PDA

View Full Version : பொங்கல் கவிதை-கட்சிகள் பொங்கினால்...



வல்லம் தமிழ்
10-01-2011, 02:39 PM
கட்சிகள் பொங்கினால்...
தொண்டர்கள் பொங்கிட வாழ்த்துகள் வழங்கிடும் கட்சிகள் பொங்கினால் எப்படி இருக்கும்..?ச்சும்மா ஒரு ஜாலி கற்பனை ...

அடுக்கு மொழி அடுப்பில்
ஒரு ரூபாய் அரிசியுடன்
வார்த்தைஜால வெல்லம் கலந்து
இலவச நெய் ஊற்றி
`கை`பார்த்து இறக்கினால்
தி மு க பொங்கல்

கணக்கு கேட்டு கனன்ற அடுப்பில்
எம் ஜி ஆர் பானை ஏற்றி
அம்மா களைந்த அரிசியுடன்
அதிரடி வெல்லம் கொட்டி
கொஞ்சம்
ஆன்மிக ஜோதிட நெய் கலந்தால்
ஆச்சு ...அ தி மு க பொங்கல்

கதிர் அறுவாள் கொண்டறுத்த
வெண்மணி அரிசியுடன்
கைசுத்தி வென்றெடுத்த
வியர்வையை வெல்லமாக்கி
நெய்யற்று நீரற்று வறண்ட
போராட்ட அடுப்பில் எழும்
சிவந்த தழல் மேலே
பொங்கி பொங்கி எழுந்தால் அது
காம்ரேட்களின் கம்யூனிஸ்ட் பொங்கல்

நேரு குடும்ப அடுப்பில்
காந்தி பெயரிட்ட பானையில்
மதசார்பற்ற நெல் குத்தியெடுத்த
மைனாரிட்டி அரிசியுடன்
கூட்டணி வெல்லம் கொட்டி
கோஷ்டி மார்க் நெய் ஊற்ற
எமர்ஜென்சி மறந்து பொங்கும்
காங்கிரஸ் பொங்கல்

அகிம்சை அரிசியுடன்
சத்திய சர்க்கரை கலந்து
எளிமை நெய் ஊற்றி
இறக்கினால்
பாவ்ம் யாரும் சாப்பிட விரும்பாத
காந்தி பொங்கல்

ஜானகி
10-01-2011, 03:13 PM
கலாட்டாவான கதம்பப் பொங்கல் வெகு ஜோர் !

தித்திக்கும், திகட்டாத காந்திப் பொங்கலுக்கு நன்றி !

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக !

சிவா.ஜி
10-01-2011, 05:18 PM
அழகான கற்பனை. நிகழ்காலத்தை நன்றாக மனதில் வாங்கி எழுதிய வரிகள். வாழ்த்துக்கள் வல்லம் தமிழ்.

கீதம்
11-01-2011, 03:55 AM
தமிழ்மன்றப் பானையில்
வல்லம் தமிழின் கவிக்குத்தலரிசியிட்டு
வெல்லத்தமிழில் மெய்யெனும் நெய்யூற்ற
பொங்கியதே புன்னகைப்பொங்கல்!

பாராட்டுகள் வல்லம் தமிழ் அவர்களே.

ஜனகன்
12-01-2011, 06:36 PM
பரவாயில்லை,நிறைய வெரைட்டி பொங்கல் தான்,நல்ல சிந்தனை.பாரட்டுக்கள் வெல்லம் தமிழ் .