PDA

View Full Version : நன்றி..



அமரன்
09-01-2011, 09:54 PM
தோழர்களே..

சமீப காலமாக மன்றத்தில் எந்திரர்கள் படை எடுப்பும், அவர்களின் அதி பயங்கர ஆயுதப் பயன்பாடும் அதிகமாக உள்ளது. அவற்றை எல்லாம் உடனுக்குடன் முறியடிக்க முடிந்துள்ளது.

மன்றத்தோழர்கள் பலர் செய்த உடனடிக் கவன ஈர்ப்பினாலேயே இது சாத்தியமானது.

அனைவருக்கும் உளப்பூர்வ நன்றி.

நிர்வாக உறுப்பினர்கள் பலர் உத்தியோகப் பூர்வ, உத்தியோகப்பற்றற்ற விடுப்பில் உள்ளதால் நிர்வாகப் பணிகளில் குறைந்தளவு வளமே பயன்பாட்டில் உள்ளது.

தோழர்கள் அனைவரும் தொப்டர்ந்தும் கவன ஈர்ப்புச் செய்து நிர்வாகத்தினர் சேவையை இலகுவாக்க எம் அன்பு அழைப்பு.

தவிர பண்டிகைக்காலம், புது அலுவலகம், தனிப்பட்ட வேலை எனப் பல மூத்த உறுப்பினர்கள் மன்றத்துக்கு வந்து போகிறார்கள். அதனால் ஏற்படும் தொய்வை புதியவர்கள் நீக்கிக் கொண்டிருப்பது மகிழ்வைத் தருகிறது.

பழையவர்களும் புதியவர்களும் கலந்து கலக்கும் காலம் வெகு விரைவில் கனியும் எனக் கூறும் போதே இன்பக் கடல் ’’பொங்கி’’ வழிகிறது.


நன்றி.
நிர்வாக்குழு.

முரளிராஜா
10-01-2011, 04:24 AM
இது போன்ற சமயங்களில் நிர்வாகத்திர்க்கு எவ்வாறு தகவலை உடனடியாக தெரிவிப்பது என்பதை விளக்கமாக விவரித்தால் பல புதிய உறுப்பினர்களுக்கு உதவியாக இருக்கும்.
நன்றி அமரன் அவர்களே.

பாலகன்
10-01-2011, 04:25 AM
நிர்வாகத்துக்கு தோள்கொடுப்பது நமது கடமையல்லவா? இதுக்கு எதுக்கு நன்றி. சரி இருந்தாலும் பரவாயில்லை.

பாலகன்
10-01-2011, 04:32 AM
இது போன்ற சமயங்களில் நிர்வாகத்திர்க்கு எவ்வாறு தகவலை உடனடியாக தெரிவிப்பது என்பதை விளக்கமாக விவரித்தால் பல புதிய உறுப்பினர்களுக்கு உதவியாக இருக்கும்.
நன்றி அமரன் அவர்களே.

பதிப்பின் வலது பக்க மூலையில் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/report.gif இப்படி ஒரு பட்டன் இருக்கும் பாருங்க. அதை அழுத்தினால் ஒரு எடிட் ஜன்னல் வரும். அங்கே தட்டச்சலாம்

கலைவேந்தன்
06-02-2011, 05:53 AM
என்ன பிரச்சினை என்று அறிய முடியவில்லை. இருப்பினும் நிர்வாகிகளின் திறமை மேல் எனக்கு மிக்க நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துகள் நண்பர்களே..!

அமரன்
06-02-2011, 08:52 AM
எந்தப்பிரச்சினையும் இல்லை கலை. மன்றத்தில் பதிவு செய்யும் முறையில் கொஞ்சம் தளர்த்தி இருந்தோம். அதனால் ஸ்பாம் அட்டகாசம் அதிகமாயிட்டு. அந்த நேரத்தில் நண்பர்கள் ஈடுபாட்டுடன் உதவினார்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
07-02-2011, 06:26 AM
இந்த பிரச்சனை இனிமேல் நம் மன்றத்திற்கு வராதிருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும் நண்பரே?

அமரன்
07-02-2011, 05:30 PM
இனிமேல் இந்தப் பிரச்சினை இராது என்றே எண்ணுகிறேன். புதிதாக ஒருவர் மன்றத்தில் தன்னைப் பதிவு செய்த பின் நிர்வாகிகள் அவரது பதிவை அங்கீகரித்த பிறகே மன்றத்துக்குள் நுழையும் பழைய முறைக்குத் திரும்பியுள்ளோம்.

உமாமீனா
15-02-2011, 12:02 PM
முடிவுக்கு வந்திடியலா ஸ்ஸ்.....ஸ்ஸ்... அப்ப்பாடா...:smilie_bett: