PDA

View Full Version : குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்..மாம்பூவும் தில்லைப்பூவும் சொல்வதென்ன..



Hega
07-01-2011, 05:12 PM
குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்கள். குறித்து படங்களோடு விளக்கங்களை இங்கே காண்போம்

இந்த பதிவிற்கான விபர்ங்களை நான் இணையத்திலிருந்தே எடுக்கிறேன்.
பூக்களோடு அதன் தாவரவியல் பெயர் மருத்துவ பலன்கள் என தொகுக்கபட இருக்கும் தொகுப்பு இது. சில பூக்களின் படம் விபரம் தேடி அதன் தாவரவியல் பெயரோடு ஆங்கில ஜேர்மன் மொழியிலும் தேடியே இத்தொகுப்பை பதிகிறேன்.

ஆதலால் இதிலிருந்தே எடுத்தேன் என்றில்லாம எல்லோருக்கும் எனது நன்றிகள்

Hega
07-01-2011, 05:13 PM
கபிலர்

கபிலர்….தமிழ்ச்சங்கப்புலவர்களில் மிக புகழ் பெற்றவர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இவரால் அதிகமான சங்கபாடல்கள் பாடப்பெற்றுள்ளது. இவர் புலனழுக்கற்ற அந்தனாளன் எனும் பாராட்டைபெற்றவர்.


இவர் பாடிய 200 க்கும் மேற்பட்ட பாடல்களில் பத்துப்பாட்டு எனும் நூலில் இடம்பெறும் குறிஞ்சிப்பாட்டும் ஒன்று.
இப்பாடலில் மூலம் இரே இடத்தில் ஒரே தடவையில் 99 வகையான தாவரத்தின் பெயர்களை பட்டியல் இட்டிருப்பதன் மூலம் கபிலர் காவியங்களின் மட்டுமல்ல தாவரவியலின் அறிஞராகவும் திகழ்ந்தவர்.

வால்மீகியும், காளி தாசனும் தங்கள் பாடலக்ளில் தாவரங்களைக்குறித்து பாடி இருந்தாலும் இப்படி 99 தாவரங்களின் பெயர்களை ஓரே பாட்டின் மூலம் கூறவில்லை.

Hega
07-01-2011, 05:15 PM
குறிஞ்சிப்பாட்டு 62 முதல் 07 வரை காணப்படும் பாடல் வரிகள்...


ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்

Hega
07-01-2011, 05:18 PM
கபிலர் பெயரால் கபிலர்மலை என்ற ஒரு பகுதி இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறது. அங்கவை, சங்கவை ஆகியோர் வாழ்ந்த பகுதியாகவும் இருக்கும் என்று சொல்கிறார்கள். வல்வில் ஒரி, பாரி, அதியமான், காரி போன்றோர் வாழ்ந்த இடங்கள் இன்றளவும் இருந்து வருகின்றது

வல்வில் ஓரி ஆண்ட பகுதி கொல்லிமலை,
பாரி ஆண்டது நாமக்கல் பகுதிகள் என்று நினைக்கிறேன்..

காரி ஆண்டது இன்று காரிமங்கலம் என்று பெயர் பெற்றிருக்கிறது.
அதியமான் நெடுமானஞ்சி ஆண்ட பகுதி தான் தர்மபுரி

ஏதோ நான் தேடிட்டு இருக்கிறப்ப கிடைச்ச சில தகவல்கள். இன்னமும் தேடிட்டே இருக்கிறேன்......கூறியவர் தமிழ் வணிகம் செல்வமுரளி

Hega
07-01-2011, 05:19 PM
கபிலர் குன்று


அங்கவை,சங்கவை என்னும் அவலப்பெண்களே அவர்கள்!தமிழகத்து மக்களுக்கு முல்லைக்குத் தேர்தந்த வள்ளலாகவும், இந்த இரண்டு பெண்களின் தந்தையாகவும் விளங்கிய பாரிவள்ளல் இறந்ததும், தாங்கள் அநாதைகளாக இருப்பதை உணர்ந்து,""அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்... இற்றைத்திங்கள்...குன்றும் கொண்டார் எந்தையும் இலமே''(புறம் 112)எனும் பாடலைப் பாடித் தங்களின் கையற்ற நிலையை அங்கவையும், சங்கவையும் பதிவு செய்தனர்.

மாடமாளிகைகளில் வாழ்ந்த அங்கவை, சங்கவை தம் தந்தையாரின் மறைவிற்குப்பின் "கபிலர்' என்ற புலவரின் பாதுகாவலில் இருந்தனர். கபிலரும், பாரியும் நெருங்கிய நண்பர்கள். தம் நண்பன் பாரியின் மறைவுக்குப் பின் அவன் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களைக் கபிலர் வேண்டியதைப் புறநானூறு (200,202) தெரிவிக்கிறது. பாரியைக் கொன்ற வேந்தர்களால் தங்களுக்குத் தொல்லை உண்டாகும் என நினைத்தே மற்ற அரசர்கள் பாரிமகளிரை மணக்க விரும்ப வில்லை போலும்!

பின்னர்ச் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்' எனும் அரசனைப் புகழ்ந்து பாடி கபிலர் பரிசில் பெற்றார் (பதிற். 61-70). சேரனின் நண்பனான மலையமான் திருமுடிக்காரியைப் புகழ்ந்து பாடி (புறம் 121-24) பாரியின் இரு ம(க்)களையும் அவன் வழியினர்க்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டுக் கபிலர் வடக்கிருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு (புறம் 236,அடிக்குறிப்பு)உயிர் துறந்தார் என்பது நாம் அறிந்த செய்திகள்.

அவ்வாறு கபிலர் உயிர்துறந்த இடம் எது?திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "கபிலர் குன்று' (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சிகளால் உறுதி செய்துள்ளார் ஆநிரைக் காவலன்என்னும் அறிஞர். இனிக் கபிலர் குன்றை நோக்சிச் செல்வோம்....திருக்கோவிலூர் பேருந்து நிலையத் திலிருந்து இரண்டு கி.மீட்டரில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று'உள்ளது.மழைக்காலங்களில் நீரோடினாலும் பெரும்பான்மையான காலங்களில் மணலைக்கடந்து கபிலர் குன்றை அடையலாம். கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்' என்றே இந்த இடத்தைக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. கபிலர் குன்றை அண்மைக் காலங்களில் "இடைச்சி குன்று' என்று அழைத்தனர். ஆநிரைக் காவலனின் முயற்சிக்குப் பிறகு தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது.

இவ்வூரின் அரசுப் பள்ளிகள் அங்கவை, சங்கவை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எனவும்,கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எனவும் அழைக்கப்படுவது பொருத்தமாகும்.கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. குறுகிய படிக்கட்டு வழியாக ஏறிக் கபிலர் குன்றை அடையலாம். கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது.செங்கல்கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகூட்டப்பட்டுள்ளது. கட்டட அமைப்பை நோக்கும் பொழுது, கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணி எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் சாமி சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் கருத இடம் உண்டு. அல்லது பாரி, கபிலர் உருவங்கள் என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை மெருகூட்டப்பட்டுள்ளதால் எக்காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிட முடியவில்லை.திருக்கோயிலூரைப் பார்க்க நினைப்பவர்கள் கபிலர் குன்றின் அழகிய அமைவிடத்தைக் கண்டு களிக்கலாம். இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அப்பகுதிக்குச் செல்ல முடியாதபடி அழகிய வண்ண விளக்குகள், பூங்காக்கள் அமைத்துப் பராமரித்தால் திருக்கோயிலூர் நகர மக்களின் அழகிய பொழுதுபோக்கு இடமாக இதனை மாற்ற முடியும்.பறம்புமலையில் வாழ்ந்த கபிலர் பார்ப்பனர்களிடம் பாரிமகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விட்டார் என இலக்கியங்கள் குறிப்பிடும்பொழுது திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில்,""செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது'' (தெ.இ.க. தொகுதி 7, 863) எனும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டில் இராசராசனின் தாய்வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறிய முடிகிறது. அதுபோல் அக்கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.பல்வேறு போர்கள் நடைபெற்ற,சங்க காலம்முதல் இடைக்காலம், பிற்காலம் வரை, வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கிய திருக்கோவிலூர் ஊரும், பெண்ணையாற்றின் கபிலர் குன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய- பார்வையிடப்படவேண்டிய முதன்மையான இடங்களாகும்.


http://muelangovan.blogspot.com/2007/04 ... t_599.html

கீதம்
07-01-2011, 10:41 PM
அருந்தககவல்கள் திரட்டித் தரும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன், ஹேகா. காந்தள் மலர்தான் தமிழ்நாட்டின் மாநிலமலர் என்பதையே சிலநாட்களுக்கு முன்புதான் அறிந்துகொண்டேன். (நன்றி: காந்தி அவர்களின் உங்களுக்குத் தெரியுமா?)

அறியா மலர்கள் திரட்டி அழகிய பூங்கொத்து உருவாக்க முனையும் உங்களுக்கு என் பாராட்டுகளும் நன்றியும்.

Hega
07-01-2011, 10:58 PM
நன்றி கீத்ம அக்கா..

Hega
07-01-2011, 10:59 PM
குறிஞ்சிப்பாட்டு 62 முதல் 07 வரை காணப்படும் மலர்களின் பெயர்பட்டியல்….

பட்டியல் முழுமையாக்கப்ட்டபின் இங்குள்ள பூக்களின் மேல் கிளிக்கினால் இலகுவாக தேடலாம்.


செங் காந்தள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=508553#post508553)
ஆம்பல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=508637#post508637)
அனிச்சம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=508708#post508708)
குவளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25979&page=2)
குறிஞ்சி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25979&page=2)
வெட்சி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=509087#post509087)
செங்கொடுவேரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25979&page=3)
மணிச்சிகை (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=509389#post509389)
தேமா (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-மாம்பூவும்-தில்லைப்பூவும்-சொல்வதென்ன?p=509388&viewfull=1#post509388)
உந்தூழ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=509500#post509500)
கூவிளம்பூ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25979&page=3)
எறுழம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=515119#post515119)
சுள்ளி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=515119#post515119)
கூவிரம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=515121#post515121)
வடவனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=515121#post515121)
வாகை (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=540324#post540324)
குடசம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=540918#post540918)
எருவை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25979&page=5)
செருவிளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=541375#post541375)
கருவிளம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=541375#post541375)
பயினி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25979&page=6)
வானி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25979&page=6)
குரவம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25979&page=6)
பசும்பிடி (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-மாம்பூவும்-தில்லைப்பூவும்-சொல்வதென்ன?p=541958&viewfull=1#post541958)
வகுளம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25979&page=6)
காயா (http://karkanirka.files.wordpress.com/2009/04/slide31.jpg?w=593)
ஆவிரை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25979&page=7)
வேரல் (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-சூரல்/page7)
சூரல் (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-சூரல்/page7)
குறுநறுங்கண்ணி (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-சூரல்/page7] சிறுபூளைப்பூ[/URL]<br />[URL="http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-குறுநறுங்கண்ணி/page8)
குருகிலை (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-மாம்பூவும்-தில்லைப்பூவும்-சொல்வதென்ன?p=553007&viewfull=1#post553007)
மருதம்பூ (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-மாம்பூவும்-தில்லைப்பூவும்-சொல்வதென்ன?p=553009&viewfull=1#post553009)
கோங்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-மாம்பூவும்-தில்லைப்பூவும்-சொல்வதென்ன?p=553352&viewfull=1#post553352)
போங்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-மாம்பூவும்-தில்லைப்பூவும்-சொல்வதென்ன?p=554047&viewfull=1#post554047)
திலகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-மாம்பூவும்-தில்லைப்பூவும்-சொல்வதென்ன?p=554049&viewfull=1#post554049)
பாதிரி (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-மாம்பூவும்-தில்லைப்பூவும்-சொல்வதென்ன?p=555666&viewfull=1#post555666)
செருந்தி (http://www.tamilmantram.com/vb/showthread.php/25979-குறிஞ்சிப்பாட்டில்-99-மலர்கள்-மாம்பூவும்-தில்லைப்பூவும்-சொல்வதென்ன?p=555667&viewfull=1#post555667)
அதிரல்
சண்பகம்
கரந்தை
குளவி
மா
தில்லை
பாலைப்பூ
முல்லைப்பூ
குல்லை
பிடவம்
செங்கருங்காலி
வாழைப்பூ
வள்ளி
நெய்தல்
தாழை
தளவம்
தாமரை
ஞாழல்



மௌவல்
கொகுடி
சேடல்
செம்மல்
சிறுசெங்குரலி
கோடல்
கைதை
வழை
காஞ்சி
நெய்தல்
பாங்கர்
மராஅம்
தணக்கம்
ஈங்கை
இலவம்
கொன்றை
அடுப்பம்
ஆத்தி
அவரைப்
பகன்றை
பலாசம்பூ
பிண்டி
வஞ்சி
பித்திகம்
சிந்துவாரம்
தும்பை
துழாய்
தோன்றி
நந்தி
நறவம்
புன்னாகம்
பாரம்
பீரம்
குருக்கத்திப்பூ
ஆரம்
அகில்
புன்னம்
நரந்தம்
நாகப்பூ
இருள்வாசி
குருந்தம்பூ
வேங்கை
புழகு

Hega
07-01-2011, 11:06 PM
செங் காந்தள்..

தாவரவியற் பெயர்: லல்லி ஆசியே குளோறி லில்லி (Liliaceae Glory lily)
குடும்பம்: Colchicaceae
பேரினம்: Gloriosa

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide5.jpg

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide4.jpg

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide3.jpg



http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/2-1.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/20d6077e.jpg


செங் காந்தள் கார்த்திகை மலர் எனவும் அழைக்கப்படும்.
தமிழ் ஈழத்தின் தேசிய மலர்..
தமிழ் நாட்டின் மாநிலப் பூ]




காந்தள் ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லிஆசியே (Liliaceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும். காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் தாவரவியற் பெயர்: லில்லி ஆசியே குளோரி லில்லி (Liliaceae Glory lily), இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். இதை மேலாண்மை பொருந்திய மலராகக் கருதுகிறார்கள்

இக்கொடியின் தண்டு பசுமையானது. வலுவில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலியவற்றைப் பற்றுக்கோடாகப் பிடித்துக்கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும்.கிளை விட்டுப் படரும் ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும்.



மருத்துவப் பயன்கள்


கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது.

இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. * தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள்.

தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு

மேலும் விபரம் அறிய....http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D

ஜானகி
08-01-2011, 01:05 AM
இலக்கிய மலர்ப் பூங்கொத்திற்கு [ மாலைக்கு ] மிக்க நன்றி !

மணம் பரப்பட்டும் உங்கள் இலக்கிய தாகமும், சேவையும் !

கௌதமன்
08-01-2011, 02:20 AM
பூக்க்களால் தமிழ்மாலை தொடுக்கும் நண்பருக்கு பாராட்டுகள்!

Hega
08-01-2011, 08:46 PM
கருத்திட்ட கௌதமன் , ஜானகி அக்கா ஆகியோருக்கு நன்றி.

Hega
08-01-2011, 09:11 PM
ஆம்பல்



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide6.jpg



http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/800px-Laitche-P064.jpg

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம் , பொய்கை நீர்ச்சுனைகளிலும் , மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.


அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டினையும் கொண்ட ஒரு வகை நீர்த் தாவரம்ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது. பச்சை நிறத்தில் நீண்ட தண்டு, வெள்ளை நிறத்திலும் வெளிர் சிவப்பிலும் மலர்கள் காணப்படும்.ஆம்பல் அல்லது அல்லி மலர்கள் நெய்தல் நிலத்திற்கு உரித்தானவை .


குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு..... ஔவையார்.
கொட்டி, ஆம்பல், நெய்தல் ஆகிய பூக்கள் குளத்தில் நீர் இருந்தால் வளரும். நீர் இல்லாதபோது தானும் காய்ந்து நீர் வந்ததும் மீண்டும் தழைத்துக் கொள்ளும்


நீர்அளவே ஆகுமாம் நீராம்பல் - ஔவையார்.
நீர் உயர்ந்தால் ஆம்பல் உயர்ந்து மிதக்கும். நீர் தாழ்ந்தால் ஆம்பல் தாழ்ந்து மிதக்கும்



மருத்துவ பயன்கள்

இதழ்களும், இலைகளும் தண்டும், விதைகளும் கூட மருந்தாக பயன்படுகிறது

நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம். கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் உண்டாகும்.இதற்கு அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரிது பூசினால் கட்டி உடைந்து குணமாகும்.அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப் பூச அக்கி கொப்புளம் தீரும்.

அல்லி இதழ்களை நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக்கி பாலுடன் கலந்து பருகி வர நாவறட்சி,தீராத தாகம்,சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும்.

அல்லி இதழ்களை மட்டும் சேகரித்து அதனுடன் 200 மில்லி நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்

கண்சிவப்பு,எரிச்சல்,நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரிது கண்களின் மீது வைத்து கட்டிவர நல்ல குணம் கிடைக்கும்.அல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம்.

அவுரி இலைச் சாறு,மருதாணி இலைச் சாறு வகைக்கு 100 மில்லி அளவு எடுத்து 500 மில்லி தேங்காய் எண்ணையில் கலந்து ,அதில் 100 கிராம் அல்லிக் கிழங்கும்,35 கிராம் தான்றிக் காயும் அரைத்து கலந்து காய்ச்சி பதமுடன் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இதை தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும்.முடி கருத்து தழைத்து வளரும்.அத்துடன் பித்தம் தணியும்.

சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயம் ஆக்கி குடித்து வர இதயம் பலமடையும்.இதய படபடப்பு நீங்கும்.ரதம் பெருகும்.அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்து பொடியாக்கி1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நோய் குணமாகும்.நீரிழிவு நோய் தீரும்.ஆண்மை பெருகும்.

வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்து அதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு காய்ச்சி அரை லிட்டராக சுண்டியபின் அதனை வடிகட்டி அதனுடன் அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்கு காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதில் 30 மில்லி அளவு எடுத்து அதை 100 மில்லி பசும் பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உஷ்ணம் தணியும்.ரத்தக்கொதிப்பும்,நீரிழிவுநோயும்கட்டுப்படும்.வெள்ளைநோய் ,மேகவெட்டை குணமாகும்.உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/2-2.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/aampel1.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/ampel.jpg

ஜானகி
09-01-2011, 10:53 AM
வண்ண மலர்களின் காட்சி, கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது.

இங்கு, சங்ககால மலர்க் கண்காட்சி நடக்கிறது, அனைவரும் கண்டு களியுங்கள் !

அமரன்
09-01-2011, 09:14 PM
கமகமக்கும் இலக்கியக் கதக்கம்.

இணையத்தில் தேடி எடுத்துத் தொடுப்பது இலகுவான காரியமல்ல.

உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.

பகிர்வுக்கு நன்றி.

தொடர்ந்து தொடுங்கள்.

மன்றமெங்கும் வாசனை பரவட்டும்.

காந்தள்.. கார்த்திகைப் பூ..
உணர்வோடு கலந்திட்ட ஒன்று..

Hega
09-01-2011, 09:59 PM
ஜானகி அக்கா, அமரன் ஆகியோருக்கு நன்றி.

Hega
09-01-2011, 10:13 PM
அனிச்சம்

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide7.jpg

Name : Scarlet pimpernel
Botanical Name : Anagallis arvensis
Family: Myrsinaceae

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/2-3.jpg

மலர்களில் மிகவும் மென்மையானது அனிச்சம் பூ. அதை மோந்து பார்த்தாலேயே வாடி விடுமாம்.மென்மைக்கு உதாரணமாக திருக்குறளில் கூறப்படும் மலர் அனிச்சம் பூ ஆகும்

இளஞ் சிவப்பிலும், அழகிய ஆரஞ்சிலும்,ஊதா நிறத்திலும் அழகாய் மலர்ந்திருக்கும் சூரியன் வெளிச்சம் இருக்கும் திசையில் இலைகள் திரும்பி கொண்டே இருக்கும்.இது ஒரு செடி வகைத்தாவரமாகும்.

மோப்பக் குழையும், அனிச்சம்; முகம் திரிந்து
நோக்கக் குழையும், விருந்து.

மோந்தால் வாடிவிடும் அனிச்ச மலர்;
முகம் மலராது திரிந்து நோக்கினாலே வாடிவிடுவர் விருந்தினர்.[



http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/a39548a0.jpg

கீதம்
10-01-2011, 08:34 PM
அனிச்சமலர் காண நெடுநாளாய் ஆசைப்பட்டிருந்தேன். உங்களால் அது நிறைவேறிற்று. மிக்க நன்றி Hega.

Hega
11-01-2011, 09:02 PM
நன்றி கீதம் அக்கா

Hega
11-01-2011, 09:03 PM
குவளை



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide8.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/f10457.jpg?t=1294783020


செங்குவளை


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/White_Flower.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/3-1.jpg


செங்குவளை, கருங்குவளை, நீலக்குவளை என்றெல்லாம் நிறத்துக்கேற்ப அழைக்கபடும் மல்ர் இது. சங்கப் பாடல்களில் உவமையாக இம்மலர் பயன் படுத்தப்ட்டிருக்கும். தேவாரம், திருப் புகழ், திருமந்திரம் என அனைத்திலும் பாடப்பட்ட மலர் இது. பெண்ணின் விழிகளுக்கு ஒப்பிடப்படும் மல்ர் இது.

ஆமபலைபோன்ற நீர்தாவரம் இது.


பார்க்கும் போது குவளையும் ஆம்பலும் ஒரே மலர் போல் தோன்றினாலும் இருமலர்களையும் ஒத்திட்டு பார்க்க வேண்டும்.

ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/aampel1.jpg





குவளை கூர்மை இல்லாது வளைந்த இதழ்களைக் கொண்டது

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/vk.jpg

Hega
11-01-2011, 10:05 PM
குறிஞ்சி


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide9.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/7bec2d99.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/neela_kurinji.jpg?t=1294786620


இயற்கையின் எத்தனையோ அதிசயங்களில் ஒன்று குறிஞ்சி மலர். ஒரே நாளில் இரண்டு முறை பூக்கும் தாவரங்கள் ஒருபக்கம். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி என ஆச்சரியமூட்டும் இயற்கையின் முன்னேநிலங்களை ஐவகையாய் பிரிக்கையில்மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என பிரிக்கப்பட இம்மலரே காரணம்


கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும்

குறிஞ்சிச் செடி கூட்டங்கூட்டமாக மலரும், மலரும் காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை. உலகம் முழுக்க ஸ்டிரோபிலாந்தஸ் தாவரப் பிரிவில் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் 150 வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலேயே வளருகின்றன.

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/neelakurinji.jpg?t=1294786576


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/4-2.jpg

கீதம்
11-01-2011, 10:38 PM
சங்ககால மலர்கள் பற்றிய அரிய தகவல்களை அரும்புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கும் உங்கள் பெரும் முயற்சிக்கு என் பாராட்டுகளும் சிறிய இ-பண அன்பளிப்பும்.

ஜானகி
12-01-2011, 12:37 AM
கண்கொள்ளாக் காட்சிகள் ! நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
12-01-2011, 06:25 AM
மிக்க சிரமப்பட்டுத் தேடி அரிய தகவல்களைப் படங்களுடன் விள்க்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சொ.ஞானசம்பந்தன்

Hega
12-01-2011, 09:31 PM
சங்ககால மலர்கள் பற்றிய அரிய தகவல்களை அரும்புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கும் உங்கள் பெரும் முயற்சிக்கு என் பாராட்டுகளும் சிறிய இ-பண அன்பளிப்பும்.


நன்றி கீதம் அக்கா.தங்கள் இ.பணத்திற்கும் நன்றி.

Hega
12-01-2011, 09:32 PM
கண்கொள்ளாக் காட்சிகள் ! நன்றி.

தொடர்ந்தும் கூடவே வந்து ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றி ஜானகி அக்கா. :icon_b:

Hega
12-01-2011, 09:33 PM
மிக்க சிரமப்பட்டுத் தேடி அரிய தகவல்களைப் படங்களுடன் விள்க்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சொ.ஞானசம்பந்தன்


நன்றி ஐயா.

Hega
12-01-2011, 09:46 PM
வெட்சி



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide10.jpg



http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/vetchi.jpg?t=1295040478


சிவப்பு அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேனுடன் கொண்ட பூக்களை உடைய சிறு தாவரம் / அதன் பூ.
மரங்களின் தீ பிழம்பு என செல்லமாக அழைக்கப்படும் பெருவாரியான மக்களால் இட்லி பூ எனவும் அழைக்கப்டும்.


குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது


மருத்துவ பயன்கள்

வெட்சிப்பூ மேக வழல் விட்டோடும் வாசனையாம்
அடசி வழி யாயுயிர் கொள்ளா ரணங்கே -எச்சுஞ்
சுரமுடனே தாகந் தொலைக்கும் உலகில்
விரைவாய் இளைப்பகற்றும் விள (அகத்தியர் குண பாடம் )

பூவை -வெள்ளாட்டுபாலில் கொடுக்க வெள்ளை தீரும்
பூவை குடிநீராக்கி குடிக்க சுரம் தீரும்
பூவை நெய்விட்டு வதக்கி -சீரகம் ,சிறுநாகபூவுடன் உண்ண-நீர் வேட்கை போகும்
வேரை-திப்பிலயுடன் கொடுக்க -கழிச்சல் நிற்கும்
வேரை புண்ணில் போட புண் சீக்கிரம் ஆறும்


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/6fbcfd61.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/d4ff2d2a.jpg

கீதம்
12-01-2011, 09:50 PM
இன்றைய இட்டலிப்பூதான் அன்றைய வெட்சி என்பதை இத்தனைநாள் அறியாமல் இருந்திருக்கிறோமே! பகிர்வுக்கு நன்றி Hega.

Hega
12-01-2011, 09:57 PM
ஆமாம் கீத்ம அக்கா

இலங்கையில் பெருமாபாலானோர் வீட்டு முற்றத்தில் இம்மலர் பூத்துகுலுங்குவதையும் காணலாம்.

தமிழில் அழகான பெயராம் வெட்சி இருக்க இதை அஸ்டிற் என அதன் ஆங்கில பெயரிட்டு அழைப்போம்.

Hega
12-01-2011, 10:17 PM
செங் கொடுவேரி



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide11.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/2297.jpg?t=1294873751


செங்கொடிவேலி ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை
வெட்சியைப் போலவே இருந்தாலும்வேறுபாடுகள் நிறையவே உண்டு
ஒரே கொத்தில் நூற்றுகணக்கான மலர்கள் ஒரே சமயத்தில் மலரும்வெட்சியில்,
நூற்றுக்கணக்கில் மலர்கள்அதே கொத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மாதக் கணக்கில் இருக்கும்

பல்வேறு மருத்துவபலன்களை தன்னகத்தே கொண்டதான இம்மலர் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாவதுபோல் ஆவதும் உண்டு.


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/Lal20Chitrak.jpg?t=1294873823


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/PC051292.jpg?t=1294873894

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/PC241524.jpg?t=1294874108

ஜானகி
13-01-2011, 01:15 AM
இட்லிப் பூவை சிலர் வ்ருச்சிப்பூ என்பார்கள். அதன் தூய தமிழ்ப் பதம் வெட்சி என்று தெரிந்துகொண்டோம்.

Hega
14-01-2011, 08:21 PM
கருத்திடலுக்காய் நன்றி ஜானகி அக்கா

Hega
14-01-2011, 09:07 PM
தேமா


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide12.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/6b74584c.jpg




தேமாம்பூ; ஆம்பிரம்; மாம்பூ என அழைக்கப்படும்.

முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும், முதலில் புளிப்பாகவும் கனிந்த பின் இனிப்பாகவும் இருக்கும் பழத்தைத் தரும் பூ / அதனைத் தரும் மரம்


மாமரம் 35 - 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 - 35 செ.மீ நீளமும், 6 - 16 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச்சிறியதாக, 5 - 10 மி.மீ. நீளமுடைய இதழ்களையும், மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன. பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.

மாம்பழம் நீன்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். பழங்கள் 10 - 25 செ.மீ நீளமும், 7 - 12 செ.மீ விட்டமும், 2.5 கிலோகிராம் வரை எடையும் உடையவை. காய்கள் பச்சையாகவும், பழங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பெருபாலும் இரகத்தைப் பொருத்து நிறம் மாறினாலும், சூரியன் படும் பாகங்கள் சிவப்பாகவும், மற்ற இடங்கள் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கிறது. பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை காணப்படும். இ

நல்ல வடிகால் வசதியும் சற்றே அமிலத்தன்மையும் (pH 6-7) உள்ள எந்த மண்ணிலும் மாமரங்கள் நன்கு வளரும். மேற்கூறியவாறு, உறைபனியற்ற எந்த பகுதிகளிலும் மாமரங்கள் வளரும்; ஆனால், 12-15 பாகை C வெப்பநிலைக்குக் கீழே வளர்ச்சி குன்றிவிடும். 15 பாகை C க்கு கீழேயும், 40 பாகை C க்கு மேலும் பூக்கள் உதிர்ந்து, மகரந்தம் குறைவதால் காய் பிடிப்பு குறைந்துவிடும். காய் முதிரும்போது அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. அதிக காற்று, பூக்களையும், காய்களையும் உதிர்த்து விடும். மாமரத்தின் இலைகளாலும், பூக்களாலும் சிறிதளவு உறைபனியை கூட தாங்க முடியாது. மாமரம் சுமார் -5 பாகை C வரை தாங்கவல்லது

மாமரப் பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள் இருக்கும். பூங்கொத்தில் பெரும்பகுதி ஆண் பூக்களாகவும் மற்றவை இருபால் பூக்களாகவும் இருக்கும். சாதாரணமாக, நிழலில் வளரும் பூக்கள் இருபால் பூக்களாக இருக்கும். உலர்ந்த அல்லது குளிர் தட்பவெப்பம், மாமரம் பூப்பதை தூண்டுகிறது. மேலும், எதிபான், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது நாப்தலீன் அசிடிக் ஆசிட் ஆகிய வேதிப்பொருட்களும் பூப்பதை தூண்டப் பயன்படுத்தப்படுகின்றன.

மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. இந்தியாவில், இது மிக அதிக அளவில் காணப்படும் பழக்கம். பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில், மாம்பழக்கூழில் சர்க்கரை சேர்த்து உலர்த்தப்பட்டு சிறு துண்டுகளாக மிட்டாய் போலவும் உண்ணப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், மற்றொரு பிரபலமான பானம், மாம்பழத்தையும் தயிரையும் கலந்து செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி ஆகும்.

உப்பு, மிளகாய் சேர்க்கப்பட்ட மாங்காய்த் துண்டுகள்மாங்காயும், பலவிதமாக உலகெங்கும் உண்ணப்படுகிறது. இந்தியாவில், மாங்காய் துண்டுகள் மிளகாய்த் தூள் அல்லது உப்பு சேர்த்து உண்ணப்படுகின்றன. மேலும் மாங்காயைக் கொண்டு குழம்புகள், ஊறுகாய்கள், பச்சடிகள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், மாங்காய்கள் ருஜக் அல்லது ரொஜக் எனப்படும் புளிப்பு பச்சடி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில், மாங்காய்கள் 'பகூங்க்' எனப்படும் மீன் அல்லது இறால் கொண்டு தயாரிக்கபடும் கூழுடன் உண்ணப்படுகின்றன. மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி இனிப்பாகவோ, புளிப்பாகவோ, காரமாகவோ பல நாடுகளில் தயாரிக்கப்படுகிறது


மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும்.

மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்கு காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும், இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.

இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன் படுத்தப்படுகிறது.




வகைகள் அல்லது இரகங்கள்



தேமா (இனிப்பு மிக்கது}
புளிமா (புளிப்பு மிக்கது)
கறுத்த கொழும்பான்
வெள்ளைக் கொழும்பான்
பங்கனப்பள்ளி
மல்கோவா
ருமானி
திருகுணி
விலாட்டு
அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு]
செம்பாட்டான்
சேலம்
பாண்டி
களைகட்டி
பச்சதின்னி
கொடி மா
மத்தள காய்ச்சி

Hega
14-01-2011, 09:30 PM
மணிச்சிகை



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide13.jpg



மணிச்சிகை புதர்கள் போல் காணப்படும் ஒரு மெல்லிய கொடி, 3-5 மீ நீண்டு வளரும். முட்டை-இதயம்-வடிவ இலைகளோடு இளஞ்சிவப்பு-ஊதா வெள்ளை புனல் வடிவ பூக்களோடு கடற்கரைகள் மற்றும் உப்பு மண்ணில் வருடம் முழுமைக்கும் பூக்கும் பூ இது.

கீதம்
14-01-2011, 10:41 PM
குண்டுமணி வைத்து விளையாடிய நாட்கள் நினைவுக்கு வந்து களிப்பூட்டுகின்றன. தகவல் பகிர்வுக்கு நன்றி Hega.

M.Jagadeesan
14-01-2011, 11:39 PM
என்ன அற்புதமான பூக்கள்! கொள்ளை அழகு! நன்றி ஹேகா.

Hega
15-01-2011, 01:38 PM
குண்டுமணி வைத்து விளையாடிய நாட்கள் நினைவுக்கு வந்து களிப்பூட்டுகின்றன. தகவல் பகிர்வுக்கு நன்றி Hega.

ஆமாம அக்கா, அழகாக சிவந்த நிறத்தில் அழகாக இருக்கும் குண்டு மணியை நானும் தேடி தேடி சேகரித்து விளையாடி இருக்கேன்.

தங்கம் அளவுக்காக ஒரு மஞ்சாடி என சொல்வது ஒரு குண்டுமணி அளவைத்தான் என நினைக்கிறேன்.

Hega
15-01-2011, 01:38 PM
என்ன அற்புதமான பூக்கள்! கொள்ளை அழகு! நன்றி ஹேகா.


நன்றி ஜெகதீசன் அவர்களே..

இன்னும் மலர்களின் அணிவகுப்பு தொடரும்.

Hega
15-01-2011, 09:29 PM
உந்தூழ்


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide14.jpg




http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/DSC00268.jpg?t=1295130058



நெடிதுயர்ந்து வளரும் புதர் தாவரம் மூங்கில் எனவும் அழைக்கப்படும்.
புதர் தாவரம் ஆகிய மூங்கிலின் மலர் பெயர்தான் உந்தூழ்
எப்போதாவதுதான் மலரும் ஆண்டுக்கு ஒருமுறை மலரும் வகையும் உண்டு எப்போது பூக்கும் என்று தெரியாத வகையும் உண்டு

மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. உண்மையில் மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் தான். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும்.

மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera)[2] என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை48 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றாக பூக்கும்
.
சில மூங்கில் மரங்கள் இந்த வழக்கத்திற்கு மாறாக ஒருசேரப் பூக்காமல் இடையே பூப்பதுண்டு. ஆனால், அந்நேரங்களில் சில விதைகளே உருவாகும்.

இவ்வகை மூங்கில் பூப்பிற்குப் பிறகு விதைகள் உருவாகி மூங்கில் மரங்கள் மடிந்து விடுகின்றன

மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம் அல்லது அத்தவருடம் வெள்ளாமை சரியாக இருக்கது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது.

உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை. அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடி பெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும் வரை அங்கேயே குடும்பத்தை பெருக்கும்.

மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பல மடங்காக பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாயநிலங்களுக்குத்தான் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த வருட விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தைத்தான் சந்திக்கும்.

இதுதான் மூங்கில்பூத்தால் ஆகாது என்ற வழக்கை தந்திருக்கும்


கொல்லிமலை அடிவாரத்திலேயே மூங்கில் தோப்ப பூத்திருப்பதை பாருங்கள்.

http://saralil.blogspot.com/2008/01/blog-post_23.html



http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/DSC00124.jpg?t=1295130263


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/DSC00268.jpg?t=1295130340


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/1-2.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/6ac26cca.png

நாஞ்சில் த.க.ஜெய்
28-01-2011, 04:44 PM
மலர்களின் தொகுப்பு அதன் சிறப்பு அதனை தொகுக்கும் மன்ற மலர் ஹேஹா வுக்கு என் வாழ்த்துகள் தொடரட்டும்..

Hega
29-01-2011, 10:10 PM
ஜெய் அவர்களுக்கு நன்றி.

Hega
29-01-2011, 10:27 PM
கூவிளம்பூ

Name : Bael
Botonical name : Bengal Quince
Family: Rutaceae



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide15.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/Aegle-Marmelose-Flower-4.jpg?t=1296343330



வில்வம். கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலூரம் என அழைக்கபடும்.

வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப் படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. கனி தொடர்வன, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும்.

எல்லாச் சிவன் கோவில்களிலும் இருக்கும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும். இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும். பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியன ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம். இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.



மருத்துவப் பயன்கள்

வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.

இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.

பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.

பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.

பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை - கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.

வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.

புற்றுநோய்தீர -: நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.

இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் ஸ்நானம் செய்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது உடலுறவு கூடாது.

வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும்.

வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போம்.

வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.

வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.

வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.

ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும் பாண்டு வியாதி பறந்தோடும்.

வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/Bel.jpg?t=1296343430


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/2-4.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/Temple009.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/550d6def.jpg

கீதம்
29-01-2011, 10:34 PM
கூவிளங்காய், கூவிளங்கனி என்று தமிழில் படித்தோமே, அது இதுதானா?

வில்வ மரம் பற்றி முழுமையாக அறியத்தந்தமைக்கும், அழகிய படங்களுடன் பதிவிட்டமைக்கும் பாராட்டுகள் Hega.

ஜானகி
30-01-2011, 01:10 AM
அப்பாடா... மலர்க் கண்காட்சி தொடர ஆரம்பித்துவிட்டது... இடைப்பட்ட காலத்தில், கண்கள் பூத்துப் போய்விட்டன !

நன்றி.

குணமதி
04-02-2011, 12:08 AM
அருமையான படங்கள்; ஈடில்லாத் தொகுப்பு!

உங்கள் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தொடருங்கள்.

Hega
26-02-2011, 07:22 PM
அப்பாடா... மலர்க் கண்காட்சி தொடர ஆரம்பித்துவிட்டது... இடைப்பட்ட காலத்தில், கண்கள் பூத்துப் போய்விட்டன !

நன்றி.


அடடா

மன்னிக்கவும் ஜானகி அக்கா

ரெம்ப வேலைபளு. இனி இயன்ற வரை தொடரகிறேன்.

Hega
26-02-2011, 07:23 PM
பின்னூட்டத்தால் தொடர்ந்து ஊக்கம் தரும் கீதம் அக்காவுக்கும் குணமதி அவர்களுக்கும் நன்றி ..

Hega
26-02-2011, 07:42 PM
எறுழம்




http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide16.jpg


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/12.jpg?t=1298752740


வெள்ளை பூக்கள் எங்கும் காணப்படும் இந்த ஏறுகொடி பல பெரிய மரங்கள் மற்றும் புதர்கள் மீது 5-10 மீட்டர் வரை படர்ந்து வளரும். பூக்கும் பருவம் குளிர் மற்றும் பிப்ரவரியில் உச்ச காலம் ஆகும்.

தண்டு மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டதென கூறப்படுகிறது . மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், குறைந்த மட்ட வெப்பமண்டல பசுமைமாறா காடுகளிலும் காணப்படுகிறது.

Hega
26-02-2011, 07:54 PM
சுள்ளி

Name : Ebony
Botonical name : Diospyros ebenum
Family: Ebenaceae


http://karkanirka.files.wordpress.com/2009/04/slide17.jpg?w=593


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/13.jpg?t=1298752740



கருங்காலி வகை மரம் / அதன் பூ

சாலம்; மரா; ஆச்சா; தும்பி; கருங்காலி; கருத்தாலி என்ற பல பெயர்களால் அழைக்கப்படும், கலப்பை செய்யப் பயன்படும் ஒரு வகை மரம்

ஒரு சதுர அடி மரத் துண்டு, இரண்டாயிரத்துக்கும் மேலே விலை போகக் கூடிய கருங்காலி எனப்படும் மரத்தின் மலர் பெயர் இது

அழகிய அடர் சிவப்பு இதன் மலர் நிறம்வெளிர் பச்சை, அடர் பச்சை என இதன் இலைகளின் நிறம், நெடிதுயர்ந்து வளரும் இந்த மரம், பார்க்க எல்லா மரத்தையும் போல இருந்தாலும் இது உறுதிக்குப் பெயர் போனது

எத்துணையோ கலைப் பொருட்கள் இதை கொண்டு செய்கின்றனர் இணையத்தில் தேடினால் நிறைய யானைகளும், வேறு சில பொருட்களும் இருந்தன. அதன் விலையைப் பார்க்கையில் அந்த யானையை உயிருடனே வாங்கி விடும்அளவு அதிகம்

கருங்காலிக் கட்டைக்கு
நானாக் கோடாலி
இருந்கதளைத் தண்டுக்கு
நானியதே "
என ஔவையாரால் பாடப்பட்ட மலர் இது.


