PDA

View Full Version : வடசொல் - தமிழ்சொல்கௌதமன்
09-01-2011, 03:48 PM
வடசொல் - தமிழ்ச்சொல்
அபூர்வம் - அருமை
அவகாசம் - ஓய்வு
அவசரம் - விரைவு
அவசியம் - தேவை
அவயவம் - உறுப்பு
ஆகாயம் - வானம்
ஆபத்து - துன்பம்
ஆன்மா - உயிர்
இராகம் - பண்
இரத்தம் - குருதி
இலக்கம் - எண்
உபத்திரவம் - வேதனை
ஐக்கியம் - ஒற்றுமை
கஷ்டம் - தொல்லை
கல்யாணம் - திருமணம்
கிரயம் - விலை
குதூகலம் - எக்களிப்பு
கோஷ்டி - குழாம்
சக்தி - ஆற்றல்
சகஜம் - வழக்கம்
சக்கரவர்த்தி - பேரரசன்
சந்தேகம் - ஐயம்
சபதம் - சூள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சமீபம் - அண்மை
சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்ததி - வழித்தோன்றல்
சிகிச்சை - மருத்துவமுறை
சந்தர்ப்பம் - வாய்ப்பு
சம்பிரதாயம் - தொன்மரபு
சாபம் - கெடுமொழி
சாதாரண - எளிதான
சாட்சி - சான்று
சிங்காசனம் - அரியணை
சிநேகம் - நட்பு
சீதோஷ்ணம் - தட்பவெப்பம்
சுதந்திரம் - விடுதலை
சுயராஜ்யம் - தன்னாட்சி
சுபாவம் - இயல்பு
சேவை - தொண்டு
சேஷ்டை - குறும்பு
சௌகரியம் - வசதி
தற்காலிக வேலை - நிலையிலா வேலை
தாகம் - வேட்கை
தேதி - நாள்
திருப்தி - உள நிறைவு
நஷ்டம் - இழப்பு
நிபுணர் - வல்லுநர்
நியாயஸ்தலம் - வழக்கு மன்றம்
நீதி - நன்னெறி
பகிரங்கம் - வெளிப்படை
பரிகாசம் - நகையாடல்
பத்தினி - கற்பணங்கு
பத்திரிக்கை - இதழ்
பரீட்சை - தேர்வு
பந்துக்கள் - உறவினர்கள்
பாரம் - சுமை
பாஷை - மொழி
பிரசாரம் - பரப்புவேலை, பரப்புரை
பூர்வம் - முந்திய
மரணம் - சாவு, இறப்பு
மாமிசம் - இறைச்சி
மிருகம் - விலங்கு
முகூர்த்தம் - நல்வேளை
மோசம் - கேடு
யந்திரம் - பொறி
யாகம் - வேள்வி
யுத்தம் - போர்
ரகசியம் - மறைபொருள், குட்டு, பூடகம்
ருசி - சுவை
லாபம் - மிகை ஊதியம்
வருஷம் - ஆண்டு
வாகனம் - ஊர்தி
வாதம் - சொற்போர், சொல்லாடல்
வாந்தி பேதி - கக்கல் கழிச்சல்
வாலிபர் - இளைஞர்
விஷயம் - பொருள், செய்தி
விபத்து - துன்ப நிகழ்ச்சி
விவாகம் - திருமணம்
வீரம் - மறம்
வேகம் - விரைவு
ஜனங்கள் - மக்கள்
ஜயம் - வெற்றி
ஜாக்கிரதையாக - விழிப்பாக
ஜென்மம் - பிறவி
ஸ்தாபனம் - நிலையம், அமைப்பு

இந்த தமிழ்ச்சொற்களை முழுதாக பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்த முடியாவிட்டலும், சிறிது முயற்சி செய்தாலும் நல்லது தானே!

நன்றி: www.sankamam.com

கௌதமன்
09-01-2011, 03:51 PM
உக்கிரம் - கடுமை
உச்சரிப்பு - ஒலிப்பு
உத்தரம் - வடக்கு
உத்தரவாதம் - உறுதி,பொறுப்புறுதி
உத்தரவு - ஆணை
உத்தேசம் - குத்துமதிப்பு
உத்தியோகம் - அலுவல்
உத்தியோகபூர்வ் - அரசமுறை
உதயம் - எழுதல், காலை
உதாசீனம் - புறக்கணிப்பு
உதாரணம் - எடுத்துக்காட்டு
உதிரம் - குருதி
உபகரணம் - துணைக்கருவி
உபகாரம் - உதவி
உபத்ரவம் - ஊறு,தொந்தரவு
உபதேசம் - அறிவுரை
உபரி - மிகை
உபயோகம் - பயன்
உபாயம் - வழி
உற்சவம் - விழா
உற்சாகம் - விறுவிறுப்பு,ஊக்கம்
உல்லாசம் - உவகை
உஷார் - விழிப்பு
ஊர்ஜிதம் - உறுதி
ஊனம் - (உறுப்புக்)குறைபாடு
எச(ஜ)மான் - முதலாளி
எதார்த்தம் - உண்மை,நடப்பியம்
எதேச்சை - தன்விருப்பம்
ஏகமனதாய் - ஒருமனதாய்
ஏகோபித்து - ஒன்றுபட்டு
ஐக்கியம் - ஒற்றுமை

