PDA

View Full Version : ஊடல் மொழிகள்..



PremM
07-01-2011, 03:38 PM
உன் கண்ணீர் துளி பட்டு இடறி விழுந்தேன்,
விழுந்து எழுவதற்க்குள்,
என்னை மண்ணோடு புதைத்து விட்டு,
உன் கண்ணீர் ஏந்திச் சென்று விட்டாய்..

மெல்லிய சாமரம் ஒன்று என் கோட்டையைப் புரட்டிப் போட,
நீ தரும் புயலோடு கொஞ்சிப் பேச,
துணிவில்லை என் நெஞ்சில்..

ரகசியமாய் அழுதப் பின்பும்,
விசும்பிய்படி கிடக்குதடி,
உனக்காய் தேக்கி வைத்தக் காதல்..

உன் பிரிவு உமிழும் வெப்பம் தாளாமல்,
கண்ணீர்க் கொண்டே எனை நனைத்தேனே..

உன்னோடு பயணித்த இரவுகளில்,
ஏதோ ஒன்று,எப்போதும் உன் நினைவுகளை வருடியபடி
சாய்ந்து நிற்க்குதடி..

நகரா இரவுகளில்,
என்னை நகர்த்திப் போவது
கனவிலும் நலிணம் மாறாத
உன் பாதக் கொலுசுகளின் அசைவுகளே..

தின்று கொழுத்த இரவுகள்,
பசியோடு ஏங்கியபடி கிடக்கிறது,
நம் காதல் பானம் கிடைக்குமா என..

கூடல் மொழி கற்ற மெத்தைகள்,
ஊடல் மொழி புரியாத காரணத்தால்,
எப்போதும் குழம்பியபடி முகம் புதைத்து அழுகின்றன..

இன்று,
தேர் உலா போன வீதியில்,
தயக்கத்துடன் நடக்கிறேன்,
உன் பாதத் தடயங்கள் தெரியுமா எனப் பார்க்கிறேன்..

வெட்கம் விட்டு,
காதல் கொண்டு,
உறங்கிய கதவுகளை தட்டி எழுப்புகையில்,
என் உயிர் கடத்திய கண்களோடு
ஆளுயர தேர் ஒன்று ஆடை கட்டி வந்து நின்றது..

என்னைச் சற்றும் எதிர்பாரதவளிடம்,
"இனி தவறொன்று நேர்ந்தால்,
தள்ளி நின்றும் அழ வேண்டாம்" என்றதும்,
என் தோள் சாய்ந்து
உயிர் கொணர்ந்தாள்..

கீதம்
07-01-2011, 09:36 PM
ஊடுதலுக்குப் பின்னான கூடுதல் சுகமென்று வள்ளுவரே சொன்னபின் நானென்ன சொல்ல?

ஊடலின் வலியை வார்த்தைகளால் செதுக்கிய அற்புதமான கவிதை. சிற்சில இடங்களில் எழுத்துப்பிழை தவிர்த்தால் இன்னும் அழகுபெறும்.

பாராட்டுகள், PremM.

Hega
07-01-2011, 11:24 PM
ஊடலுக்கு பின்னரான கூடல் தரும் சுகத்தினை கவிதையாக எம்முன்னே கொண்டு வந்தமைக்கு பாராட்டுக்கள்.

PremM
08-01-2011, 05:04 AM
தங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி கீதம் மற்றும் ..
அடுத்த முறை கண்டிப்பாக எழுத்துப் பிழைகளை சரி பார்த்தப் பின் பதிக்கிறேன்..