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/9b49f3c6.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/1-3.jpg

Hega
26-02-2011, 08:07 PM
கூவிரம்

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide18.jpg


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/14.jpg?t=1298752740


குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மலைமர வகை
மேலதிக விபரம் தெரியவில்லை

Hega
26-02-2011, 08:20 PM
வடவனம்


வடவனம் என்னும் மலரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுந்தான் உள்ளது. [1]

துழாஅய் என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். துளசி போலவே இருக்கும் மற்றொரு செடி திருநீற்றுப்பச்சை.

குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது


வடவனம் மலர் - பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டும் படம்.



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide20.jpg


துளசி (Ocimum Sanctum) மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு


மருத்துவக் குணங்கள்

சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
தொற்றுநோய்களை எதிர்க்கும்.
சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்
வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்
துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்
ஞாபக சக்தியை அதிகரிக்கும்
வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும்.



துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.

துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா*ய் து*ர்நா*ற்ற*த்தையு*ம் போ*க்கு*ம்.
நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.
உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.


தொடர்ந்த தேடலுடன்....







Name : Banyan
Botanical Name : Ficus benghalensis
Family: Moraceae

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/1-4.jpg

ஆலமரம் / அதன் பூ

"ஆல் போல் தளைத்து
அருகு போல் வேரூன்றி "

எனும் வாக்குக்கமைய தாயாகிய மரம் வளர்த்த சேயாகிய விழுதுகள், தாயின் கடைசி காலத்தில் அவள் பாரத்தை தாங்கும் என உறவுக்கும் ஒப்புமை கூற வைக்கும் மரம். ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது

இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது

ஆலமரம் என்றால் Ficus benghalensisஎனும் இனத்தையே குறிக்கும் . ஆலமரத்தின் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகிறது

பொதுவாக 30-40 மீட்டர் உயரம் வரையும், மிக அரிதாக 60 மீட்டர் வரையும் கூட வளரக்கூடிய இதன் அடிமரம் 2 மீட்டர் வரை பருக்கக்கூடியது. ஒழுங்கற்ற அடிமரத்தைக் கொண்ட இதில் விழுதுகள் உண்டாகி மரத்தை நிலத்தில் உறுதியாக வைத்திருப்பதுடன், பாரமான இதன் கிளைகளையும் தாங்குகின்றது. 10-35 சமீ நீளமும், 5-15 சமீ அகலமும் கொண்ட நீள்வட்ட வடிவில் அமைந்த இலைகள் மினுக்கம் கொண்டவை. இளம் தாவரத்தின் இலைகளே பெரிதாகக் காணப்படும். சமயத்தில் 45 சமீ நீளம் வரை கூட வளர்வதுண்டு. முதிர்ந்த மரத்தின் இலைகள் ஒப்பீட்டளவில் சிறியவை. பொதுவாக 10 சமீ நீளம் கொண்டவை.



இந்த மரத்தில், கவர்ச்சியான நிறங்களைக் கொண்ட அல்லது மணம் பொருந்திய பூக்கள் இருப்பதில்லை


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/banyan.jpg


மருத்துவக் குணம்

இதனை இயக்கு ரோதம், காமரம், சோளி, தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை, பழம், பூ, விழுது, பால் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.

அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட
வச்சமற மேகமுந்தீ யாகுமே-இச்சகத்தில்
நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும்
பூத மதிபதியைப் போல்
- தேரையன் வெண்பா

பொருள் - நாள்பட்ட புண்கள், மேகம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு இவைகளைப் போக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.


சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்குப்பைக்
கொல்லக்கின்ற நீரிழிவை கொல்லுங்காண்- நல்லாலின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்- அகத்தியர் குணபாடம்

உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும்.

அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும்.

ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.


நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.



எலும்பு முறிவுக்கு

எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும். எலும்புகள் பலமாகும்.



வாய்ப்புண் நீங்க

ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும். இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.

பல் பாதுகாப்பு

ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி

என்பது நம் முன்னோர்களின் பழமொழி. ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும். ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும்

கீதம்
26-02-2011, 11:04 PM
சிறிய இடைவேளைக்குப் பின் மலர்களை அறிமுகப்படுத்தி மீண்டும் வசந்தகாலத்துக்கு அழைத்துச் செல்லும் Hega வுக்கு நன்றியும் பாராட்டும்.

கலையரசி
27-02-2011, 05:29 AM
சங்கக்காலப் பாடல்களில் இடம் பெற்றுள்ள மலர் வகைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.
என் ஆசையை நிறைவேற்றும் வகையில் அக்கால மலர்வகைகளைப் பற்றிய செய்திகளைப் படங்களுடன் வெளியிட்டு வரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
தொடருங்கள்.

Hega
16-05-2011, 11:06 AM
நன்றிகள் கீதம் அக்கா, கலையரசி அவர்களே.

சிறிய இடைவெளியின் பின் மீண்டுமாய் இன்றிலிருந்து இத்திரியை தொடர்ந்திட முயற்சி செய்கிறேன்.

Nivas.T
16-05-2011, 11:45 AM
அறிய தகவல்கள், கடின உழைப்பு, நல்ல பணி

தொடருங்கள் ஹேகா

மிக்க நன்றி

சொ.ஞானசம்பந்தன்
17-05-2011, 09:54 AM
எங்கே நிறுத்திவிட்டீர்களோ என எண்ணினேன், ஆனால் தொடருவது கண்டு மகிழ்கிறேன். பாராட்டும் வாழ்த்தும்.

Ravee
17-05-2011, 01:41 PM
மன்றம் முழுதும் மணக்குது . இந்த மலர்களின் தொகுப்பு ..........கருப்பு வெள்ளை படங்களுடன் ஒரு புத்தக வடிவில் இருந்து இறக்கம் செய்தேன் ஒரு தளத்தில் இருந்து .... ஆனால் வண்ணத்தில் காணும் பொழுது கண்களை கொள்ளை கொள்ளுது மலர்கள் ... நன்றி ஹெகா

வல்லம் தமிழ்
18-09-2011, 04:09 PM
மிக அருமையான பதிவு! தயவு செய்து தொடருங்கள்..! நன்றி

seguwera
18-09-2011, 08:05 PM
குறிஞ்சிப்பாட்டு மலர்களை மன்றத்தில் அழகாக மலரவிட்டு இருக்கிறீர்கள் அருமை

venkat8
25-01-2012, 08:44 PM
நல்ல ஆராய்ச்சி. ஆம்பல் மலரை காட்டியதற்கு நன்றி

Hega
25-01-2012, 09:15 PM
கருத்த்திட்டோருக்காய் என் மனமார்ந்த நன்றிகள்

பலவேறு பணிச்சுமைகளால் இணையத்தில் அதிகமாய் இணைய முடியவில்லை.
மன்னிக்கவும்..

இயன்றவரை வாரம் ஒருமுறையாவது இத்திரியை தொடர்ந்திட முயற்சிக்கிறேன்..

Hega
25-01-2012, 10:04 PM
வாகை
Name : Albizia lebbeck
Botanical Name :Leguminosae (Mimisoideae)
Family: Fabaceae


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide21.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/a50c7bfc.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/vaakai5.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/vaakai4.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/450px-Starr_080531-4752_Albizia_leb.jpg





வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீர்கமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன


இது 18 இருந்து 30 மீ வரை வளரக் கூடிய மிதமான அல்லது பெரிய வகை மரமாகும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோலக் காணப்படும். இது பலத்தண்டுகளையுடையதாகவும் பரந்து வளரக்கூடியதாகவும் உள்ளது.

இலைகள் இரட்டைச்சிறகமைப்பையும், அடிக்காம்பு (Rachis) 70-90 மிமி நீளமும், மேற்காம்புகள் (Rachillae) 1 - 5 இணைகளாகவும், 50-70 மிமி நீளமும் காணப்படும். சிற்றிலைகள் 3-11 இணைகளுடனும், நீள்வட்டம் மற்றும் முட்டைப் போன்ற வடிவிலும்,சமச்சீரற்ற நிலையிலும் காணப்படும்.

இலை தொடக்கத்தில் கரும்பச்சையிலும் இரவு நேரங்களில் மூடிக்கொள்ளும் பண்புடையதாகவும், முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காம்புகளுடன் இறுகிய அமைப்பிலும் காணப்படும். இளமஞ்சள்/வெண்நிறம் உடைய கொத்தான மகரந்தத் தாள்களை உள்ளடக்கிய மணமிக்க பூக்களையும், தட்டையான காய்களையும் உடையது


தமிழீழத்தின் தேசிய மரம்


வாகை ஆங்கிலத்தில் சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது. லத்தினில் வாகை "மமோசா பிளெக்சூஸா" (Mimosa Flexuosa). என்று அழைக்ப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் albizza odaritissma. வாகையின் பகுதிகள் சித்த மருத்துவத்திலும் பயன்படுகின்றது


மருத்துவக் குணம்


வாகை மலர்ச்சூடுதல் வெற்றிக்களிப்பை உணர்த்தும்.
வீக்கம், கொப்புளம் வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.
இருமல், நுரையிரல் அழற்சி, ஈறழற்சி ஆகியவற்றிற்கு இவை மருந்தாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
குறிப்பாக இம்மரப்பட்டையை அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையவவாக கருதப்படுகின்றது

Hega
09-02-2012, 09:41 PM
குடசம்



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide22-1.jpg

குடசம் கிரிமல்லிகை, மலைமல்லிகை குடசப்பாலை என அழைக்கபடும். அழகிய இளம் வெள்ளையில் இதழ்கள் நடுவே இளம் மஞ்சளில் திலகம் வைத்தார் போல சிறு கோடுடன், அடர் பச்சையில் இலைகள் காணப்படும்.

இதனை வெட்பாலைப் பூ என்பர்.

குடசப்பாலை (கருப்பாலை, Holarrhena pubescens) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் சிறுமரமாகும். வலுவான கிளைகளைக் கொண்ட இதன் பட்டை தடிப்புடையதாகச் சொரசொரப்பான பொருக்குகளுடன் பழுப்பு நிறமாக இருக்கும். இதன் பட்டை, இலை, விதை ஆகியன மருத்துவப் பயனுடையவை

குடசத்தின் பட்டை பல மருத்துவக் குணங்கள் கொண்டதாம்,ஆனால் பொதுவான இயல்பு கசப்பு.




குடசம் எதுவெனும் குழப்பத்தில் நான்..




பெயர் -: பூவரசு.
தாவரப்பெயர் -: THESPESIA POPULNEA.
தாவரக்குடும்பம் -: LVACEAE.

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/738px-Milo_closeup.jpg

குடசம் என்னும் மலரைக் குறிஞ்சிப்பாட்டு வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குளிப்பிடுகின்றன. குடை போன்று இருக்கும் பூ ‘குடசம்’. இதனை இக்காலத்தில் பூவரசம் பூ என்கின்றனர். பூவரச மரம் ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.

சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்
http://i1189.photobucket.com/albums/z437/nisha153/DSC_0231.jpg


புவிக்கரசனாகிய பூவரசன் காய கல்ப மரமாகும்.வேம்பு போல நூற்றாண்டு கால மரம். மருந்துக்கு மிகவும் ஏற்றது. தென்னிந்தியாவில் அதிகமாக் காணப்படுகிறது.இதன் இலை பசுமை நிறமாகவும், அரச இலையைவிட சற்று அகலமாகவும் இருக்கும். இதன் பூமொட்டுசிறிய பம்பரம் போல் இருக்கும்.மொட்டு மலர்ந்தவுடன் புனல் வடிவில் மஞ்சள் நிறமுடையதாக மலரும். கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். காய்களை உடைத்தால் விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. பூவரசு புழுக்களைக் கொன்று நம் உடலைத் தூய்மையாக்கி உடலை உரமாக்கும் தன்மை உடையது. விதை குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் உண்டாகும்
http://i1189.photobucket.com/albums/z437/nisha153/poovarasu.jpg

இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம்பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்

குடசம் எனும் பூ பூவரசம் பூவைகுறிக்காது என தெரிந்தவர்கள் சுட்டினால் நானும் அறிவேன்..

அமரன்
09-02-2012, 10:07 PM
வாகை... பூவரசு...

ஊருக்கு அழைத்துச் செல்கின்றன ஹேகா.

மதில்கள் கண்டிராத காலத்தில் கதியால் வேலி.. கிளுவை, முள்முருக்கையுடன் பூவரசு.. அணிகட்டி நிற்கும் அழகே அழகு.

குழப்படி செய்தால் பூவரசம் தடி எடுத்து, தும்பு பறக்கக் காலுக்குக் கீழே அடி வாங்குவதும்... அழுது வடியும் மூக்குடன் அதே பூவரசு இலையில் பீப்பீ செய்து ஊதி விளையாடி மகிழ்ந்ததுவும்... ம்ம்ம்ம்.. இளவேனில் காலம் அது..

வாகை...

உயிர் காத்த வன்னி மரம்.. இதை வேற வேறென்ன சொல்ல நம் தேசிய மரம் பற்றி..

நன்றி ஹேகா.

Hega
09-02-2012, 10:17 PM
ஆஹா

ஊரில் அப்போதெல்லாம் வேலி என்பதே பூவரசமரமும், முருங்கை மரமும்தானே.


தெருவால் போகும் போதும் வரும்போதும் ஒரிரு பூவரச இலையை பறிச்சு வடிவாக சுருட்டி வாயில் வைச்சிட்டே பீப்பீப்பீ நு நாதஸ்வரம் வாசிப்பதும் அடுத்தவர்காதில் சத்தத்தை விட்டு ஓடுவதும் நினைவில் வருகிறது.


இப்போதெல்லாம் மரங்களை காணவே முடிவதில்லை.சுனாமிக்கு பின்பா என தெரியவில்லை. இம்முறை ஊருக்கு போனபோது மரங்களை அதிலும் மரவேலிகளை பார்க்கவே முடியவில்லை. நாகரீகம் எனும் போர்வையில் மண் தரைகள் கூட கான்கீர்ட் பூச்சோடு நிற்கிறது.

நாங்கள் போயிருந்த நேரம் நல்ல நாவல் பழ சீசனாம். ஒரு பழம் எடுத்து வாயில் வைத்தேன் துவர்ப்பாயும் சதைகளற்று தடிப்பாயும் இருந்தது.

ஈச்சம் பழம், பாலைப்பழம எல்லாம் இல்லாமலே போய் விட்டது போலும்.

ஜானகி
10-02-2012, 04:59 AM
ஆகா..! அத்தியும் பூத்ததே... குறிஞ்சியும் மலர்ந்ததே...இனி கண்ணுக்கு விருந்துதான்... நன்றி

susibala.k
10-02-2012, 06:46 AM
தெருவால் போகும் போதும் வரும்போதும் ஒரிரு பூவரச இலையை பறிச்சு வடிவாக சுடுட்டி வாயில் வைச்சிட்டே பீப்பீப்பீ நு நாதஸ்வரம் வாசிப்பதும் அடுத்தவர்காதில் சத்தத்தை விட்டு ஓடுவதும் நினைவில் வருகிறது.

பூவரசைக் காட்டி பசுமையான இளமைக்கனவுகளை நினைவூட்டிய ஹேகா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் , அமைதியின்றி அலைபாய்ந்து கொண்டிருந்த மனம் இப்பதிவைப் பார்த்தவுடன் நிசப்த நிலக்கு வந்தது என்னை ஆச்சர்யப்பட வைத்தது ! இளமையி்ல் ஒட்டி உறவாடிய பசுமைக்காக மனம் ஏங்குகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது .நாம் அணுபவித்த அந்த இனிமையான அணுபவங்கள் நம் குழந்தைகளுக்கும் சென்று சேர வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்வோம் !!! , மரம் வளர்ப்போம் மழை வளம் காப்போம் !!! .

கீதம்
11-02-2012, 05:58 AM
பூவரசம்பூ பூத்தாச்சி,
இந்தத் திரிக்கும் வாழ்வு வந்தாச்சி.
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ...
கமகம வண்டி மலர்களின் வண்டி...
சுவிஸிலிருந்து ஹேகாவின் வண்டி..
கூ..... ஊ....ஊ.....

மேலே கண்டது சும்மா ஜாலிக்காக...

ஹேகாவின் மீள்வருகைக்கு நன்றியும் பாராட்டும். மலர்களின் தொகுப்பு தொடர்வதில் மிகவும் மகிழ்ச்சி ஹேகா.

கலையரசி
12-02-2012, 05:01 AM
குடசம் என்பது நம் பூவரசு தான் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். பூவரசு மரத்தை நாட்டுத் தேக்கு என்றும் சொல்வார்கள். வயது முதிர்ந்த ம்ரம் தேக்கைப் போல் அவ்வளவு வலிமையானது. வீடுகளில் நிலைகளுக்கும் சன்னல்களுக்கும் அக்காலத்தில் பூவரசு மரத்தைத் தான் பயன்படுத்துவார்கள்.
இளமையில் பூவரசு இலையில் பீப்பீ ஊதாத சிறுவர்கள் கிடையாது. இதன் இலை கொழுக்கட்டை செய்து வேக வைப்பதற்கும் பயன்பட்டது.
இப்போது இம்மரத்தைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.
அரிய விஷயங்களை எடுத்துச் சொல்லும் ஹேகாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிக்க நன்றி ஹேகா.

Hega
12-02-2012, 09:45 PM
குடசமெனப்படுவது பூவரசென விக்கிமீடியா சொல்கிறது. வேறொரு தளமோ வேறொரு பூவை சுட்டி நிற்கிறது. தெரிந்தவர்கள் பகர்ந்தால் மகிழ்வேன்


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide22.jpg

Hega
12-02-2012, 09:54 PM
எருவை

தாவரப்பெயர் -: Small Bulrush
தாவரக்குடும்பம்..Typha angustata L




http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide23.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/2318ce44.jpg


கொறுக்கச்சி, கோரை என்று பலவாறு அழைக்கப்படும் ஒரு வகை நாணற்புல்

இதனைப் பஞ்சாய்க் கோரை அல்லது, கொறுக்கச்சி என்று நச்சினார்க்கினியர் கூறுகின்றார்



http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/2-5.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/1-5.jpg

Hega
12-02-2012, 10:09 PM
ஆகா..! அத்தியும் பூத்ததே... குறிஞ்சியும் மலர்ந்ததே...இனி கண்ணுக்கு விருந்துதான்... நன்றி

மகிழ்ச்சி அம்மா

Hega
12-02-2012, 10:10 PM
பூவரசைக் காட்டி பசுமையான இளமைக்கனவுகளை நினைவூட்டிய ஹேகா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் , அமைதியின்றி அலைபாய்ந்து கொண்டிருந்த மனம் இப்பதிவைப் பார்த்தவுடன் நிசப்த நிலக்கு வந்தது என்னை ஆச்சர்யப்பட வைத்தது ! இளமையி்ல் ஒட்டி உறவாடிய பசுமைக்காக மனம் ஏங்குகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது .நாம் அணுபவித்த அந்த இனிமையான அணுபவங்கள் நம் குழந்தைகளுக்கும் சென்று சேர வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்வோம் !!! , மரம் வளர்ப்போம் மழை வளம் காப்போம் !!! .


தங்கள் மனம் அ்மைதியடைந்ததை யிட்டு மகிழ்கிறேன் சகோ..

Hega
12-02-2012, 10:11 PM
பூவரசம்பூ பூத்தாச்சி,
இந்தத் திரிக்கும் வாழ்வு வந்தாச்சி.
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ...
கமகம வண்டி மலர்களின் வண்டி...
சுவிஸிலிருந்து ஹேகாவின் வண்டி..
கூ..... ஊ....ஊ.....

மேலே கண்டது சும்மா ஜாலிக்காக...

ஹேகாவின் மீள்வருகைக்கு நன்றியும் பாராட்டும். மலர்களின் தொகுப்பு தொடர்வதில் மிகவும் மகிழ்ச்சி ஹேகா.


ஹாஹா மிக்க மகிழ்ச்சி கீதம் அக்கா..

Hega
12-02-2012, 10:12 PM
குடசம் என்பது நம் பூவரசு தான் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். பூவரசு மரத்தை நாட்டுத் தேக்கு என்றும் சொல்வார்கள். வயது முதிர்ந்த ம்ரம் தேக்கைப் போல் அவ்வளவு வலிமையானது. வீடுகளில் நிலைகளுக்கும் சன்னல்களுக்கும் அக்காலத்தில் பூவரசு மரத்தைத் தான் பயன்படுத்துவார்கள்.
இளமையில் பூவரசு இலையில் பீப்பீ ஊதாத சிறுவர்கள் கிடையாது. இதன் இலை கொழுக்கட்டை செய்து வேக வைப்பதற்கும் பயன்பட்டது.
இப்போது இம்மரத்தைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.
அரிய விஷயங்களை எடுத்துச் சொல்லும் ஹேகாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிக்க நன்றி ஹேகா.