நன்றி: www.sankamam.com

பாலகன்
09-01-2011, 04:05 PM
மிகவும் நல்ல முயற்சி இது
இந்த திரியை சேமித்து வைத்துக்கொள்கிறேன்

நான் கூட இப்போதெல்லாம் பேசும்போது முடிந்தவரை ஆங்கில வடமொழி இல்லாமல் பேசப்பார்க்கிறேன். ஆனால் ரொம்ப சிரமமா இருக்குப்பா

கௌதமன்
09-01-2011, 04:25 PM
இதில் பல வார்த்தைகள் எடுத்துக்காட்டாக இரத்தம் (அரத்தம்), வருஷம் (வருடம்) போன்ற வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளேயென்றும் தமிழின்று பின் சமஸ்கிருத்துக்கு சென்று திரிந்து தமிழின்று வேறுபட்டு நிற்பது போல் தோன்றுவதாகவும் தமிழ் ஆய்வாளர்கள் வேர்ச்சொல்லாராய்ச்சி மூலம் நிறுவியுள்ளனர். கட்டுரைகளைப் படிக்கும்போது நம்பும்படியாகவே உள்ளது.

Hega
09-01-2011, 04:35 PM
நல்ல முயற்சி கௌதமன்..

பாராட்டுக்கள்...

ஜானகி
10-01-2011, 12:30 AM
ஏதேது...கலப்படமில்லாத தமிழ் பேசுவது மிகக் கடினம் போல இருக்கிறதே....?

எழுதுவதிலாவது முயற்சிக்கலாம்...

ஆதி
10-01-2011, 03:23 AM
ஆன்மா *என்பதற்கு ஆதன் என்றொரு தமிழீடுண்டு..

ஆதன் .... ஆதாம்(முதல் மனிதன்)

ஆதாம் .... ஆன்மா

வார்த்தை என்பதும் தமிழல்ல சொல் என்பதே தமிழ்..

'ச' முதலாய் வரும் சொற்கள் தமிழல்ல, தொல்காப்பியனே சொல்றான்..

ஆதலால் சங்கம் என்றொன்று இருந்ததா எனும் ஐயமும் நிலவத்தான் செய்கிறது, ஆதலால் அதனை முதற்கழகம், இடைக்கழகம், கடைக்கழகம் என்று கூறுவாரும் உளர்..

வயது .... அகவை

விருது .... பரிசு

இப்படி நிறைய இருக்கு..

சிக் .. சீக் ஆகி, தமிழான கதையெல்லாம் நம்மிடமுண்டு

அது போல*

கயறு தான் கயர் ஆனது ஆங்கிலத்தில்

மற்ற மொழிக்கலப்பென்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது, கலப்பால் நம்மொழிக்கு அழிவொன்றும் நேர்ந்துவிடப் போவதில்லை, சரியான தமிழீடுகளை அறிந்து கொள்வது நம்மொழியறிவையும், நம் மொழியின் செழுமையையும் அறிந்து கொள்ள ஏதுவாகவும், உதவியாகவும் இருக்கும்.

ஞாலம் எனும் ஒரு சொலொன்று நம் அறிவியல் அறிவை பறைசாற்றுப் போதுமானது..

ஞாலுதல் .... ஞாலம்

ஞாலுதல் ... அந்திரத்தில் தொங்குதல்..

அன்புரசிகன்
10-01-2011, 03:55 AM
பரிசு - பரிசில்
எது சரி? அல்லது என்ன வித்தியாசம்? அல்லது ஒன்றா???
தொங்குதல் - தொக்குதல்...
என்ன வித்தியாசம்? அல்லது ஒன்றா???

nambi
10-01-2011, 04:17 AM
பயனுள்ள பகிர்வு தோழர் கௌதமனுக்கு நன்றி!

ஆதி
10-01-2011, 05:35 AM
பரிசு - பரிசில்
எது சரி? அல்லது என்ன வித்தியாசம்? அல்லது ஒன்றா???
தொங்குதல் - தொக்குதல்...
என்ன வித்தியாசம்? அல்லது ஒன்றா???

பரிசு ... ஊக்கப்படுத்த தருதல்

பரிசில் ... கொடை

தொங்குதல் வேறு தொக்குதல் வேறு என்பது என் புரிதல் ரசிகன்..

தொக்கு ... துவையல்

govindh
10-01-2011, 07:20 AM
பகிர்வுக்கு நன்றி கௌதமன்..
பாராட்டுக்கள்...

அன்புரசிகன்
10-01-2011, 11:49 PM
பரிசு ... ஊக்கப்படுத்த தருதல்

பரிசில் ... கொடை

தொங்குதல் வேறு தொக்குதல் வேறு என்பது என் புரிதல் ரசிகன்..

தொக்கு ... துவையல்

விபரத்திற்கு நன்றி ஆதன்.

முன்பு ஒருமுறை சன் தொலைக்காட்சியில் தினம் ஒரு குறள் பகுதியில் சாலமன் பாப்பையா அவர்கள் திருக்குறளை விபரிக்கும் போது சில வேளை இங்கே இந்த சொல் தொக்கி நிற்கிறது என்பாரே... இங்கே தொக்கி என்ற சொல் என்ன பொருள் தருகிறது?