PDA

View Full Version : தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!!



Hega
12-01-2011, 09:24 AM
தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!!

தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்.

ஏன் சூடாக்க கூடாது என்பதை அறிய Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புக்க்ள் எப்படி செயல்படுகின்றது என்பதை பார்ப்போம்.

சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பம் பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் நுழைகிறது. அதாவது, சாதாரண வெப்பக்கடத்தல் முறை மூலம் அங்கு சமையல் நடைபெறுகிறது. நுண்ணலை அடுப்பின் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. சாதாரண Electric Ovenகளில் வெப்பத்தை உண்டாக்க heaterகள் இருக்கும்.Microwave Oven களில் அப்படிப்பட்ட அமிப்பு இல்லாததால் இங்கே வெப்பகடத்தலை நுண்ணலைகள் தான செய்கின்றன.

மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் Microwave Oven இனுள் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் சாதாரணமாக, செக்கனுக்கு 45 கோடி அதிர்வுகள் என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

இந்த நுண்ணலைகள், சூடாக்குவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தத்தின் மூலக்கூறுகளை அசைத்து - அவற்றை அதிர்வுறச் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடு பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாகச் சூடேறிவிடுகிறது.


podiyan.com micro மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக்கொண்ட பொருட்களை மட்டுமே Microwave Ovenமூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோ - வேவினால் அசைக்க இயலாது.

எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில்வைத்துச் சமைத்தால் பாத்திரம் சூடேறாது - ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டுவிடும். இதனால் பாத்திரத்தைச் சூடாக்கச் செலவழிக்கப்படவேண்டிய சக்தி மீதமாகிறது. உலோகப் பாத்திரங்களை Microwave Oven இனுள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகம் -- மின்காந்த அலைகளை, அதாவது மைக்ரோவேவை தன்னுள் ஊடுருவ அனுமதிக்காது.

இதெல்லாம் சரி, தண்ணீரை Microwave Oven இல் சூடேற்றினால் அப்படி என்ன தகாத விளைவு நேரும்?

சாதாரண அடுப்பில் தண்ணீரைச் சூடக்கினால், பாத்திரத்தின் அடியில் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாத்திரத்தின் உள்ளே வாயுக் குமிழிகள் உருவாகி, அவை மெல்ல மேலெழுந்து - மேற்பரப்பை அடைந்தவுடன் வெடித்து நீராவியையும் வெளியேற்றும். இந்தச் செயற்பாடு, தண்ணீர் அதிகமாக வெப்பமாவதைத் தடுத்து, தண்ணீரின் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவிலேயே தொடர்ந்து பேண உதவுகிறது.

இவ்வாறான நிகழ்வு Microwave Oven இல் ஏற்படுவதில்லை. Microwave Oven இனுள் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டு தண்ணீர் சூடாகும். ஆனால், வெப்பத்தின் சீர்ப் பரம்பலால் வாயுக் குமிழிகள் ஏற்படுவதில்லை. நீராவி வெளியேறாததால் தண்ணீரின் சூடு அதன் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவையும் கடக்கிறது. இந்த நிலை, Super Heat நிலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தூசி போன்ற சிறு பொருள் தண்ணீரில் புகுமானால் அது வாயுக் குமிழிகள் உண்டாகும் வாய்ப்பைத்தோற்றுவித்துவிடும். ஏற்கனவே மைக்ரோ அலைகளின் தூண்டலால் உராய்வுநிலையில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகள் - வாயுக் குமிழிகளை உயர் அழுத்தத்துடன் வெளியேற்ற - அவை வெடித்துச்சிதறி அடர்த்தியான நீராவியை உருவாக்கும். இந்த நிலையில் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

எனவேதான், Microwave Oven களில் தண்ணீரைச் சூடாக்காதீர்கள்

மைக்ரோ ஓவன் பயன் படுத்தும் போது வெளிப்படுத்தப்படும் நுண்ணலைகள் கேன்சரை உருவாக்க வல்லது .தண்ணீரை மட்டுமல்ல எந்தப்பதார்த்தத்தையுமே மைக்ரோ ஓவனின் சூடாக்குவதை தவிர்ப்பது நல்லது. முக்கியமாக குழந்தைகளுக்கான பால் போன்ற உணவுகளை கட்டாயமாக ஓவனில் சூடாக்கக்கூடாது.

அலுமினியம் , சில்வர் பாத்திரங்களை கட்டாயமாக பாவிக்கக் கூடாது. அதற்கென தயாரிக்கப்பட்ட ஒருவகை பாத்திரத்தில் தான் சூடாக்கலாம்.