தங்கள் ஊக்கபடுத்தலுக்காய் நன்றி சகோ..

Hega
12-02-2012, 10:15 PM
செருவிளை

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide24.jpg


செருவிளை என்பது வெண்ணிறம் கொண்ட சங்குப்பூ வகை
கரிசண்ணி என்றும் அழைக்கப்படுகின்ற பூவும் இதுவே.

சங்கு பூ, தந்திரப் பூக்கள் அபராஜிதா, காக்கானம், வெள்ளை காக்கானம் பெயர்கள் உண்டு

இது ஒரு கொடி வகைத் தாவரம் தனித்தும், வேலிகளிலும், புதர்களிலும் படரும், வெப்ப நாடுகளில் அதிகம் காணப் படுகிறது.

இரண்டு வண்ணங்களில் இருக்கும் வெண்ணிறத்தில் இருப்பது செருவிளைஊதா நிறத்தில் இருப்பது கருவிளை இறைவனுக்கு உகந்த மலராகையில் பெண்கள் சூடுவதில்லை

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/80ab7c2d.jpg

பல சங்க காலப் பாடல்களில் பலரால் பாடப் பட்டது இந்த மலர்அபராஜிதா என மகாபாரத்திலும் கார்கோடகப்பூ என ஆண்டாள்லாலும்அழகுறப் பாடப் பட்ட மலர்

வெண்மையாய், பட்டு போல மிருதுவான இதழ்கள், தூயபச்சையில் அதன் இலைகள், அதை தாங்கிதண்டோடும் காணப்படும்.

இந்த ம*லர் ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த மலர் ஆகும் ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தமருத்துவத்திலும் தலைசிறந்து விளங்குகிறது

Hega
12-02-2012, 10:18 PM
கருவிளம்



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide25.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/4bd9d3b3.jpg



ஊதாநிற சங்குப்பூ; காக்கணம் என்றும் அழைக்கப்படும் குறிஞ்சிப்பாட்டு பூ.

சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு உண்டு. நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

அக்னி
14-02-2012, 03:41 PM
அன்றொருநாள் பாடிவைத்துவிட்டுப்போன மலர்களை,
இன்றையநாளில் தேடிக்கொண்டுவரும் ஹேகா அவர்களுக்கு நன்றி...

உங்கள் தேடல் ஆச்சரியத்தோடு, அதிசயங்களை அறிவித்தும் நிற்கின்றது.
தொடரட்டும்.

இத்தொடர் முடிந்ததும் மின்மலராய் மலர வைப்பது அவசியம்...

பாராட்டுக்கள் பலப்பல...

Hega
14-02-2012, 06:47 PM
மிக்க மகிழ்ச்சி அக்னி சார்

Hega
14-02-2012, 07:12 PM
பயினி

Name : Tailpot Palm
Botanical Name : Corypha umbraculifera
Family: Arecaceae

கூந்தப்பனை

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/247fced4.jpg

கூந்தப்பனையின் மலராம் பயினி

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/1-6.jpg



கூந்தப்பனை என்றும்,ரம்பனை என்றும் அழைக்கப்படும் குறிஞ்சிப்பாட்டில் பாடப்பட்ட ஒரு பூ

இந்தியா, இலங்கை, மியன்மார் ஆகிய நாடுகளில் வயல்களிலும் மழைக்காடுகளின் வெளியிடங்களிலும் வளரும் ஒரு வகைப் பனைமரம்

இதற்கு தாலிப்பனை,குடைப்பனை,கூந்தப்பனை விசிறிப்பனை, கூந்தல் பனை என பெயர்கள் உண்டு.

இதில் நான்கு வகை உண்டு,
முதல் வகை, இரண்டு ஆள் உயரம் தாண்டாது,
இரண்டாம் வகை ஓங்கி உயர்ந்து வளரும்,
மூன்றாம் வகை பல தலைகளுடன் காணப்படும்
கடைசி வகை மிகத் தாழ்வாக படர்ந்து இருக்கும்



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/thum.jpg


குடைப்பனை

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/img.jpg



மிகப் பெரிய பூவை பூக்கும் மிக விந்தையான மரம் இது இதன் மனத்தை வெகு தூரம் வரை உணர முடியும். வெகு தூரத்தில் இருந்தும் இதனைக் காண முடியும்

வாழ்வில் ஒரு முறைதான் பூக்கும், அதிலும் முப்பது முதல் எழுபது வருடங்கள் ஆகும் போது தான் பூத்துக் கனியாகும்.அந்த விதை மண்ணில் விழுந்த பின்எப்போதும் பூக்காது.

நெடுங்காலம் உயிர் வாழும்ஆகவே இது மிகக் குறைவாகவே இன விருத்தி செய்கிறது. அதனால் அடர்ந்த காட்டிலும் தனியாகவே இருக்கும். இதில் பெரும்பாலான மரங்கள் அர்த்தனாரீஸ்வரர்கள்.அதாவது ஒரே பனையில் ஆணும்,பெண்ணும் இணைந்தே இருக்கும்.

பனையோலைச் சுவடிகள் போல அல்லாமல், மெலிதாய் பெரிய சிறகு போல இருப்பதால், இதில் பலநூல்களும் எழுதி உள்ளனர்

Hega
14-02-2012, 07:15 PM
இதுவும் பயினி என இணையம் சுட்டுது

தெரிந்தவர்கள் அறியதரவும்

http://karkanirka.files.wordpress.com/2009/04/slide26.jpg?w=593

குறிஞ்சிப் பாட்டில் கபிலர், ""பயினி வானி பல் இணர்க்~ குரவம்"" என்றார். `பயினி' என்பதற்கு நச்சினார்க்கினியர் `பயினிப்பூ' என்று உரை கூறினார். சங்க இலக்கியத்தில் வேறு எங்கும் `பயினி' என்பது கூறப்படவில்லை. பிற்கால இலக்கியமாகிய பெருங்கதையில் ""பயில் பூம் பயினி"" என வரும் சொற்றொடரைக் கொண்டு பார்த்தால் `பயினி' மரத்தில் பூக்கள் அடர்ந்திருக்கும் என்று அறியலாம். வட்டேரியா இண்டிகா என்னும் தாவரப்பெயர் உள்ள மரத்தைப் `பயின்' என்று மலையாள மொழியில் அழைப்பர் என்று காம்பிள் கூறியுள்ளார். இம்மரத்தின் பூக்கள் கொத்தாக உள்ளன. `பயினி' என்பது வட்டேரியா இன்டிகா என்ற மரமாக இருக்கலாம் என்று எண்ணி இத*ன் தாவர இயல்புகள் கீழே தரப்படுகின்றன. எனினும், இம் மரம் கபிலர் கூறும் `பயினி' மரமா என்னும் ஐயப்பாடு உள்ளது.


பெரியமரம். இம்மரத்தில் ஒரு வகையான பசை உண்டாகிறபடியால் இதனைப் பினேவார்னிஶ் மரமென்றும், இந்தியக் கோபால் வார்னிஶ் என்றும் கூறுவர்.தோல் போன்று தடித்து அக*ன்ற இலை முட்டை வடிவானது. இணை; இலை நரம்புகள் காணப்படும்.

மலர் வெண்மை நிறமானது. 8 அங்குல அகலமானது. மணமுள்ளது.பூக்கும் இரு வித்திலைத் தாவரம்

கனி ஒரு வித்துள்ள (காப்சூல்) வெடிகனி, முட்டை அல்லது வட்ட வடிவானது. மங்கலான பழுப்பு நிறமானது.

விதையிலை அகன்று சதைப்பற்றானது. சமமில்லாதது. முளை வேரையுட்கொண்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தென் கன்னடத்திலிருந்து திருநெல்வேலி வரையிலுள்ள 2500 அடி உ௟ரமுள்ள மலைப்~ பாங்கில் வளரும். மரம் கருநீலப் பழுப்பு நிறம். மரத்தில் ரெசீன் என்னும் பசைப்பொருள் உள்ளது, விதையில் ஒருவித எண்ணெயுண்டாகிறது

Hega
14-02-2012, 07:17 PM
வானி

http://karkanirka.files.wordpress.com/2009/04/slide27.jpg?w=593

Hega
14-02-2012, 07:22 PM
குரவம்


http://karkanirka.files.wordpress.com/2009/04/slide28.jpg?w=593

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/800px-.jpg


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/800px-Luculia_gratissima.jpg




குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு மலர் - மலைவசம்பு அல்லது குரவகம் அல்லது Common blue-bottle flower இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கக்கூடும்.

பின்பனிக்காலமான மாசி , பங்குனியில் பூக்கும் பூ இது...

ஆசிய Tarenna வரை 6 மீற்றர் வரை வளரும் சிறிய மரம். , இலைகள் 8-18 செ முனையில் குறுகிய நீட்சி கொண்டு நீண்டு 4-8 செ.மீ. அகலத்தோடும் தண்டு வரை 0.5-2 செ.மீ. ஆகும். இலை விளிம்பு முழுமையாக அல்லது ஓரளவு சுருண்டிருக்கும்.. கிளைகள் இறுதியில் நீள் சதுர வடிவ இதழ்களோடு மலர்கள் இருக்கும். ஆசிய Tareந்ன இனம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் காணப்படுகிறது.பூக்கும் தாவர வகையைசேர்ந்த* ஒரு குடும்பம், பல்வேறு காபி, பூண்டு வகை செடியை சேர்ந்த குடும்பம்,

கீதம்
14-02-2012, 08:45 PM
அழகழகானப் படங்களோடு அறியாத பல செய்திகளையும் பகிர்வதற்கு நன்றி ஹேகா.

தலைப்பில் மாற்றம் செய்துவிடுங்கள். புதியவை பதிந்திருப்பது தெரியாமல் போய்விடும்.

Hega
19-02-2012, 07:06 PM
பசும்பிடி



http://karkanirka.files.wordpress.com/2009/04/slide29.jpg?w=593


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/3-3.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/f75fd93d.jpg



Garcinia ஆசியா, ஆஸ்திரேலியா, வெப்ப மண்டல மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா, மற்றும் பொலினீசியா வளரக்கூடிய Clusiaceae பேரினமாகும்

இந்த இனத்தில் உள்ள தாவரங்கள் saptrees, mangosteens (மேலும் ஊதா mangosteen, ஜி mangostana குறிப்பாக இது), garcinias அல்லது, ambiguously, "குரங்கு பழம்" என்று அழைக்கப்படுகின்றன.இவ்வின*த்தின் ப*ல* ப*ழ*ங்க*ள் உட*ன் உண்ண*கூடிய*வையே..

Garcinia இனங்கள் பசுமையான மரங்கள் மற்றும் புதர்கள், . பல இனங்கள் காடுகள் அழிப்புகளின்காரணமாக அழிந்து விட்டது. தெற்கு அந்தமான் தீவுகளில் அதிகமாக் காணப்பட்ட cadelliஅன இனங்கள் கிட்டத்தட்ட அல்லது முழுமையாக அழிந்துவிட்டது.

Hega
19-02-2012, 07:24 PM
வகுளம்


Name : Magizham (Spanish Cherry)
Botanical Name : Mimusops elengi L.
Family: Sapotaceae

http://karkanirka.files.wordpress.com/2009/04/slide30.jpg?w=593

மகிழம்பூ, இலஞ்சிபூ, என மனம் கமழும் பெயர்கள் உண்டு.


மகிழ் என்றால் மகிழ்ச்சியாக இரு என பொருள் படும். மனதுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருவதால் இம்மலர் மகிழம் பூ என அழைக்கப்பட்டதாம். சித்த மருத்துவத்தில் சிறந்த பூ இது.

அழகிய சிறு நட்சத்திரம் போன்ற மலர்கள் மஞ்சளும், வெள்ளையும் கலந்த வண்ணத்தில், அடர் பச்சையில் சற்றே நீண்ட இலைகளை தாங்கும் கிளைகளோடு மாலையில் பூத்து, காலையில் உதிர்ந்துவிடும்பூ. மனதை மயக்கும் மலரின் மண*ம் இப்பூவில் உண்டு


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/69e79b77.jpg

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/b115.jpg


பூத்துக்குலுங்கும் மகிழமரத்தினை இமைகொட்டாது பார்க்கும் வாய்ப்பினை ஒரு முறையாவது கண்டு களியுங்கள். மனதுக்கு இனிமையும் புத்துணர்ச்சியும் உண்டாகும். மகிழம்பூ மரத்திலிருந்து கழன்றுவிழும் அழகை திருத்தக்கத் தேவர் என்னும் புலவர், ஒரு சிலந்திப்பூச்சி கீழ் விழுவதுபோல், அசைந்து, அசைந்து விழுவதாய் உருவகப்படுத்துகிறார். சிவனுக்குரிய மலர்களிலேயே சிறப்பான மலராக மகிழம்பூ பாடல்களில் இடம் பெற்றுள்ளது.

சிவா.ஜி
19-02-2012, 07:57 PM
மகிழம்பூ....மனதை மயக்கும் பூ.

(அது சரி....மகிழம் பூவுக்கும் மலையாளிகளுக்கும் என்ன சம்பந்தம்....நீங்கள் கொடுத்தப் படத்தில் விஷூ ஆஷாம்ஷகள்....அதாவது விஷுவுக்கு வாழ்த்துக்கள் என்ற வாசகம் இருக்கிறதே)

பகிர்வுக்கு நன்றிம்மா ஹேகா.

கீதம்
19-02-2012, 09:20 PM
மகிழம்பூக்களை நினைத்தாலே மனம் முழுவதும் பரவசம்தான். அதனோடு பின்னிப் பிணைந்த என் அம்மாச்சியின் நினைவுகளும் இணைந்தே வாசம் வீசும். அழகானப் பகிர்வுக்கு பாராட்டு ஹேகா.

Hega
21-02-2012, 12:41 PM
மகிழம்பூ....மனதை மயக்கும் பூ.

(அது சரி....மகிழம் பூவுக்கும் மலையாளிகளுக்கும் என்ன சம்பந்தம்....நீங்கள் கொடுத்தப் படத்தில் விஷூ ஆஷாம்ஷகள்....அதாவது விஷுவுக்கு வாழ்த்துக்கள் என்ற வாசகம் இருக்கிறதே)

பகிர்வுக்கு நன்றிம்மா ஹேகா.

ஆஹா

மிக்க நன்றி அண்ணா,மலையாள எழுத்ததுவென தெரியாது அண்ணா , அதனால் திருத்தி விட்டேன். நன்றி.

Hega
21-02-2012, 12:43 PM
மகிழம்பூக்களை நினைத்தாலே மனம் முழுவதும் பரவசம்தான். அதனோடு பின்னிப் பிணைந்த என் அம்மாச்சியின் நினைவுகளும் இணைந்தே வாசம் வீசும். அழகானப் பகிர்வுக்கு பாராட்டு ஹேகா.


அம்மாச்சியின் நினைவுகளில் பகிரக்கூடியதை பகிருங்கள் அக்கா..

அவர்கள் வா்ழ்வின் அனுபவமும்,, திடமும் எமக்கு பாடம் அல்லவா..

ஊக்கம் தரும் பின்னூட்டதிற்காய் நன்றி

Hega
21-02-2012, 12:58 PM
காயா

http://karkanirka.files.wordpress.com/2009/04/slide31.jpg?w=593


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/da0131f2.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/1-8.jpg

குயம்புச்செடி, காசா மரம், பூங்காலி எனப் பலவிதமாக அழைக்கப்பெறும் Memecylon edule அல்லி (இந்தி), அஞ்சனி, பூவை, பூங்காலி எனப் பலவிதமாக அழைக்கப்பெறும் Memecylon umbellatஉம்.

காயா என்ற வார்த்தைக்கு, காய்க்காத என்று பொருள்

சின்னச் சின்ன ஊதா மலர்களை அழகுற அடுக்கியது போல பூங்கொத்துகள், அவை தரும் அழகிய பச்சை நிற காய்கள், அவை மெல்ல மெல்ல அடர் சிவப்பாய் மாறி கனிகையில் கருமை நிறம் அடைகிறது

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான் மலரும்

சிவா.ஜி
21-02-2012, 04:37 PM
ஆஹா.....பார்வைக்கு விருந்தான ஒரு பூங்கொத்தே மலரானதே. அருமையான தகவல்களுடன், படங்களையும் இட்டு பரவசப்படுத்தும் தங்கைக்கு நன்றிகள்.

கலையரசி
22-02-2012, 02:00 PM
இந்தக் காயா மலர் வித்தியாசமான மலராயிருக்கிறது. அபூர்வ மலர்களின் விபரங்களுடன் கூடிய அழகிய புகைப்படங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. மிக்க நன்றி ஹேகா!

Hega
23-02-2012, 08:40 AM
ஆஹா.....பார்வைக்கு விருந்தான ஒரு பூங்கொத்தே மலரானதே. அருமையான தகவல்களுடன், படங்களையும் இட்டு பரவசப்படுத்தும் தங்கைக்கு நன்றிகள்.



ரெம்ப நன்றி அண்ணா

Hega
23-02-2012, 08:41 AM
இந்தக் காயா மலர் வித்தியாசமான மலராயிருக்கிறது. அபூர்வ மலர்களின் விபரங்களுடன் கூடிய அழகிய புகைப்படங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. மிக்க நன்றி ஹேகா!


நன்றி கலையரசி அக்கா..

Hega
23-02-2012, 09:01 AM
ஆவிரை


Name : Avaram Senna
Botanical Name : Senna auriculata
Family: Fabaceae



http://karkanirka.files.wordpress.com/2009/04/slide32.jpg?w=593

பெயர் புதிதுபோல் இருந்தாலும் நம் அனைவரும் அறிந்த மலர் தான் போகிப் பண்டிகையின் பொது காப்புகட்டுகையில் அதனுடன் இந்த மலரையும்சேர்த்து வைப்பர்

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/avarm.jpg


அழகிய மஞ்சளில் கொத்துக் கொத்தாய் மிக அழகாக பூக்கும் புதர் தாவர வகை வெளிர் பச்சையில் சின்னச் சின்ன இலைகளுடன், காண்போர் கண்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் இந்த மலருக்கு உண்டு

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற பழமொழி மூலம் . ஆவாரம் பூ உயிர்க்காக்கும் மருந்தாவதை அறியலாம்.

மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூவின் செடி குத்துச்செடி இனத்தைச் சேர்ந்தது. இதனை ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி, மேகாரி, ஆகுலி, தலபோடம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/3-5.jpg


மருத்துவ பயன்கள்

நீரிழிவு நேயைக் கட்டுப்படுத்த அன்றே நம் சித்தர்கள் பல மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். அதில் ஆவாரம் பூவும் ஒன்று. சர்க்கரையை குறைக்க ஆவாரம் பூ சிறந்த மருந்தாகும்.


மேனி பளபளக்க

ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை தேன் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மேனி தங்கம் போல் பளபளவென்று இருக்கும். சரும நோய்கள் ஏதும் அண்டாது.


ஆவாரம் பூ நரம்பிலுள்ள உப்புத்தன்மையை நீக்கும் தன்மை கொண்டது.

சிலருக்கு உடம்பில் வியர்வை அப்படியே படிந்து உப்புப் படிவமாக மாறும். உடலெங்கும் வெள்ளைத் திட்டுக்களாக படிந்து இருக்கும். இவர்கள் ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் சீயக்காய் தூள் சேர்த்து குளிக்கும் முன் உடலெங்கும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடம்பில் உப்பொரிதல் மாறும்.ஆவாரம் பூ மேனியை பளபளப்பாக வைப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாகப் பயன் படுகிறது.

ஆவாரம்பூவை காயவைத்து அதனுடன் சீயக்காய், சிறுபயறு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து கூந்தல் நீளமாக வளரும்.

ஆவாரம் பூவின் வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது என்று பல ஆய்வறிக்கைகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
12-03-2012, 05:48 PM
மிகவும் அருமையான திரி. நன்றி

Hega
15-03-2012, 09:57 PM
வேரல்




http://karkanirka.files.wordpress.com/2009/04/slide33.jpg?w=593


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/1-10.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/6038a8b8.png


குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 28-வது மலர்; சிறுமூங்கில், சின்ன மூங்கில், male bambo என்று அழைக்கப்படும் மரம்/அதன் பூ. Dendrocalamus strictus

குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 28-வது மலர்; சிறுமூங்கில், சின்ன மூங்கில், male bambo என்று அழைக்கப்படும் மரம்/அதன் பூ.

