PDA

View Full Version : ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

Kalai_21
10-01-2011, 12:05 PM
ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

*****************************************************
கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

*********************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

*********************************************************

கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

*******************************************************

கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

*********************************************************

கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை
என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன
செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

***********************************************************

கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

******************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

*******************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!

குறிப்பு : இது கற்பனையே! உண்மை அல்ல.

=========================================================

Courtesy: http://www.tamilthottam.in/t3322-topic

=========================================================

கௌதமன்
10-01-2011, 01:34 PM
சாதமும் சமைத்து, மோரும் ஊற்றி, ஆம்லெட்டும் போட்டு நன்றாக சாப்பிட்டு விட்டு கற்பனை என்று சொன்னால் எப்படி கலை!:lachen001: [இப்பவே பழகிக்குங்க ஒன்னும் தப்பில்ல]

Hega
10-01-2011, 07:42 PM
ஆராய்ச்சி அருமைங்க.

வேறென்ன சொல்ல..:lachen001:

அன்புரசிகன்
10-01-2011, 09:49 PM
இப்போதைக்கு செல்வா மட்டும் தான் அதிஷ்டசாலி. மிச்சம் எல்லாரும் என்ன பாடுபடுவாங்க என்று நினைத்தால் .................. சிப்பு வருது சிப்பு....

அன்புரசிகன்
10-01-2011, 09:54 PM
*****************************************************
செல்வா: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

*********************************************************

மனோஜ்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

மனோஜ்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

*********************************************************

பென்ஸ் அண்ணா: என்னம்மா….சாப்பிடலாமா?
மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

*******************************************************

ஓவியன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

*********************************************************
பிரதீப் கே.ரி:): என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை
என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன
செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

***********************************************************

பொருத்தமானவர் தெரியல....
கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

******************************************************

பாரதி அண்ணா (??), ஆரன் அண்ணா
: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

*******************************************************

மணியா அண்ணா
: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!

குறிப்பு : இது யாரையும் புண்படுத்த அல்ல. :icon_rollout::D:lachen001:

கீதம்
10-01-2011, 10:10 PM
ஆகா, ஆம்லெட் ஆராய்ச்சி அருமை.

அதுசரி, இருபது வருஷமாயும் இன்னமும் சின்னவெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுத்தரும் என்னைப் போன்றவர்களை எந்தப் பட்டியலில் சேர்க்கிறதாம்?

கண்ணீருடன் (அட, வெங்காயம் உரித்ததால் வந்ததுங்க):traurig001:
கீதம்.

அன்புரசிகன்
10-01-2011, 10:31 PM

பொழைக்கத்தெரியாதவங்க பட்டியலில்...:D

கீதம்
10-01-2011, 10:45 PM
பொழைக்கத்தெரியாதவங்க பட்டியலில்...:D

ரொம்பச் சரியா சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு வரப்போற மனுஷி நல்லா பொழைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்னு வாழ்த்துறேங்க.:)

அன்புரசிகன்
10-01-2011, 10:54 PM
ரொம்பச் சரியா சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு வரப்போற மனுஷி நல்லா பொழைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்னு வாழ்த்துறேங்க.:)
:eek::eek::eek:இது வயித்தெரிச்சலின் வெளிப்பாடு:lachen001:. இதை வன்மையாக கண்டிக்கிறேன். :D

பிரேம்
11-01-2011, 12:35 AM
தம்பதியர் சைவமா இருந்தா..எப்டி இருக்கும்..அத சொல்லவே இல்லையே..:confused:

மதி
11-01-2011, 12:41 AM
ஆம்லெட் போடுறதுல இத்தன விஷயம் இருக்கா...?? ரசிகரே...! அது சரி.. ஆம்லெட் சாப்பிடறத வச்சு கல்யாணம் ஆகுமா ஆகாதான்னு கண்டுபிடிக்க ஏதாச்சும் வழி இருக்கா என்ன??:D:D:D:D

பிரேம்
11-01-2011, 12:46 AM
ஆம்ப்லேட் போட ஒரு மெஷின் கண்டு பிடிக்கணும்..