இயன்ற வரை Microwave Oven களில் எதையுமே சூடாக்காதீர்கள்

முரளிராஜா
12-01-2011, 10:05 AM
இன்டக்சன் ஸ்டவ் இப்பொழுது அதிகமாக விற்பனையாகி கொண்டிருக்கிறது அதுவும்
இந்த மைக்ரோஓவன் வகையை சார்ந்ததுதானா?

பாலகன்
12-01-2011, 01:42 PM
அடடா இது தெரியாமல் நான் துபாயில் இருக்கும்போது டீயெல்லாம் சுடவைக்க மைக்ரோ ஓவன் பயன்படுத்தியிருக்கேனே! :confused:

தகவலுக்கு நன்றி ஹீகா

சிவா.ஜி
12-01-2011, 02:11 PM
இந்த செய்தியில் 10 சதவீதம் மட்டுமே உண்மை. அதாவது மைக்ரோவேவ் ஓவன் எப்படி செயல்படுகிறது என்ற பகுதி மட்டுமே உண்மை. மற்றபடி உள்ளதெல்லாம் நமக்கு வழக்கமாய் வரும் பொய்யான மின்னஞ்சல்கலைப் போன்றது.

தாரளமாய் உணவை சூடாக்கலாம். தண்ணீரையும் சூடாக்கலாம். யாரும் பயப்படத் தேவையில்லை.

Hega
12-01-2011, 02:22 PM
இந்த செய்தியில் 10 சதவீதம் மட்டுமே உண்மை. அதாவது மைக்ரோவேவ் ஓவன் எப்படி செயல்படுகிறது என்ற பகுதி மட்டுமே உண்மை. மற்றபடி உள்ளதெல்லாம் நமக்கு வழக்கமாய் வரும் பொய்யான மின்னஞ்சல்கலைப் போன்றது.

தாரளமாய் உணவை சூடாக்கலாம். தண்ணீரையும் சூடாக்கலாம். யாரும் பயப்படத் தேவையில்லை.


சிவா அண்ணா தப்பான புரிதல்.

மிக்ரோவல் மட்டுமல்ல ஐஸில் உ்றைய வைத்து நாம் பாவிக்கும் உணவு வகைகளும் கேன்சரை உருவாக்க வல்லது என்பது ஆராய்ச்சி முடிவு.

அவித்த முட்டையை க்கூட மிக்ரோவலில் சூடக்க கூடாதது

நான் நிச்சயமாக் இதற்கான அறிவியல் விளக்கத்தை பகிர்வேன்.

ஓவியன்
12-01-2011, 02:23 PM
தண்ணீரை நல்லபடியாக சூடாக்கணும்னா இந்த (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7281) திரியைப் படியுங்கள் மக்கா.. !! :D:D:lachen001:

Hega
12-01-2011, 02:27 PM
அறிவியல் கண்டு பிடிப்புக்கள் நம வேலையை எளிதாக்கி உடல் உபாதையை அதிகரிக்க செய்கிறது என்பதே உண்மை.

சிவா.ஜி
12-01-2011, 02:52 PM
முட்டையை அவிக்கக்கூடாது என்பது உண்மை. ஆனால் தண்ணீரையும், மற்ற உணவு வகைகளையும் சூடாக்கக்கூடாது என்பது தவறான கருத்து.

இயற்கையான முறையில் சூடாக்குவதை விட நல்லதல்ல என்றாலும், கெடுதலுமில்லை. இப்படி சில கருத்துக்களைப் பரப்புபவர்கள் இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டார்கள். உண்மையைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் எழுதி வெளியிட்டு குழப்பிவிடுகிறார்கள். அதைத்தாம்மா ஹேகா நீங்களும் நம்பிட்டீங்க.

சில வருடங்களுக்கு முன் தக்காளி சாப்பிட்டால் கேன்சர் வருமென்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வந்தது. அதைப்போலத்தான் இது.

கண்ணன்
12-01-2011, 03:23 PM
சிவா,

மைக்ரோவேவ் பயன்படுத்தப்படும்போது ரேடியேஷன் உருவாக்குகிறது என்பது உண்மை. மிக குறைந்த அளவுதான் என்றாலும் கூட, ரேடியேஷன் உள்ளது (நான்-ஐயொனைஸிங்) . மைக்ரோவேவ் அதிகமாக பயன்படுத்துவதன் மூலம், புற்று நோய் உருவாகிறதா என்பதற்கான ஆதாரம் திட்டவட்டமாக இப்போது இல்லை என்ற போதிலும், அதை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்பது என் கருத்து.