வெதிரம் என்பது பெருமூங்கில்.
வேரல் என்பது சிறுமூங்கில்.

உந்தூழ் பெரு மூங்கிலின் மலர்
வேரல் சிறு மூங்கிலின் மலர்

இந்த மூங்கில் துளை இல்லாத சிறு மூங்கில் அழகிய நீளமும் பச்சையும் கலந்த கலவையாய் முதிர்கையில் மஞ்சளும், பச்சையும் கலந்ததாய் மாறிவிடும்.அதன் பாதி உயரத்திற்கு மேலே
நன்கு வளைந்து இருப்பது அதன் இயல்பு. காட்டு மூங்கில், சிறு மூங்கில்,கல் மூங்கில், என்பன இதன்
வேறு பெயர்கள்

பெருமூங்கில் பந்தல்கால் நடப் பயன்படும்.
சிறுமூங்கில் கிழித்துப் கூடை முடையப் பயன்படும். சிறுமூங்கிலை ஊன்றுகோலாகவும் பயன்படுத்துவர்.


வெதிர், வெதிரம், அமை கழை என்னும் சொற்கள் ஒரே புல்லினப் பெருமூங்கில் மரத்தைக் குறிப்பவை.


மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும்.நீண்ட காலம் வளரக்கூடிய, புல் இனத்தைச்சேர்ந்த தாவரம் மூங்கில். இதை பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம் என்றும் அழைப்பது உண்டு. இது சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்து மனிதனுடைய அன்றாட தேவையை பூர்த்தி செய்வதோடு, பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இடுபொருட்களை தொடர்ச்சியாக அளிக்கக்கூடிய பயிராகும்

Hega
15-03-2012, 10:37 PM
சூரல்

Name : Jackal Jujube, Small-Fruited Jujube, Wild Jujube
Botanical Name : Ziziphus oenoplia
Family: Rhamnaceae


http://karkanirka.files.wordpress.com/2009/04/slide34.jpg?w=593


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/2a448ff5.jpg

சூரல் என்பது முள் இருக்கும் காட்டுப் புதர்ச்செடி.


மலை இலந்தைப் பழ மரத்தின் மலர்கள்.முட்கள் நிறைந்த மரம், அழகிய இளம் பச்சையும். இளம் மஞ்சளும் கலந்த வண்ணத்தில் இதன் மலர்கள், சிறு நட்சத்திரங்களைப் போலே அத்துணை அழகு. அடர் பச்சையில் அடர்த்தியாய் இலைகள் காண*ப்ப*டும். இளம் பச்சையில் சிறு காய்கள் அவை கனிகையில் நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும்.

இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.

சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.காட்டுப்பகுதியில் வளரும் காட்டு இலந்தை மரங்களில் சாதாரண இலந்தையைவிட ஏராளமான மருத்துவ சத்துக்கள் நிறைந்துள்ளன


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/2-7.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/DSC00025.jpg

காட்டு இலந்தைப்பழம்

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/152-02-z-oeno-300.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/Jujube2.jpg




நாட்டு இலந்தைப்பழம்


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/elandhai.jpg


இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் 25 F தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய பேரிச்சை, Red Date, Chinese Date என்றும் சொல்வர். காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை. இதில் A, B2, C, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது

மருத்துவப்பயன்கள் :- இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.

பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி
மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த
உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்
இலந்தை நெறுங்கனியை யெண்
- அகத்தியர் குணபாடம்

கீதம்
16-03-2012, 12:51 PM
அழகழகானப் படங்களுடன் அருமையானத் தகவல்களைப் பகிர்வதற்கு நன்றி ஹேகா. அதிலும் இலந்தைப் பழங்கள் வாயூறச் செய்கின்றன. வெகு யதார்த்தம்.

Hega
19-06-2012, 11:02 PM
சிறுபூளைப்பூ




http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide35.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/eb128238.jpg

சிறுபூளை, கண்பூளை, ஊமிள், காப்பு, சிறுபீளை,ஆமைகரம், சிறுகண் பீளை, கற்பேதி, பாஷணபேதி என்று பலவாறு அழைக்கப்படும் காட்டுக் களைப்பூடு வகையை சார்ந்த செடியாகும்.

இந்த செடி கொத்துரகத்தை சார்ந்தது. நன்றாக வளரும் தன்மை கொண்டது. இச்செடி சுமார் இரண்டரை அடி வரை உயர்ந்து வளரும. பக்க வாட்டில் வெள்ளை நிறப்பூக்கள் கொண்ட கதிர்கள் பூத்திருக்கும். தமிழ் நாட்டிலெல்லா மாவட்டங்களிலும் இச்செடியை காணலாம்.

விசேஷமான நிறமோ, மனமோ இல்லாத மலர் எனினும், எத்தனை நாள் இருந்தாலும், வாடாத மலர் இது, மலர்கையிலே காய்ந்தது போலத்தான் இருக்கும்

அழகிய பச்சையில் சிறு சிறு வட்டங்களாக இலைகள், நீண்ட தண்டு போன்ற காம்புடன் மாற்றடுக்கில் அமைந்த சிறிய இலைகளையும் இலைகோண்ங்களில் மலர்க்கதிர்களையும் உடைய இது பொங்கல் பூ எனவும். அழைக்கபடுவதுண்டு. போகிப் பண்டிகைக்கு காப்பு கட்டும் போதுவைக்கும் மலர்களில் இப்பூவும் ஒன்று.

தரிசுகளில் தானாகவே வளரும் செடி இது. இச்செடி முழுவதுமே நிறைய மருத்துவப் பலன்களைத் தன்னகத்தே கொண்டது.

இதன் மலர் நீரடைப்பை போக்கும் நல்ல மருந்தாகும். இச்செடியின் வேர் உடம்பில் தேங்கியிருக்கும் நீர்க்கோவை , கட்டு, கல்லடைப்புக்கு அரு மருந்தாகும். காய்ந்த வேர்களை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தடவி வர மயிர்க்கால்கள் வலுவடைந்து முடி கொட்டுவது நின்று விடும். சிறுபூளையின் வேர்ப்பட்டை யும் மருத்துவ் குணம் வாய்ந்தது.


அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
மின்போன் மருங்குன் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.

அன்பால் இறைவன் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர்களே! மின்னல் போன்ற இடையினை உடைய உமைமடவாளோடு கூடி மகிழ்வாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் பொன் போன்ற தன் சடைமீது கங்கையை வைத்துள்ளதன் கருத்து யாது? அறிவீர்களோ!

கீதம்
20-06-2012, 05:11 AM
பூளைப்பூங்கொத்தை, பொங்கல் சமயத்தில் வீடுகளில் மாவிலையோடு கட்டித் தொங்கவிட்டுப் பார்த்திருக்கிறேன். இப்போது அவை எங்கும் கிடைப்பதில்லை. அழகான படங்களுடன், தெளிவான விளக்கங்களுடன் பகிர்வதற்கு நன்றி ஹேகா.



அம்மாச்சியின் நினைவுகளில் பகிரக்கூடியதை பகிருங்கள் அக்கா..

அவர்கள் வா்ழ்வின் அனுபவமும்,, திடமும் எமக்கு பாடம் அல்லவா..

ஊக்கம் தரும் பின்னூட்டதிற்காய் நன்றி

இதை எப்படி கவனிக்காமல் போனேன் என்று வியப்பாக உள்ளது. நீங்கள் கேட்டவை இந்தத் திரியில் (http://www.tamilmantram.com/vb/showthread.php/26145-உறவு-விழுதுகளில்-ஊஞ்சலாடும்-நினைவுகள்-11?p=516377&viewfull=1#post516377)...

Keelai Naadaan
24-06-2012, 10:12 AM
அழகான பூத்து குலுங்கும் மலர் கண்காட்சி.
ஒவ்வொரு படத்திலும் விபரங்களிலும் பதிப்பாளரின் அரிய முயற்சி தெரிகிறது.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கலையரசி
26-06-2012, 01:09 PM
சூரல் தான் இலந்தை என்று தெரிந்து கொண்டேன். அரிய தகவல்களைப் படங்களுடன் திரட்டித் தரும் ஹேகாவுக்கு நன்றி.

Hega
01-07-2012, 06:06 PM
பூளைப்பூங்கொத்தை, பொங்கல் சமயத்தில் வீடுகளில் மாவிலையோடு கட்டித் தொங்கவிட்டுப் பார்த்திருக்கிறேன். இப்போது அவை எங்கும் கிடைப்பதில்லை. அழகான படங்களுடன், தெளிவான விளக்கங்களுடன் பகிர்வதற்கு நன்றி ஹேகா.

இதை எப்படி கவனிக்காமல் போனேன் என்று வியப்பாக உள்ளது. நீங்கள் கேட்டவை இந்தத் திரியில் (http://www.tamilmantram.com/vb/showthread.php/26145-உறவு-விழுதுகளில்-ஊஞ்சலாடும்-நினைவுகள்-11?p=516377&viewfull=1#post516377)...





நன்றிகள் அக்கா,



நிச்சயமாய் ஊஞ்சலாடும் நி்னைவுகள் தொகுப்பை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன் அக்கா..

Hega
01-07-2012, 06:07 PM
அழகான பூத்து குலுங்கும் மலர் கண்காட்சி.
ஒவ்வொரு படத்திலும் விபரங்களிலும் பதிப்பாளரின் அரிய முயற்சி தெரிகிறது.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.



நன்றிகள் ஐயா,

Hega
01-07-2012, 06:08 PM
சூரல் தான் இலந்தை என்று தெரிந்து கொண்டேன். அரிய தகவல்களைப் படங்களுடன் திரட்டித் தரும் ஹேகாவுக்கு நன்றி.


மகிழ்ச்சி கலையரசி அக்கா.

Hega
01-07-2012, 06:27 PM
குறுநறுங் கண்ணி

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide36.jpg



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/250px-.jpg



குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி, குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை, பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும் கொடி

குன்றிச் செடி (Jequirity) என்பது, ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் (Abrus precatorius) என்னும் அறிவியற் பெயர் கொண்ட ஒரு தாவரம் ஆகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறத்தில் ஒரு மறுவைக் கொண்ட கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச் சொல் குன்றிமணி என்பதன் திரிபு ஆகும். கவர்ச்சியான இந்த விதை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. எனினும் இதன் தோல் மிகவும் கடினமாக இருப்பதால், இதை முழுதாக விழுங்கினால் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

சில பகுதிகளில் இம் மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.

குன்றிமணியில் உள்ள நஞ்சு ஆப்ரின் (abrin) எனப்படுகிறது. இது ரைசின் (ricin) எனப்படும் நச்சுப் பொருளுக்கு நெருக்கமான உறவுடையது.

இது தமிழ் நாட்டில் எங்கும் வளரக்கூடியது. இது செடி, புதர்,மரம் இவைகளைப்பற்றிப் படரக் கூடிய கொடிவகையைச் சேர்ந்தது. இதுஅவரைக் காய் போன்று காய்விட்டு முற்றி வெடித்து விதைகள் சிதறிவிடும்.விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது. "புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து' என்பது ஒரு குறள். குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது இக்குறட் கருத்து

சிவா.ஜி
02-07-2012, 08:38 AM
தங்கத்தை எடைபோட பயன்படுத்துவார்கள். அதை பார்த்ததோடு சரி...ஆனால் விளக்க்மாய் இன்று அறிந்துகொண்டேன். நன்றிம்மா ஹேகா.

சுகந்தப்ரீதன்
03-07-2012, 07:24 PM
குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி, குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை, பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் இந்த குண்டுமணிக்கு இத்தனை பெயரா... இதுல இதுவரை எனக்கு தெரிஞ்சது குண்டுமணிங்கற பேர் மட்டும்தான்... குறுநறுங்கண்ணி எவ்வளவு அழகான தமிழ்பெயர்.. இத்தனைநாள் தெரியாம போயிடுச்சே..!!

பல்வேறு புதிய (பழசுதான் நாமதான் தெரிஞ்சுக்காம இருக்குறோம்) தகவல்களை தேடிப்பிடித்து தகுந்த படங்களுடன் தொகுத்து வழங்கி இத்திரியை ஒரு கலைகளங்சியமாக்கும் ஹேகாக்காவின் சீரிய முயற்சியை எல்லோரும் பாராட்டலாம் வாங்கோ..!!

என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஹேகாக்காவுக்கு..!!

கலைவேந்தன்
03-07-2012, 07:41 PM
பொக்கிஷத்திரி இது நிஷா.. சளைக்காமல் தொடரும் உங்கள் உழைப்பை மெச்சுகிறேன். தொடருங்கள்.

Hega
03-07-2012, 09:24 PM
குருகிலை



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide37.jpg

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/ficuvire_12.jpg

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/White20Fig-1.jpg

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/White20Fig.jpg

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/White20Fig-2.jpg


மார்ச் மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை பூக்கும். சில இடங்களில் பெப்ரவரியிலேயே பூப்பதும் உண்டு. இது சூழல் பசியப் பசந்து (பசந்தம்>வசந்தம் - இருபிறப்பிச் சொல்) கிடக்கும் காலத்தில் பூப்பதாலும், மல்லிகை போன்று வெள்ளையாய் இதழ்களின் உட்புறம் காட்டுவதாலும், வசந்த கால மல்லிகை என்று சொல்லுகிறார்கள்.

இந்திய சூழலில் இரண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக வசந்த காலத்திலும் (பிப்ரவரி ஆரம்பத்தில் மே வரை), பருவ மழை (அதாவது ஜூன் ஆரம்பத்தில் செப்டம்பர்) காலத்தி்லும் பூக்கும்

மொட்டாய் இருக்கும் போது முத்துப் போல் அமைவதால் பின் அதிமுத்தம், அதிமுத்தகம் எனப்படும்.

தென் கிழக்கு ஆசியா, இந்தியா போன்ற இடங்களில் கண்டு பிடிக்கபட்டு மலேசியா வடக்கு அவுஸ்ரேலியா வரைக்கும் பரந்து வளரும் செடி மரம் இது. இலையுதிர் மரம், குறைந்த எண்ணிக்கையில் தொங்கு வேர்களுடையவை.

இந்தியாவில் புதுதிலலி, நொய்டா நகரங்களில் பல இடங்களில் 27 மீற்றரிலிருந்து 32 மீற்றர் வரை மிகவும் உயர்ந்து வளர்ந்து நிழல் தரும் மரமாக காட்சிதருவதை காணலாம். மரங்கள் திரிந்த பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

இண்டோமலேசியா முதல் சாலமன் தீவுகள்; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - முழுவதும் காணப்படுகின்றன.


தாய்லாந்து இனமக்கள் இக்காய்களையும் இலைகளையும் சமைத்து உணவுக்கும் பயன் படுத்துகிறார்கள்.


இப்பூக்கள் பற்றி சங்கபாடல் சொல்வதென்ன.

எந்த ஒரு அதிர்ச்சியையும், குருகு இலையும், பூவும், தாங்காவாம். பரிபாடல் 15 ஆம் பாட்டில் 41 ஆம் அடியில், “குருகு இலை உதிர குயிலினம் கூவ” என்று வரும். அதாவது குயிலினம் கூவினாலே, குருகு இலை உதிரலாமாம்.

மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய
முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்.

என்று சொல்லி, ”இடியிடிக்க, மழை பெய்ய, இளஞ்சிவப்புக் குருகு இலை தளிர்க்கவும் செய்யும்” என்று இன்னுமொரு புதலியற் செய்தியைப் புகல்கிறது என்றும் பாடப்பட்டிருக்கிறது.

Hega
03-07-2012, 10:16 PM
மருதம்பூ

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide38.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/ac4e3986.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/21.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/marutam.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/Arjun20Tree.jpg



இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம், மருத மரத்தில் கருமருது, கலிமருது, பூமருது ஆகிய வகைகள் உள்ளன.நீர்ப்஼பெருக்கான இடங்களில், வயல்களின் ஓரங்களில், மருதம் வளர்ந்திருக்கும். மருதம் இணராகப் பூக்கும் தன்மையுடையது. பூவின் நிறம், மஞ்சள் நிறமாக இருக்கும்.

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொத்து கொத்தாக வெளிர் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்கும்.

ஆற்றின் இருகரைகளுக்கும் அழகு சேர்க்கும் அழகிய மரமாகும். இந்தியா முழுவதிலும் மற்றும் மியான்மர் (பர்மா), ஸ்ரீலங்காவிலும் இம்மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. "மருது' வழவழப்பான சாம்பல் நிறப் பட்டையுடன் திகழும்.

இந்த மரத்தின் விதை, பட்டை, பழம் என அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இவற்றிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.

இதயத்தின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுப்பதற்கு மருத மரப் பட்டையில் உள்ள அர்ஜுனின் என்ற வேதிப் பொருள் உதவுவதை சமீபத்திய ஆராய்ச்சிகள் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது.

இதில் லிப்பிட் பெர்ஆக்சிடேஷன் நிறைந்து உள்ளதால், ரத்தம் உறைநிலையைத் தடுப்பதோடு, இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் உள்ளது. ரத்தபேதி மற்றும் சீதபேதி ஏற்பட்டால், இதன் இலைக் கொழுந்தை மென்று விழுங்கினால், உடனடியாக குணமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் அளவை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.

இந்த மகத்தான மருத மரம் "அர்கீனா' என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. இதன் தாவரப் பெயர் "டெர்மினேலியா' என்பது.

மருதமரம் மருத்துவக் குணங்கள் நிறைந்த- மக்களின் ஆற்றங்கரை நாகரீகத்தோடு ஒன்றிவிட்ட ஒரு அழகிய மரம் மருது ஆகும். இது மூன்று முக்கிய திருத்தலங் களில் தல மரமாகத் திகழ்ந்து ஒரு புனித மரமாகவும் போற்றப்படுகிறது

கீதம்
03-07-2012, 10:40 PM
குருகிலை என்பது குருக்கத்தியைக் குறிப்பதாய் சில புலவர்கள் சொல்கின்றனர். பைங்குருக்கத்தி என்று கபிலர் தனியாக அம்மலரைக் குறிப்பிட்டிருப்பதால் குருகிலை குருக்கத்தியாய் இருக்க வாய்ப்பில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தாவரவியல் பெயரிலிருந்தும் படத்திலிருந்தும் குருகிலை என்பது அத்தியைக் குறிக்கிறது என்பது புலனாகிறது. கண்டு காய் காய்க்கும், காணாமல் பூ பூக்கும் என்று அத்தியைச் சொல்வார்கள். அப்படிப்பட்ட நுண்ணிய மலரையும் தன் பாடலில் குறிப்பிட்ட கபிலரின் மலராய்வு கண்டு வியக்கிறேன். தொடர்ந்து பகிர்வதற்கு நன்றி ஹேகா.

கலையரசி
04-07-2012, 01:01 PM
குருகிலை என்பது அத்தியைக் குறிக்கிறது என்றறிந்து கொண்டேன். அக்காலத்திய மலர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் ஹேகாவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து நல்குக!

Hega
05-07-2012, 05:56 AM
தங்கத்தை எடைபோட பயன்படுத்துவார்கள். அதை பார்த்ததோடு சரி...ஆனால் விளக்க்மாய் இன்று அறிந்துகொண்டேன். நன்றிம்மா ஹேகா.


ரெம்ப நன்றி சிவா அண்ணா..

Hega
05-07-2012, 05:57 AM
இந்த குண்டுமணிக்கு இத்தனை பெயரா... இதுல இதுவரை எனக்கு தெரிஞ்சது குண்டுமணிங்கற பேர் மட்டும்தான்... குறுநறுங்கண்ணி எவ்வளவு அழகான தமிழ்பெயர்.. இத்தனைநாள் தெரியாம போயிடுச்சே..!!

பல்வேறு புதிய (பழசுதான் நாமதான் தெரிஞ்சுக்காம இருக்குறோம்) [/COLOR]தகவல்களை தேடிப்பிடித்து தகுந்த படங்களுடன் தொகுத்து வழங்கி இத்திரியை ஒரு கலைகளங்சியமாக்கும் ஹேகாக்காவின் சீரிய முயற்சியை எல்லோரும் பாராட்டலாம் வாங்கோ..!!

என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஹேகாக்காவுக்கு..!!

நன்றிகள் சுகந்தப்ரீதன்

Hega
05-07-2012, 05:58 AM
பொக்கிஷத்திரி இது நிஷா.. சளைக்காமல் தொடரும் உங்கள் உழைப்பை மெச்சுகிறேன். தொடருங்கள்.

பாராட்டுக்கு நன்றி கலை அண்ணா..

Hega
05-07-2012, 06:01 AM
குருகிலை என்பது குருக்கத்தியைக் குறிப்பதாய் சில புலவர்கள் சொல்கின்றனர். பைங்குருக்கத்தி என்று கபிலர் தனியாக அம்மலரைக் குறிப்பிட்டிருப்பதால் குருகிலை குருக்கத்தியாய் இருக்க வாய்ப்பில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தாவரவியல் பெயரிலிருந்தும் படத்திலிருந்தும் குருகிலை என்பது அத்தியைக் குறிக்கிறது என்பது புலனாகிறது. கண்டு காய் காய்க்கும், காணாமல் பூ பூக்கும் என்று அத்தியைச் சொல்வார்கள். அப்படிப்பட்ட நுண்ணிய மலரையும் தன் பாடலில் குறிப்பிட்ட கபிலரின் மலராய்வு கண்டு வியக்கிறேன். தொடர்ந்து பகிர்வதற்கு நன்றி ஹேகா.

ஆம் கீதம் அக்கா,

முழு மலர்களும் தொகுக்கபடும்போது நமக்கே ஆச்சரியமாயிருக்கும்.

இதுவா அது.. அதுவா இதுவென நான் தினம் பார்த்துரசித்த பல மலர்களே அதன் பெயரறியாமல் இருக்கிறது என அறியலாம்.

குருகிலை, குருக்கிலை குறித்த தேடலை ஆரம்பிததிருகிறேன். அடுத்த பதிவில் அதன் விபரம் பகிர்கிறேன்.

தங்கள் ஊக்கம் தரும் பாராட்டுக்களுக்கு நன்றி.

Hega
05-07-2012, 06:03 AM
குருகிலை என்பது அத்தியைக் குறிக்கிறது என்றறிந்து கொண்டேன். அக்காலத்திய மலர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் ஹேகாவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து நல்குக!


தொடர்ந்து வரும் கலையரசி அக்கா தரும் பின்னூட்டங்கள் எனக்கு ஊக்க மருந்தாக்கும்.

மிக்க நன்றி அக்கா

Hega
06-07-2012, 08:50 PM
கோங்கம்



http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide39.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/733fe803.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/7614-004-5C39453E.jpg


கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில் கோங்கு (bombax gossypinum or Yellow Silk Cotton Cochlospermum religiosum) எனக் கூறுகின்றனர்.

கோங்கிலவு என்ற மரத்தின் மலர்தான் கோங்கம். பொன்னை ஒத்த தோற்றம் கொண்ட அழகிய மலர்

இள* மஞ்சளில் மொட்டுகளும், பளீரிடும் மஞ்சளில் மலர்களும் அடர் பச்சையில் இலைகளும், அதை தாங்கும் மெல்லிய கிளைகளும் மலர்கள் முற்றுகையில் வரும் வெளிர் பச்சை நிறப் பிஞ்சுகளுமாய் காண*ப்ப*டும்

வறண்ட பிரதேசங்களில் வளரும் மரமாகையால் அடர்த்து, பரந்த கிளைகள் எல்லாம் இந்த மரத்திருக்கு இல்லை காய்கள் முதிர்ந்ததும் வெடித்து, விதைகள் காற்றில் பறந்து விழுகின்ற இடத்தில் துளிர்விடும்.

விதைகள், பஞ்சால் சுற்றப்பட்டது போல தோற்றம் கொண்டவை காற்றில் பறக்க ஏதுவாக..... நீரூற்றி வளர்க்க வேண்டியதில்லை, தானாகவே வளரும்.

கோங்கமரம் இக்காலத்தில் வீட்டுப்பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. இதனால் செய்யப்பட்ட பொருள்கள் இலேசாகவும், மழமழப்பாகவும், மஞ்சள்-நிறதிலும் இருக்கும்



கோங்கமரம், பூ, தாது பற்றிய சங்கநூல் செய்திகள்

எலியின் காது கோங்கம் பூவின் மையப் பகுதி போல இருக்கும்
கோங்க மலரைப் பதத்தோடு பறித்தெடுப்பர்
கோங்கின் மகரந்தப் பொடிகளை மகளிர் மேனியில் பூசிக்கொள்வர். அதற்காக அவற்றைச் செம்பாலான செப்புகளில் சங்ககாலத்தில் விற்பனை செய்வர். செல்வர் அவற்றை சம அளவு பொன் கொடுத்து வாங்குவர்.
கோங்க-மலரின் முகை மகளிர் முலைபோல் இருக்கும்.
மதுரையை அடுத்த வையை ஆற்றுப் படுகையில் பாணர் முற்றத்தில் கோங்க மலர்கள் கொட்டிக்கிடக்கும்.
கோங்கம்பூ குடை போலவும், மீன் போலவும் இருக்கும்.
கோங்கின் அடிமரத்தில் செதில்கள் பொரிந்திருக்கும். பூ பொன்னிறத்தில் இருக்கும்.
மரத்திலிருந்து கோங்கமலர் காம்பறுந்து விழுவது யானை ஓட்டுநர் வீசும் தீப்பந்தம் போல விழும்.
கோங்கமரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்.






எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம்
வரி நிற நீள் வண்டர் பாட, புரி நிற நீள்
பொன் அணிந்த, கோங்கம்; - புணர் முலையாய்! - பூந்தொடித் தோள்
என் அணிந்த, ஈடு இல் பசப்பு?
--கணிமேதாவியார் இயற்றிய
திணைமாலை நூற்றைம்பது

சிவா.ஜி
12-07-2012, 07:56 AM
அறிந்திராத ஆச்சர்ய தகவல்கள். சிரமப்பட்டு தேடித் தரும் தங்கைக்கு நன்றிகள்.

கலைவேந்தன்
13-07-2012, 02:21 PM
மலர்களின் வகைகளை அறிவதோடு அதன் நற்குணங்களையும் சிறப்புகளையும் நன்கு அறிய முடிகிறது. வாய்ப்பளித்த ஹேகாவுக்கு நன்றி.

Hega
13-07-2012, 03:31 PM
போங்கம்


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide40.jpg[/IMG]


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/4878543355_4e066e5417_z.jpg


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/ormo_ormon3.jpg


போங்கம் குனி, குன்னி, மலை மஞ்சடை, மலமஞ்சடை, மலைமான்ஜடி, கல்மாணிக்கம் என பல பெயர்களில் அழைக்கபடும் இம்மரமானது மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக அதிக மழை பெறும், பசுமைமாறாக்காடுகளில் (கடல் மட்டத்திலிருந்து 800-1200 மீ. உயரமான மலைகளில்) மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன. தெற்கு சயாத்திரி மலைகளிலும் மற்றும் அரிதாக கூர்க் பகுதிகளில் (மத்திய சயாத்திரி) காணப்படுகின்றன.

மரங்கள், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது. சிறிய நுனிக்கிளைகள் தட்டை அல்லது குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களுடையது

மலர்கள் பிங்க் நிறமானவை.

கனி (அவரைப்போன்ற), நீள்வட்ட வடிவானது உப்பியவை, 12 X 6 செ.மீ. நீளமானது, நீட்சியுடையது, இதன் விதை சிவப்பு (ஸ்கார்லெட்) நிறமானது.

Hega
13-07-2012, 04:06 PM
திலகம்


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide41.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/800px-Adenanthera_pavonina_seeds.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/Adenanthera1.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/e79de450.jpg


மஞ்சாடிப் பூ மரவகையைச்சேர்ந்தது.

மஞ்சாடி (Adenanthera pavonina) எனப்படுவது ஆசியா, அவுஸ்த்திரேலியா, தென்னமெரிக்கா, வட அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் ஒரு தாவர இனம் ஆகும். வெட்டுமரத் தேவைக்காகவே இது பெரிதும் பயன்படுகிறது எனினும் இதன் வலிமை குறைந்தவையாகும்.

மஞ்சாடி மரம் மண்ணின் நைதரசன் அளவைச் சமப்படுத்துவதற்காகவே முதன்மையாக வளர்க்கப்படுகிறது. அத்துடன் விலங்குளின் உணவுக்காகவும் மருந்து மூலிகையாகவும் வீட்டுத் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் அழகுத் தாவரமாகவும் இது வளர்க்கப்படுகிறது. இத்தாவரத்தின் தரமான, அழகிய விதைகள் அவற்றின் அழகு காரணமாகவும் உணவுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும் இதன் பரவல் எளிதாகின்றது. மஞ்சாடியின் இளம் காய்களைக் குரங்குகள் போன்ற விலங்குகள் விரும்பியுண்கின்றன. பச்சையாக உள்ள மஞ்சாடி விதைகள் ஓரளவு நச்சுத் தன்மையுள்ளனவாக இருந்த போதிலும் அவற்றைச் சமைக்கும் போது அவற்றின் நச்சுத் தன்மை குறைந்து உண்ணத் தக்கனவாக மாறுகின்றன. மஞ்சாடி விதைகளே பழங்கால இந்தியாவிற் தங்கம் போன்ற பெறுமதி மிக்க மாழைகளை நிறுப்பதற்குப் பயன்பட்டன. மஞ்சாடி விதைகள் கழுத்தணிகள், கைம்மாலைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் பூக்கள் சற்று நீளமாயும் பூனை வால் போன்று கூந்தல் கொண்டும் அமைந்திருக்கும். கொட்டைகள் செந்நிறமாயும் பிரகாசமானவையாயும் இருக்கும். இதன் இளம் தளிர்கள் சமைத்து உண்ணத் தக்கவை. மஞ்சாடி மரத்தின் வைரப் பகுதி மிகவும் கடினத் தன்மை கூடியதாகும். அது தோணி செதுக்குவதிலும் மரத் தளபாடங்கள் செய்வதிலும் விறகுக்காகவும் பயன்படுகிறது.

மஞ்சாடி மரமானது சவர்க்கார உற்பத்தியிற் பயன்படுத்தப்படுகிறது.இதன் மரப் பகுதியிலிருந்து உணவுக்காகப் பயன்படுத்தப்படும் செந்நிறச் சாயம் பெறப்படுகிறது.

மஞ்சாடி விதைகளிலிருந்து பெறப்பட்ட சாறு வெகுவாக உட்கொள்ளச் செய்யப்பட்ட எலிகளும் சுண்டெலிகளும் உடலெரிவுக்கு எதிரான தன்மை கூடுவதை வெளிப்படுத்தியுள்ளன

Hega
13-07-2012, 04:16 PM
போங்கம், திலகம் , குறுனறுங்கண்ணி போன்றமலர்களில் விதைகள் பார்க்கும்போது ஒன்றுபோல் இருந்தாலும் அவற்றிக்கிடையிலான் வேறுபாடுகளும் அதன் பெயர்களும் மாறுபடுவதை இங்கே கவனிக்கவும்.

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/sdnck6b.gif


A. Erythrina caffra
B. Erythrina sp.
C. Ormosia monosperma
D. Ormosia cruenta
E. Rhynchosia sp.
F. Rhynchosia precatoria
G. Rhynchosia sp.
H. Abrus precatorius
I. Adenanthera pavonina
J. Sophora secundiflora

Hega
13-07-2012, 04:26 PM
விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள் காண்க..




குறுநறுங்கண்ணி
Abrus precatorius
http://i1189.photobucket.com/albums/z437/nisha153/sdnck5b.gif



போங்கம்
Ormosia travancorica Bedd
http://i1189.photobucket.com/albums/z437/nisha153/22_Ormosia20travancorica20pod20with20seedDSC_6020_KalyanVarma.jpg



Ormosia monosperma
http://i1189.photobucket.com/albums/z437/nisha153/ormosi1b.gif




Erythrina sandwicensis
http://i1189.photobucket.com/albums/z437/nisha153/wili2b.gif




திலகம்
Adenanthera pavonina
http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/800px-Adenanthera_pavonina_seeds.jpg

கீதம்
16-07-2012, 03:54 AM
மிகுந்த அர்ப்பணிப்புடன் அழகிய படங்களையும், தகவல்களையும் திரட்டி வெளியிடுவதற்கு நன்றி ஹேகா.

Hega
25-07-2012, 10:20 PM
மிகுந்த அர்ப்பணிப்புடன் அழகிய படங்களையும், தகவல்களையும் திரட்டி வெளியிடுவதற்கு நன்றி ஹேகா.

நன்றி கீதம் அக்கா.

Hega
25-07-2012, 10:23 PM
பாதிரி

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide42.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/ptiri.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/37ae0aeaae0aebee0aea4e0aebfe0aeb0e0.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/2499747848_1b13b22b6b.jpg


பாதிரி (Stereosperm suaveolens) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.

காட்டுப் பெருவழிகளில் இம் மரம் மிகுதியாக வளர்ந்து நிற்கும். ""அந்தப் பாதிரி"", `காணப் பாதிரி' என்றெல்லாம் வழங்குவார். பாதிரிமலர் செம்மையானது. பஞ்சு போன்ற துய்யினை உடையது. அதன் இதழ்கள் மெல்லியதாக இருக்கும்.

இளம் மஞ்சளாய் கொஞ்சம், அடர் மஞ்சளில் கொஞ்சம் எனக் கண்கவர் வண்ணக் கலவையில் மொட்டும், மலருமாய் இந்த மலர்கள் காணப்படும்.மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மலரும் பருவம் கொண்ட இந்த மரத்திற்கு அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி என நிறைய பெயர்கள் உண்டு இம்மலருக்கு. சரித்திரப் பெருமையும் உண்டு

ஆற்றுத் துறையில் வேனில் காலத்தில் பாதிரி மலரும்.பாதிரி மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும் பாதிரி மரத்தில் இலைகள் உதிர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்கும். இப்படிப் பூத்துக் குலுங்கும் ஓவியத்தை யாழ் என்னும் இசைக்கருவியின் வயிற்றுப்பகுதியில் வரைந்திருப்பார்கள்.


பாதிரி பருத்த அடிமரம் கொண்டது. அதன் பூ குருமயிர் போல் மலர்ந்திருக்கும். அதிரல், பாதிரி, நறுமணம் மிக்க மாரோடம் ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர்
ஓவியர்களின் செந்நிறம் தோய்த்த தூரிகை போலப் பாதிரியின் தூய மலர் இருக்கும்.
பாதிரி மலர் பழுக்கக் காய்ச்சிய தகடு போல் எரிநிறம் கொண்டிருக்கும்.
பாதிரிச் சினை மொட்டுகளும் அழகாக இருக்கும் வளையாத பஞ்சிழை போல் துய் இருக்கும் தலைகளைக் கொண்டிருக்கும். காம்பு சிறிதாக வளைந்திருக்கும். அடிப்பூ கருத்திருக்கும்


இதன் வேர் - சிறுநீர் இலகுவாக வெளியேறப் பயன்படும், உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும்
இதன் காய் - அரைத்துத் தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும்
இதன் பூ - நசுக்கித் தேனுடன் கலந்து உண்டால் தொடர்ச்சியான விக்கல் நிற்கும்,
நீரிற் காய்ச்சிப் பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

Hega
25-07-2012, 10:34 PM
செருந்தி


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide43.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/P4140941.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/Ramdhan20Champa-1.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/Ramdhanchapha-4.jpg


செருந்தி ஒரு வகைக்கோரை இனத்தை சார்ந்தது.மண஼ம் வீசுகின்ற செருந்திமலர், இளவேனிற் காலம் தொடங்கியவுடன் மலர்ந்து நிற்கும். மலர்கள் பொன்னிற வண்ணத்துடன் காட்சியளிக்கும்.

இது நெட்டிக்கோரையெனவும், வாட்கோரையெனவும்,தண்டான்கோரையெனவும் அழைக்கப்படும்.
செருந்திப்பூவை மக்ளீர்க்கு உவமையாக கூறிவர்

நல்ல மஞ்சளில் இதழ்கள் செய்து, அதை அழகுற அருகருகே அடுக்கி வைத்தது போல மொட்டும் மலர்களும்
கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும்.

செருந்தி பொய்கையில் புதர்புதராக வளரும்,பூக்கும். இதற்குக் கண்பு என்னும் கணுக்கள் உண்டு. களிறுகள் இதனை உண்டும் உழக்கியும் மாய்க்கும் செருந்தி நெய்தல் நிலத்தில் பொன் நிறத்தில் பூக்கும்.
வயலில் கோரைப்புல் போலும்,உப்பங்கழிகளிலும் வளரும் இது பசுமையான தோகைகளைக் கொண்டது.
கடற்கரை மணல்மேடுகளில் ஞாழல் பூவும் செருந்திப் பூவும் மணம் கமழும்.
செருந்தி சூரியக் கதிர் போல் அரும்பிப் பொன் போல் கொத்தாகப் பூக்கும். இதனை மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.செருந்தியையும் நெய்தலையும் சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர்.செருந்திப் பூவின் கால் செந்நிறம் கொண்டது.செருந்தி நெருக்கமான மொட்டுகளைக் கொண்டது.செருந்தி வண்டு அருந்தும் தேன் உள்ள மலர்.

விஷேச வாசனை கிடையாது, இருப்பினும் இதன் விதைகளுக்கான அமைப்பு வித்தியாசமானது. சிறு குவளை போன்ற சிவப்பு நிற அமைப்பின் உள்ளே பொத்தி வைத்த முத்துகளாய் அழகிய விதைகள் காணப்படும்.விதைகள் முதலில் பச்சை நிறத்தில் இருக்கும், பின் முற்றுகையில் நல்ல கருப்பு வண்ணத்தில் மாறும்

கீதம்
26-07-2012, 09:23 AM
பாதிரி, செருந்தி மலர்களைப் பற்றிய இலக்கிய வர்ணனைகள் வெகு அழகு. செருந்தி மலர் பார்க்கவே வித்தியாசத் தோற்றத்துடன் மனம் கொள்ளை கொள்கிறது. இவற்றையெல்லாம் நேரில் பார்க்கும் பாக்கியம் நமக்கெல்லாம் வாய்க்குமா என்று தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி ஹேகா.

M.Jagadeesan
26-07-2012, 09:26 AM
தங்களின் கடுமையான உழைப்பின் காரணமாக இதுவரைக் கண்டிராத பல பூக்களைக் காணும் பேறு பெற்றேன். நன்றி ஹேகா!

ஜானகி
27-07-2012, 03:45 PM
பூக்களின் அழகிலும் உங்களது உழைப்பிலும் பிரமித்துப்போய் ஊமையாகிவிடுகிறேன் ! தொடர்ந்து வந்துகொண்டுதானிருக்கிறேன் என்பதனைக் காட்ட லைக்கை அமுத்திவிடுகிறேன்...

Hega
17-08-2012, 11:49 AM
பின்னூட்டங்கள் இட்டு ஊக்கம் கொடுக்கும் கீதம் அக்கா, ஜெகதீசன் ஐயா, ஜானகி அக்கா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Hega
17-08-2012, 11:53 AM
அதிரல்


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide44.jpg

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/Jewel20Vine-1.jpg

அதிரல் கொடி மரத்தில் படரும். அதன் பூக்கள் பூனைப் பற்கள் அளவில் இருக்கும். ஆற்றுமணலில் கொட்டிக் கிடக்கும். மகளிரும் ஆடவரும் இதனைத் தனியாகக் கட்டியும் பிற பூக்களோடு சேர்த்துக் கட்டியும் அணிந்துகொள்வர்.

அதிரல் வேனில் காலத்தில் பூக்கும். இம்மலர் இரவில் அல்லது வைகறைப் பொழுதில் மலரும்.
பாதிரி மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்

இதனைப் `புனலிக்கொடி' என்று நச்சினாரிக்கினியரும், காட்டுமல்லிகை என்று அரும்பதவுரையாசிரியரும், மோசிமல்லிகை, என்று அடியார்க்கு நல்லாரும் குறிக்கின்றனர். இது இளவேளிற்காலத்தில் மிகுதியாக மலரும். அதிரல் மொட்டின் வடிவம் கூர்மையாகவும் நீட்சியுடையதாகவும் இருக்கும். -மொட்டின் வடிவினை நாம் உணரலாம். வெண்மை நிறமாக விளங்கும் அதிரல் மொட்டுக்களின்மீது மெல்லிய வரிகள் காணப்படும். அவை வெருகின் கூரிய எயிறுகளைப் போன்றிருக்கும் என்று அடிகள் உணர்த்துகின்றன.

காட்டு மல்லிகை எனப் பேச்சு வழக்கில் சொல்லப்படும் மல்லிகையின் மணமில்லா மல்லிகை இது., அழகிய வெள்ளை நிறத்தில் ஆறேழு இதழ்களும், தளிர் பச்சையில் சிறு காம்பும், அடர் பச்சையில் நீள் வட்ட இலைகளும், மலருமாக அழகாக இருக்கும்.

வசமில்லா மலராக இருந்தாலும், மலரின் வெண்மன்நிறமும், அதன் நீண்ட இதழ்களுமாய்,பார்க்கவே அழகாக இருக்க்கும்.

பூஜைக்கு உகந்த மலராகவும், திருமண சடங்கிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும்
மலராகவும் உள்ளது மணிப்பூரில் ஒரு பிரச்சித்தி பெற்ற மலரிது.

Hega
17-08-2012, 12:01 PM
சண்பகம்

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide45.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/981da262.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/3012685358_075ba7aca9.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/Michelia_champaca_Blanco1_191.png

சண்பகம் இளவேனிற் காலத்தில் மலர்கின்ற மலர், சண்பகமலர் மணமும் குளிர்ச்சியும் உடையது.

சண்பகம் என்பது என்றும் பசுமையான பெரிய தாவரம் ஒன்றாகும். இது தெற்காசியா, தென்கிழக்காசியா, சீனாவின் சில பகுதிகள் என்பவற்றை உள்ளடக்கிய இந்தோமலாயா சூழலியல் வலயத்தைத் தாயகமாகக் கொண்டது.[1] மிகுந்த நறுமணம் கொண்ட மஞ்சள் அல்லது வெண்ணிறப் பூக்களுக்காக இது வெகுவாக அறியப்படுகிறது. எனினும், முதன்மையாக இது பயிரிடப்படுவது இதன் வெட்டு மரத்துக்காகவாகும். அவ்வாறே, இது நகர்ப்புற நிலவடிமைப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் கவர்ச்சியான சதைப்பகுதி கொண்ட பழங்கள் பறவைகளை வெகுவாகக் கவரக் கூடியன

சண்பகம் ஒரு காட்டு மலராகும்,சண்பகமலர் பொன்னிறமுடையது.சண்பகத்தில் களிம்பு நிறம் முதல் மஞ்சள்-செம்மஞ்சள் நிறம் வரையான வேறுபாடுகள் கொண்ட கலப்பினங்கள் உருவாக்கப்படுவதுண்டு.தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் இதனை ஒத்த இனங்களுடன் கலந்துருவாக்கப்பட்ட கலப்பினங்கள் காணப்படுகின்றன.

சண்பகப் பூக்கள் தென்கிழக்காசியாவிற் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவை முதன்மையாக வீடுகளில் அல்லது ஆலயங்களில் வழிபாடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமிகளும் பெண்களும் இதன் பூக்களை அழகுக்காகவும் இயற்கையான நறுமணத்துக்காகவும் தலையிற் சூடிக் கொள்வர். அறைகளில் இயற்கையான நறுமணம் திகழ்வதற்காக நீர் மேலிடப்பட்டு வைக்கப்படுவதுடன், மணவறைக் கட்டில்களிலும் மணமாலைகளிலும் இதன் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சண்பகம் என்பது மிகுந்த நறுமணத்தைக் கொண்ட ஓர் அரிய தாவரம். அதனாலேயே இது பெருமளவிற் பயன்படுத்தப்படுவதில்லை. தலையிற் சூடப்படும் போது இதன் தனியொரு பூவே சூடப்படுகிறது. சில வேளைகளிலேயே இது சிறிய கொத்தாகச் சூடப்படும். மிக அரிதாகவே இதனாற் செய்யப்பட்ட மாலைகள் அணியப்படுகின்றன. மணவறைக் கட்டில்களை அலங்கரிப்பதில் மல்லிகையும் ரோஜாவும் போன்றே இதுவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் கொண்ட நீர்ப் பாத்திரங்கள் அறைகளில் வைக்கப்படுகின்றன. அழகு மிகுந்த இதனால், நறுமணத் தன்மை குறைந்த ஏனைய பூக்களுடன் சேர்த்து அலங்கரிக்கப்படுகிறது."

சண்பகப் பூவின் நறுமணத்தின் காரணமாக இது 'களிப்புறு நறுமண மரம்' என்றும் அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் பல இல்ல நறுமணத் தயாரிப்பாளர்கள் சண்பகப் பூவைக் கொண்டு நறுமணப் பொருட்களைத் தயாரிக்கி

சண்பகம் அழகுத் தாவரமொன்றாக அயன மண்டலப் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது

சண்பகப்பூவின் மருத்துவ பயன்கள்.: வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய், விந்துவிரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்குமாம்.

அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த பெருந் தண் சண்பகம் போல
கலித்தொகை பாடல்"

Hega
06-10-2012, 08:38 AM
கரந்தை


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide46.jpg


இதன் கொடி வடிவில் பெரியதாக இருக்கும். `கரந்தை மாக்கொடி' என்று பதிற்றுப்பத்துக் குறிக்கிறது. கரந்தைப் பூவின் நிறம் சிவப்பு. இது மணமும் உடையது. ""செம்பூங்கரந்தை"" என்று அகப்பாடலும், ""நறும்பூங்கரந்தை"" என்று புறப்பாடலும் கூறுவதைக் காணலாம். நாகுவின் முலையைப் போன்று பரந்து கரந்தைப் பூவின் வடிவம் அமைந்திருக்கும்.

Hega
06-10-2012, 08:46 AM
குளவி


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide47.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/286.jpg

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/peep.jpg


குளவி – பன்னீர் பூ, மரமல்லி என அழைக்கபடும் மலர்.

மல்லிகையின் ஒரு வகை, மரத்தில் பூக்கும் மல்லிகை, மர மல்லிகை, காட்டு மல்லிகை,
காட்டு மல்லிகை என்றாலும் வீட்டிலும் வளரும் மரம்.

மரமல்லிப் பூக்கும் காலம் அலாதியானது மழைக்காலத்தில்தான் அவைப் பூக்கும்.டிசம்பர், ஜனவரி மாதங்களில் மரம்முழுக்க வெள்ளையாய், நீளமாய் பூக்க ஆரம்பித்துவிடும். இரவில் பெய்த மழையில் நனைந்தபடி தரை சேர்ந்திருக்கும் பூக்கள் எழுப்பும் வாசம் நம்மை வேறொரு உலகத்திற்கு அள்ளிக்கொண்டு போகும்.

வெண்மை நிறத்தில், நான்கு அல்லது ஐந்து இதழ்களுடன், நீண்ட காம்புடன், மலரும் மொட்டுமாய் இவை மலர்ந்திருக்கும்,ஓங்கி உயர்ந்து வளரும் மரம் அல்ல இது.

கீதம்
06-10-2012, 09:38 AM
கரந்தையையும் குளவியையும் நன்கு அறிவேன், ஆனால் இந்தப் பெயரென்று இப்போதுதான் அறிகிறேன். நன்றி ஹேகா.

கரந்தை மலர்களைக் காட்டுச்செடிகளூடே கண்டிருக்கிறேன். மரமல்லியைப் பார்க்கும்போது எங்கள் மாமியார் நினைவுக்கு வருகிறார். அவர் கையால் வீட்டு வாயிலில் நட்டுவைக்கப்பட்ட அந்த மரம், பூக்கும் அழகைப் பார்த்து ரசிக்க அவர் இல்லை. எங்கள் பிள்ளைகள் அப்பூக்களைப் பொறுக்கி சரமாக்கி விளையாடுவர். நல்ல மணமுள்ள மலர்கள். மலர்ந்த மலர்கள் மரத்தையும், உதிர்ந்த மலர்கள் வாயிலையும் அழகுப்படுத்திக்கொண்டிருக்கும். அதனோடு தொடர்புடைய பல இனிய நினைவுகளைக் கிளறிச் செல்கிறது உங்கள் பதிவு. நன்றியும் பாராட்டும் ஹேகா.

A Thainis
09-10-2012, 07:02 PM
தமிழர் நாட்டில் பூத்து குலுங்கும் 99 மலர்களை குறிஞ்சி பாட்டில் வருவதாக கேளிவிபட்டுள்ளேன், இன்று அனைத்து பெயர்களையும் வாசித்தும், 42 மலர்களை கண்டும் மகிழ்தேன். ஹேமா அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

Keelai Naadaan
16-10-2012, 04:37 PM
மன்றத்தின் மிகச்சிறந்த திரிகளில் இதுவும் ஒன்று.
Hega அவர்களுக்கு மிக நன்றி

sarcharan
26-10-2012, 05:43 AM
நல்ல தொகுப்பு. இம்மலர்களின் புகைப்படங்கள் இருந்தால் அவைகளையும் பதியுங்கள். உதவும்

கலையரசி
08-11-2012, 02:15 PM
மரமல்லி தான் குளவி என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். இதன் வாசனை அருமை!
பல அரிய செய்திகளை அறியத் தரும் இந்தத் திரி எனக்கு மிகவும் விருப்பமான தொடர்! மிக்க நன்றி ஹேகா!

ந.க
08-11-2012, 03:00 PM
மிகப் பயனுள்ள பதிவு- நன்றி.

Hega
08-11-2012, 03:29 PM
நன்றி கீதம் அக்கா,

இப்படி ஒரு திரியை ஆரம்பித்ததும் இதை மட்டுமாவது தொடர வேண்டும் என்பதையும் பணிச்சுமையால் மறந்தே போகிறேன்.
இன்று ஓரிரண்டு மலர்களை குறித்தாவது பதிவிட முடியுமா என பார்க்க வேண்டும்.

பொதுவாகவே மல்லிகை, கனகாம்பரம் போன்ற மலர்களை விழாக்காலங்களிலும், தலையில் சூடவும் தினம் பயன் படுத்தினாலும் சரஸ்வதி பூஜை நாட்களில் பாடசாலை மணவர்கள் வகுப்பறைகளில் பூஜை செய்யவென வீடு வீடாக சென்று பறித்து மலர்களை கொண்ட சரம் தொடுக்கவென தினம் அதிகாலை எழுந்து பூப்பறிக்கிறோம் என மரங்களை மொட்டையாக்கிய காலம் இனிய நினைவலைகள் தான்.

அது என்னமோ மற்ற நாட்களில் மலர் செடிகளில் கைவைக்கவே விடாதவர்கள் கூட சரஸ்வதி பூஜை நாட்களில் மலர்களை பறித்து பூஜைக்கு கொடுக்கிறோம் என்றால் மறுப்பதே இல்லை.

இக்காலத்தில் அவையெல்லாம் மறக்கப்பட்டதொன்றாகி விட்டதென நினைக்க்கிறேன்.




கரந்தையையும் குளவியையும் நன்கு அறிவேன், ஆனால் இந்தப் பெயரென்று இப்போதுதான் அறிகிறேன். நன்றி ஹேகா.

கரந்தை மலர்களைக் காட்டுச்செடிகளூடே கண்டிருக்கிறேன். மரமல்லியைப் பார்க்கும்போது எங்கள் மாமியார் நினைவுக்கு வருகிறார். அவர் கையால் வீட்டு வாயிலில் நட்டுவைக்கப்பட்ட அந்த மரம், பூக்கும் அழகைப் பார்த்து ரசிக்க அவர் இல்லை. எங்கள் பிள்ளைகள் அப்பூக்களைப் பொறுக்கி சரமாக்கி விளையாடுவர். நல்ல மணமுள்ள மலர்கள். மலர்ந்த மலர்கள் மரத்தையும், உதிர்ந்த மலர்கள் வாயிலையும் அழகுப்படுத்திக்கொண்டிருக்கும். அதனோடு தொடர்புடைய பல இனிய நினைவுகளைக் கிளறிச் செல்கிறது உங்கள் பதிவு. நன்றியும் பாராட்டும் ஹேகா.

Hega
08-11-2012, 03:32 PM
மிக்கமகிழ்ச்சி ஐயா,



தமிழர் நாட்டில் பூத்து குலுங்கும் 99 மலர்களை குறிஞ்சி பாட்டில் வருவதாக கேள்விபட்டுள்ளேன், இன்று அனைத்து பெயர்களையும் வாசித்தும், 42 மலர்களை கண்டும் மகிழ்தேன். ஹேமா அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

Hega
08-11-2012, 03:35 PM
ஆஹா மிக்க மகிழ்ச்சி ஐயா,

தொடர்ந்தும் கருத்திடுங்கள்



மன்றத்தின் மிகச்சிறந்த திரிகளில் இதுவும் ஒன்று.
Hega அவர்களுக்கு மிக நன்றி

Hega
08-11-2012, 03:37 PM
நல்ல தொகுப்பு. இம்மலர்களின் புகைப்படங்கள் இருந்தால் அவைகளையும் பதியுங்கள். உதவும்


நன்றி சார்.

மலர்களின் தொகுப்பு புகைபடங்களுடன் தானே பதியப்பெற்றிருக்கிறது. உங்களுக்கு படங்கள் தெரியவில்லையா :confused:

Hega
08-11-2012, 03:41 PM
மரமல்லி தான் குளவி என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். இதன் வாசனை அருமை!
பல அரிய செய்திகளை அறியத் தரும் இந்தத் திரி எனக்கு மிகவும் விருப்பமான தொடர்! மிக்க நன்றி ஹேகா!

நன்றி கலையரசி அக்கா,

பாராட்டுக்களுக்கும் அன்புக்கும் நன்றி.

Hega
08-11-2012, 03:42 PM
மிகப் பயனுள்ள பதிவு- நன்றி.

நன்றி கண்ணப்பூ சார்.

Hega
08-11-2012, 03:43 PM
இன்று இரவு குறைந்தது ஐந்து மல்ர்களை குறித்தாவது பதிந்திட முயல்கிறேன். கருத்திட்டு ஊக்கப்டுத்திய அன்புள்ளங்கள் அ்னைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Hega
09-11-2012, 08:59 PM
மாம்பூ




http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide49.jpg


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/2c61ce66.jpghttp://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/800px-Mango_blossoms.jpghttp://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/Black_mango_unripe.jpg


மாமரப் பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள் இருக்கும். பூங்கொத்தில் பெரும்பகுதி ஆண் பூக்களாகவும் மற்றவை இருபால் பூக்களாகவும் இருக்கும். சாதாரணமாக, நிழலில் வளரும் பூக்கள் இருபால் பூக்களாக இருக்கும். உலர்ந்த அல்லது குளிர் தட்பவெப்பம், மாமரம் பூப்பதை தூண்டுகிறது. மேலும், எதிபான், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது நாப்தலீன் அசிடிக் ஆசிட் ஆகிய வேதிப்பொருட்களும் பூப்பதை தூண்டப் பயன்படுத்தப்படுகின்றன.

மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. இவற்றுள் இந்திய சிற்றினமே (Mangiferra indica) உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன.

முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன.

மாம்பூ இணராக மலரும். இதற்கு மணம் உண்டு. `கடிகமழ்மா' `கவிழ் இணர் மா' என்று இலக்கியங்கள் குறிக்கின்றன. மாம்பூ எளிதில் மரத்தினின்றும் உதிர்ந்து விழும். அவ்வாறு உதிர்ந்து விழும் காட்சி மழைத்துளி விழுவதைப் போலக் காட்சியளிக்கின்றது புலவர் ஒருவருக்கு.

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்

Hega
09-11-2012, 09:08 PM
தில்லை


http://i1189.photobucket.com/albums/z437/nisha153/slide50.jpghttp://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/b8ae22d9.jpg

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/95925050.jpg
தில்லைப் பழம்

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/32679370.jpg
ஆண் தில்லைப் பூ

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/93823042.jpg
பெண் தில்லைப் பூ

http://i1189.photobucket.com/albums/z437/nisha153/95855257.jpg
தில்லை மரம்



தில்லை மரத்திற்கு Excoecaria agallocha L. என்று புதலியலில் ஒரு பெயர் உண்டு. "அகிலைத் தில்லை" என்று அந்த மரத்திற்கு தமிழ்ப் புதலியற் பெயர் கொடுத்திருக்கிறார்கள். (அகில் மரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், அந்த அகில் என்ற சொல்லும் உள்ளே வருகிறது. அகில்கட்டை நமக்கு பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து காலங் காலமாய் வந்து கொண்டிருந்தது.) கடற்கரையோரப் பகுதிகளில், சதுப்பு நிலப்பகுதிகளின் ஓரத்தில் தில்லை மரம் வளர்கிறது. நெய்தலும் மருதமும் கலந்த பகுதிகளில்தான் இது காணப்படும்.


தில்லை மரம் கொஞ்சம் அலாதியானது. ஒருபக்கம் அது அச்சம் தரும் மரம்; இன்னொரு பக்கம் நம்மைப் பெரிதும் ஈர்க்கும் தன்மையது. இந்தச் சிறு மரத்தின் எந்தப் பகுதியை ஒடித்தாலும் அலரி (= அரளி) மாதிரிப் பால் தெறிக்கும். அந்தப் பால் நம் உடம்பில் பட்டால் அரிக்கும்; எரியும்; சிவந்து போகும்; கண்ணில் பட்டாலோ, கண்ணெரிச்சலோடு, கொஞ்சம் கொஞ்சமாய் தற்காலமாகவோ, சிலபொழுது முற்றிலுமோ, கண்பார்வை போகவும் செய்யலாம். இதனாலேயே இந்த மரத்தை blinding tree என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.


தில்லை மரம் 6 மீட்டர் உயரம் வளரக்கூடியது நல்ல சூழ்நிலை (அதாவது நீர் ஒழுங்காக ஏறி, வடியும் சூழல்) இருந்தால் 10 மீட்டர் கூட வளருமாம். பொதுவாகத் தில்லை மரம், பசுமை குன்றாத மரம். மரத்தை வெட்டிப் போட்டால், துண்டுகள் நீரில் மிதக்கும். ஒரு கொம்பில் ஏற்படும் இலைகளின் வளர்ச்சி பார்ப்பதற்கு ஒரே ஒழுங்கில் காட்சியளிக்காது மாற்றொழுங்கில் (alternative ஒன்று மாற்றி ஒன்றாய்) காட்சியளிக்கும். இலைகள் நீண்ட கோழிமுட்டை வடிவில் முனையுடன் இருக்கும். இளம் இலைகள் பூஞ்சை (pink) நிறத்திலும், முற்றிய இலைகள் ஆழ்சிவப்பு (deep red) நிறத்திலும் இருக்கும். தில்லம் என்ற சொல் தில்லை மரத்தின் விதையைக் குறிக்கும்.

தில்லை மரம் இந்தக் காலப் பப்பாளியைப் போல் ஆண், பெண் மரம் எனத் தனித் தனியானது. ஆண் பூ தனி, பெண் பூ தனி. பூக்கள் என காணப்படும்.

ஆண் தில்லை மரத்தில் இலையுதிர்த்த வடுக்களின் அருகில் பூங்கதிர்கள் உருவாகும். பூக்கள் நறுமணம் உள்ளவை; மஞ்சள் சாயலோடு கூடிய சிறு பூக்களாக இருக்கும். பெண் பூக்கதிர்கள் ஆண் கதிர்களைக் காட்டிலும் இன்னும் சிறியவை. 1.0 -2.5 செ.மீ. அளவுடையவை. இரண்டு பூக்களுமே டிசம்பர் ஜனவரியில் அதிகமாகப் பூக்கும். அதனையடுத்து ஆகஸ்ட் - அக்டோபர்மாதங்களிலும் சிறிதளவு பூக்கும்.



இந்த மரம் அதிகம் நிறைந்திருந்த காரணத்தால்தான், சிதம்பரத்தைத் 'தில்லை' என்று குறிப்பிட்டார்கள்

இன்றைக்குப் பிச்சாவரத்திற்கு அருகில் கடல் இருந்தாலும், ஒரு காலத்தில் கடலும், கழியும், இன்றைக்குச் சற்று தள்ளி இருக்கும் பெரும்பற்றப் புலியூர் (=சிதம்பரம்) வரை நெருங்கித் தான் இருந்தது என்று புவியியலார் சொல்லுகிறார்கள். [சிதம்பரத்தில் வெள்ளம் வந்தால் ஊரெல்லாம் தத்தளிப்பதும் அதன் தாழ்புவி (low level of ground) நிலையை நமக்கு உணர்த்தும்.] அந்த ஊர் முழுதும் ஒரு காலத்தில் தில்லை வனமாகத் தான் இருந்தது. சோழ நாட்டில் நாலு புலியூர்கள் இருந்தன என்பார்கள். அதில் இது ஒன்று (காவிரிக்கும் வடபால் உள்ளது). இன்னொன்று பெரும்புலியூர் (இன்றைக்குப் பெரம்பலூர் என்றால் தான் பலருக்கும் விளங்கும்.) மீதம் இரண்டும் சட்டென்று எனக்கு நினைவுக்கு வரவில்லை. தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். பெரும்பற்றம் என்ற முன்னொட்டை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். பெரிய பாதம் தான் பெரும் பற்றம் என்று குறிக்கப் பட்டது. பற்றம்>பத்தம்>பாதம் என்று விரியும் சொல்லைப் பார்த்தால், பற்றிக் கொள்ளுவதும் பதிவதும் ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை என்று புரியும்.