தினமும் ஆம்ப்லேட் போட்டு தரும் கணவன் மார்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கணும்...

ஆம்ப்லேட் போட்டுத்தரும் ஆடவர் சங்கம்னு ஒரு சங்கம் திறக்கனும்..தலைவர நீங்களே தேர்ந்தேடுத்து கொள்ளலாம்..:sprachlos020:

எப்டி என்னோட ஐடியா..:icon_b:

மதி
11-01-2011, 01:15 AM
ஐடியா குடுத்த நீங்களே தலைவரா இருந்துடுங்களேன்...!!!:eek::eek::eek:

அன்புரசிகன்
11-01-2011, 01:48 AM
ஆம்லெட் போடுறதுல இத்தன விஷயம் இருக்கா...?? ரசிகரே...! அது சரி.. ஆம்லெட் சாப்பிடறத வச்சு கல்யாணம் ஆகுமா ஆகாதான்னு கண்டுபிடிக்க ஏதாச்சும் வழி இருக்கா என்ன??:D:D:D:D
உங்க ரேஞ்சுக்கு ஆம்லட் எல்லாம் சாப்பிடலாமா??? தயிர் சாதம் சாப்பிடுறதா இருந்தாலும் தாஜ் ல சாப்பிடனும்... :D

மதி
11-01-2011, 02:44 AM
உங்க ரேஞ்சுக்கு ஆம்லட் எல்லாம் சாப்பிடலாமா??? தயிர் சாதம் சாப்பிடுறதா இருந்தாலும் தாஜ் ல சாப்பிடனும்... :D
தாஜ் - சமாதி... சுடுகாடு.. சாமியார்... இந்த வரிசையில நீங்க சொல்லலியே???:icon_b:

பிரேம்
11-01-2011, 03:40 AM
ஐடியா குடுத்த நீங்களே தலைவரா இருந்துடுங்களேன்...!!!:eek::eek::eek:

அதுக்கு கல்யாணம்னு ஒன்னு பண்ணனுமாம்...அதுக்கு எனக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்கு..அதனால நீங்களே தலைவரா இருந்துடுங்க..:cool:

அன்புரசிகன்
11-01-2011, 03:46 AM
அதுக்கு கல்யாணம்னு ஒன்னு பண்ணனுமாம்...அதுக்கு எனக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்கு..அதனால நீங்களே தலைவரா இருந்துடுங்க..:cool:

மதி சாரோட வயித்தெரிச்சல கொட்டிக்கப்போறீங்க... மதி சாபம் போட்டா நீங்கள் இன்னும் நிறைய வருசம் x 4 வருடங்கள் ஆகிடும். கவனம்.

பிரேம்
11-01-2011, 10:15 AM
மதி சாரோட வயித்தெரிச்சல கொட்டிக்கப்போறீங்க... மதி சாபம் போட்டா நீங்கள் இன்னும் நிறைய வருசம் x 4 வருடங்கள் ஆகிடும். கவனம்.

அய்யய்யோ..அப்படியா.. அது வரைக்கும் நமக்கு தாங்காது சாமி...மதி சார்.:).சாரி சார்..
சீக்கிரமா கல்யாணம் பண்ணுங்க..38 வயசு ஆச்சுல்ல..!!:aetsch013:

றெனிநிமல்
11-01-2011, 10:40 AM
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயமாகி
வெங்காயமே இல்லாமல் போய்
புல்பாஜிலாகி முட்டை கலக்காமல் போய்
பிரிஜில் ஏறிக் குந்தி
கடைசியில் கரண்டி பிடிக்கும் படியாகி விட்டதே!

இதிலிருந்து என்ன தெரிகின்றது!

இப்போதே சமையலை தெரிந்து கொள்லுங்கள்.

