PDA

View Full Version : தலைகீழ் மாற்றங்கள்



RAJAKING_ALM
08-01-2011, 11:30 AM
இப்போதெல்லாம்....


இரவுகளைவிட
பகலில்தான் பயமாயிருக்கின்றது!


எதிரிகளை விட
நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள்


கடலைவிட
குளங்களே ஆழமாக உள்ளது


கோவிலை விட
உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது


ஒரிஜினலை விட
ஒப்பனைகளே மேடையேற்றப்படுகின்றன


விரல்களை விட்டுவிட்டு
நகங்களுக்கே வர்ணம் பூசுகிறோம்.


வெற்றியை கொடுத்தவனைவிட
பெற்றவனே போற்றப்படுகிறான் ஜனநாயகத்தில்......

rajesh2008
08-01-2011, 03:26 PM
நல்லாருக்கு உங்கள் புதுக்கவிதை.:D

கீதம்
09-01-2011, 10:48 PM
தலைகீழ் மாற்றங்கள் மீண்டுமொருநாள் தலைகீழாகும். எப்படி மாறினாலும் மாற்றமொன்றே மாறாதது என்பதில்தான் எந்த மாற்றமும் இல்லை. நன்றாக சிந்தித்திருக்கிறீர்கள். தொடருங்கள். பாராட்டுகள்.

M.Jagadeesan
10-01-2011, 03:32 AM
கவிதை நன்று! பாராட்டுக்கள்!

aren
10-01-2011, 03:59 AM
கவிதை நன்றாக வந்திருக்கிறது. கீதம் அவர்கள் சொல்லியதுபோல் மாற்றம் ஒன்றே மாறாதது.

இன்னும் நிறைய கவிதைகளை படைக்க என் வாழ்த்துக்கள்.

nambi
10-01-2011, 05:20 AM
கவிதை நன்று பகிர்வுக்கு நன்றி!