- கண்ணன்

பி.கு: மைக்ரோவேவில் சமைத்த உணவு, அவ்வளவு சுவையாக இல்லை என்பதும் என் கருத்து. நேரம் Vs சுவை..என்னுடைய ஓட்டு சுவைக்கே. :)

Hega
12-01-2011, 04:34 PM
நன்றி கண்ணன் அவர்களே..

மிக்ரோவலால் ஏற்படகூடிய அபாயங்களை நான் இருவிதமான மேலே பதிந்துள்ளேன்.

1. மிக்ரோவலில் தண்ணீரை சூடாக்குவதால் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

இதற்கான ஆதரங்கள் செயல் முறை விளக்கங்களை நான் அசைபடமாக இங்கே விளக்குகிறேன்.


2. மிக்ரோவரில் இருந்து வெளிவரும் நுண்ணலைகளால் தொடரகூடிய அபாயங்களில் ஒன்றாக கேனசரும் உள்ளது. உலகத்தின் அதிகள்வு பெண்கள் புற்று நோயால் பாதிக்கப்ட்டு வரும் நாடுகளில் சுவி்ஸ்லாந்தும் ஒன்று. இங்கே மிக்ரோவல் உணவு, பதப்பட்டுத்தப்ட்ட உணவு,குளிரூட்டபட்ட உணவு , செயற்கைஇரசாயனம் உரமிடப்பட்ட உணவு என எல்லாமே புற்று நோயை அதிகரிக்க செய்யும் காரணிகளாக இருப்பதாக விழிப்புணவு ஏற்படுத்தப்ட்டு வருவதால். இபோது இங்கே பியோ எனப்படும் இயற்கை உரமிட்ட உணவுகளை சறறு விலை அதிகமானாலும் வாங்குவோர் வீதமும் உடனடி சமையல் முறையும் அதிகமாகிவருகிறது.

ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கபடவில்லையென சொல்லி எதையும் விலக்கிட முடியாத படி அறிவியல் சாதங்களின் வளர்ச்சி மனித ஆரோக்க்கியத்துக்க்கும், உயிருக்க்குமெமனாவது மறுக்க முடியாத உண்மை.


தொடர்வேன்....

அன்புரசிகன்
12-01-2011, 09:18 PM
நன்றி கண்ணன் அவர்களே..

மிக்ரோவலால் ஏற்படகூடிய அபாயங்களை நான் இருவிதமான மேலே பதிந்துள்ளேன்.

1. மிக்ரோவலில் தண்ணீரை சூடாக்குவதால் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

இதற்கான ஆதரங்கள் செயல் முறை விளக்கங்களை நான் அசைபடமாக இங்கே விளக்குகிறேன்.


2. மிக்ரோவரில் இருந்து வெளிவரும் நுண்ணலைகளால் தொடரகூடிய அபாயங்களில் ஒன்றாக கேனசரும் உள்ளது. உலகத்தின் அதிகள்வு பெண்கள் புற்று நோயால் பாதிக்கப்ட்டு வரும் நாடுகளில் சுவி்ஸ்லாந்தும் ஒன்று. இங்கே மிக்ரோவல் உணவு, பதப்பட்டுத்தப்ட்ட உணவு,குளிரூட்டபட்ட உணவு , செயற்கைஇரசாயனம் உரமிடப்பட்ட உணவு என எல்லாமே புற்று நோயை அதிகரிக்க செய்யும் காரணிகளாக இருப்பதாக விழிப்புணவு ஏற்படுத்தப்ட்டு வருவதால். இபோது இங்கே பியோ எனப்படும் இயற்கை உரமிட்ட உணவுகளை சறறு விலை அதிகமானாலும் வாங்குவோர் வீதமும் உடனடி சமையல் முறையும் அதிகமாகிவருகிறது.

ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கபடவில்லையென சொல்லி எதையும் விலக்கிட முடியாத படி அறிவியல் சாதங்களின் வளர்ச்சி மனித ஆரோக்க்கியத்துக்க்கும், உயிருக்க்குமெமனாவது மறுக்க முடியாத உண்மை.


தொடர்வேன்....
இந்த இரண்டு காரணங்களும் போதுமே. மைக்ரோ வேவ் தயாரிப்பு நிறுவனங்களை மூடவைக்க. ஏன் அதை இன்னமும் செய்யாது இருக்கிறார்கள்?