மதி
11-01-2011, 10:54 AM
அய்யய்யோ..அப்படியா.. அது வரைக்கும் நமக்கு தாங்காது சாமி...மதி சார்.:).சாரி சார்..
சீக்கிரமா கல்யாணம் பண்ணுங்க..38 வயசு ஆச்சுல்ல..!!:aetsch013:
பத்து வயச குறைச்சுட்டீங்க.. ?:icon_rollout::icon_rollout:

அக்னி
11-01-2011, 11:48 AM
முட்டை சாப்பிடாதவங்களுக்கு முட்டைக்கோஸ்ல ஆராய்ச்சி செய்வாங்களோ... :confused:

ரசிகரே..,
உங்களப்போல ஒரு ஆராய்ச்சியாளன்கூட இருக்கிறதில பெருமைப்படுறன்...

பிரேம்
12-01-2011, 02:12 AM
பத்து வயச குறைச்சுட்டீங்க.. ?:icon_rollout::icon_rollout:

அப்படீன்னா..வேணாம் விட்டுடுங்க..இதுக்கு மேல கல்யாணம் பண்ணி....என்னத்த செஞ்சி..என்னத்த பண்ணி..முக்கியமான நேரத்துல மூச்சு அடிச்சுக்க போகுது..:D

உமாமீனா
12-01-2011, 02:18 AM
அடேங்கப்பா இவ்வளவு விசியம் இருக்கா - உங்களின் ஆராய்சி வியக்க வைக்குது - கற்பனை என்றாலும் சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது- பகிர்ந்தமைக்கு நன்றி

அன்புரசிகன்
12-01-2011, 02:50 AM
ரசிகரே..,
உங்களப்போல ஒரு ஆராய்ச்சியாளன்கூட இருக்கிறதில பெருமைப்படுறன்...

எல்லாப்புகழும் இறைவனுக்கே...:lachen001:

ssujai83
17-01-2011, 07:32 AM
nice.......

சூறாவளி
17-01-2011, 04:49 PM
ஆம்ப்லேட்ல இவ்லோ சங்கதி இருக்கா... ஹா ஹா.. நல்ல கற்பனை..:lachen001:

அன்புரசிகன்
17-01-2011, 09:39 PM
ஆம்ப்லேட்ல இவ்லோ சங்கதி இருக்கா... ஹா ஹா.. நல்ல கற்பனை..:lachen001:
கற்பனையா......................... :D

mselva1234
25-01-2011, 05:11 AM
super

எந்திரன்
28-01-2011, 04:13 AM
ஆம்லெட் ஆராய்ச்சியில டாக்டர் பட்டமே வாங்கிடுவீங்க போல இருக்கே

dhilipramki
28-01-2011, 04:24 AM
மொரும் முட்டையும் எப்படி இருந்தது நண்பரே :lachen001:

சூரியன்
28-01-2011, 11:30 AM
நல்ல ஆராய்ச்சிதான்.
அன்பு அண்ணாவின் குசும்பு கொஞ்சம் ஓவர்தான்.:)

p.suresh
29-01-2011, 12:05 AM
இந்த ஆம்லெட் ஆராய்ச்சிப்பற்றி படிக்கும்போது முன்பொருநாள் என் நண்பர் சொன்னது நகைச்சுவையாய் பட்டது.திருமணமானபுதிதில் தான் இரவில் நேரத்தோடு வீடு திரும்ப காரணம் தன் மனைவி தனக்காக சாப்பிடாமல் காத்திருப்பதால் என்பார்.

இன்றளவும் அதையே செய்கிறார் ஆனால் இப்போதையக்காரணம் ''கொஞ்சம் லேட் ஆனாலும் சோத்துல தண்ணீய ஊத்திடறாப்பா'' என்பதுதான்

svenkat
29-01-2011, 05:59 AM
ஆம்லெட் போடுவதில் இத்தனை விஷயம் இருக்கா!!!
( நாம சைவமுங்கோ)

CEN Mark
29-01-2011, 06:35 AM
ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

*****************************************************

குறிப்பு : இது கற்பனையே! உண்மை அல்ல.

=========================================================

Courtesy: http://www.tamilthottam.in/t3322-topic

=========================================================
நல்லா இருந்தது நீங்க போட்ட முட்டை அடை. நல்லவேளை கோழி குருமா பிடிக்குமென்று கணவர் சொல்ல வில்லை. பத்தாவது வருஷம் வெளியில் திரியும் கோழியை பிடிக்க அவர் புறபட்டிருப்பார்.