PDA

View Full Version : இறுதிக்கணங்கள்



அகத்தியன்
11-01-2011, 04:15 AM
இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட,
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்

CEN Mark
14-01-2011, 04:26 PM
இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட,
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்


இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
என் மரணம் பற்றிய கனவும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட........!!!
[/QUOTE]

ஓவியன்
23-01-2011, 02:06 PM
இந்த கவிதையைப் வாசித்ததும், கச்சேரி ஆரம்பம் படத்தில் வரும் ’அழகோ அழகு’ என்ற பாடலின் சில வரிகள் நினைவுக்கு வந்தன, இதோ அந்த வரிகள்....


கடைசி பக்க நாவல் அழகு,
கடைசி நிமிட தூக்கம் அழகு,
கடைசி கால நினைவுகள் அழகு,
கடைசி வரை கவிதை அழகு,

கடைசி கோடு வரையும் போது, ஓவியம் அழகு..!!

அழகான நினைவுகளை தூண்டிய கவிதைக்கு மனதார்ந்த வாழ்த்துகள் அகத்தியன்..!! :icon_b: