புகையிலையை உபயோகிப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வேலை பார்க்கும் இடத்திலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளுதல். அதாவது நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் வேலை பார்க்கும் இடத்தில் "லிப்டை' உபயோகிக்காமல், படிகளில் நடந்தே ஏறிச் செல் வது போன்றவை நல்லது.
* நீங்கள் மட்டுமின்றி, சகஊழியருக்கும் எது நல்ல ஆரோக்கிய உணவு என சொல்லி கொடுத்து அதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும்.
* பணியாற்றும் இடத்தில் மனஅழுத்தம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமலர்

Kalai_21
12-01-2011, 09:57 AM
நல்ல பதிவு.... அனைவரும் கடைப் பிடிக்க வேண்டியவை.....

ஜானகி
13-01-2011, 01:26 AM
மங்கையர் மலரில் படித்த, மனதைத் தொடும் வரிகள் :

நாள் முழுவதும்

நீ விடும்

புகை வளயங்களை

நினைத்து

உனக்கு ஒன்றும் ஆகிவிடக்

கூடாதே என்ற கவலையில் என்

கண்களுக்குக் கீழ் படிந்தன

கரு வளயங்கள் !

ப்ரசன்னா வெங்கடேஷ்

எந்திரன்
27-01-2011, 04:34 AM
மிகவும் தேவையான பதிப்பு. அனைவரும் தீய பழக்கங்களை விட்டோழிக்க வேண்டும்

Hega
29-01-2011, 09:11 PM
கருத்திட்ட கலை, ஜானகி அக்கா, எந்திரன் ஆகியோருக்கு நன்றி.

நாஞ்சில் த.க.ஜெய்
30-01-2011, 03:40 PM
மீண்டும் மீண்டும் துடிக்கும் இதயம் துடிப்பது நின்றால் மீட்கும் முனையினில் நாம் ...அவசியம் தேவையான பதிவு ஆனால் இன்று நாம் உண்ணும் காய்கறிகளின் மீதுள்ள விஷத்தினால் ஏற்படும் நிகழ்வுக்கேனும் என்னசெய்வது நண்பரே