பெரிய பாதம் கொண்டவரை வ்யாக்ர பாதர் என்று இருபிறப்பிச் சொல்லால் வடமொழியாளர் மொழி பெயர்ப்பார்கள். (வியல்ந்து கிடப்பது என்பது அகண்டு கிடப்பது. வியல்ந்த கோள் வியாழன். வியல் என்ற முன்னொட்டு "பெரும்" என்ற பொருளையும் குறிக்கும். வியக்கிறான் என்றால் வாயை அகலத் திறந்து பெரிதாக விரிக்கிறான் என்று தான் தமிழில் பொருள். வியத்தல்/வியக்குதல் என்பது பொதுவாக வாய்அகலும் செயலைக் குறிக்கும். வழக்கம் போல வடமொழிப் பலுக்கில் ரகரம் நுழைந்து, வியக்கம் வியக்ரம் ஆகும். வியக்க பாதர், வியக்ர பாதர் ஆன கதை அது தான். யாரோ ஒரு முனிவர் சற்றே பெரிய பாதம் கொண்டவர். அந்த முனிவர் தில்லை வனத்தில் இருந்திருக்கிறார். அவருக்கும் ஆடலரசனுக்கும் இடையே ஒரு தொன்மம் இருந்திருக்கிறது. அவர் பெயரால் இது பெரும்பற்றப் புலியூர் அழைக்கப் படுகிறது. இன்னொரு முனிவரையும் இந்த ஊரோடு தொடர்புறுத்துவார்கள். அவர் பெயர் பதஞ்சலி. அவரை நாட்டியத்தோடு தொடர்பு படுத்தும் தொன்மமும் உண்டு. இங்குமே பாதம்>பதம் என்ற சொல் உள்ளே இருப்பதைப் பார்க்கலாம். நம்மூர் ஆட்களை, ஊர்களை, செயல்களைப் புரிந்து கொள்ளத் தமிழ் தான் பயன்படுமே ஒழிய வடமொழி அல்ல. இருந்தாலும் ஒருசிலர் இந்தப் பழக்கத்தை விடாமலே, வடமொழியின் உள்ளே தேடு தேடென்று விதம் விதமாய்த் தேடிக் கோண்டிருப்பார்கள். :-)

பெரும்பற்றப் புலியூர் இன்றைக்குச் சிதம்பரம் என்று அழைக்கப் படுகிறது. அது உண்மையில் சிற்றம்பலம். அந்தப் பெயரைக் கூப்பிடக் கூப்பிட ஒரு சிலரின் பலுக்கத் திரிவால், அது சித்தம்பரம் ஆயிற்று. பின்னால் சிதம்பரம் என்று திரிந்தது. இதை அறிந்து கொள்ளாமல், சித்தம் + பரம் = சிதம்பரம் என்றெல்லாம் சொல்லப் புகுவதைப் பார்க்கும் போது, பொருந்தக் கூறுவது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும். (அந்த அம்பலம் சின்ன அம்பலம்; ஆனால் குறிப்பிடத் தக்க அம்பலம்; அதைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.) சிலருக்குச் சித்தம்பரம் என்று கூறுவது மனத்திற்கு நிறைவாய், உகப்பாய் இருக்கலாம். ஆனால், வரலாறு அப்படி இல்லை என்று மட்டுமே நாம் சொல்ல முடியும். பொதுவாகத் தமிழ் ஊர்களில் பெரும்பாலானவை அப்படிக் கருத்து முதல்வாதத்தில் பெயரிடப் படுவன அல்ல. இயற்கை, குமுகம், மாந்தர் பெயர் என இப்படித்தான் ஊர்ப்பெயர்கள் 100க்கு தொன்னூற்று தொன்பது விழுக்காடு எழுகின்றன.

அன்புடன்,
இராம.கி.




தில்லை மரம் குறித்த இணையத்தேடலில் கிடைத்த மேலதிக விபரத்தினை கீழே காண்க.

தில்லை மரம் இந்தக் காலப் பப்பாளியைப் போல் ஆண், பெண் மரம் எனத் தனித் தனியானது. ஆண் பூ தனி, பெண் பூ தனி. பூக்கள் என்பவை தமிழரை எப்பொழுதுமே கட்டிப் போடுபவை. குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே நூற்றுக்கும் மேல் ஒரு பட்டியல் உண்டு. (நடிகர் சிவகுமார் அடுத்தடுத்து அந்தப் பூக்களின் பெயரை அப்படியே ஒப்பித்துப் பல மேடைகளில் பெயர் வாங்குவார்.) அந்தப் பட்டியலில் தில்லைப் பூவும் உண்டு. ஆண் தில்லை மரத்தில் இலையுதிர்த்த வடுக்களின் அருகில் 2.5-7.0 நுறு மாத்திரி (centi meter; நூறு என்பதின் குறுக்கம் நுறு. தென்மொழி ஆசிரியர் இறைக்குருவன் இதை அறிமுகப் படுத்தினார்.) அளவுக்கு பூங்கதிர்கள் உருவாகும். பூக்கள் நறுமணம் உள்ளவை; மஞ்சள் சாயை (shade) உடைய சிறு பூக்களாக இருக்கும். பெண் பூக்கதிர்கள் ஆண் கதிர்களைக் காட்டிலும் இன்னும் சிறியவை. 1.0 -2.5 செ.மீ. அளவுடையவை. இரண்டு பூக்களுமே திசம்பர் - சனவரியில் அதிகமாகப் பூக்கும். அதனையடுத்து ஆகசுடு - அக்டோபர் மாதங்களிலும் சிறிதளவு பூக்கும்.

அந்த மரத்தின் இரண்டு செய்திகள் தமிழரை ஈர்த்தவை. ஒன்று அச்சம் தரும் மரம் என்ற செய்தி; இன்னொன்று மனத்தைக் கவரும் குழல் போன்ற பூந்தளிர் பற்றிய செய்தி; குறிப்பாக ஆண்பூந்தளிர். ஆண்மயிலின் தோகை போலத் தில்லையின் ஆண் பூந்தளிர்கள் நம்மை ஈர்க்கும். சற்றுத் தொலைவில் இருந்தும் நம்மைக் கவர்ந்து, அகவை கூடிய முனிவரின் நரைத்த சடை போல இந்தப் பூங்கதிர்கள் தோற்றமளிக்குமாம். "தில்லைத் தளிருக்கு முனிவர்சடை உவமையா, முனிவர்களின் திரண்டு கிடந்த சடைக்குழல்களுக்குத் தில்லைப் பூந்தளிர் உவமையா?" என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. புறநானுறு 252ல் மாரிப் பித்தியார் என்ற பாடினி பாடுகிறார். இந்தப் பாடலை 251ம் பாடலோடு சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

பெண்டு, பிள்ளைகளோடும், சுற்றத்தாரோடும் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று வீடுபேறு பற்றிய கருத்தில் ஆட்பட்டுத் தவம் மேற்கொண்டு, காட்டில் உறைகிறான். அவன் துறவு நிலை பற்றி வியக்கின்ற புலவர், இந்தப் பாடலில் தில்லையை உள்ளே கொண்டு வருகிறார்.:

கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்ளிலைத் தாளி கொய்யுமோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே


"கறங்கு வெள் அருவி" என்பது சங்க இலக்கியத்தில் ஒரு குழூஉக் குறி. குற்றாலம் போனவர்களுக்குச் சட்டெனப் புரியும். "ஒரே சத்தம் (= கறங்கு) போட்டு அருவி கீழே இறங்குகிறதாம்; அவ்வளவு சத்தம் போடணும்னா, நீர்வரத்து ரொம்பக் கூட என்று புரிஞ்சுக்கொணும்; வேகமும் கூடவே இருக்கும். அந்த நிலையிலே, அருவியிலே நுரை கொழிஞ்சி தள்ளும்; வெள் அருவியாய்த் தெரியும். அந்த அருவியிலே ஏறினதாலே (=ஆடுனதால் = அருவியில் குளித்ததால்) கொஞ்சம் கொஞ்சமாய் முடி நிறம் மாறிப் போச்சாம்; வேறெ ஒண்ணும் இல்லை, கொஞ்சம் ஒளி விழுந்த மாதிரி ’டால்’ அடிக்குது; அய்யாவுக்கு நரை விழுந்திருச்சு. நரை விழுந்த முடி, தில்லைத் தளிர் மாதிரி புலபுலன்னு சடைசடையாய்த் திரண்டு காட்சியளிக்குதாம்."

இதுவரைக்கும் சரி, இனி மூன்றாவது வரியில் தான் இந்தக் கவிதைக்கே ஆன முரண் இருக்கிறது; தில்லையின் தளிர் போல விளங்கும் சடை கொண்ட இந்த முனிவர் என்ன இலை பறிக்கிறார் தெரியுமோ? "அள்ளிலைத் தாளி." மூலிகை அறிவு இருந்தால் தான் இங்கு பொருள் விளங்கும். அல் என்றால் "நெருங்கிய" என்று அருத்தம். "நெருங்கிய இலை கொண்ட தாளி" என்னும் செடியில் இருந்து முனிவர் இலை பறிக்கிறார்; சிரிப்பு வருகிறது மாரிப் பித்தியாருக்கு.

ஏனென்றால் "தாளிச பத்திரி" என்று இன்று சொல்லப் படும் (Flacourtia Calaphracia) அள்ளிலைத் தாளி பொதுவாகப் பசியைத் தூண்டுவதற்கும், கழிச்சல், சுரம், நாட்பட்ட இருமல் போன்றவற்றைப் போக்குவதற்குமாக உள்ள மூலிகை; கருப்பிணிப் பெண்கள் நல்ல மகப் பேறு (சுகப் பிரவசம்) ஏற்படுவதற்காக உட்கொள்ளும் மூலிகையும் இதுவாகும்.

வேறு ஒன்றுமில்லை; "நரை விழுந்து தில்லைப் பூந்தளிர் போலச் சடைகொண்ட முனிவர், கருப்பிணி உட்கொளும் மூலிகையிலையைப் போய்ப் பறித்துக் கொண்டிருக்கிறாரே?" என்று புலவர் கேலி பாடுகிறார். (முனிவர் பசியில்லை என்று பறித்திருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் ஊறால் பறித்திருக்கலாம்; நமக்குக் காரணம் தெரியாது. பாடினியாரும் காரணம் சொல்லவில்லை. உரையாசிரியரும் முரணைப் போட்டு உடைக்கவில்லை; பொதுவாக, முரண் என்பது இப்படித்தான். ஒன்று கிடக்க இன்னொன்றாய்ப் புரிந்து கொள்ளப் படுகிறது.

அடுத்த இரண்டு வரிகளில் பாடினியின் கேலி இன்னும் கூடுகிறது. "துறவு கொள்ளுவதற்கு முன்னால், வீட்டுக்கார அம்மா பேச்சை அப்படியே கேட்டு, வேண்டப் பட்டதைத் தேடிக் கொண்டுவந்த ஆள்தானே இவருன்னு" ஒரு போடு போடுகிறார்..

கவிதை ஒருபக்கம் இருக்கட்டும். நமக்கு முகன்மையான செய்தி தில்லைப் பூந்தளிரை முனிவர்களின் புரிசடைக்கு இணையாக ஒப்பிட்டது.

தில்லை என்ற மரத்தின் பெயரே அந்தத் தளிர் என்ற சொல்லோடு தொடர்பு கொண்டது. துல்லுதல் என்பது தோன்றுதல்; தோன்றுவது கொஞ்சம் மஞ்சளாய்த்தான் தெரியும். துலங்குதல் என்ற சொல் கூட துல் என்னும் வேரில் தோன்றியது தான். மஞ்சளாய் ஒளி நிறைந்ததாய், தெரிவதைத் துலங்குதல் என்று சொல்கிறோம். ஏனத்தின் கழிம்புகளையும், கறைகளையும் போக்கி விளக்குவதைத் துலக்குதல் என்று சொல்லுகிறோம். துல்லுவது துள்ளுவது என்றும் ஆகும். துள்ளுவது பின் துளிர்க்கும்; அது சற்றே திரிந்து தளிர்க்கும். துல்லுவது தில்லையானதும் இதே போல் தான்.

அந்தப் பூந்தளிர் ஒன்றே தில்லை மரத்தைப் பார்த்தவுடன் சட்டென்று காண்பவர் மனத்தில் தைக்கும் காட்சி. "தளிர்க்குழல் - முனிவர் சடை" என்ற இரட்டைப் பிணை, நெய்தல் நிலத் தமிழனை அப்படியே ஈர்த்திருக்க வேண்டும். கலித்தொகை 133 ல் முதலைந்து வரிகள் இன்னொரு காட்சியைக் காட்டுகின்றன. (நெய்தற் கலி; ஆசிரியர் நல்லந்துவனார்; அந்துவன் = அப்பன்; இந்தக் காலத்தில் அப்பன் என்று எத்தனை பெயர்கள் முடிகின்றன; அது போல அந்துவன் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்தன் = தலைவன், பெரியவன், பெருமான். மலையாளத்தில் கத்தோலிக்கப் பாதிரியாரை அச்சன் என்று சொல்லுகிறார்களே, குமரியில் ஆசான் என்று சொல்லுகிறார்களே, அது போலப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தனர் = பெருமானர். அந்தனர்>அந்தணர் என்று ஆகும். ஆக அந்தனர் என்ற சொல் பிறந்தது இப்படித்தான். அது ஒரு குலத்தை, சாதியைச் சுட்டும் சொல் அல்ல. பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட இந்தச் சொல் பற்றி நிறையச் சொல்லலாம். எனினும் விடுக்கிறேன்.)

மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த
நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப்
பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள்


நெய்தலில் காற்று அடித்துக் கொண்டே இருப்பதால் அங்கும் இங்குமாய் மணல் மேடுகள் மாற்றி மாற்றி ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அந்த மணல் மேடுகளை எக்கர் என்று சொல்லுவார்கள். இந்த மணல் மேடுகளுக்கு அருகில் கடலோதக் கழி இருக்கிறது. கழியின் கரையில் இருக்கும் முள்ளியின் மலர் கருப்பு. மா நிறம் என்பது கரிய நிறம் தான். (அதே பொழுது மிகக் கருப்பு என்று பொருள் கொள்ளக் கூடாது.) மாமலர் முண்டகம் என்பது அந்த முள்ளியைத் தான் குறிக்கிறது. கூடவே அருகில் தில்லை மரங்கள் இருக்கின்றன; முனிவன் சடை போலப் பூந்தளிர்கள் தொங்குகின்றன; கொஞ்சம் தள்ளினாற் போலக் கல்லால மரமும் (Ficus tomentosa) இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பாட்டில் அது நேரடியாகக் கூறப் படவில்லை. பொதுவாக, நெய்தற் கழியில், வறண்ட உதிர்புக் காடுகளில், பெரும்பாலும் பாறை விரிசல்களுக்கு நடுவில்) இருப்பது இயற்கையே.

கரிய மலர்கள் நிறைந்த கழி முள்ளியும் தில்லைமரமும் செறிந்து வளர்ந்திருக்கும் அந்தக் கடற்கரைச்சோலையில், மணல் மேட்டில், தோற்றம் எப்படித் தெரிகிறதாம்? சீர்மிகு சிறப்பினோன் உடகார்ந்திருப்பது போல் தெரிகிறதாம். "யார் அந்தச் சீர்மிகு சிறப்பினோன்?" பொதுவாகப் பார்த்தால் தென்னாட்டு முனிவன்; விதப்பாகப் பார்த்தால் "தக்கண முகத்தோன்". என்ன இது புதுச்சொல் என்று மருள வேண்டாம். "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்கிறோம் அல்லவா? தக்கணத்தில் தோன்றியவன் தக்கண முகத்தோன். (தக்கு = தாழ்வு. இமைய மலையைப் பார்த்தால் நாவலந்தீவின் தென்பகுதி தாழ்ந்து கிடக்கிறது. தாழ்ந்து கிடக்கும் பகுதி, தக்கிக் கிடக்கும் பகுதி, தக்கணம் எனப்படுகிறது; மேலே கிடக்கும் மலையைப் பார்த்தால் கீழே கிடக்கும் பகுதி கிழக்குப் பகுதி ஆனது போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தக்கணம் என்ற சொல் தமிழ் தான். அந்தச் சொல்லைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம். முகத்தோன் = தோன்றியவன்; முகத்தோனை மூத்தோனாகிப் (மூத்தோர் என்பவர் நமக்கு முன்னால் தோன்றியவர் என்று புரிந்து கொள்ளுகிறோம் இல்லையா?) பின் வேறு ஈற்றால் மூத்தி என்று சொல்லி, பின்னால் வடமொழிப் பலுக்கிற்காக, ரகரத்தை நுழைத்து மூர்த்தி ஆக்குவர். தக்கண மூர்த்தி இன்னும் திரிந்து தக்ஷிணா மூர்த்தி ஆவார். நாம் அதன் தொடக்கமே தெரியாமல் மருளுவோம். தென்னாடுடைய சிவனுக்கு வடபுலத்துப் பெயரா இருக்கும்?) இந்தத் தக்கண மூத்தியின் மயிர்க்குழல்கள் நரை தட்டிப் போய் தில்லைப் பூந்தளிர் போலக் காட்சியளிக்கின்றன. முண்டக மலர் அவன் கண்டம் (கழுத்து) போலக் காட்சியளித்திருக்கலாம். மறுபடியும் தொண்டைக்குள் நஞ்சு என்ற உருவகத்தை இங்கு பொருத்திப் பாருங்கள்.

இவன் முனிவன் என்றால், இந்த முனிவனுக்கு அருகில் ஒரு குண்டிகை (கலசம் அல்லது செப்புக் கலம்) இருக்க வேண்டுமே? எங்கும் நாம் தேட வேண்டாம். கழியில் உள்ள வளைந்து கிடக்கும் தாழையின் பழம், குடம் எனத் தொங்குகிறது. தாழையின் வளைசலைக் குறிக்க, கொக்கின் கழுத்தையும் நெய்தற் கலி பாடிய நல்லந்துவனார் உவமை சேர்க்கிறார். இந்த வரிகள் முழுக்க ஒரே உவமை மயம். ஆனாலும் காட்சி தெளிவாகப் புலப்படுகிறது. சொல்லுக்குள் சிவனை, தக்கண முகத்தனை, முழுதாகக் கொண்டுவந்து விடுகிறார் இந்தப் பாடலாசிரியர். "இப்பேர்ப்பட்ட துறைவனே! நான் சொல்லுவதைக் கேள்" என்று மேற்கொண்டு போகிறார்.

"தக்கண முகத்தோனை முதல் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் தில்லையோடு தொடர்வுறுத்திப் பதிவு செய்த இடம்" நானறிந்த வரை இது தான். இந்த நெய்தற் கலிதான். அதுவரை அவன் "ஆல் அமர் செல்வன், நுதல்விழியோன், கொன்றை விரும்பி" இப்படித்தான் பலவாறாக சங்க இலக்கியங்களில் வழுத்தியிருக்கிறார்கள். ஏன் இந்த வெவ்வேறு தோற்றங்கள் என்ற கேள்வி நமக்குள் இனி அடுத்ததாக எழும்.

அன்புடன்,
இராம.கி.

கீதம்
09-11-2012, 11:32 PM
மீண்டும் பல அரிய படங்களுடனும் தகவல்களுடனும் தொடர்வதற்கு நன்றி ஹேகா. இன்னும் இந்தப் பதிவுகளைப் படிக்கவில்லை. படித்தபின் கருத்திடுகிறேன்.

கலையரசி
13-11-2012, 01:18 PM
”மாமரப் பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள் இருக்கும். பூங்கொத்தில் பெரும்பகுதி ஆண் பூக்களாகவும் மற்றவை இருபால் பூக்களாகவும் இருக்கும். சாதாரணமாக, நிழலில் வளரும் பூக்கள் இருபால் பூக்களாக இருக்கும்”

தெரிந்த மரத்தைப் பற்றித் தெரியாத விஷயங்கள்! தொடருங்கள் ஹேகா.

கீதம்
14-11-2012, 09:22 AM
பலப்பல புதிய தகவல்களோடு மாம்பூ, தில்லைப்பூக்களைப் பற்றிய தகவல்களையும், படங்களையும் அவற்றைப்பற்றிய இலக்கியப் பகிர்வுகளையும் பகிர்ந்துகொண்டதற்கு மிகவும் நன்றி ஹேகா. இதுவரை பார்த்திராத தில்லை மலர்களையும், மரங்களையும் உங்கள் தயவால் பார்த்தேன். தொடரும் உங்கள் உழைப்புக்குப் பாராட்டுகள்.